இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, July 13, 2023

எப்போதும் கைவிடாத கைவினைத் தொழில்கள்!

 பெண்கள் அனைவரும் வெளி வேலைக்குச் செல்வது சாத்தியமில்லாதது. அதேநேரம், குடும்ப பொருளாதாரச் சூழலால் வீட்டில் இருந்தே வேலை செய்ய நினைக்கும் பெண்களுக்குச் சிறந்த தொழில் வாய்ப்பாக ஆர்ட்ஸ் அண்டு கிராஃப்ட்ஸ் கைவினைத் தொழில்கள் அமையும். இதற்காகப் பயிற்சி எடுக்கப் பெரிதாக அலையத் தேவையில்லை. நகை மற்றும் ஆடை அலங்காரம், கோலம் போடுவது, மெகந்தி உள்ளிட்ட விஷயங்களில் பெண்களுக்கு இயல்பாகவே ஆர்வம் அதிகம் இருக்கும். அதையே கொஞ்சம் நுணுக்கத்துடன் தெரிந்துகொண்டால், வியாபார வாய்ப்புகளாக மாற்றலாம். வீட்டில் இருந்தபடியே பல்வேறு கைவினைத் தயாரிப்புகள் மூலம் நிறைவாகச் சம்பாதிக்கலாம். இதற்கு அதிக செலவுகள் இருக்காது. ஆனால், கலை ஆர்வமும் தொடர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளும் தேடலும், கிரியேட்டி விட்டி திறனும்தான் இந்தத் தொழிலுக்கான பிரதான முதலீடு.



வீட்டில் இருந்தே செய்ய சிறந்த தொழில்கள் எவை?

க்ளே ஜுவல்லரி, க்ளாத் ஜுவல்லரி, த்ரெட் ஜுவல்லரி, பேப்பர் ஜுவல்லரி உள்ளிட்ட பல்வேறு வகையான ஜுவல்லரி மேக்கிங், சுவர் ஓவியங்கள், இரு பாலர் ஆடைகளிலும் பெயின்டிங் டிசைன்கள் செய்வது, கலைநயமிக்க தஞ்சாவூர் பெயின்டிங், டெய்லரிங் சார்ந்த கைவினைத் தொழில்கள், கண்ணாடிப் பொருள்களில் வண்ணமயமான பெயின்டிங் வேலைகள் செய்வது, களிமண் சிலைகள் தயாரிப்பது, மோல்டிங் க்ளே (Moulding Clay) மூலப்பொருளில் எளிதில் உடையாத பொம்மைகள் தயாரிப்பு, சிலைகள் தயாரிப்பு, சாஃப்ட் டாய்ஸ் மற்றும் பயன்படாத துணிகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் காஸ்டியூம் டாய்ஸ் உட்பட பலதரப்பட்ட பொம்மைகள் தயாரிப்பு, கீ செயின் தயாரிப்பு, பொக்கே தயாரிப்பு, அலங்காரப் பொருள்கள் தயாரிப்பு, சீர்வரிசைத் தட்டுகள் அலங்காரம் உட்பட ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன.

நமக்கு சரியான தொழில் எது?

திருமண மேடை அலங்காரம், மணப்பெண் அலங்காரத்துக்கான பிளாஸ்டிக் பூக்கள், பேப்பர் பூக்கள் தயாரிப்பிலும் ஈடுபடலாம். வாசலில் இடும் கோலங்கள் தவிர, மணமக்கள் உருவங்களையும் கோலமாக வரைவதற்குப் பெரிய தேவை இருக்கிறது. பலவிதமான கைவினைத் தொழில்களில் நமக்கு எது நன்றாகத் தெரியுமோ, நன்றாக செட் ஆகுமோ அதைத் தேர்ந்தெடுத்து அனுபவம் பெற்றாலே போதும். ஆர்வம் இருந்தால் பலதரப்பட்ட கைவினைத் தொழில்களையும் செய்து வருமானம் ஈட்டலாம். சென்னையிலுள்ள முன்னணி கல்லூரிகளில் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறேன். கல்லூரிகளில் ‘தொழில்முனைவோர் பயிற்சி வகுப்புகள்’ எடுக்கவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. நம்மிடம் அனுபவமும் திறமையும் இருந்தாலே போதும். செலவுகள் இன்றியும் வருமானம் ஈட்டலாம்.



முதலீடு: சில நூறு ரூபாய் செலவில் ஆர்வமுள்ள பொருள்களைத் தயாரித்து தெரிந்தவர்களுக்குக் கொடுக்கலாம். ஆர்டர்கள் வரத் தொடங்கியதும், சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சுயதொழிலாகச் செய்யலாம்.

மூலப்பொருள்கள்: பேப்பர், பிரஷ், சிலை தயாரிக்கும் மோல்டு, ஓவியத்துக்கான பெயின்ட், கத்தரிக்கோல், பசை உட்பட சில அடிப்படையான பொருள்கள்.

பயிற்சி: கிராஃப்ட் தயாரிப்பாளர்களிடம் பயிற்சி பெறலாம். தனிப்பட்ட பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொள்ளலாம். யூடியூப் பார்த்தும் கற்றுக்கொள்ளலாம்.

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எட்டு தொழில்கள்! - குறைவான முதலீடு... நிறைவான வருமானம்!
Soumen Tarafder

விற்பனை வாய்ப்பு: பூம்புகார், காதி விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யலாம். நேரடியாகவும், ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் எடுத்தும் வருமானம் ஈட்டலாம். நாம் தயாரித்த பொருள்களையே செல்போனில் வீடியோ எடுத்து யூடியூப், சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வியாபார வாய்ப்புகளாக மாற்றலாம்.

நோட் பண்ணுங்க!

பேப்பர், பயன்பாட்டுக்கு உதவாத துணி வகைகள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை மூலப்பொருள்களாகப் பயன்படுத்தி முடிந்தவரையில் செலவுகளைக் குறைக்கலாம். தரமான மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிப்புகளைச் செய்வது, உரிய நேரத்துக்கு முன்பே டெலிவரி கொடுப்பது நம் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

* கைவினைத் தொழில் சார்ந்த பயிற்சி மற்றும் ஆலோசனைகள் பெற, சென்னையிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம் (எம்.எஸ்.எம்.இ). தொடர்புக்கு: 044 - 22501011

மதுரையிலுள்ள சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனத்தையும் (SIPPO) அணுகலாம். தொடர்புக்கு: 0452 - 2602339, 2603085.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites