இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Sunday, December 16, 2012

குறைந்த முதலீட்டில் குணபஜலம் மீன் வளர்ச்சி ஊக்கி



கடந்த 50 ஆண்டுகளாக விவசாயம் பல தீவிர மாற்றத்துற்Ì உள்ளாகியுள்ளது. சாகுபடியை பெருக்கும் எண்ணத்தில், அறிவற்று இராசயன உரங்களையும், பூச்சிகொல்லி தெளிப்பான்களையும் உபயோகித்து, விவசாயத்தை ஒரு வியாபார ரீதியான நடைமுறையாக மாற்றியுள்ளது.

கேள்விக்குறிய உண்மை:
இராசயனங்கள் அதிக மகசூல் தர உதவுகிறது எனில், விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் விரக்தியால் தங்கள் விளை நிலங்களை விற்பதும் ஏன், என்று கேட்கிறார், முனைவர் கமலாசனம் பிள்ளை, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை தலைவர், UK-NARDEP கன்னியாகுமரி, தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம், கோழிக்கொட்டுபோதையின் பெண் விவசாயியான திருமதி.தங்கம் கூறுகையில், முதலீட்டை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக லாபம் தரும் ஒரே தொழில் வேளாண்மையாகும் என்கிறார். மேலும் நெல், காய்கறி, பழவகைகள் என எவ்வகையினை விவசாயம் செய்தாலும், அவற்றை குறைந்த ஈடுபொருட்களை கொண்டு சிறந்த முறையில் பராமரித்தோம் எனில், அதிக லாபம் தரும்.

பல விவசாயிகள் காலங்காலமாக அங்கீகரிக்கப்பட்டு, பாரம்பரியம் செயல்முறை பருத்திவந்த பயிற்சிகளை மறந்துவிட்டனர். இரசாயனங்கள் அதிக மகசூல் தருவதைவிட, சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துகிறது என்பதை ஒவ்வொரு விவசாயியும் உணர்ந்த பின், மெதுவாக பாரம்பரிய இயற்கை விவசாய முறையற்று மாறி வருகின்றனர் என்று விவசாயியான மாணிக்கவாசகர் கூறுகிறார். கூடுதலாக, நிலம், நீர், காற்று ஆகியவற்றில் தீங்கு விளைவிக்காத, சில செய்முறைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, மீன் குணாபஜலம் அல்லது மீன் வளர்ச்சி ஊக்கி, திருமதி. தங்கம் உட்பட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல விவசாயிகள் இப்பாரம்பரிய முறையை பயன்படுத்துகின்றனர். ரோஜா, மிளகாய் மற்றும் நெற்பயிர் வளர்ச்சிக்கு இதனை உபயோகிக்கின்றனர். மீன் வளர்ச்சி ஊக்கியின் தயாரிப்பு முறை: சுமார் ஒரு கிலோ மீன் வேஸ்ட் (மீன் சுத்தம் செய்த பின் கிடைக்கும் வீணான பாகங்கள்) மற்றும் ஒரு கிலோ பிளாஸ்டிக் டிராம்மில் வைக்கவும். இதனை மூன்று முதல் நான்கு நாட்களுக்கு நன்கு கலக்கி, நிலவின் வைக்கவும்.
பதினைந்து நாட்களுக்கு பின், இதை வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம் (ஒரு லிட்டர் ஏக்கர் நிலத்திற்கு 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் விகிதம் மீன் ஊக்கியை கலந்து கொள்ளவும்).

தெளிக்கும் நேரம்:
அதிக பூச்சி தாக்குதல் உள்ள காலை அல்லது மாலை நேரத்தில் இதை தெளிக்கலாம். நெற் பயிர்களுக்கு இதை தெளிக்கவும் செய்யலாம் அல்லது அரிசி அல்லது கோதுமை உமி அல்லது மண்புழு உரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து நிலங்களுக்கு போடலாம்.
மேலும் ஒரு செய்முறையானது, அரிவாள் மனை பூண்டு கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதை தயாரிக்க அரிவாள் மனை பூண்டுயை சிறு துண்டுகளாக வெட்டி, 5 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இத்தண்ணீர் ஒரு லிட்டர் வரை நன்கு கொதிக்க விட்டு, அதில் சுமார் 5 கிராம் பெருங்காயம் நன்கு கரையும் வரை கலக்கவும்.
இக்கரைசல் குளிர்ந்தவுடன், அதை வடிகட்டி பின் தெளிக்க பயன்படுத்தலாம்
 ஒரு ஏக்கர் நிலத்திற்கு, நூறு லிட்டர்  தண்ணீருக்கு ஒரு லிட்டர் கரைசல் விகிதம் நன்கு கலந்து, தெளிக்கவும். இக்கரைசலை தயாரிக்க 10 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இராசயன உரங்களை உபயோகித்தால் ஒரு ஏக்கர் நிலத்திற்கு சுமார் 1500 முதல் 2000 ரூபாய் வரை செலவிடவேண்டும். மாறாக மேற்குரிய இயற்கை கரைசல்களை உபயோகித்தல் ஒரு ஏக்கர்க்கு சுமார் 100 ரூபாய் மட்டுமே செலவாகும். “இதை உணர்த்து விவசாயின் குறைந்த செலவுத்திட்டத்திலான இயற்கை இடுபொருட்களை உபயோகிக்கலாம்” என்று திரு மாணிக்கவாசகம் கூறுகிறார்.
தொடர்புக்கு: திருமதி.எம்.தங்கம்
கோழிக்கொட்டுபொதை
குமாரப்புரம் தோப்பு அஞ்சல்
கன்னியகுமரி மாவட்டம் , தமிழ்நாடு
அலைபேசி: 9952607450 மேலும்
முனைவர்.கமலாசனம் பிள்ளை
உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை தலைவர்
UK - NARDEP
விவேகனாந்தபுரம் , கன்னியாகுமரி 629 702, தமிழ்நாடு
மின்னஞ்சல்: azollapillai@gmail.com
தொலைபேசி: 9387212005

Papper Carry Bag Project



 Due to high pollution of plastics and polythene, the awareness in usage of ECO friendly products, is in growing demand.

In this scnario, we have launched Paper Carry Bag project, as a income generating activity for Women groups, individuals and for entrepreners.



Paper Carry Bag Machinery
ECO Green unit has invented a small machinery, which is a simple device without usage of power or water, for women can be employed and the production output will be 1000 bags per day. Near about 700 units has been commenced.
 

Banana Fibre Papers Shade dried
The training, raw materials (Banana Fibre , Paper)
Machinery and the Marketing support is done by ECO Green Unit

Making of Paper Crafts

வாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை




பொதுவாக, வாழையில் இருந்து நாரை பிரித்து எடுக்க நேரமும் முயற்சியும் அதிகம் வேண்டும். வேலை செய்ய ஆட்களும் தேவை. பொதுவாக, ஒரு நபரால், ஒரு மணியில் 500 கிராம் நார் மட்டுமே எடுக்க புடியும்
இந்த புது முறையால், இதை போன்று பாத்து மடங்கு நார் எடுக்க முடியும்.
இந்த முறையில், காற்றிலா செயல்முறை (anaerobic process) என்சைம் (enzyme) பயன் படுத்தி ஒரு வாரத்தில் நிறைய நாரை பிரித்து எடுக்க முடியும்.
மிச்சம் உள்ள நீரும் கழிவும் பயோ காஸ் ஆக மாற்ற படுகிறது. நீரும் மறுசுழற்சி செய்ய படுகிறது.Way forward:Banana fibre extracted using the technology developed by the CISR-NIIST
இந்த முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள 04712515388 என்ற தொலை பேசியை அணுகவும்
நன்றி: ஹிந்து

Way forward:Banana fibre extracted using the technology developed by the CISR-NIIST
The National Institute for Inter-disciplinary Science and Technology (NIIST) here, a laboratory of the Council of Scientific and Industrial Research (CSIR), has developed a technology for extraction of banana fibre, the raw material for a range of eco-friendly products.
The indigenously developed process know-how is for ‘clean extraction of banana fibre from pseudo stems (leftover banana trunk after harvest) and empty bunches.’ The fibre can be used to make yarn, paper and paper cups, cordage, tea bags, handbags, and footwear.
Patent sought
An international patent has been sought for the process know-how, a spokesman for the CSIR-NIIST said. It has already been licensed to three parties, including one based in the Philippines. The CSIR-NIIST expects the process to become acceptable at the local level, the spokesman said.
The alternatives
Banana fibre is generally extracted through a cumbersome manual process. By using a metal scraper (flat and blunt blade), the pseudo stem sheaths are scraped and the fibre is separated.
An individual at work can extract just about 500 gm in this manner; the mechanical process yields 10 times the quantity but with heavy damage to the fibre.
The CSIR-NIIST technology involves an anaerobic (without oxygen) process. The fibres are separated by enzymes produced through microbial action in an anaerobic reactor.
Waste into biogas
The organic wastes get converted into biogas in the process. The process water is recirculated.
Under optimum conditions, separation of the fibres gets completed in a week’s time, says V. Manilal of the Process Engineering and Environmental Technology division at the NIIST. The fibres are washed and dried in sunlight to bring down the moisture content considerably.
Brilliant white
The fibre obtained is brilliant white in colour and has little pith residues. The CSIR-NIIST claims that the process is inexpensive, pollution- free, and avoids damage to fibres.
It also has the potential to generate employment and can offer higher earnings for farmers. For details, the CSIR-NIIST can be contacted on phone 0471-2515388.

Design Development workshop on Banana fibre

Ecogreenunit organized a Design Development workshop on Banana fibre in coimbatore rural. 30 women artisans participated.New prototype models was developed by Empaneled designer Mrs. Puja singh from delhi came and trained the artisans in banana fibre.The programme was sponsored by O/o Development Commissioner,Handi crafts,New Delhi.its a 15 days training programme .

a new prototype models in banana fibre


Address:EcoGreenUnit,C-5,Agri Business Directorate,Tamil Nadu Agri cultural University,Coimbatore-641003, PH:09600876767/09894422180/07708202420

Contact Details

ECOGREENUNIT, C-5,BUSINESS PLANNING DEVELOPMENT AGRI BUSINESS DIRECTORATE. TAMILNADU AGRICULTURAL UNIVERSITY COIMBATORE 641003. PH.04224376397/M.9600876767

பருப்பு மில்!



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது உணவிலும் முக்கிய அங்கம் வகிப்பது பருப்பு வகைகள். நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து பல வகையான பருப்புகளில் இருந்துதான் கிடைக்கிறது. நான்-வெஜ் பிரியர்களுக்கு வேண்டுமானால், பருப்பின் அருமை தெரியாமல் இருக்கலாம். ஆனால், சைவ உணவு விரும்பிகளுக்கு பருப்பு இல்லை என்றால், சாப்பாடு இறங்காது. குழம்பு, சாம்பார், கூட்டு, பொறியல் என பல வெரைட்டிகளிலும் பயன்படுத்தப்படும் இந்த பருப்புகளைத் தரம் பிரித்து, சுத்தப்படுத்தி, தயார் செய்து கொடுக்கும் பருப்பு ஆலைகள் (தால் மில்) இப்போது சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. 

சந்தை வாய்ப்பு! 

உலகளவில் பருப்பு வகைகளை உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை அதன் தேவை அதிகமாகவே இருக்கிறது. நம்நாட்டைப் பொறுத்தவரை நபர் ஒன்றுக்கு ஆண்டுக்கு 2.8 கிலோ பருப்பு தேவை. பொதுவாக அரிசி மில்களை நடத்துபவர்களே பருப்பு ஆலைகளையும் சேர்த்து நடத்துகிறார்கள். தனியாக பருப்பு ஆலையை நடத்தினால் ஜெயிக்க அதிக வாய்ப்பு உண்டு. 

பருப்பு வகைகள்! 

பச்சைப் பயிறு, கொண்டைக் கடலை, பச்சை மொச்சை, கறுப்பு மொச்சை, துவரம் பருப்பு, வெள்ளைப் பட்டாணி, தட்டை பயிர், காராமணி, பச்சைப் பட்டாணி உள்ளிட்ட பருப்பு வகைகள் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுவதால் பருப்பு ஆலையின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இடம்! 

ஆண்டுக்கு 300 டன் பருப்பை உடைத்தெடுக்க 550 சதுர மீட்டர் இடம் தேவைப்படும். இதில் 500 சதுர மீட்டரில் நிலம் மற்றும் 50 சதுர மீட்டரில் கட்டடம் இருக்க வேண்டும். நல்ல சாலை வசதிகள், கழிவுகளை வெளியேற்றும் வசதிகள் போன்ற அம்சங்கள் இருக்குமாறு பார்த்து இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இடத்திற்கு ஆகும் மொத்த மதிப்பு, கிராமப் பகுதி எனில், இரண்டு லட்சம் ரூபாய் வரை ஆகும். நகர்ப்புறத்தில் இவ்வளவு பெரிய இடத்தைப் பிடிக்க இன்னும் நிறைய பணத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கும். 

இயந்திரம்! 

பருப்பை உடைத்தெடுக்கும் அளவிற்கேற்ப இயந்திரத்தின் பயன்பாட்டு செலவுகள் இருக்கும். சுத்தம் செய்யும் கிரேடர், செமி ஆட்டோமேடிக் மினி மில், ஒரு ஹெச்.பி. மோட்டார் ஒன்று என சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகும். 

மின்சாரம், தண்ணீர்! 

ஆண்டுக்கு 300 டன் பருப்பை உடைக்கும் அளவிலான உற்பத்தித் திறனுக்கு இரண்டு ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும். பருப்புகளைச் சுத்தம் செய்வதற்கும், ஊற வைப்பதற்கும் தண்ணீர் தேவைப்படும். இதற்கு ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் தேவைப்படும். 

இதர செலவுகள்! 

அலுவலகம் அமைக்க, எடை போடும் இயந்திரச் செலவுகள் என மொத்தம் 1.30 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். 

வேலையாட்கள்! 

சாதாரண வேலையாட்கள் மூன்று முதல் பத்து நபர்களும், ஒரு மேலாளரும் தேவை. 

செயல் முறை! 

பருப்புகளை பல்வேறு இடங்களிலிருந்து வாங்கிச் சேகரித்து, அதிலிருந்து கழிவுகள் மற்றும் கற்களை நீக்க வேண்டும். அதன்பிறகு 60-90 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊறவிட்டு, பின்னர் வடிகட்டி, சூரிய ஒளியில் இரண்டு, மூன்று நாட்கள் காயவிட வேண்டும். காய்ந்தபின் பருப்பு வகைகளை இயந்திரத்தின் மூலம் உடைத்து தோலை தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும். 

இப்படி தயாராகும் பருப்பை தேவையான அளவுகளில் பாக்கெட் போட்டு விற்பனைக்கு அனுப்பி விடலாம். சின்ன மில் எனில் சோயா பீன்ஸ், பச்சை மொச்சை ஆகியவைகளை ஒரு மணி நேரத்தில் 100-130 கிலோ வரை உடைத்தெடுக்க முடியும். கறுப்பு மொச்சை, பச்சை பயிறு போன்றவற்றை ஒரு மணி நேரத்தில் 60-80 கிலோ வரை உடைத்தெடுக்க முடியும். காரணம், இதற்கான வேலைகள் அதிகமாக இருக்கும். 

அனுமதி! 

இத்தொழிலைப் பொறுத்த வரை பெரியளவில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாது. தேவையற்ற தண்ணீரைத் தகுந்த முறையில் சுத்திகரித்து வெளியேற்றினாலே போதுமானது. எனினும், இத்தொழிலைத் தொடங்க மாநில மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும். முக்கிய காரணம் தூசி! 

சாதகங்கள்! 

இது உடல் ஆரோக்கியம் தரும் உணவுப் பொருள் என்பதால், பருப்பு வகைகளுக்கு மவுசு குறையாது. எனவே, பருப்பு ஆலைகளுக்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். 

பாதகங்கள்! 

பருப்பு வகைகளின் விலை ஏற்ற, இறக்கத்தைப் பொறுத்தே லாபம் அமையும். தரமான பொருட்களைத் தேடி வாங்க அலைய வேண்டும். தவிர, போட்டியாளர்களும் அதிகரித்து வருகின்றனர். இது போன்ற சில பாதகங்கள் இருந்தாலும், உணவு சார்ந்த பொருட்களுக்கு என்றும் தேவை இருக்கும் என்பதால் இந்த தொழிலில் துணிந்து இறங்கலாம். 



Friday, December 14, 2012

இயற்கை விவசாயம்





மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம், வருடத்துக்கு 6 மாத விடுமுறை, பைசா செலவில்லாமல் உலகம் சுற்றும் வாய்ப்பு, 3 ஆண்டுகளில் தலைமைப் பொறியாளர் ஆகி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நிலை...

இப்படியான ஒரு வேலையை விட்டுவிட்டு வந்து நின்றால்? ரூசோ அப்படித்தான் வந்து நின்றார். அதிர்ந்து போனது குடும்பம். ‘‘இனி என்ன செய்யப்போறே?’’ - கேட்டார் ரூசோவின் அப்பா தைனிஸ். ‘‘விவசாயம் பாக்கப்போறேன்...’’ என்றார் ரூசோ! ‘‘வேலைன்னா ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கணும். பாதுகாப்பான வாழ்க்கை... கை நிறைய பணம்... இதெல்லாம் ஓகேதான். ஆனா, நம்மை நிரூபிக்கிற அளவுக்கு ஒரு தனித்துவம் இருக்கணுமே. அதுக்காகத்தான் அப்படி ஒரு ரிஸ்க் எடுத்தேன்!’’ - சிரிக்கிறார் ரூசோ.

சிவகங்கை மாவட்டம் கல்லலை ஒட்டியுள்ள முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரூசோ. ‘மரைன் டெக்னாலஜி’ படித்துவிட்டு கை நிறைய சம்பாதித்தவர், இயற்கை விவசாயம் செய்வதற்காக வேலையை விட்டுவிட்டு வந்து நின்றார். இன்று சென்னையில் திருவான்மியூர், பெசன்ட் நகர், நீலாங்கரை ஆகிய இடங்களில் ‘தி நேச்சுரல் ஸ்டோர்’ என்ற இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை மையத்தை நடத்துகிறார். மாதம் ரூ.15 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை நடக்கும் இவரது கடைகளில் 30க்கும் அதிகமானோர் வேலை செய்கிறார்கள்.

‘‘அப்பாவுக்கு என்னை எஞ்சினியர் ஆக்கிப் பாக்கணும்னு ஆசை. என் கனவு வேற... வித்தியாசமா ஏதாவது பிசினஸ் பண்ணணும். கடைசியில அப்பாதான் ஜெயிச்சார். படிப்பு முடிச்சவுடனே ‘ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’வில ஜூனியர் எஞ்சினியரா வேலை கிடைச்சுச்சு. 40 ஆயிரம் ரூபா சம்பளம். பாம்பே பறந்துட்டேன். கப்பல்ல ஜெனரேட்டரை இயக்குறது, எஞ்சின் மெயின்டனன்ஸ், பாய்லர், பம்புகளை பராமரிக்கிறது... இதுதான் வேலை. கடலாறு மாதம், நாடாறு மாதம்!’’ - மெல்லிய புன்னகை படர பேசுகிறார் ரூசோ.

இவருக்கு 2 சகோதரிகள். மூத்தவர் ராஜரீஹா, எம்.பி.ஏ படித்தவர். மா, பலா, நெல்லி என 100 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறார். இளையவர் ஜோஸ்பினுக்கு தேனீ வளர்ப்புதான் தொழில். அப்பா ஓய்வுபெற்ற பிறகு, மூத்த அக்காவின் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறார்.

“வேலைக்குச் சேர்ந்து ரெண்டாவது வருஷம் சீனியர் எஞ்சினியரா ஆகிட்டேன். 1 லட்சம் ரூபா சம்பளம். எல்லா வசதிகளும் இருந்தும் மனசு மட்டும் வேலையில ஒட்டலே. எந்த சவாலும் இல்லாத வேலை. தினமும் அதே கடல்... அதே கப்பல்... அதே எஞ்சின்... வெறுப்பாயிடுச்சு. ‘இதில என்ன சாதிக்கப் போறேன்’னு மனசு கேட்குது. இன்னும் மூணு வருஷத்தில தலைமைப் பொறியாளர் ஆகலாம். மாசம் 5 லட்சம் ரூபா சம்பளம் கிடைக்கும். ஆனா, இதே கப்பல்தான்... இதே கடல் தான்... இதே எஞ்சின்தான்... கற்பனை பண்ணவே கஷ்டமா இருந்துச்சு...

ஒருமுறை முத்துப்பட்டிக்கு வந்திருந்தப்போ இயற்கை விவசாயிகள் கூட்டத்துக்கு அக்காகூட போயிருந்தேன். கப்பல் வேலையை விட்டுட்டு விவசாயத்தில இறங்கணும்னு முடிவெடுத்தது அங்கேதான். இன்னைக்கு சந்தைக்கு வர்ற எல்லா உணவுப்பொருளும் ரசாயனத்துல குளிச்சுத்தான் வருது. நிலமும் ரசாயனத்துக்குப் பழகிருச்சு. நிலத்தை மீட்டு இயற்கை விவசாயம் செய்றது சாதாரணமில்லை. ஆனா, அப்படி விளைவிக்கிற பொருட்களுக்கு எங்க பகுதியில மரியாதை கிடைக்கலே. பளபளப்பும் கலரும்தான் மக்களுக்கு பெரிசா தெரியுது. அந்தக் கூட்டத்தில விவசாயிகள் இந்த விஷயங்களை ஆதங்கமா பேசினாங்க. அப்போதான் எனக்குள்ள ஒரு பொறி கிளம்புச்சு. நாம ஏன் இந்தப் பொருட்களை மார்க்கெட் பண்ணக்கூடாது?
செயல்ல இறங்கிட்டேன். முதல்ல ஆர்கானிக் பொருட்களை விற்கறதுல இருக்கற பிரச்னைகளை அலசுனேன். சென்னையில் ஆரம்பிச்ச வேகத்திலேயே நிறைய கடைகளை மூடிட்டாங்க. அதுக்கு சில காரணங்கள் இருந்துச்சு. நாட்டு மருந்துக்கடை மாதிரி இறுக்கமா கடைகளை வச்சிருந்தாங்க. ஏ.சி. போட்டு, ஷோரூம் வச்சு பிரமாண்டமா யாரும் செய்யலே. அதனால நமக்கு தொடர்பில்லாத இடம்னு மக்கள் நினைச்சாங்க.

கடுகுல இருந்து வெங்காயம் வரைக்கும் எல்லாப் பொருளும் அந்தக் கடையில கிடைக்கணும். அப்போதான் தேடி வருவாங்க. ரசாயனத்தில விளையுற பொருட்களைவிட இயற்கைப்பொருட்களோட விலை 20 சதவீதம் அதிகமா இருக்கும். அதனால இதை வாங்கற மக்கள் வசிக்கிற பகுதிகள்லதான் கடை தொடங்கணும். எல்லாத்தையும் அலசி ஒரு புராஜெக்ட் ரெடி பண்ணினேன். கையோட ராஜினாமா லெட்டரையும் அனுப்பிட்டேன்!’’ - விளக்குகிறார் தைரியமான முடிவெடுத்த அந்தத் தருணத்தை.

முதலில் வயலில் இறங்கி இயற்கை விவசாயம் முழுமையாகக் கற்றபிறகே அடுத்த அடி எடுத்து வைத்தார். ‘‘வெளிமாநிலங்களுக்குப் போய் அங்கு இயற்கை விவசாயம் செய்றவங்களைப் பாத்து பிசினஸ் பேசுனேன். தமிழ்நாட்டுலயும் தேடிப் பிடிச்சு ஒப்பந்தம் போட்டேன். சென்னை எனக்குப் புதுசுங்கிறதால கல்லூரி நண்பர்கள் அருள்ராஜ், ஜான் ரெண்டு பேரையும் சேத்துக்கிட்டு, கொட்டிவாக்கத்தில முதல் கடையைத் திறந்தேன். 5 லட்சம் ரூபா முதலீடு.

வெறும் வறட்டு வியாபாரமா இல்லாம நிறைய புதுமைகள் செஞ்சோம். இயற்கை தானியங்கள்ல இனிப்புகள் செஞ்சு வாடிக்கையாளர்களுக்கு இலவசமா கொடுத்தோம். பாரம்பரிய அரிசி ரகங்கள்ல செய்யப்பட்ட உணவுகளை வச்சு ‘ஃபுட் ஃபெஸ்டிவல்’ நடத்துனோம். பீச்ல ஸ்டால் போட்டு சாம்பிள் கொடுத்தோம். கஸ்டமர்கள் மொபைல் நம்பரை வாங்கிவச்சு புதிய பொருட்கள் வரும்போது எஸ்எம்எஸ் அனுப்பினோம். முடக்கத்தான், முள்ளுமுருங்கைன்னு கிடைக்காத பொருளையெல்லாம் கொண்டுவந்து கொடுத்தோம். ஒரே வருஷத்தில நாங்க எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு!’’ - மகிழ்கிறார் ரூசோ.

இப்போது தனியாக 3 கடைகளை நடத்துகிறார். தமிழ்நாடு முழுவதுமுள்ள கடைகளுக்கு மொத்த சப்ளை செய்கிறார். நகரத்து வெம்மையை போக்கி வீடுகள்தோறும் பசுமை பூக்கச்செய்யும் அரிய பணியையும் செய்கிறார். கான்க்ரீட்டுக்குத் தப்பி மிஞ்சியிருக்கும் இடங்களிலும் மாடியிலும் இயற்கை முறைப்படி தோட்டம் அமைத்துத் தருகிறார். விதைகளும் பயிற்சியும் அளிக்கிறார். ஈகோ டூரிஸம் என்ற பெயரில் பசுமைச்சுற்றுலா அழைத்துச் செல்கிறார்.

‘‘இப்போ நிக்க நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன். சுதந்திரமா, திருப்தியா வேலை செய்றேன். தலைமைப் பொறியாளரா ஆகியிருந்தா என்ன சம்பாதிப்பேனோ, அதைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். மனிதர்களுக்கு மட்டுமில்லாம மண்ணுக்கும் சேவை செய்ற திருப்தி இருக்கு...’’

உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் உற்சாகத்தைக் கிளறிவிட்டு நிறைவுசெய்கிறார் ரூசோ
!

கவுரவத்தை விட்டோம்.... கை நிறைய சம்பாதிக்கிறோம்...



கலக்கும் மகளிர் சுய உதவிக்குழு உழைக்கவேண்டும் என்ற உறுதியும், சாதிக்கவேண்டும் என்ற உணர்வும் இருந்தால் போதும் எந்த தொழிலாக இருந்தாலும் கை நிறைய சம்பாதிக்க முடியும். கவுரவம் பார்க்காமல் வீடு, வீடாக குப்பை சேகரிப்பதில் தொடங்கி அடுத்த கட்டமாக மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பில் இறங்கி மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இப்போது எங்களில் பலர் கடன் வாங்காமல் குடும்பத்தை நடத்துகிறோம் என பெருமை பொங்க கூறுகின்றனர் கோவை பெரியநாயக்கன் பாளையம் கூடலூர் சுயம் சுத்தா ஸ்ரீசெல்வநாயகி மகளிர் சுய உதவிக்குழுவினர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கூடலூர் கிராமத்தில் பெரிய அளவிலான தொழில் ஏதும் இல்லை. அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லவேண்டும்; அல்லது நகர்ப்புறங்களில் வேலை தேடி வரவேண்டும். இது தான் 15 ஆண்டுகளுக்கு முன் அந்த கிராமத்தின் எதார்த்த நிலை. குடும்பத்தை நடத்தும் அளவுக்கு வருமானம் ஏதும் பெரிதாக கிடைப்பதில்லை. பல வீடுகளில் மாத தேவைக்கே கடன் வாங்கவேண்டிய நிலை. இந்த சூழலில் மகளிர் சுய உதவிக்குழு தொடங்கினால் கடன் பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாம் என தன்னார்வ குழு மூலம் தெரியவந்தது. இதையடுத்து ஒரு குழுவை தொடங்கி தலா ரூ.100 முதலீடு செய்தனர். பின்னர் அதையே குறைந்த வட்டிக்கு சுழற்சி முறையில் விட்டனர்.

அப்போது தான் புதிய எண்ணம் இவர்கள் மனதில் பளிச்சிட்டது. மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்தெடுப்பது குறித்து ஊரெல்லாம் பரவலாக பேசப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்திய மகளிர் சுய உதவிக்குழுவினர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தை அணுகினர். சுய உதவி குழுவின் திட்டம் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் பிடித்து போகவே உடனடியாக பணி ஆரம்பமானது. எப்படி அந்த திட்டம் நிறைவேறியது என்பதை இக்குழுவை சேர்ந்த சரோஜினி தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

‘‘வீடு, வீடாக போய் குப்பை அள்ளுவது தினமும் நடக்கிற காரியமா என ஒரு தயக்கம் இருந்தது. இருந்தாலும் முயற்சி செய்வோம் என்ற நம்பிக்கையில் வீடு, வீடாக துண்டு நோட்டீஸ் கொடுத்தோம். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைச்சது. டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் வண்டி வசதியை செய்து கொடுத்தனர். ஆரம்பத்தில் ஓரிரு நாள் கஷ்டப்பட்டோம். பின்னர் எல்லா வீடுகளிலும் குப்பையை நாங்கள் போய் கேட்பதற்கு முன்பாகவே எடுத்து தயாராக வைத்தனர். ஆரம்பத்தில் ஒரு நபருக்கு தினமும் 60 ரூபாய் சம்பளமாக பகிர்ந்து கொண்டோம்.

பின்னர் 150 ரூபாய் வரை சம்பளம் அதிகரித்தது. தினமும் 3 டிராக்டர் குப்பை எடுத்து பிரித்தோம். நல்ல வருமானம் கிடைத்தது. அடுத்த கட்டத்திற்கு முன்னேறினோம். குப்பை எடுப்பதோடு நிற்காமல் அதில் இருந்து மண்புழு தயாரிப்பில் இறங்கினோம். தற்போது மாதம் ஆயிரம் கிலோ மண்புழு உரம் தயாரித்து விற்பனையில் ஈடுபடுகிறோம். ஒரு கிலோ உரம் 10 ரூபாய்க்கு  விற்பனை செய்கிறோம். மாதம் குறைந்தபட்சம் 10 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. நாங்கள் சேகரிக்கும் குப்பையை தான் உரத்திற்கு மூலப்பொருளாக பயன்படுத்துகிறோம்.

காளான் வித்து வாங்கி உற்பத்தி செய்கிறோம். தினமும் 5 கிலோ உற்பத்தியாகிறது. அதை கிலோ ரூ.125 வீதம் விற்பனை செய்கிறோம். இதற்கு செலவிடும் நேரம் 4 மணி நேரம் மட்டுமே. இதனால் நாங்கள் வழக்கமாக செய்யும் எந்த வேலையும் கெடுவதில்லை,’’‘ என்றார். கூடலூர் பேரூராட்சிக்குட்பட்ட சாமிசெட்டிபாளையத்தில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இதில் அரை ஏக்கருக்கு காய்கறி பயிரிடுகின்றனர். மண்புழு உரம் தயாரிக்கப்படும் இடத்திலேயே சேகரமாகும் இயற்கை உரத்தை இதற்கு பயன்படுத்துகின்றனர். மீதி இடத்தில் காளான் வளர்க்க தனியாக கூரை அமைத்துள்ளனர்.

ஆரம்பத்தில் வங்கியில் 25 ஆயிரம் கடன் வாங்கினர். கடனை திருப்பி செலுத்தியதில் இவர்களுடைய நேர்மையை அறிந்த வங்கி நிர்வாகம் தற்போது 5 லட்சம் வரை கடன் அளிக்க தயாராக உள்ளது. ‘‘கடன் வாங்கி தொழிலை விரிவு செய்வதை காட்டிலும் எங்களிடம் உள்ள நிதியை மேலும் அதிகரித்து தொழிலை விரிவாக்கம் செய்யவேண்டும் என்பதே எங்ளது அடுத்த இலக்கு என்கின்றனர் சாதனை பெண்கள்.

படிப்போடு தொழிலும் கற்றுத்தரும் பலே பள்ளி!




எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தவர், வீட்டில் ஃபியூஸ் போய்விட்டால் எலெக்ட்ரீஷியனைத் தேடி ஓடுகிறார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவரால் வாகனத்தின் பிரேக்கை சரி செய்ய முடியவில்லை. கல்வியை வாழ்க்கையோடு எங்குமே தொடர்புபடுத்த முடியாத அளவுக்கு வெறும் ஏட்டுச்சுரைக்காயாக நம் கல்வித்திட்டம் இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் கல்வியாளர்கள்.

கல்வித்துறையில் இதுபோன்ற இருண்மையான நிலையை மாற்றுவதற்கான முயற்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கத்தான் செய்கின்றன. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது, கடலூர் சி.கே. ஸ்கூல் ஆஃப் பிராக்டிகல் நாலெட்ஜ் பள்ளியின் கல்வித்திட்டம். இளம் தொழிலதிபர் கெவின்கேர் சி.கே.ரங்கநாதன் நடத்தும் இந்தப் பள்ளியின் கல்வித்திட்டம் மாணவர்களை கல்வியாளர்களாக மட்டுமின்றி, தொழில்முனைவோராகவும் மாற்றுகிறது!

வெறும் 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கியவர் சி.கே.ஆர். அவரது அப்பா, சின்னிகிருஷ்ணன் ஆசிரியராக இருந்து பின்னர் தொழில்முனைவோராக மாறியவர். இந்தியாவில் முதன்முதலாக பாக்கெட் ஷாம்பு அறிமுகப்படுத்தியது அவர்தான். அவருக்குப் பிறகு தொழிலுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட சி.கே.ஆர். இந்தியாவின் டாப் நிறுவனங்களில் ஒன்றாக தன் நிறுவனத்தை உயர்த்திக் காட்டினார். தன்னை வளர்த்தெடுத்த கடலூருக்கு நன்றிக்கடன் செய்யும் நோக்கில் தொடங்கியதுதான் சி.கே. ஸ்கூல் ஆஃப் பிராக்டிகல் நாலெட்ஜ் பள்ளி.

“25 வருடங்களா பாபா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ங்கிற பேர்ல என் அம்மா நடத்திக்கிட்டிருந்த பள்ளிக்கூடம் இது. 4 வருஷம் முன்னாடி என் பொறுப்
புக்கு வந்துச்சு. வழக்கமா மதிப்பெண்ணை  முன்னிறுத்தி மாணவர்களை திட்டமிட்டு வார்த்தெடுக்கிற பள்ளிக்கூடமா இல்லாம, வாழ்க்கையோட தொடர்புடைய  கல்வியைத் தரணும்னு நினைச்சேன். படிச்சா வேலை கிடைக்கும்கிற காலம் எல்லாம் மலையேறிடுச்சு. படிப்புங்கிறது ஒரு அடிப்படைத் தகுதி. படிப்பைத்தாண்டி எதில திறமையை வளர்த்துக்கிடமோ, அதுதான் வேலையை பெற்றுத்தரும். இதுக்கு என் வாழ்க்கையே ஒரு படிப்பினை. அதனால, வழக்கமான பாடங்களோட ரெண்டு புதிய பாடத்திட்டங்களைச் சேத்தோம். பிசினஸ் மாடல் கிளாசஸ், லைப் ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட். இதுக்கு ஒருநாளைக்கு 3 பீரியட் ஒதுக்குறோம்...’’ - உற்சாகமாகப் பேசுகிறார் ரங்கநாதன்.

‘‘ஒண்ணாம் வகுப்புல இருந்து 5ம் வகுப்பு வரை லைப் ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட். மியூசிக், டான்ஸ், குக்கரி, அன்றாடம் வீடுகள்ல எதிர்கொள்ற வேலைகள்... ஃபியூஸ் போடுறது, பைப்லைன் மாட்டுறது, அபாகஸ், ஃபீல்ட் டிரிப்... போலீஸ் ஸ்டேஷன் பத்தின பாடம் நடத்தினா நேரா ஸ்டேஷனுக்கே கூட்டிட்டுப் போய் காட்டுறது, அடுத்து, கிராப்ட் ஒர்க்... எம்ப்ராய்டரி முதல் மார்பிள் ஸ்டோன்ல சிலை செய்றது வரைக்கும்... சிட்கோ இன்டஸ்டிரியில ஒரு பயிற்சி மையத்தையே ஆரம்பிச்சிருக்கோம். மாணவர்கள் செய்ற பொருட்களை சேகரிச்சு, வருஷத்துக்கு ஒருநாள் ஒரு சந்தை நடத்துவோம். அதுல மாணவர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வாங்க. அதுல கிடைக்கிற தொகையில குறிப்பிட்ட சதவிகிதம் மாணவனுக்கே கொடுத்திருவோம்...’’ என்று வியக்க வைக்கிறார் பள்ளி முதல்வர் சந்திரசேகரன்.

6 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிசினஸ் மாடல் கிளாசஸ் நடத்தப்படுகிறது. 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான முதலீட்டில் தொடங்க வாய்ப்புள்ள தொழில்கள் பற்றி நேரடி அனுபவங்கள் மூலம் இவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்கள். நர்சரி, வண்ண மீன் வளர்ப்பு, லவ்பேர்ட்ஸ் வளர்ப்பு முதல் டீக்கடை வரை... எல்லாமே களப்பயிற்சிகள்தான். மாணவர்கள் தொழில் செய்வோரிடம் விவாதித்து ஒரு புராஜெக்ட் ரிப்போர்ட் ரெடி செய்கிறார்கள். ஒரு லிட்டர் பாலில் எத்தனை டீ போடலாம்? ஒரு டீக்கு எவ்வளவு சர்க்கரை போடவேண்டும்? எவ்வளவு லாபம் கிடைக்கும்? எல்லாம் ஃபிங்கர் டிப்சில் வைத்திருக்கிறார்கள். இதற்கென பாடப்புத்தகங்களே எழுதப்பட்டுள்ளன!

‘‘இதற்கெல்லாம் நேரம் எப்படிக் கிடைக்கும்னு கேட்கலாம். படிப்பிலும் எங்கள் மாணவர்கள் சளைத்தவர்கள் இல்லை. கடந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் மாவட்ட அளவில் நாங்கள்தான் முதலிடம். அதற்காக மாணவர்களை கசக்கிப் பிழிவதும் இல்லை. இயல்பான கல்வி. காலை 9 மணி முதல் மாலை 4.30 வரை. மொத்தம் 9 பீரியட். இதில் மூன்று பீரியட்கள் பிசினஸ், ஸ்கில், ஃபீல்ட் டிரிப் கிளாஸ். சனிக்கிழமையும் எங்கள் பள்ளி இயங்கும். 12ம் வகுப்பு முடித்துவிட்டு வெளியே வரும்போது மாணவன், முழுமையான ஒரு தொழில்முனைவோனாக வருகிறான்.

அதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. தனக்குக் கிடைக்காத வாய்ப்பு, இந்தத் தலைமுறை அடித்தட்டு, விளிம்புநிலைப் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எங்கள் தாளாளர் உருவாக்கிய இந்தப் பாடத்திட்டத்துக்கு பெற்றோர் மத்தியிலும் நல்ல ஒத்துழைப்பு இருக்கிறது’’ என்கிறார் சந்திரசேகரன். மதிப்பெண்களுக்காக மாணவர்களை கசக்கிப்பிழியும் பள்ளிகளுக்கு மத்தியில், படிப்போடு சேர்த்து தொழில்களையும் பயிற்றுவித்து தொழில்முனைவோனாக்குவது பாராட்டத்தக்கது. இதைத்தான் மக்கள் பள்ளிகளிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.
 

தொன்னை தொழில்!












கும்பகோணத்தை அடுத்துள்ள தியாகராஜபுரத்தில் வசிக்கும் 140 குடும்பங்கள் வாழை தொன்னை செய்து இந்தியா முழுவதும் அனுப்புகிறார்கள். கோயில்களில் தொடங்கி, இப்போது பானிபூரி கடைகளில் கூட தொன்னைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
தஞ்சை மாவட்டத்தில் பல்லாயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்படுகிறது. மரம் வளர வளர இலைகள் பழுத்து, காய்ந்து ஒடிந்து தொங்கத் தொடங்கும். ஈரம் காயாத அதிகாலையில் அச்சருகுகளை வெட்டிச் சேகரிக்கிறார்கள்.

“ஆயிரம் சருகு 400 ரூபா... வெட்டி எடுத்துட்டு வந்து, தனியா தரம் பிரிச்சு, மடிச்சு வெட்டிக்குவோம். தென்னை மர ஓலைகளைப் பிய்ச்சு, கிழிச்சு அந்தக் குச்சியை வச்சுத் தைப்போம். கீழே ஒரு ஏடு, மேலே ஒரு ஏடு... ஒரு இலைக்கு ரெண்டு தொன்னை செய்யலாம். ஒருநாளைக்கு ஒருத்தர் 2,000 தொன்னைகள் தைக்கலாம்’’ என்கிறார் 30 ஆண்டுகளாக தொன்னை தயாரிக்கும் வீரமணி. மதுரை, திருச்சி பகுதிகளில் உள்ள ஏஜென்டுகள் தொன்னைகளை வீட்டுக்கே வந்து மொத்தமாக கொள்முதல் செய்கிறார்கள். 100 தொன்னை களை 25 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

“ஒரு காலத்துல திருப்பதிக்கே நாங்கதான் தொன்னை அனுப்புனோம். அதுக்கு பெரிய முதலீடு தேவை. அதோடு, இந்த வட்டாரத்துல தண்ணிப்பிரச்னை காரணமா, வாழைச்சாகுபடி குறைஞ்சுக்கிட்டே வருது. வாழைமர வேரு லேசா காத்தடிச்சாலே சரிஞ்சு விழுந்துடும். அது விழுந்துட்டா தொழிலும் விழுந்துடும். அதனால ரெகுலரா திருப்பதிக்கு சப்ளை பண்ணமுடியலே...’ என்கிறார் கலியப்பெருமாள். பலர் கூலிக்கு தொன்னை தைத்துத் தருகிறார்கள். 1,000 தொன்னை தைத்தால் 50 ரூபாய் கூலி. பெண்கள் வீட்டில் அமர்ந்தபடியே நாளொன்றுக்கு 100 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள்.

“கைவினைத் தொழில்கள்ல எங்க ஆட்களுக்கு ஆர்வம் அதிகம். அந்தக்காலத்துல வீட்டுல சும்மா இருக்கப் பிடிக்காம பெண்கள் ஆரம்பிச்சு வச்ச தொழில் இது. இன்னைக்கு எங்க வாழ்வாதாரமாவே மாறிப்போச்சு. காத்து மழை, எதைப்பத்தியும் கவலையில்லை. இப்போ சருகு கொஞ்சம் டிமாண்டா இருக்கு. திருச்சி, கடலூர் பகுதிகள்ல போயி வாங்கிட்டு வர்றோம்’ என்கிறார் வீரமணி.

வாழைத் தொன்னையில் உணவிட்டுச் சாப்பிடுவது வயிற்றைக் குளுமைப்படுத்துவதோடு, உடல் சூட்டையும் சமப்படுத்தும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். ஒரு சமூகத் தொழிலாக விளங்கும் தொன்னை தயாரிப்பை அரசு சிறுதொழிலாக அங்கீகரித்து கடன் வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பது இம்மக்களின் கோரிக்கை. ‘அதன்மூலம் தொழிலை இயந்திரமயமாக்க முடியும். கைகளால் தயாரிப்பதைப் போல 10 மடங்கு அதிகம் தயாரிக்கலாம்’ என்கிறார்கள் தியாகராஜபுரம் மக்கள். 

நாங்களும் தொழிலதிபர்தான் நாப்கின் தயாரிப்பில் கலக்கும் சகோதரி




சுய உதவிக்குழு ஆரம்பித்தால் பணம் எல்லாம் கொடுப்பாங்க...வட்டிக்கு கொடுத்து பெருக்கலாம். பங்கு போட்டு பிரித்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் தான் 12 பேருடன் இதை துவக்கினோம். இப்போது நாங்கள் 16 பேர் சகோதரிகள்(சுய உதவி குழுவின் பெயரும் சகோதரி தான்). ஆனால் இப்போது எங்களாலும் பெரிய தொழிலதிபராக முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்கிறார் ஜெயந்தி. ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஜெயந்தி, சுய உதவிக்குழு துவங்குவதற்கு முன் சொந்தமாக தையல் தொழில் செய்து வந்தார்.

சுய உதவிக்குழு தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் சொந்த தொழில் தொடங்கி ஒவ்வொரு உறுப்பினரும் கை நிறைய ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சகோதரியை பெரிய நிறுவனமாக மாற்றுவதே எங்கள் லட்சியம் என 16 பேரும் உறுதி பூண்டுள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் பெரும்பாலானோர் மெழுகுவர்த்தி உற்பத்தி, மசாலா உற்பத்தி, பொம்மைகள் தயாரிப்பு, கைவினை பொருட்கள் தயாரிப்பு, எம்ப்ராய்டரி டிசைனிங், ஆடை தயாரிப்பு என பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டனர்.

ஆனால் இவர்களது இலக்கு குறைந்த முதலீடு, எளிதான வியாபாரம், கை நிறைய சம்பாத்தியம் என்பது தான். பெண்களை சார்ந்த வர்த்தகமாக இருந்தால், சந்தைப்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும் என நம்பினர். அதன் வெளிப்பாடு தான் நாப்கின் தயாரிப்பில் இறங்கியது. இதுபற்றி சகோதரி மகளிர் சுய உதவிக்குழு ஊக்குநர் மலர்கொடி, பிரதிநிதிகள் ஜெயந்தி, அமராவதி, உறுப்பினர் இந்திரா ஆகியோர் கூறியதாவது:

புதுக்கோட்டை யில் மகளிர் சுயஉதவிக்குழுவின ருக்கு பல்வேறு தொழி ல்கள் துவங்குவதற்கான பயிற்சியும், அதற் கான இயந்திரங்களையும் மானிய விலையில் வழங்கவும், அதற்கு தேவையான நிதியை வங்கியில் இருந்து கடனாக பெற்று தருவதாகவும் மகளிர் திட்ட அலுவலர் உறுதியளித்தார். அதன்படி எங்களது சுய உதவிக்குழுவில் இருந்து 3 நபர்களை பயிற்சி பெற்று வருவதற்காக அனுப்பி வைத்தோம். சானிடரி நாப்கின்களுக்கு எப்போதும் வரவேற்பு உள்ளதால் அவற்றை உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சியை பெறுவது என முடிவு செய்தோம்.

அதன்படி சானிடரி நாப்கின் தயாரிப்பது எப்படி என்பது குறித்து எங்கள் குழுவை சேர்ந்த 3 பெண்களும் பயிற்சி பெற்று வந்தனர். அவர்கள் மூலம் மற்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்ததும் புதுக்கோட்டையில் இருந்தே சானிடரி நாப்கின் தயாரிப்பதற்கான இயந்திரத்தையும் வழங்கினர். சானிடரி நாப்கின் தயாரிப்பு தொழில் துவங்க ரூ.2.5 லட்சம் வங்கியிலிருந்து மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டது. கிடைத்த தொகையில் ரூ.1.98 லட்சம் செலவில் புதிதாக சானிடரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரமும், நாப்கின் தயாரிப்பதற்கான லேசான துணியையும், பஞ்சு போன்ற உபபொருட்களையும் வாங்கினோம்.

இந்த இயந்திரம் மூலம் ஒரே அச்சு மூலமாக 10 நிமிடத்தில் 15 பேடுகளை தயார் செய்ய முடியும். ஒரு மணி நேரத்தில் 100 பேடு வரையிலும் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு 2 பேர் மட்டுமே போதுமானது. இப்போது அனைவருக்கும் தொழில் தெரியும். உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் போக மீதி 14 பேரும் சந்தைப்படுத்துதலில் ஈடுபடுகிறோம். நாங்களே நேரடியாக சென்று ஆர்டர் பிடிப்பதால் இதில் உள்ள கஷ்ட, நஷ்டங்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே நல்ல வர்த்தக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

முன்பெல்லாம் வங்கியில் இருந்து வாங்கும் கடனை எப்படி தவணை மாறாமல் கட்டுவது என்ற கவலை எங்களுக்கு இருக்கும். இப்போது நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு தொழிலதிபர்களாக உணர்வதாலும், சொந்த காலில் நிற்பதாலும் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. எனவே சானிடரி நாப்கின் தயாரிப்பு தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் அதிகரித்திருக்கிறது. எப்படியும் ஒரு நாள் நாங்களும் இந்த தொழிலில் முத்திரை பதிப்போம். இவ்வாறு நம்பிக்கையுடன் கூறினர்.

இவர்களது இலக்கு குறைந்த முதலீடு, எளிதான வியாபாரம், கை நிறைய சம்பாத்தியம் என்பது தான். பெண்களை சார்ந்த வர்த்தகமாக இருந்தால், சந்தைப்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும் என நம்பினர். அதன் வெளிப்பாடு தான் நாப்கின் தயாரிப்பில் இறங்கியது.

குப்பையும் எங்களுக்கு கோமேதகமே பணம் கொழிக்க வழிகாட்டும் ‘பனிமலர்’



சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடான பிளாஸ்டிக் கழிவுகளை என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கிய அரசு நிர்வாகங்களுக்கு இப்போது தான்
விடை கிடைத்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை கலந்து சாலை அமைக்கும் புதிய யுக்தி தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது.இத்திட்டத்திற்காக
தமிழகஅரசு மட்டும் நடப்பு ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது.
தற்போது, பிளாஸ்டிக் கழிவுகளின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், ரோடு போடுவதற்கு பயன்படுத்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிளாஸ்டிக் கழிவுகளை உடைத்து அரவை செய்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வினியோகம் செய்கின்றனர் கோவை சரவணம்பட்டி பனிமலர் மகளிர் சுய உதவிக்குழுவினர். கடந்த 2004ம் ஆண்டில் தான் பனிமலர் மகளிர் சுய உதவிக்குழு உருவானது. முதலில் 14 பேர் ஒருங்கிணைந்து தையல்,

எம்ப்ராய்டரி, டைப்ரைட்டிங் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு சம்பாதித்தனர். கூடுதலாக சம்பாதிக்க திட்டமிட்டனர். இது தொடர்பாக கோவை மாநகராட்சி சமூக சேவை சங்கத்தை அணுகினர்.

அங்கு பிளாஸ்டிக் கழிவுகளை பொடியாக்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை ஆலோசனையாக பெற்றனர். ஆனால் இந்த தொழிலில் பல கஷ்டங்கள் இருப்பதையும் உணர்ந்தனர்.ஆரம்பத்தில் இதை செய்வதற்கு ஆர்வத்துடன் வந்த பலர்,இதில் உள்ள சிரமங்களை பார்த்து படிப்படியாக விலகிக் கொண்டனர். ஆனால் ராணி, சாந்தி, செல்வி என மூன்று பேர் மட்டும் விடாப்படியாக இருந்து பல கஷ்டங்களையும் அனுபவித்து தற்போது இத்தொழிலை மிக நேர்த்தியுடன் நடத்தி வருகின்றனர். தனது அனுபவங்களை  பனிமலர் மகளிர் சுய உதவிக்குழுவின் பொறுப்பாளர் ராணி
நம்மிடம் பகிர்ந்து கொண்டது

‘‘நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். கணவர் பேக்கரி ஒன்றில் மாஸ்டராக பணிபுரிகிறார். குடும்பத்திற்கு உதவியாக இருக்கவேண்டும் என்று
தையல் பயின்றேன். ஆனால், சொந்தமான தொழில்துவங்க வேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் எனக்கு அதிகம். பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி
பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை எங்கள் குழு மூலம் நடத்தி வந்தோம். பிளாஸ்டிக் மறு சுழற்சியும், அதன் பயன்பாடு குறித்து தெரிந்து கொண்டோம். இந்த தொழில் செய்வதற்கு பெரும்பாலும் பெண்கள் முன்வருவதில்லை அதனாலேயே எனக்கு இதை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. முதலில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தோம்.

தற்போது மூன்று பேர் மட்டுமே இதனை செய்து வருகிறோம்.  வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து கிலோ 5 ரூபாய் என்று பிளாஸ்டிக் குப்பைகளை
எடுத்து வருவோம். அதனை பிளாஸ்டிக் குப்பைகளை தரம் வாரியாக பிரித்து காயவைப்போம் அதன் பின்பு  பிளாஸ்டிக் அரைவை மிஷன் உதவியுடன்  அதனை நன்கு அரைத்து பொடியாக செய்து அதனை ஒரு நாள் உலரவிட்டு பின் பேக் செய்து விடுவோம். சாலை அமைக்க பயன்படுத்தும் தாரில் பிளாஸ்டிக் பொடி கலக்கப்படுகிறது.பொடியை  கலக்குவதன் மூலம் தார் சாலையின் ஆயுட்காலம் அதிகரிக்கும். இதன் மூலம்
சாலையில் விரிசல் ஏற்படுவது குறைக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பொடியை போடுவதற்காகமாநகராட்சியோ, பஞ்சாயத்து அல்லது ஒப்பந்தகாரர்கள்கிலோ 15 ரூபாய்க்கு வாங்கி செல்வார்கள். ஒரு கிலோவிற்கு ரூபாய் 10 வரை லாபம் கிடைக்கும். இதில் நல்ல வருமானம் உள்ளது.அதே சமயம் குப்பைகளுக்கு நடுவிலும், நாற்றங்களுக்கு இடையிலும் வேலை செய்ய கற்றுக்கொள்ளவேண்டும். இன்றைய சூழலில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்க முடியாதது. அதை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவது மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முடிகிறது.

தினமும் சராசரியாக 500கிலோ பவுடர் உற்பத்தி செய்கிறோம். முதலில் வீடுகளில் இருந்து குப்பைகளை பெற்று அதனை மறுசுழற்சி செய்தோம். தற்போது சில காரணங்களால் நேரடியாக குப்பை கிடங்கில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளை பெற்று வருகிறோம். இது போன்று சொந்தமாக தொழில் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து வங்கி கடன் பெற்று மேலும் பெரிய அளவில் இந்த தொழிலை செய்வேன்.தொழில் எதுவாக இருந்தாலும் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும், கடின உழைப்பும் இருந்தால் போதும் வெற்றி பெறுவது எளிது.

இன்றைய பெண்கள் ஏதேனும் சிறு தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சாதாரண குப்பையை கண்டாலே முகம் சுளிப்பவர்களுக்கு மத்தியில், குப்பை கிடங்குக்கே சென்று பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அதை லாபகரமான தொழிலாக மாற்றி காட்டும் பனிமலர் குழு பெண் சமூக வளர்ச்சிக்கு ஒரு துளி வித்து. குப்பைகளுக்கு நடுவிலும், நாற்றங்களுக்கு இடையிலும் வேலை செய்ய கற்றுக்கொள்ளவேண்டும். இன்றைய சூழலில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்க முடியாதது. அதை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவது மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முடிகிறது
.

Thursday, December 13, 2012

நாயை வளர்க்கும் தாய்



சொரி பிடித்த நாயை எங்காவது ரோட்டில் பார்த்தால், நாம் செய்யும் முதல் வேலை, அந்த இடத்தை விட்டு நாயை விரட்டுவது; அல்லது நாமே அந்த இடத்தை விட்டு விலகுவது. சிலர் அதைப் பார்த்து அதிகபட்சம், �அய்யோ பாவம்!� என்று பரிதாபப்படுவார்கள். ப்ளூ கிராஸ் அமைப்புக்கு போன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நூற்றுக்கு ஐந்து பேருக்குத்தான் வரும். ஆனால், அந்த நாய்களுக்கு சோறு போட்டுப் பராமரிப்பது பற்றி யாராவது யோசித்திருப்போமா?

நாய்களைப் பராமரிப்பதைத் தன் முழு நேர வேலையாகவே செய்கிறார் சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த இல்லதரசி கலைச் செல்வி. இப்படிப் பாசத்துடன் தெரு நாய்களை வளர்க்கும் கலைச்செல்வியைத் �தோழி�க்காகச் சந்தித்தபோது, மிகவும் பரபரப்பாக நாய்களுக்கு சிக்கன் குழம்பு, சாதம் என அமர்க்களமான தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். பரபரப்பான தன்னுடைய வேலைக்கு இடையே நம்மிடம் பேசினார்...

��சென்னையில மனுஷனுக்கு வீடு கிடைக்கிறதே பெரிய விஷயம். கிடைச்சாலும் ஆயிரத்தெட்டு கன்டிஷன் போட்டுதான் வீடே கொடுக்குறாங்க. இந்த ஏரியாவுல நாங்க வீடு தேடுறது யாருக்காவது தெரிஞ்சாலே, அவங்க சொல்ற ஒரே பதில், �வீடு இல்லை�ங்கிறதுதான். எங்கள் வீட்டுலே மூணு நாய்களை வளர்க்குறோம். ஒரு நாயை மட்டும்தான் வளர்க்கலாம்னு வாங்கினோம். ஆனா, மத்த இரண்டு நாய்களும் தெரு நாய்கள். ஒரு நாய், தீபாவளி பட்டாசு வெடிச்சு அடிபட்டு பரிதாபமா கிடந்தது. இன்னொரு நாய், சொரி பிடிச்சு பார்க்குறதுக்கே விகாரமா இருந்துச்சு.  அதைப் பார்த்த எனக்கு  பாவமா இருந்துச்சு. சரி நாமே இதை வளர்க்கலாமேன்னு வீட்டுக்கு தூக்கி வந்தேன். இதுதான் மூணு நாய்கள் எங்க வீட்டுக்கு வந்த கதை. இப்போ மூணு, எண்பதாகி இருக்கு�� என்று கலைச்செல்வி சொன்னதும் நமக்கு ஆச்சரியம் தாங்கவில்லை!

அதிலிருந்து மீண்டு வருவதற்குள் மேலும் ஆச்சரியங்களை அடுக்கினார்... ��இப்ப இருக்குற எண்பது நாய்களும் ரோட்டில், தெரு நாய்களாக திரிந்தவைதான். ஒரு நாய் மேல பரிதாபப்பட்டு வளர்க்க ஆரம்பிச்சேன்னு சொன்னேன் இல்லையா... அதை இன்னைக்கு என் கடமையாவே ஆக்கிக்கிட்டேன். ஆரம்பத்துலே கஷ்டம் தெரியலை.

80 நாய்களுக்குத் தீனி போட, ஒரு நாளைக்கு குறைஞ்சது 500 ரூபாயாவது ஆகுது.  500 ரூபாய்க்கு என்னுடைய இரண்டு மகளும் தினமும் டியூஷன் எடுக்குறாங்க. என்னுடைய வீட்டு செலவுகளை குறைச்சி, அதுல  மிச்சம் பிடிக்கிற காசு அத்தனையும் இந்த நாய்களுக்காக செலவு பண்றேன். என்னுடைய மகன் ஒன்பதாவது படிக்கிறான். அவன்தான் இந்த நாய்களுக்காக அதிகமா கஷ்டப்படறான். தினமும் காலையில நாய்க் குட்டிகளுக்கு பால், பிஸ்கட் வைக்கிறது, மத்தியம் சாப்பாடு போடுறது என அத்தனையும் அவன்தான். இதுக்காக, காலையிலே சீக்கிரமா எழுந்துடுவான். மத்தியான சாப்பாட்டை இன்டர்வெல் நேரத்துலே சாப்பிடுவான்.

80 நாய்களையும் எங்க வீட்டுலே வளர்க்க முடியாது. அதனால, ஒரு வீட்டை 1500 ரூபாய் வாடகைக்கு எடுத்து, அதுல வளர்க்குறோம். பாதுகாப்பான இடத்தை சில நாய்களே தேடிக்கும். நாய் இருக்குற இடத்துக்குப் போய் சாப்பாடு போட்டுட்டு வருவான் என் பையன். தினமும் சாப்பாட்டுச் செலவை சமாளிக்கிறதுதான் எனக்கு பெரிய காரியமா இருக்குது. என் கஷ்டத்தைப் பார்த்து, �உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை�னு கேட்குறார் என் கணவர். சில நேரத்துலே இந்த நாய் வளர்ப்பையே விட்டுவிடணும்னுகூட தோணும். ஆனா, மூளைதான் அப்படி நினைக்குமே தவிர, மனசு கேட்காது. இப்படி போராட்டத்தோடேயே பத்து வருஷம் ஓடிடுச்சு�� என்கிறார் கலைச்செல்வி.

��உங்களால்தான் முடியவில்லையே... இந்தமாதிரி காரியங்களுக்கு  ப்ளூ கிராஸ்  இருக்கிறதே... அவர்களை அணுகலாமே...�� என்றால், ��அதையும்  டிரை பண்ணிட்டோம். அவங்க குட்டி நாயா இருந்தால்தான் எடுத்துக்குவாங்களாம்! �அதுவும் மொத்தமாக எடுத்துக்க மாட்டோம்�னு  சொல்லிட்டாங்க. இந்த நாய்களுக்காக பல பேர் கிட்ட உதவி கேட்டு பார்த்துட்டோம். எந்தப் பயனும் இல்லே.

�சண்டைக்காரன் காலில் விழுறதைவிட சாட்சிக்காரன் காலில் விழுறதே மேல்�னு சொல்வாங்களே, அதுமாதிரிதான் நாங்க தினமும் தெரிஞ்சவங்ககிட்டே ரேஷன் அரிசியைக் காசு கொடுத்து வாங்கி நாய்களுக்கு தீனி போடுறோம். தெரிஞ்ச கறி கடையிலே கோழி கால், தோல், தலை வாங்கி வர்றோம். இதுதவிர, தினமும் 100 ரூபாய்க்கு பிஸ்கட்டும், 4 லிட்டர் பாலும் வாங்குறோம். குட்டி நாய்கள், நோயால் பாதிக்கப்பட்ட  நாய்களுக்கு மட்டும் இந்த பால், பிஸ்கட். எல்லா நாய்களுக்கும் வாங்குற அளவுக்கு என்னிடம் வசதி இல்லை�� என்று கண்களில் நீர் தளும்பச் சொல்லும் கலைச்செல்வி சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்...

��அதுவும் இல்லாமே நாய்களுக்கு தொற்றுநோய் வராம இருக்க மூணு மாசத்துக்கு ஒருமுறை ஊசி போடணும். இனப்பெருக்கத் தடை ஆபரேஷன் செய்யணும். வெட்னரி டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும், மருந்து வாங்கணும்... இப்படி ஏகப்பட்ட செலவு இருக்குது. வேப்பேரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு போனாலும், மருந்துக்கு 400 ரூபாய், ஊசி போடுறதுக்கு 20 ரூபாய்னு 420 ரூபாய் ஆயிடுது. ஒவ்வொரு நாய்க்கும் இப்படி 420 ரூபாய்னா நினைச்சு பாருங்க. இப்படிதான் கஷ்டத்தோடு இஷ்டப்பட்டு நாய்களை வளர்க்குறேன். இதுலே அரசு ஏதாவது உதவி செஞ்சா உதவியா இருக்கும்�� என்று தாய் உள்ளத்தோடு கேட்கும் கலைச் செல்வியின் மகள் தனலட்சுமி, எம்.எஸ்.ஸி படிக்கிறார். ஐ.ஏ.எஸ். கனவோடு இருக்கும் தனலட்சுமி, தான் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற ஆசையே இந்த நாய்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறுகிறார்.

எண்பது நாய்களுக்கு இரண்டு தாய்கள்!

ரூபாவதி.
படங்கள்: பிரவின்.

ஃபேன்ஸி பெல்ட்


��யூனிஃபார்முக்கு மட்டும்தான் பெல்ட் போடணுமா? ஸ்கர்ட், ஜீன்ஸுக்கும் போடலாம்.. அதுவும் கண்ணைப் பறிக்கிற ரெயின்போ கலர்களில் ஃபேன்ஸி பெல்ட் போட்டால், அதன் மதிப்பே தனிதான்!�� & பளிச்சென்று ஆரம்பிக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீப்ரியா. இவரது கைவண்ணத்தில் மிளிரும் ஃபேன்ஸி பெல்ட்டுகளுக்கு அவரது ஏரியாவில் ஏக வரவேற்பு. கிராஃப்ட் அயிட்டங்கள் செய்வதில் கைதேர்ந்த இவர், நம் தோழிகளுக்கும் அந்த வித்தையைக் கற்றுத் தருகிறார்.

��ஃபேன்ஸி பெல்ட் செய்வதற்கு பெரிய பயிற்சியெல்லாம் தேவையில்லை. தலைக்கு பின்னல் போடத் தெரிந்தால் போதும். அதே கான்செப்ட்தான் இதற்கும். இந்த பெல்ட் செய்ய மேக்ரமே திரெட் மற்றும் ஃபேன்ஸி மணிகள் வேண்டும். இவை ஃபேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கும்.

உங்களுக்குப் பிடித்த கலரில் திரெட் வாங்கி அதை யாருக்கு பெல்ட் செய்யப்போகிறீர்களோ அவரது இடுப்பு அளவை விட நாலு இஞ்ச் அதிகம் விட்டு வெட்டவும். இதே அளவில் 7 துண்டுகள் வெட்டி, அவற்றை ஒன்றாக வைத்து ஒரு நுனியில் முடிச்சு போடவும் (படம் 1). இப்போது முதலில் இருக்கும் நூலுக்கு அடியில் இரண்டாவது நூலை விடவும் (படம் 2). மூன்றாவது நூலை இரண்டாவது நூலுக்கு மேலே விடவும் (படம் 3). இதேபோல எல்லா நூலையும் ஒன்று மேலே, ஒன்று கீழே என மாற்றி மாற்றிப் பின்னவும் (படம் 4). ஒரு வரிசை முடிந்ததும், கடைசியாக அடியில் வரும் நூலை தனியாகப் பிடித்துக்கொண்டு (படம் 5), மறுபடியும் பழையபடி பின்ன வேண்டும். முதல் வரிசையில் மேலே போன நூல், அடுத்த வரிசையில் கீழே போகும். கீழே போன நூலை மேலே வைத்துப் பின்ன வேண்டும் (படங்கள் 7, 8).  முன்பு போலவே கடைசி நூலை விட்டுவிட்டு பின்னலைத் தொடர வேண்டும் (படம் 9). ஐந்து வரிசை பின்னி முடித்ததும் மணிகளைக் கோர்க்க வேண்டும் (படம் 10). ஒரு நூலில் கோர்த்துவிட்டு நடுவில் ஒரு நூலை விட்டு அடுத்த நூலில் மணியைக் கோர்த்துப் பின்ன வேண்டும் (படம் 11). அப்போதுதான் பார்க்க அழகாக இருக்கும். இதேபோல மொத்த நீளத்துக்கும் இடைவெளிவிட்டு மணிகளைக் கோர்த்துப் பின்னினால் ஃபேன்ஸி பெல்ட் உருவாகிவிடும்.

மேக்ரமே திரெட் அரை கிலோ 90 முதல் நூறு ரூபாய்க்குள் கிடைக்கும். அரை கிலோவில் ஏழு பெல்ட்டுகள் வரை செய்யலாம். ஒரு பெல்ட்டை குறைந்தது 150 ரூபாய்க்கு விற்கலாம்.   வேலைப்பாட்டைப் பொருத்து விலையைக் கூட்டலாம்.��

- சூர்யா,
படங்கள்: கமல்

கிராஃப்ட்- முத்துமணி மாலை!



``இந்தப் பூமி இருக்கிறவரை, அதில் பெண்கள் இருக்கிற வரை ஃபேஷன் ஜுவல்லரியும் இருக்கும். ஆனால் ஒவ்வொரு சீஸனிலும் வித்தியாசமாக விதவிதமாக தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, அணிந்திருக்கிறவர்களையும் ஜொலிக்க வைக்கும்`` என்று வார்த்தைக்கு வார்த்தை ஃபேஷன் ஜுவல்லரியின் பெருமை பேசுகிறார் சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்த சாய்நாமகிரி. பாராதியார் பணிபுரிந்த மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் டிராயிங் டீச்சராக அறியப்பட்டவர், தன் கலைத்திறமையால் கிராஃப்ட் டீச்சராகவும் பெயர் வாங்கியிருக்கிறார். மகளிர் தின கொண்டாட்டத்துக்கு மேலும் சுவைகூட்டும் வகையில் இந்த இதழில் ஃபேஷன் நகைகள் செய்யக் கற்றுத்தருகிறார். ஆன்ட்டிக் அழகுட மிளிரும் முத்துமணி மாலையும் அதற்கு மேட்ச்சிங்கான கம்மலும் செய்யக் கற்றுத்தருகிறார் சாய்நாமகிரி! 

தேவையான பொருட்கள்
கட்டர், டைட்டர், கியர் ஒயர், கியர் லாக், க்ளோஸ்டு ரிங், செயின் ஹூக், இரண்டு நிறங்களில் முத்து மணிகள், தங்க நிற மணிகள், ஸ்பிரிங் ரிங், டாலர்.

 
 
 
செய்முறை:
  • ந்த முத்து மாலையை கழுத்துக்கு நெருக்கமாகப் போட்டால்தான் அழகாக இருக்கும். அதனால் அந்த அளவுக்கு ஏற்ப கியர் ஒயரை 24 இன்ச் அளவுக்கு கட் செய்யவும். அதன் ஒரு முனையில் க்ளோஸ்டு ரிங் வைத்து முடிக்கவும். பின்பு கியர் லாக்கை வைத்து பிளேயரால் இறுக்கவும் (படம் 1). 
  • கியர் ஒயரில் 15 மெரூன் நிற மணிகளைக் கோர்க்கவும் (படம் 2). 
  • அதைத் தொடர்ந்து 3 பச்சை நிற மணி, 1 தங்க நிற மணி, 3 பச்சை நிற மணி, 1 தங்க மணி என வரிசையாகக் கோர்க்கவும் (படங்கள் 3, 4). 
  • இப்போது இதேபோல மெரூன் மணிகளைக் கோர்க்கவும் (படம் 5). 
  • மெரூன் மணிகளைத் தொடர்ந்து ஆறு பச்சை நிற மணி, மூன்று மெரூன் மணிகளைக் கோர்த்ததும் டாலரைக் கோர்க்கவும் (படம் 6). 
  • ஒரு பக்கம் முடிந்தது. இதேபோல டாலருக்கு அடுத்த பக்கமும் வரிசையாக மெரூன், பச்சை மற்றும் தங்கநிற மணிகளை மாற்றி மாற்றி கோர்க்கவும். முடிவில் க்ளோஸ்டு ரிங்கை நுழைத்து முடிச்சு போடவும் (படம் 7). 
  • பிறகு கியர் லாக்கை நுழைத்து லாக் செய்து, மீதியுள்ள ஒயரை வெட்டவும் (படங்கள் 8, 9). 
  • செயினின் இருபுறம் இருக்கும் க்ளோஸ்டு ரிங்கில் ஒருபுறம் ஸ்பிரிங்கையும் இன்னொரு புறம் செயின் ஹூக்கையும் கோர்த்து விட்டால் கழுத்துக்குக் கச்சிதமான மணிமாலை தயார் (படம் 10).
  • கோல்டன் ஊசியில் மெரூன் நிற மணி, தங்க நிற மணி, பச்சை நிற மணியை வரிசையாகக் கோர்க்கவும் (படம் 11). 
  • மணிகளைக் கோர்த்ததும் டைட்டர் வைத்து கம்பியை ரிங் வடிவில் வளைக்கவும் (படங்கள் 12, 13). 
  • இந்த வளையத்தினுள் கம்மல் ஹூக்குடன் இணைத்துவிட்டால் கம்மல் தயார் (படம் 14). 

இதேபோல இன்னொரு கம்மலையும் செய்யவும்.
 
புடவைக்கு மட்டுமல்லாமல், மாடர்ன் உடைகளுக்கும் பொருந்திப்போவதுதான் இந்த மணிமாலையின் சிறப்பு. இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் மைக்ரோ ரகம் என்பதால் ஒரு செட் செய்ய குறைந்தபட்சம் 60 ரூபாய் செலவாகும். மொத்தமாகப் பொருட்களை வாங்கிவைத்து செய்தால் ஐம்பது ரூபாய்க்குள் முடித்துவிடலாம். இந்த செயின் - கம்மல் செட்டை அதிகபட்சம் 120 ரூபாய்க்கு விற்கலாம். டாலர் மற்றும் செயினின் நேர்த்தியைப் பொருத்து விலையைச் சற்றே கூட்டலாம்.
-பிருந்தா கோபாலன்,
படங்கள்: துரை. மாரியப்பன்.
  

கம்மல்
தேவையான பொருட்கள்
மணிகள், கோல்டன் ஊசி, தங்கநிற மணிகள், கம்மல் ஹூக், ஸ்பிரிங், டைட்டர்.
 
கிராஃப்ட் வொர்க் ஷாப்

மணிமேகலை, அடையாறு:
மண்ணைக்கிளறி விளையாடுகிற குழந்தைப் பருவத்திலேயே அந்த மண்ணை விதவிதமான உருவங்களாகப் பிடித்ததன் மூலம் தனக்குள் இருக்கும் கலையார்வத்தை வெளிப்படுத்தியவர் மணிமேகலை. ஆரம்பத்தில் பூக்கள், பொம்மைகள் என செய்தவர், அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, பல கலைகளை முறைப்படி கற்றுத் தேர்ந்திருக்கிறார். தானறிந்த கலைகளை கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கும் மேலாக மற்றவர்களுக்குக் கற்றுத்தந்து கலைசேவையும் புரிந்து வருகிறார். பூமிக்குக் கேடு விளைவிக்காத ஈகோ ஃப்ரெண்ட்லி கிராஃப்டை செய்வது இவரது இன்னொரு சிறப்பு. பள்ளி, கல்லூரிகளிலும் வொர்க்ஷாப் நடத்தியிருக்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு இலவச கிராஃப்ட் வகுப்பும் எடுத்திருக்கிறார். கலையோடு கருணையும் கலந்த இவரது அணுகுமுறைக்கு, பெண்கள் மத்தியில் ஏக வரவேற்பு!

சுதா செல்வகுமார், போரூர்:
வீடு முழுக்க வியாபித்திருக்கிற அற்புதமான கலைப்படைப்புகளே சுதா செல்வகுமாரின் கலைத்திறமைக்கு சாட்சி. கடந்த 10 ஆண்டுகளாக கிராஃப்ட் வகுப்புகள் எடுத்து வருகிறார். பெயின்டிங், ஃபேன்ஸி பில்லோ, மெகந்தி, ஃபேன்ஸி பைகள், தோரணம், கீ ஹோல்டர், வுட் மியூரல், வாஸ்து மியூரல், கேண்டில் மேக்கிங், சாம்பிராணி தயாரிப்பு, ஃபிளவர் மேக்கிங், சாக்லெட் தயாரிப்பு, கிளே மோல்டிங், டெக்ஸ்டைல் பிரின்ட்டிங், கிரீட்டிங் கார்டு, மணி வேலைப்பாடு என இவருக்குத் தெரிந்த கலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அடிப்படை கலையுடன் தன் கற்பனையையும் சேர்த்து செய்வதால், சுதாவின் கலைப்படைப்புகள் அற்புத அழகோடு இருக்கின்றன. தொலைக்காட்சிகளில் கிராஃப்ட் நிகழ்ச்சி நடத்திய அனுபவமும் இவருக்கு உண்டு.

மகாலட்சுமி, மேடவாக்கம்:
ஃபேஷன் டிசைனிங் படித்திருப்பதாலோ என்னவோ, தனது கிராஃப்ட் அனைத்திலும் புதுமையைப் புகுத்திவிடுகிறார் மகாலட்சுமி. எளிமையும் நவீனமும் நிறைந்த இவரது கலைப்படைப்புகள் அத்தனையும் அதிசயிக்க வைக்கிற ரகம்!
 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites