இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, July 13, 2023

பெண்கள் சுயதொழில்...

வீட்டுக்காரர் தவறினதுக்குப் பிறகு, அவர் கவனிச்சுகிட்டு இருந்த பாக்குமட்டை தயாரிப்புத் தொழிலை நான் நடத்த ஆரம்பிச்சேன். ஆர்டர்கள் கிடைச்சாலும், வர்ற வருமானம் தயாரிப்புச் செலவுக்கே சரியா இருக்கு. சொல்லிக்கிற அளவுக்கு லாபம் நிக்கிறதில்ல. எந்த இடத்துல சிக்கல் ஏற்படுதுனு கணிக்கவே முடியல’ – தொழில் முனைவோராக இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட கமலாவின் கவலை இது!

தொழிற்சாலைகள் நிறைந்த அந்த ஊரில், ஒருவர் உணவுக்கடையும், மற்றொருவர் ஜவுளிக்கடையும் புதிதாகத் தொடங்கினர். அங்கிருக்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் பலரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள். வெளியூர்களைச் சேர்ந்த அவர்கள் அந்த ஊரில் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். வீட்டு உணவை எதிர்பார்க்கும் அவர்களின் தேவையை அறிந்து, உணவுக்கடையைத் தொடங்கிய ராணிக்கு அந்தத் தொழில் விரைவாக வளர்ச்சியடைந்தது. தொழிற்சாலைகளில் வழங்கப்படும் சீருடைகளையே பயன்படுத்தும் அங்கிருந்த பணியாளர்கள், விடுமுறை தினங்களில் சொந்த ஊர் சென்றுவிடுவார்கள். இதை முன்கூட்டியே கணிக்காமல் ஜவுளிக்கடையைத் தொடங்கிய புவனாவுக்கு வெற்றி வசமாகவில்லை.இந்த நான்கு பெண்களைப்போல, நம்மில் ஏராளமானோர் உண்டு. இல்லத் தரசிகள் தவிர, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தொழில்முனைவோராகும் ஆசை அதிகமிருக்கும். ஏற்கெனவே சுயதொழில் செய்துவரும் சிலருக்குச் சரியான வளர்ச்சி கிடைக்காமல் தடுமாற்றம் இருக்கக்கூடும். இவற்றுக்கெல்லாம் சரியான ஆலோசனைகளையும் தீர்வுகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெண்களுக்கு வழிகாட்டுகிறது இந்தத் தொகுப்பு.

எந்தத் தொழில் தொடங்கினாலும், நம்முடைய தயாரிப்பு அல்லது விற்பனைப் பொருளுக்கான தேவை உடையோர்தான் நம் எஜமானர்கள். நம்முடைய ஆர்வமும், அதை வாங்கும் மக்களின் தேவையும் ஒரே கோட்டில் சந்திக்கும் புள்ளிதான் பிசினஸ். இதற்காக, ரூம் போட்டு மூளைக்குச் சோர்வு ஏற்படும் அளவுக்கு யோசிக்க வேண்டியதில்லை.

உண்ணும் உணவு, உடுத்தும் உடை, அலங்காரப் பொருள்கள், செடி வளர்ப்பு, மன அழுத்தம் குறைக்க உதவும் செல்லப் பிராணிகள் வளர்ப்பு என நம் அன்றாடத் தேவைகளும், பயன்பாட்டுப் பொருள்களும்தாம் தொழில் வாய்ப்புகளுக்கான வரவேற்பறை.

வீட்டில் இருந்தே செய்வதற்கான சிறந்த தொழில்கள் எவை, அவற்றைச் சரியான முறையில் செய்வது எப்படி, தோல்வி ஏற்படுவதைத் தவிர்க்க செய்ய வேண்டிய விஷயங்கள், தொழிலை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வழிமுறைகள்... – இப்படி ஒவ்வொருவருக்குமான எதிர்பார்ப்புகள், தேவைகள் நிறைய இருக்கும். எல்லாவற்றுக்கும் எளிமையாக வழிகாட்டுகிறார்கள், பல்வேறு தொழில்களிலும் சாதித்த அனுபவ பெண் தொழில்முனைவோர்.

வெற்றிபெற வாழ்த்துகள்!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites