முந்தைய காலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட கேக், திருமணங்கள், அலுவலகக் கொண்டாட்டங்கள், முக்கிய பண்டிகை தினங்கள் எனப்பல நிகழ்ச்சிகளிலும் அத்தியாவசிய உணவுப் பொருளாக மாறிவிட்டது. பல்வேறு பேக்கரிகளில் ரசாயன சேர்மானங்கள் சேர்த்து கேக், சாக்லேட் தயாரிக்கப்படுவதாகப் பலரும் ஆதங்கப்படும் நிலையில், அதற்கு மாற்றாக உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தாத கேக் வகைகளை நாடுவோர் அதிகரித்து வருகின்றனர். நான் வசிக்கும் பகுதியிலேயே 20 பேர் வீட்டில் இருந்தபடியே கேக் தயாரிக்கின்றனர். எனக்குத் தெரிந்தே சென்னையில் நூற்றுக்கணக்கானோர் இந்தத் தொழிலில் இருக்கின்றனர். ஆனால், எல்லோருக்குமே ஆர்டர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் விருப்பும் கேக், சாக்லேட் தயாரிப்பில் தரத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் ஆர்டர்கள்...