இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Sunday, December 16, 2012

குறைந்த முதலீட்டில் குணபஜலம் மீன் வளர்ச்சி ஊக்கி

கடந்த 50 ஆண்டுகளாக விவசாயம் பல தீவிர மாற்றத்துற்Ì உள்ளாகியுள்ளது. சாகுபடியை பெருக்கும் எண்ணத்தில், அறிவற்று இராசயன உரங்களையும், பூச்சிகொல்லி தெளிப்பான்களையும் உபயோகித்து, விவசாயத்தை ஒரு வியாபார ரீதியான நடைமுறையாக மாற்றியுள்ளது. கேள்விக்குறிய உண்மை:இராசயனங்கள் அதிக மகசூல் தர உதவுகிறது எனில், விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் விரக்தியால் தங்கள் விளை நிலங்களை விற்பதும் ஏன், என்று கேட்கிறார், முனைவர் கமலாசனம் பிள்ளை, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை தலைவர், UK-NARDEP கன்னியாகுமரி, தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம், கோழிக்கொட்டுபோதையின் பெண் விவசாயியான திருமதி.தங்கம் கூறுகையில், முதலீட்டை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக லாபம் தரும் ஒரே தொழில் வேளாண்மையாகும் என்கிறார். மேலும் நெல், காய்கறி, பழவகைகள் என எவ்வகையினை விவசாயம் செய்தாலும், அவற்றை குறைந்த ஈடுபொருட்களை கொண்டு சிறந்த முறையில்...

Papper Carry Bag Project

 Due to high pollution of plastics and polythene, the awareness in usage of ECO friendly products, is in growing demand.In this scnario, we have launched Paper Carry Bag project, as a income generating activity for Women groups, individuals and for entrepreners. Paper Carry Bag Machinery ECO Green unit has invented a small machinery, which is a simple device without usage of power or water, for women can be employed and the production output will be 1000 bags per day. Near about 700 units has been commenced.  Banana Fibre Papers Shade dried The training, raw materials (Banana Fibre , Paper)Machinery and the Marketing support...

வாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research – CSIR) வாழையில் இருந்து நார் பிரித்து எடுக்க எளிய முறையை கண்டு பிடுத்து உள்ளனர். பொதுவாக, வாழையில் இருந்து நாரை பிரித்து எடுக்க நேரமும் முயற்சியும் அதிகம் வேண்டும். வேலை செய்ய ஆட்களும் தேவை. பொதுவாக, ஒரு நபரால், ஒரு மணியில் 500 கிராம் நார் மட்டுமே எடுக்க புடியும் இந்த புது முறையால், இதை போன்று பாத்து மடங்கு நார் எடுக்க முடியும். இந்த முறையில், காற்றிலா செயல்முறை (anaerobic process) என்சைம் (enzyme) பயன் படுத்தி ஒரு வாரத்தில் நிறைய நாரை பிரித்து எடுக்க முடியும். மிச்சம் உள்ள நீரும் கழிவும் பயோ காஸ் ஆக மாற்ற படுகிறது. நீரும் மறுசுழற்சி...

பருப்பு மில்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது உணவிலும் முக்கிய அங்கம் வகிப்பது பருப்பு வகைகள். நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து பல வகையான பருப்புகளில் இருந்துதான் கிடைக்கிறது. நான்-வெஜ் பிரியர்களுக்கு வேண்டுமானால், பருப்பின் அருமை தெரியாமல் இருக்கலாம். ஆனால், சைவ உணவு விரும்பிகளுக்கு பருப்பு இல்லை என்றால், சாப்பாடு இறங்காது. குழம்பு, சாம்பார், கூட்டு, பொறியல் என பல வெரைட்டிகளிலும் பயன்படுத்தப்படும் இந்த பருப்புகளைத் தரம் பிரித்து, சுத்தப்படுத்தி, தயார் செய்து கொடுக்கும் பருப்பு ஆலைகள் (தால் மில்) இப்போது சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன.  சந்தை வாய்ப்பு!  உலகளவில் பருப்பு வகைகளை உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை அதன் தேவை அதிகமாகவே இருக்கிறது. நம்நாட்டைப்...

Friday, December 14, 2012

இயற்கை விவசாயம்

மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம், வருடத்துக்கு 6 மாத விடுமுறை, பைசா செலவில்லாமல் உலகம் சுற்றும் வாய்ப்பு, 3 ஆண்டுகளில் தலைமைப் பொறியாளர் ஆகி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நிலை...இப்படியான ஒரு வேலையை விட்டுவிட்டு வந்து நின்றால்? ரூசோ அப்படித்தான் வந்து நின்றார். அதிர்ந்து போனது குடும்பம். ‘‘இனி என்ன செய்யப்போறே?’’ - கேட்டார் ரூசோவின் அப்பா தைனிஸ். ‘‘விவசாயம் பாக்கப்போறேன்...’’ என்றார் ரூசோ! ‘‘வேலைன்னா ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கணும். பாதுகாப்பான வாழ்க்கை... கை நிறைய பணம்... இதெல்லாம் ஓகேதான். ஆனா, நம்மை நிரூபிக்கிற அளவுக்கு ஒரு தனித்துவம் இருக்கணுமே. அதுக்காகத்தான் அப்படி ஒரு ரிஸ்க் எடுத்தேன்!’’ - சிரிக்கிறார் ரூசோ.சிவகங்கை மாவட்டம் கல்லலை...

கவுரவத்தை விட்டோம்.... கை நிறைய சம்பாதிக்கிறோம்...

கலக்கும் மகளிர் சுய உதவிக்குழு உழைக்கவேண்டும் என்ற உறுதியும், சாதிக்கவேண்டும் என்ற உணர்வும் இருந்தால் போதும் எந்த தொழிலாக இருந்தாலும் கை நிறைய சம்பாதிக்க முடியும். கவுரவம் பார்க்காமல் வீடு, வீடாக குப்பை சேகரிப்பதில் தொடங்கி அடுத்த கட்டமாக மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பில் இறங்கி மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இப்போது எங்களில் பலர் கடன் வாங்காமல் குடும்பத்தை நடத்துகிறோம் என பெருமை பொங்க கூறுகின்றனர் கோவை பெரியநாயக்கன் பாளையம் கூடலூர் சுயம் சுத்தா ஸ்ரீசெல்வநாயகி மகளிர் சுய உதவிக்குழுவினர்.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கூடலூர் கிராமத்தில் பெரிய அளவிலான தொழில் ஏதும் இல்லை. அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு...

படிப்போடு தொழிலும் கற்றுத்தரும் பலே பள்ளி!

எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தவர், வீட்டில் ஃபியூஸ் போய்விட்டால் எலெக்ட்ரீஷியனைத் தேடி ஓடுகிறார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவரால் வாகனத்தின் பிரேக்கை சரி செய்ய முடியவில்லை. கல்வியை வாழ்க்கையோடு எங்குமே தொடர்புபடுத்த முடியாத அளவுக்கு வெறும் ஏட்டுச்சுரைக்காயாக நம் கல்வித்திட்டம் இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் கல்வியாளர்கள்.கல்வித்துறையில் இதுபோன்ற இருண்மையான நிலையை மாற்றுவதற்கான முயற்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கத்தான் செய்கின்றன. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது, கடலூர் சி.கே. ஸ்கூல் ஆஃப் பிராக்டிகல் நாலெட்ஜ் பள்ளியின் கல்வித்திட்டம். இளம் தொழிலதிபர் கெவின்கேர் சி.கே.ரங்கநாதன் நடத்தும் இந்தப் பள்ளியின் கல்வித்திட்டம்...

தொன்னை தொழில்!

வாழை தமிழர் பண்பாட்டோடு தொடர்புடையது. எந்த சுபகாரியம் நடந்தாலும் வாழைமரம் கட்டி வரவேற்பது நம் மரபு. கிராமங்களில்  வீட்டுக்கு வீடு வாழைமரம் இருக்கும். திடீரென விருந்தாளி வந்து விட்டார்களா? புத்தம் புதிதாக ஒரு தலைவாழை இலை வெட்டி விருந்து வைப்பார்கள். தங்கத்தட்டில் விருந்து வைத்தாலும் தலைவாழை இலை விருந்துக்கு ஈடாகாது. எந்த ஏற்பாடும் இல்லாத தருணத்தில் திடீர் விருந்தாளிகள் வந்து விட்டால், தஞ்சை வட்டார மக்கள் பதற மாட்டார்கள். வாழையில் பூ தள்ளியிருந்தால் அதை ஒடித்து, துவட்டி விடுவார்கள். வாழைப்பூ வடை ருசிக்கு ருசி... மருந்துக்கு மருந்து. குலை தள்ளியிருந்தால் இரண்டு காயைப் பறித்து வறுத்து விடுவார்கள். குலை வெட்டிய மரமிருந்தால் தண்டை பெயர்த்தெடுத்து...

நாங்களும் தொழிலதிபர்தான் நாப்கின் தயாரிப்பில் கலக்கும் சகோதரி

சுய உதவிக்குழு ஆரம்பித்தால் பணம் எல்லாம் கொடுப்பாங்க...வட்டிக்கு கொடுத்து பெருக்கலாம். பங்கு போட்டு பிரித்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் தான் 12 பேருடன் இதை துவக்கினோம். இப்போது நாங்கள் 16 பேர் சகோதரிகள்(சுய உதவி குழுவின் பெயரும் சகோதரி தான்). ஆனால் இப்போது எங்களாலும் பெரிய தொழிலதிபராக முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்கிறார் ஜெயந்தி. ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஜெயந்தி, சுய உதவிக்குழு துவங்குவதற்கு முன் சொந்தமாக தையல் தொழில் செய்து வந்தார்.சுய உதவிக்குழு தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் சொந்த தொழில் தொடங்கி ஒவ்வொரு உறுப்பினரும் கை நிறைய ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சகோதரியை பெரிய...

குப்பையும் எங்களுக்கு கோமேதகமே பணம் கொழிக்க வழிகாட்டும் ‘பனிமலர்’

சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடான பிளாஸ்டிக் கழிவுகளை என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கிய அரசு நிர்வாகங்களுக்கு இப்போது தான்விடை கிடைத்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை கலந்து சாலை அமைக்கும் புதிய யுக்தி தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது.இத்திட்டத்திற்காகதமிழகஅரசு மட்டும் நடப்பு ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. தற்போது, பிளாஸ்டிக் கழிவுகளின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், ரோடு போடுவதற்கு பயன்படுத்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிளாஸ்டிக் கழிவுகளை உடைத்து அரவை செய்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வினியோகம் செய்கின்றனர் கோவை சரவணம்பட்டி பனிமலர் மகளிர் சுய உதவிக்குழுவினர். கடந்த 2004ம் ஆண்டில் தான் பனிமலர் மகளிர் சுய உதவிக்குழு உருவானது....

Thursday, December 13, 2012

நாயை வளர்க்கும் தாய்

சொரி பிடித்த நாயை எங்காவது ரோட்டில் பார்த்தால், நாம் செய்யும் முதல் வேலை, அந்த இடத்தை விட்டு நாயை விரட்டுவது; அல்லது நாமே அந்த இடத்தை விட்டு விலகுவது. சிலர் அதைப் பார்த்து அதிகபட்சம், �அய்யோ பாவம்!� என்று பரிதாபப்படுவார்கள். ப்ளூ கிராஸ் அமைப்புக்கு போன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நூற்றுக்கு ஐந்து பேருக்குத்தான் வரும். ஆனால், அந்த நாய்களுக்கு சோறு போட்டுப் பராமரிப்பது பற்றி யாராவது யோசித்திருப்போமா? நாய்களைப் பராமரிப்பதைத் தன் முழு நேர வேலையாகவே செய்கிறார் சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த இல்லதரசி கலைச் செல்வி. இப்படிப் பாசத்துடன் தெரு நாய்களை வளர்க்கும் கலைச்செல்வியைத் �தோழி�க்காகச் சந்தித்தபோது, மிகவும் பரபரப்பாக நாய்களுக்கு சிக்கன் குழம்பு, சாதம் என அமர்க்களமான தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். பரபரப்பான தன்னுடைய வேலைக்கு இடையே நம்மிடம் பேசினார்... ��சென்னையில மனுஷனுக்கு வீடு கிடைக்கிறதே...

ஃபேன்ஸி பெல்ட்

��யூனிஃபார்முக்கு மட்டும்தான் பெல்ட் போடணுமா? ஸ்கர்ட், ஜீன்ஸுக்கும் போடலாம்.. அதுவும் கண்ணைப் பறிக்கிற ரெயின்போ கலர்களில் ஃபேன்ஸி பெல்ட் போட்டால், அதன் மதிப்பே தனிதான்!�� & பளிச்சென்று ஆரம்பிக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீப்ரியா. இவரது கைவண்ணத்தில் மிளிரும் ஃபேன்ஸி பெல்ட்டுகளுக்கு அவரது ஏரியாவில் ஏக வரவேற்பு. கிராஃப்ட் அயிட்டங்கள் செய்வதில் கைதேர்ந்த இவர், நம் தோழிகளுக்கும் அந்த வித்தையைக் கற்றுத் தருகிறார். ��ஃபேன்ஸி பெல்ட் செய்வதற்கு பெரிய பயிற்சியெல்லாம் தேவையில்லை. தலைக்கு பின்னல் போடத் தெரிந்தால் போதும். அதே கான்செப்ட்தான் இதற்கும். இந்த பெல்ட் செய்ய மேக்ரமே திரெட் மற்றும் ஃபேன்ஸி மணிகள் வேண்டும். இவை ஃபேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கும். உங்களுக்குப்...

கிராஃப்ட்- முத்துமணி மாலை!

``இந்தப் பூமி இருக்கிறவரை, அதில் பெண்கள் இருக்கிற வரை ஃபேஷன் ஜுவல்லரியும் இருக்கும். ஆனால் ஒவ்வொரு சீஸனிலும் வித்தியாசமாக விதவிதமாக தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, அணிந்திருக்கிறவர்களையும் ஜொலிக்க வைக்கும்`` என்று வார்த்தைக்கு வார்த்தை ஃபேஷன் ஜுவல்லரியின் பெருமை பேசுகிறார் சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்த சாய்நாமகிரி. பாராதியார் பணிபுரிந்த மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் டிராயிங் டீச்சராக அறியப்பட்டவர், தன் கலைத்திறமையால் கிராஃப்ட் டீச்சராகவும் பெயர் வாங்கியிருக்கிறார். மகளிர் தின கொண்டாட்டத்துக்கு மேலும் சுவைகூட்டும் வகையில் இந்த இதழில் ஃபேஷன் நகைகள் செய்யக் கற்றுத்தருகிறார். ஆன்ட்டிக் அழகுட மிளிரும் முத்துமணி மாலையும் அதற்கு மேட்ச்சிங்கான...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites