இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, April 20, 2012

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்

images/market/medium/1324547493milk.jpgபுதுடெல்லி: உலக அளவில் பால் உற்பத்தியில் இந்த ஆண்டும் நம்நாடு தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. இதுகுறித்து தேசிய பால் வளர்ச்சி வாரிய (என்டிடிபி) தலைவர் அம்ரிதா படேல் கூறியதாவது: கடந்த 2010&11ம் நிதியாண்டில் நாட்டின் பால் உற்பத்தி 12.1 கோடி டன்னாக அதிகரித்தது. இந்த அபரிமிதமான வளர்ச்சியால் உலகின் மொத்த பால் உற்பத்தியில் 17 சதவீதத்துடன் தொடர்ந்து நம்நாடு முதலிடம் பிடித்தது.
அதில் கூட்டுறவு பால் நிறுவனங்கள் மூலம் 96 லட்சம் டன் பால் பெறப்பட்டது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் அதிகம். மேலும், கூட்டுறவு நிறுவனங்களின் திரவ பால் சந்தை மதிப்பு 4 சதவீதம் அதிகரித்து 82 லட்சம் டன்னானது. அறிவியல் ரீதியாக பால் மனிதர்களுக்கு சிறந்த உணவு என்ற கருத்தால், இதற்கான தேவை அமோகமாக உள்ளது என்று அம்ரிதா தெரிவித்தார்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites