இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Monday, September 22, 2014

இலவங்கபட்டை (சின்னமோமம் ஜெய்லெனிகம்)


லாரேசியே
இரகங்கள் : ஏற்காடு 1, பி பி ஐ - 1, நித்தியஸ்ரீ, நவஸ்ரீ, கொங்கன் தேஜ், சுகந்தினி
ஏற்காடு 1
மண் மற்றும் தட்பவெப்பநிலை : இயற்கை வளமாக, ஆழமான மணல் கலந்த வடிகால் வசதியுடைய நிலம் ஏற்றது. பயிரிட அதிக அளவு வெப்பமும், காற்றில் ஈரப்பதமும் இருக்கவேண்டும். கடல் மட்டத்திலிருந்து 800-1000 மீட்டர் உயரம் வரை இவற்றை பயிர் செய்யலாம். வருடத்திற்கு 150 முதல் 250 செ.மீ மழைப்பொழிவு உள்ள இடங்கள் ஏற்றது. தமிழ்நாட்டில் நீலகிரி, குற்றாலம், கன்னியாகுமரி மற்றும் கீழ்பழனி மலைப்பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இலவங்கத்தை தனிப்  பயிராகவோ, காப்பித் தோட்டத்தில் ஊடுபயிராகவோ பயிர்  செய்யலாம்.
பருவம் : ஜுன் - டிசம்பர்
இனப்பெருக்கம் : விதை, வேர்விட்ட தண்டுக்குச்சிகள் மற்றும் பதியன்பள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்யலாம்.
நாற்றங்கால்: தேர்ந்தெடுக்கப்பட்ட நோய் மரங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட விதைகளை நாற்றங்கால் படுக்கையில் 12 செ.மீ தூரத்தில் உள்ள வரிசைகளில் விதைக்க வேண்டும். ஜுன் – ஆகஸ்ட் மாதம் வரை விதைப்பிற்கு ஏற்ற பருவமாகும். நாற்றுகள் 15 செ.மீ உயரம் அடையும் போது அவற்றினை படுக்கையிலிருந்து பாலித்தீன் பைகளுக்கு மாற்ற வேண்டும்.
விதையும் விதைப்பும்
நன்றாக பழுத்த பழங்களை சேகரித்து, அவற்றின் மேல் சகையை பிரித்துவிட்ட தண்ணீரில் கழுவி விதைகளை சேகரிதது நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு உலர்த்திய கழுவி உடனே விதைக்கவேண்டும். தாமதித்தால் முளைப்புத் தன்மை பாதிக்கப்படும். மேடைப் பாத்திகளில் 10 செ.மீ இடைவெளியில் விதைக்கு 1 செ.மீ இடைவெளி விட்டு விதைகளை விதைக்கவேண்டும். பின்பு 20 x 10 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் மணல், மண் மற்றும் தொழு எரு ஆகியவற்றை கலந்து நிரப்பி 3 மாதம் ஆன நாற்றுக்களை பாத்திகளில் இருந்து பிடுங்கி எடுத்து நட்டு பராமரிக்கவேண்டும். நிழலுக்கு சிறிய பந்தல் ஒன்றை அமைக்கவேண்டும்.
நடவு : 50 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் கொண்ட குழிகளை 3 x 3 மீ இடைவெளியில் தோண்ட வேண்டும். குழிகளில் நன்கு மக்கிய தொழு உரத்தை வளமான மேல் மண்ணுடன் சம அளவில் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும். ஒரு வருட வயதுள்ள நாற்றுகளை நட வேண்டும். இளஞ்செடியின் துரித வளர்ச்சிக்கு நிழல் அமைப்பது மிகவும் அவசியம்.
நீர் நிர்வாகம்
கோடைக்காலங்களில் தேவை ஏற்படும் போது கட்டாயம் நீர்ப்பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
உரங்களை கீழ்க்கண்ட தருணங்களில், அளவுகளில் இடவேண்டும்.
உரங்கள்
முதல் வருடம்
வருடத்திற்கு ஒரு முறை அதிகப்படுத்த வேண்டிய உர அளவு
பத்து வருடம் முதல்
தொழு உரம்
-
2 கிலோ
20 கிலோ
தழைச்சத்து
20 கிராம்
20 கிராம்
200 கிராம்
மணிச்சத்து
18 கிராம்
18 கிராம்
180 கிராம்
சாம்பல்சத்து
25 கிராம்
25 கிராம்
250 கிராம்
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
தேவைப்படும் போது களை எடுத்து தோட்டத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். நட்ட இரண்டு அல்லது மூன்று வருடம் கழித்து செடிகளை 15 செ.மீ உயரத்தில் வெட்டி மண் கொண்டு மூஎ விடவேண்டும். இதனால் அடிப்பாகத்தில் இருந்து பக்கக் கிளைகள் அதிகமாக வளரும். இவ்வாறு வளரும் ஒவ்வொரு பக்கக் கிளையையும் வெட்டி மண் போட்டு மூடி மேன் மேலும் பக்கக் கிளைகள் தோன்றபத் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதால் 4-5 வருடங்களில் செடிகள் பட்டை உரிக்கத் தகுந்த பல இளம் கிளைகளை உடைய ஒரு குத்துச் செடியாக வளர்ந்துவிடும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
தண்டுத் துளைப்பான் : கட்டுப்படுத்த, தண்டு மற்றும் கிளைகளில் கார்பரில் 50 சதம் 2 கிராமை 2 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மாதத்திற்கு ஒரு முறை மேற்ப்பூச்சுப் போன்று தடவவேண்டும். இலைக்கடிக்கும் புழு, எறும்பு மற்றும கரையான்களின் சேதத்தை தடுக்க லிண்டேன் தூவவும், மருந்து 1.3 சதம் தூவவேண்டும்.
காபி சிகப்பு துளைப்பான் : இதனை கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் 1 மி.லி. / ஓட்டை என்ற அளவில் கலந்து தண்டில் உட்செலுத்த வேண்டும். இதனை உட்செலுத்துவதற்கும் அறுவடைக்கும் 20 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

இலை உண்ணும் புழுக்கள், சிகப்பு எறும்புகள் மற்றும் கரையான்கள் : 1.3% மிதைல் பாரத்தியான் தூவ வேண்டும்.
நோய்கள்:
இலைப்புள்ளி நோய் :ஒரு சதவீத போர்டோக் கலவை அல்லது 0.25 % காப்பர் ஆக்ஸி குளோரைடு தெளிக்கவேண்டும்.
அறுவடை : நட்ட 4-5 ஆண்டு முதல் அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். மே மாதத்தில் ஒரு முறையும், நவம்பர் மாதத்தில் ஒரு முறையும் 15.2 மீட்டர் நீளமும், 2-2.5 செ.மீ கனமும் வளர்ந்து உள்ள குச்சகளை வெட்டவேண்டும். பின் இவற்றிலிருந்து பட்டை உரிப்பதெற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கத்தியைக் கொண்டு பட்டையை சீராக உரித்தெடுக்க வேண்டும். உரித்த பட்டைகள் 2-5 நாட்கள் உலர்த்தி சேமிக்கவேண்டும். உரித்த பட்டைகளை  295 நாட்கள் உலர்த்தி சேமிக்கவேண்டும். உரித்த பட்டைகளை  2-5 நாட்கள் உலர்த்தி சேமிக்கவேண்டும். கிளைகளை வெட்டிய அன்றே  பட்டை உரிக்கவேண்டும். நுனியிலுள்ள இளம் குச்சிகள் மற்றும் இலைகளிலிருந்து இலவங்க எண்ணெய் எடுக்கலாம்.
இலவங்க பட்டைஇலவங்க பட்டை குச்சிகள்
மகசூல் : ஒரு குத்துச் செடியிலிருந்து 100 கிராம் உலர்ந்த பட்டை, ஒரு எக்டருக்கு ஒரு வருடத்தில் 35 கிலோ இலவங்க எண்ணெய் கிடைக்கும்.

சர்வ சுகந்தி (பிரின்ஜி இலை)


(பைமென்டா டையகா)

மிர்டேசியே
சர்வ சுகந்தி
மண் மற்றும் வெப்பநிலை
  • அங்கக வளம் மிக்க செம்பொறை மண் மற்றும் இருபொறை மண் இப்பயிர் சாகுபடிக்கு உகந்தது.
  • கடல் மட்ட உயரம் 1000 மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.
  • வருடாந்திர மழையளவு : 100 - 200 செ.மீ
  • தகுந்த வெப்பநிலை - 270 செ
பயிர்ப் பெருக்கம் 
விதை 
தொடர்ந்து காய்க்கக் கூடிய மற்றும் அதிக மகசூல் தரக் கூடிய மரங்களிலிருந்து விதைகளை சேகரிக்க வேண்டும். பழங்களை ஓர் இரவு சுத்தமான தண்ணீரில் ஊற வைத்து சல்லடையில் தேய்த்து விதைகளை பிரித்தெடுக்க வேண்டும். அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட விதையினை நிழலில் உலர்த்த வேண்டும். 1.2 மீட்டர் அகலமுள்ள நாற்றங்கால் படுக்கையில் விதைகளை விதைத்து வைக்கோல் அல்லது காய்ந்த இலைச் சருகுகள் கொண்டு மூட வேண்டும். விதைத்த 15 நாட்களில் முளைப்பு தென்படும்.
விதையில்லா பயிர்ப் பெருக்கம்
ஜனவரி மாதத்தில் விண்பதியம் (Air layering) மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யலாம்.
நடவு
25-30 செ.மீ உயரம் கொண்ட 9-10 மாத நாற்றுகளை வயலில் நடவு செய்யவும்.
இடைவெளி
6 x 6 மீட்டர் இப்பயிர் இருபாலின வகையை சார்ந்ததால் தோட்டத்தில் ஆண் மற்றும் பெண் மரம் 1:10 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.
உரமிடுதல் 
முதல் வருடம் – 10 கிலோ தொழு உரம் + 20 : 180 : 50 கிராம் NPK / மரம்
15 வயது மற்றும் அதற்கு மேல் – 50 கிலோ தொழு உரம் + 300:250:750 கிராம் NPK / மரம். இதனை இரண்டு பாகங்களாக அளிக்க வேண்டும்.

அறுவடை
விதையில்லா பயிர்ப் பெருக்கம் மூலம் நடவு செய்த மரங்கள் மூன்று வருடத்திலும், விதை மூலம் நடவு செய்த மரங்கள் 6 வருடத்திலும் பூக்க ஆரம்பிக்கும். மண் வழியாக மரம் ஒன்றிற்கு 1.25 கிராம் பேக்குளோபூட்ரசால் அளிப்பதால் பூக்கிளைகள், பூக்கள், காய் பிடிப்புத் தன்மை அதிகரித்து மகசூலையும் அதிகரிக்கிறது. நன்கு முதிர்ந்த பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.
சர்வ சுகந்தி இலை
சர்வ சுகந்தி பழங்கள்
மகசூல் : மரம் ஒன்றிற்கு வருடத்திற்கு 20-25 கிலோ உலர்ந்த பழங்கள் கிடைக்கும்.

ஜாதிக்காய் (மிரிஸ்டிகா ப்ரகிரன்ஸ்)
மிரிஸ்டிகேசியே
ஜாதிக்காய் மரம்
இரகங்கள் : விஷ்வ ஸ்ரீ,கொங்கன் சுகந்தா மற்றும் கொங்கன் ஸ்வாட். அதிக மகசூல் தரக்கூடிய ஐ. ஐ.எஸ்.ஆர் பரிந்துரை செய்யப்பட்ட மரங்களான ஏ 9. 20, 22, 25, 69, 150 ஏ 4 -12, 22, 52, ஏ11 – 23, 70 போன்றவற்றினை பயிர் செய்யலாம்.
மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதி உள்ள களிமண் மற்றும் செம்மண் நிலப்பகுதி உகந்தது. இலை மக்குகள் மற்றும் அங்ககப் பொருட்கள் நிறைந்த மண்ணில் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் வரை உயரமுள்ள தோட்டங்களில் இதனைப் பயிரிடலாம். மரங்கள் ஈரப்பசையுடன் கூடிய வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளர்ந்து பலன் கொடுக்கும். மழையளவு 150-250 செ.மீ வரை பொழியும் இடங்களில் இதனைப் பயிரிடலாம். தமிழ்நாட்டில் கல்லாறு, பாலியாறு, மரப்பாலம், கூடலூர் மற்றும் குற்றாலம் பகுதிகளில் ஜாதிக்காய் பயிரிடப்படுகிறது, கீழ்பழனி மலைப்பகுதிகளில் உள்ள கலப்புத் தோட்டங்களில் இதனைப் பயிர் செய்யலாம்.
இனப்பெருக்கம் : விதை மற்றும் ஒட்டுக்கட்டிய செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். ஜாதிக்காய் நாற்றுக்களை விட ஒட்டுக்கட்டிய செடிகள் மிகுந்த பலனைக் கொடுக்கும்.
விதைப்பெருக்கம்: ஜீன்-ஜீலை மாதங்களில் தேர்வு செய்யப்பட்ட பெண் மரங்களிலிருந்து 30 கிராம் எடை கொண்ட பழங்களை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட விதைகளை 30 செ.மீ இடைவெளியில் 2.5 -5.0 செ.மீ ஆழத்தில் நட வேண்டும். அதன் பின் தினமும் பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும். விதைகள் நட்ட ஒரு மாதத்தில் முளைக்க தொடங்கும். சுமார் நான்கு மாதங்கள் வரை விதைகள் முளைப்பது தொடர்ந்து இருக்கும். ஒரு வருட வயதுள்ள நாற்றுகளை 35x15 செ.மீ அளவு கொண்ட பாலித்தீன் பைகளில் நடவு செய்ய வேண்டும். பின் 18-24 மாத வயதுடைய நாற்றுகளை நன்கு உழுத வயல்களில் நடவேண்டும்.
விதையில்லா பயிர் பெருக்கம் : அதிக மகசூல் தரக்கூடிய இரகங்களை பயிர் பெருக்கம் செய்ய ஒட்டுமுறை (அ) மொட்டு ஒட்டு முறை சிறந்தது. அக்டோபர் – ஜனவரி மாதங்களில் (நேர் தண்டுகளை) பயன்படுத்தி ஒட்டுகட்ட வேண்டும்.
நடவு : நாற்றுக்களை நட குழிகளை 60 செ.மீ நீள, அகலம் மற்றும் ஆழம் இருக்குமாறு தோண்டவேண்டும். இடைவெளி  8 x 8 மீட்டர் இருபுறமும் இருக்கவேண்டும். குழிகளில் தொழு எரு, தோட்டத்து மண் ஆகியவற்றை இட்டு நிரப்பி வைக்கவேண்டும். பருவமழை தொடங்கும் போது நாற்றுக்களை நடவு செய்யவேண்டும். ஜூன் – டிசம்பர் மாதங்களில் நட வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை :
நட்ட ஒரு வருடம் ஆன பிறகு ஒன்றிற்கு தொழு எரு 15 கிலோ, தழைச்சத்து 20 கிராம், மணிச்சத்து 20 கிராம் மற்றும் சாம்பல் சத்து 60 கிராம் கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும். வளர்ந்த மரங்களுக்கு தொழு உரம் 50 கிலோ, தழைச்சத்து 300 கிராம், மணிச்சத்து 300 கிராம், சாம்பல்சத்து 960 கிராம் கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இரண்டு பாகங்களாக பிரித்து ஜூன்- ஜூலை மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் இடவேண்டும். உரம் இட்ட ஒரு மாதம் கழித்து மரம் ஒன்றிற்கு 50 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் உரம் இடவேண்டும்.
காலம்
N
P
K
(கிராம்/மரம்)
ஒரு வருட மரங்களுக்கு
20
20
60
நன்கு முதிந்த மரங்களுக்கு
300
300
960
நீர் நிர்வாகம்
கோடைக் காலத்தில் 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
பின்செய்நேர்த்தி : மரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் களை எடுத்து சுத்தமாக வைத்துக்  கொள்ளவேண்டும். நடவு செய்த இளஞ்செடிகளுக்கு நல்ல நிழல் கொடுக்கவேண்டும். மரங்களுக்கிடையே நிழல் தர வாழை போன்றவற்றை வளர்க்கலாம். ஜாதிக்காயை தென்னை மற்றும் பாக்குத் தோப்புகளில் கலப்புப் பயிராகப் பயிர் செய்யலாம். ஜாதிக்காய் மரத்தைச்சுற்றி காய்ந்த இலைச்சருகுகளைப் பரப்பி மண் ஈரத்தைப் பாதுகாக்கவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
ஜாதிக்காயில் பூச்சிகளும், நோய்களும் குறைவு.  இருந்தாலும்  ‘ரொரன்தஸ்’ என்னும் ஒட்டுண்ணிச் செடியினால் மரத்தின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும். இதைக் கட்டுப்படுத்த ஒட்டுண்ணிச் செடியை வெட்டி எறியவேண்டும். பின்பு போர்டோ பசையை மரத்தில் தடவிவிடவேண்டும்.
அறுவடை
ஜாதிக்காய் மரம் நட்ட ஆறு முதல் ஏழு ஆண்டுகளில் பலன் கொடுக்க ஆரம்பிக்கும்.
ஜாதிக்காய்
ஜாதிக்காய் தொலி
ஜாதிப் பத்திரி
மகசூல் : ஒவ்வொரு ஆண்டும் ஒரு மரத்திலிருந்து ஜாதிக்காய் பழம் : 1000-2000 எண்ணிக்கை, உலர்ந்த ஜாதிக்காய் கொட்டை : 5 - 7 கிலோ, ஜாதிப் பத்திரி : 0.5-0.7 கிலோ (500-700 கிராம்) கிடைக்கும்.

கிராம்பு (சிஜியம் அரோமேடிகம்)


மிர்டேசியே
கிராம்பு மரம்திறக்கப்படாத மலர் மொட்டு (பயன்பாட்டு பகுதி)
இரகங்கள் : உள்ளூர் வகைகள்
மண் மற்றும் தட்பவெப்பநிலை : கிராம்பு தமிழ்நாட்டில் நீலகிரி, கன்னியாகுமரி, ஏற்காடு, திருநெல்வேலி மற்றும் கீழ்பழனி மலைப்பகுதிகளில் பயிரிடப்படுகிறது. வெப்பமண்டலப் பயிரான கிராம்பு நல்ல வெதுவெதுப்பான ஈரப்பதமுள்ள சூழ்நிலையில் நன்கு வளரும். மழையளவு ஆண்டிற்கு 150-200 செ.மீ வரையிலும் தேவை. வெப்பநிலை 20லிருந்து 30 டிகிரி செல்சியஸ், கடல் மட்டத்திலிருந்த 1000 மீட்டர் உயரம் வரை நன்கு வளரும். நல்ல வடிகால் வசதி கொண்ட ஈரம் காக்கும் தன்மை கொண்ட இலைமக்கு நிறைந்த மணல் கலந்த களிமண், கிராம்பு சாகுபடி செய்ய மிகவும் ஏற்றது.
பருவம் : ஜுன் - டிசம்பர்
இனவிருத்தி : கிராம்பை விதை மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். இதைத்  தவிர பதியன் மூலமும், மென்திசு ஒட்டு முறையிலும் உற்பத்தி செய்யலாம்.
நாற்றாங்கால் : நன்கு பழுத்த பழங்களை அறுவடை  செய்து, பழங்களை 12 மணி சேரம் தண்ணீரில் ஊறவைத்து, சதைப் பகுதியை அகற்றிவிட்டு விதைகளைப் பிரித்தெடுக்கவேண்டும். அறுவடை செய்யப்பட்ட ஒரு வார காலத்திற்குள் விதைகள் அவற்றின் முளைப்புத் திறனை இழந்துவிடும். எனவே உடனே விதைக்கவேண்டும். நிழற்பாங்கான இடங்களில் திறனை இழந்து விடும். எனவே உடனே விதைக்கவேண்டும். நிழற்பாங்கான இடங்களில் உயர்ந்த மேட்டுப்பாத்திகள் அமைத்து பாத்திகளில் 2.5 செ.மீ ஆழத்திலும், 12 முதல் 15 செ.மீ இடைவெளியில் விதைகளை விதைக்கவேண்டும். விதைகள் 5-6 வாரங்களில் முளைத்துவிடும். செடிகள் மெதுவாக வளரத் தொடங்கும் போதிய அளவு நீர் விட்டுப் பாதுகாக்கவேண்டும். கன்றுகளை நாற்றாங்காலில் ஆறுமாத காலம் வைத்திருக்கவேண்டும். பிறகு நாற்றுக்களைத் தொழு எரு, மண் மற்றும் மணல் சம அளவில் நிரப்பிய 35 x 22 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் நட்டு இரண்டு வருடம் வரை பாதுகாக்க வெண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட நாற்றுக்களை நடவிற்கு உபயோகப்படுத்தவேண்டும்.
நடவு : 30 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளை 6 மீட்டர் இடைவெளியில் எடுத்து, ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ மக்கிய தொழு உரம், 50 கிராம் அசோஸ்பைரில்லம் இட்டு, குழிகளின் மத்தியில் செடிகளை நடவேண்டும். நட்டவுடன் வேர்ப்பகுதிகளில், மழைநீர் தேங்காமல் நல்ல வடிகால் வசதி செய்யவேண்டும்.
நிழல் ஏற்படுத்துதல் : நாற்றாங்காலுக்கு நிழல் ஏற்படுத்துவது அவசியம் ஆகும். இளஞ்செடிகளுக்கு ஆரம்பகாலத்தில் சிறு பந்தல் அமைத்தும், வாழை பயிரிட்டும் நிழல் ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
உர மேலாண்மை :
ஒரு வயதான, இளஞ்செடிகளுக்கு, செடி ஒன்றிற்கு 15 கிலோ மக்கிய தொழு எரு தழைச்சத்து  20 கிராம், மணிச்சத்து 20 கிராம், சாம்பல் சத்து 60 கிராம் கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியை ஜுன் - ஜுலை மாதத்திலும், மற்றொரு பகுதியை செப்டம்பர் - அக்டோபர் மாதத்திலும் இடவேண்டும். பின்னர் சிறிது சிறிதாக உர அளவுகளை அதிகரித்து 7 வயதான மரத்திற்கு மரம் ஒன்றிற்கு தொழு எரு 50 கிலோ, தழைச்சத்து 300 கிராம், மணிச்சத்து 300 கிராம் மற்றும் சாம்பல் சத்து 960 கிராம் கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும். உரம் இட்ட ஒரு மாதம் கழித்து, 50 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இடவேண்டும்.
அளிக்க வேண்டிய காலம்
தழை
மணி
சாம்பல்
(கிராம்/செடி)
ஒரு வயதான இளஞ்செடிகளுக்கு
20
20
60
7 வயதான மரத்திற்கு
300
300
960
நீர் நிர்வாகம்
மழை இல்லாத காலங்களில் இளஞ்செடிகளுக்குத் தேவை ஏற்படும் போது நீர் பாய்ச்சுவது அவசியம் ஆகும். கோடைக்காலத்தில் நீர் பாய்ச்சவேண்டும். வளர்ந்த மரங்களுக்கு நீர் பாயச்சுவதால் காய்ப்புத்திறன் அதிகரிக்கும். ஜனவரி - மே மாதங்களில் சொட்டு நீர் மூலமாக அல்லது பாத்திகள் மூலமாக நீர் பாய்ச்சுவதாக இருந்தால் ஒரு நாளைக்கு சுமார் 8 லிட்டர் அளவில் நீர் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
பின்செய்நேர்த்தி : கிராம்பு மரத்தில் நிறைய பக்கக் கிளைகள் தோன்றும். எனவே காய்ந்த குச்சிகளையும், அடர்ந்து வளரும் கொம்புகளில் சிலவற்றையும் தக்க நேரத்தில் கவாத்து செய்யவேண்டும். மரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் களையெடுத்து காய்ந்த இலைச்சருகுகளை மேலாகப் பரப்பி மண்ணின் ஈரத்தைக் காக்கவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

பூச்சிகள் :
தண்டுத் துளைப்பான் : இரண்டு கிராம் கார்பரில் நனையும் தூள் 50 சதத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, பாதிக்கப்பட்ட தண்டுப்பகுதியில் தடவிவிடவேண்டும். ஒரு லிட்டர் நீரில் 1 மிலி குயினால்பாஸை துளையில் ஊற்ற வேண்டும். ஒரு மரத்திற்கு 60 கிராம் போரேட்டை மண்ணில் இட வேண்டும்.
இலை தின்னும் புழு : எண்டோசல்பான் 35 இசி 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
கருப்பு செதில்பூச்சி : ஒரு லிட்டர் நீரில் மோனோகுரோட்டோபாஸ் 1.5 மிலி அல்லது டைமிதோயேட் 1 மிலி கலந்து தெளிக்கவும்.
நோய்கள்
சிவப்பு வேரழுகல் நோய் : நோய் தாக்கிய மரங்களை வேரோடு தோண்டி அழிக்கவேண்டும். நோய் தாக்கிய மரத்தின் அருகில் ஒரு சதவீத போர்டோக்கலவையை 5 லிட்டர் வீதம் ஊற்றவேண்டும்.
இலைப்புள்ளி நோய் : சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் (PfPPB) @ 0.2 %  + லாசோனியா இலை சாற்றினை (5 %) கலந்து பருவத்திற்கு முன்பு தெளிக்கவும் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடை @ 0.25 % தெளிக்கவும்.
திடீர் மடிவு நோய் : இந்நோய் கிராம்பு மரத்தினைத் தாக்கும் மிக முக்கியமான நோய் ஆகும். பாதிக்கப்பட்ட மரங்கள் திடீரென்று காய்ந்து விடும். நீண்ட காலத்திற்கு ஏற்படும் வறண்ட சூழ்நிலையும், மழையினால் ஏற்படும் நீர்த்தேக்க நிலையும், வேர்களை நலிவடையச் செய்வதால் இந்நோய் ஏற்படுகிறது.
கட்டுப்பாடு
  1. கார்பென்டாசிம் அல்லது மான்கோசெப் 1 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பாகம் நன்கு நனையும்படி ஊற்றவேண்டும்.
  2. வாடிக் கொண்டிருக்கும் மரங்களுக்கு நிழல் கொடுத்து உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும்.
  3. மலைப்பகுதி சரிவுகளில் சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது மிகுந்த பலன் தரும்.
  4. மரத்தைச் சுற்றி இலைச் சருகுகளைப் பரப்பி மண்ணின் ஈரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
  5. தோட்ட எல்லைப் பகுதியில் விரைவாக வளரக்கூடிய காற்றுத் தடை மரங்களை வளர்க்கவேண்டும்.
அறுவடை
முதிராத கிராம்பு அரும்பு
நட்ட 7-8 ஆண்டுகளில் பலன் தரத்துவங்கும். பூக்கள் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை தோன்ற ஆரம்பிக்கும். பூ பூத்த 4-6 மாதங்களில் பூ மொக்குகள் பச்சையிலிருந்து இளம் சிவப்பு நிறமாக மாறும் பொழுது, அதே சமயம் பூக்கள் இதழ் விரியத் தொடங்குவதற்கு முன்னர் பறிக்கவேண்டும். கொத்து கொத்தாகத் தோன்றும் மொட்டுக்களை கைகளினால் அறுவுடை செய்யவேண்டும். அறுவடைக்கு அடுத்த நாள் இளம் வெய்யிலில் 4-5 நாட்கள் நன்கு உலரும் வரை காய வைக்கவேண்டும்.
உலர்ந்த காம்பு அரும்பு
மகசூல் : மரம் ஒன்றிற்கு 2 முதல் 3 கிலோ உலர்ந்த கிராம்பு கிடைக்கும்.

குடைமிளகாய் (கேப்சிகம் ஏனம்)


சோலனேசியே
குடைமிளகாய்
இரகங்கள்
கே டீ பி எல் -19, பயிடாகி கட்டி
மண்
நல்ல வடிகால் வசதியுடைய மணல் கலந்த பசளை மண் அல்லது உவர்ப்புத் தன்மை இல்லாத களிமண் குடை மிளகாய் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. 6.5-7.0 வரை கார அமிலத் தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.
விதைப்பு பருவம்
ஜூன் - ஜூலை.
விதையளவு
500 கிராம் / எக்டர்.
இடைவெளி
60 x 45 செ.மீ
நாற்றங்கால்
7 மீ நீளம், 1.2 மீ அகலம் மற்றும் 15 செ.மீ உயரம் கொண்ட 10-12 படுக்கைகளை தயார் செய்தல் வேண்டும். விதைகளை 10 செ.மீ வரிசை இடைவெளியில் 0.5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். 15-20 கிலோ நன்கு மட்கிய உரம் மற்றும் 500 கிராம் 15:15:15 NPK காப்ளக்ஸ் உரத்தினை விதைத்த 15-20 நாட்களில் ஒவ்வொரு படுக்கைக்கும் அளிக்க வேண்டும்.
நடவு
ஆரோக்கியமான நாற்றுகளை 45 செ.மீ  இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
உர மேலாண்மை 
தொழுஉரம் 20-25 டன்/எக்டர், 60, 100 மற்றும் 60 கிலோ NPK/எக்டர் உரத்தினை அடியுரமாக இட வேண்டும். எக்டருக்கு 20 கிலோ தழைச் சத்து மற்றும் 20 கிலோ சாம்பல் சத்தினை நட்ட மூன்று வாரங்களுக்கு பிறகும், 40 கிலோ தழைச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்தினை நட்ட ஆறு வாரங்களுக்கு பிறகும் மேலுரமாக இட வேண்டும்.
நோய்கள்
ஆந்தராக்னோஸ்

ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் மேன்கோசெப் கலந்து தெளிக்கவும்.

காய் அழுகல்  நோய்
ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடை கலந்து தெளிக்கவும்.
சாம்பல் நோய்
0.3 சதவித நனையும் கந்தகத்தை தெளிக்கவும்.
குடை மிளகாய் விதைகள்
மகசூல் : 25 - 35 டன் / எக்டர் 

வெனிலா (வெனிலா பிளானிபோலியா)


ஆர்கிடேசியே
வெனிலா தோப்பு
மண்  
அங்ககச்சத்து நிறைந்த நல்ல வடிகால் வசதியுடைய மண் சாகுபடிக்கு ஏற்றதாகும்.

தட்பவெப்பநிலை 
சிறந்த வளர்ச்சிக்கு 150-300 செ.மீ சராசரி வருட மழையளவு கொண்டிருத்தல்  வேண்டும். இந்த மழையளவு பயிர் வளர்ச்சியின் போது (9 மாதங்கள்) கொண்டிருக்க வேண்டும். மேலும் பூக்கும் தருணத்தில் (3 மாதங்கள்) மழையிருத்தல் கூடாது.
உயரம் : இப்பயிரினை கடல் மட்டத்திலிருந்து 700 முதல் 1500 மீட்டர் வரை உயரம் மற்றும் 100 வடக்கு மற்றும் 200 தெற்கு அட்சரேகை கொண்ட பகுதியில் சாகுபடி செய்யலாம்.
வெப்பநிலை: 210 செ – 320 செ.
கொடி படர துணை மரம் நடவு செய்தல்
கிளிரிசிடியா, கல்யாண முருங்கை, காட்டாமணக்கு, சம்பங்கி மற்றும் சவுக்கு போன்ற மரங்களை மழைக்காலங்களில் (மே மற்றும் ஜூன்) நடவு செய்யலாம்.
வெனிலா நடவு பருவம்
துணை மரங்கள் நட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு வெனிலா நடவு செய்ய வேண்டும். அதாவது செப்டம்பர் – அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடவு செய்ய வேண்டும்.
பயிர்ப்பெருக்கம்
வேர்விடாத குச்சிகள் (60 - 120 செ.மீ)

இடைவெளி
  • சமவெளி பகுதி : 2.0 to 2.5 மீ X 1.2 – 1.5 மீ
  • மலைப்பகுதி : 1.5 x 1.5 மீ
நடவு 
தாங்கு மரம் மற்றும் வெண்ணிலா நடவு  செய்ய 30 x 30 x 30 செ.மீ குழிகள் எடுக்கவேண்டும். வேர்விடாத குச்சிகளை (60 - 120 செ.மீ)  தேர்வு செய்து நடவின்பொது குச்சிகள் மண்ணுள் புதையும்படி நடவு செய்யவேண்டும்.
வளர்ச்சி சீரமைப்பு 
கொடிகளை 1.2 - 1.5 மீட்டர் வளரச் செய்து பின் பற்று மரத்தாங்குகளில் கீழ்நோக்கி வளருமாறு சீரமைக்கவேண்டும். அவ்வாறு வளர்ந்த கொடிகள் மண்ணில் புதையச் செய்து வேரூட்டம் செய்யவேண்டும். வேர் ஊன்றிய பின்னர் மேல் நோக்கி வளரச் செய்து பற்று / தாங்கு மரங்களில் படரச் செய்யவேண்டும். இம்முறையினைத் தொடாந்து செய்தல்வேண்டும்.
உர நிர்வாகம் 
வெண்ணிலா வளர்ச்சிக்கு மக்கு உரங்களைப் பெருமளவில் பயன்படுத்தவேண்டும். எனவே வளர்ந்த தாவரப் பகுதிகளை கவாத்து செய்து வேர்ப்பகுதியிலிட்டு மக்கச்செய்யலாம். மேலும் ஒரு வருடத்திற்கு கொடி ஒன்றிற்கு 40-60 கிராம் தழைச்சத்து + 20-30 கிராம் மணிச்சத்து + 60-100 கிராம் சாம்பல் சத்து இடவேண்டும். இதனை 2 (அ) 3 முறை பிரித்து இடவேண்டும். சிறந்த வளர்ச்சிக்கு இலை வழியாக ஊட்டச்சத்துக்களை தெளிக்கவேண்டும்.  1 சதவீதம் 17:17:17 தழை, மணி, சாம்பல் சத்துக்கலவையினை மாதம் ஒரு முறை தெளிக்கவேண்டும்.
பூத்தல்
வெண்ணிலா நடவு செய்த மூன்றாவது வருடத்திலிருந்து பூக்கத் தொடங்கும். இப்பயிரானது டிசம்பர் - ஜனவரி மாதங்களில் பூக்கத் தொடங்கும்.  பூக்கும் தரணத்திற்கு 6-8 மாதத்திற்கு முன்பு நுனிப் பகுதியினை 7.5 – 10 செ.மீ அளவில் வெட்டி விடுதல்வேண்டும். இவ்வாறு பூக்கும் / அரும்பு முதிர்ந்த தண்டுகளைக் கவாத்து செய்தவன் மூலம் அதிக மொட்டுக்கள் கிடைக்கும். ஒவ்வொரு பூங்கொத்திலும் 15-20 பூக்களைக் கொண்டிருக்கும்.
வெனிலா பூக்கள்

மகரந்தச்சேர்க்கை 
மகரந்தச்சேர்க்கையினை மலர்ந்த அன்றே காலை 4.00 முதல் மதியம் 1.00 மணிக்குள் செய்து முடிக்கவேண்டும். ஒரு கொடியில் 10 முதல் 20 பூங்கொத்துகளை மகரந்தசேர்க்கை செய்தல்வேண்டும். பொதுவாக பூ கொத்தில் கீழ்ப் பகுதியிலுள்ள 5-6  பூக்களை மகரந்தச்சேர்க்கை செய்தல்வேண்டும். ஒரு பழக்கப்பட்ட / கைத்தேர்ந்த வேலையாள் நாளொன்றுக்கு 1000-1500 பூக்கள் மகரந்தச்சேர்க்கை செய்யலாம்.
வெனிலா முதிராத பீன்ஸ்
பயிர் பாதுகாப்பு
பூச்சிகள்
இலைத் தின்னும் புழுக்கள், உண்ணும் வண்டுகள் மற்றும் புழுக்கள்
குயினால்பாஸ் 0.05 % தெளிக்கவும்.
நோய்கள்
புசேரியம் வாடல் நோய்
  • இதனை கட்டுப்படுத்த 0.1 சதவீதம் கார்ப்னடாசிம் வேர்ப்பகுதி நனையுமாறு ஊற்றவேண்டும். மேலும் அதே அளவினை இலையின் மீது தெளிக்கவேண்டும்.
பைடோப்தோரா அழுகல் நோய் 
இந்நோயினை கட்டுப்படுத்த 1 சதவீதம் போர்டோக்கலவையினை தெளிக்கவேண்டும். மேலும் 0.2 சதவீதம் காப்பர் ஆக்சிகுளோரைடை வேர்ப்பாகத்தில் கரைத்து ஊற்றவேண்டும்.
நுனி அழுகல் மற்றும் ஸ்கிளோர்சியம் அழுகல் நோய் 
0.1 % கார்பன்டாசிம் கொண்டு மண்ணை நனைக்க வேண்டும்.
அறுவடை
காய்கள் / பீன்ஸ் மலர்ந்த 6 முதல் 9 மாதங்களில் அறுவடை செய்யலாம். முதிர்ந்த காய்கள் பச்சை நிறத்திலிருந்து இள மஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் அறுவடை செய்யவேண்டும். தினசரி முதிர்ந்த காய்களை கத்தியினைக் கொண்டு அறுவடை செய்யவேண்டும்.

மகசூல்
  • ஒரு வருடத்தில் ஒரு எக்டரலிருந்து 300-600 கிலோ பதப்படுத்தப்பட்ட பீன்ஸ் கிடைக்கும்.
  • 1 கிலோ பதப்படுத்தப்பட்ட பீன்ஸ் கிடைக்க 6 கிலோ பச்சை பீன்ஸ் தேவைப்படும்.
  • இலாபகரமான மகசூலுக்கு கொடிகளை 12-14 வருடம் வரை வளர்க்கலாம்.
பதப்படுத்தப்பட்ட பீன்ஸ்

வெள்ளைப்பூண்டு (அல்லியம் சட்டைவம்)


அல்லியேசியே
பூண்டு செடிபூண்டு
இரகங்கள் 
ஊட்டி 1, ராஜாளி, தபிதி, சிரோல், மட்ராஸி காடி மற்றும் சிங்கப்பூர் சிகப்பு.
ஊட்டி 1
மண் மற்றும் தட்பவெப்பநிலை
பூண்டு கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 2000 மீ வரை உயரமுள்ள பகுதிகளில் வளரும். பூண்டின் தழை வளர்ச்சி பருவத்திற்கு குறுகிய நாட்களும், குளிர்ந்த (12-180 செ), ஈரமான காலம் மிகவும் ஏற்றது. நல்ல வடிகால் வசதியுடைய அதிக அங்கக தன்மை மற்றும் 6 முதல் 7 வரை கார அமிலத் தன்மை கொண்ட மண் சிறந்தது. அதிக அமிலத் தன்மை மற்றும் கடினமான மண்ணில் பூண்டு சரியாக வளராது.
பருவம்
மலைப் பகுதியில் பூண்டு இரண்டு பருவத்தில் பயிரிடலாம்.
முதல் பருவம் : ஜ%ன் - ஜ%லை
இரண்டாம் பருவம் : அக்டோபர் – நவம்பர்
விதையளவு
500-600 கிலோ / எக்டர்

விதையும் விதைப்பும்
நிலத்தை முதலில் நன்றாக உழுது மண் நல்ல மிருதுவாக இருக்கும்படி தயாரிக்க வேண்டும். பின்னர் 30 செ.மீ இடைவெளியில் சால் அல்லது தகுந்த அளவில் படுக்கை அமைக்க வேண்டும். பூண்டு பற்களை 15 x 10 செ.மீ இடைவெளியில் நட வேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவு செய்தவுடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 7 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
அடியுரம் : மக்கிய தொழு உரம் 50 டன் / எக்டர், எக்டருக்கு அசோஸ்பைரில்லம் 2 கிலோ மற்றும் பாஸ்போபாக்டீரியா 2 கிலோ இட வேண்டும். மேலும் ஒரு எக்டருக்கு 40 கிலோ தழைச்சத்து. 75 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து + ஒரு டன் வேப்பம் புண்ணாக்கு + 50 கிலோ மெக்னீசியம் சல்பேட் அடியுரமாக இடவேண்டும். எக்டருக்கு 35 கிலோ தழைச் சத்தை நட்ட 45 நாட்கள் கழித்து மேலுரமாக இட வேண்டும்.
இரப்பர் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் 
பூண்டுகள் இரப்பர் போன்று காணப்படும். இவ்வாறான குறைபாட்டின் மூலம் பூண்டுகள் மெலிந்து உண்பதற்குரிய பண்புகளற்று காணப்படும்.
கட்டுப்பாடு
  1. தழைச்சத்து  பயன்பாட்டினை குறைத்துக் கொள்ளவேண்டும்.
  2. யூரியா பயன்பாட்டினை மாற்றி அம்மோனியம் சல்பேட் இடவேண்டும்.
  3. நடவு செய்த 30வது நாள் 1500 பிபிஎம் சிசிசி (அ) மேலிக் ஹைட்ராக்சைடு தெளிக்கவேண்டும்.
  4. நீர் பாய்ச்சும் இடைவெளியினை அதிகப்படுத்தவேண்டும்.
  5. நடவு செய்த 30,60 மற்றும் 90 நாட்களில் போரான் 0.1 சதவீதம் மற்றும் சோடியம் மாலிபடேட் இடவேண்டும்.
களைக்கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி : நடவு செய்த 30 மற்றும் 60 ஆம் நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
இலைபேன்கள் :
இதனைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
நூற்புழு :
இதனைக் கட்டுப்படுத்த நடவிற்கு முன் பூண்டுகளைத் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். அதன் பின்னர் பாஸ்போமிடான் 40 எஸ்.எல் (2 மில்லி மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு) என்ற அளவில் கலந்து 15 நிமழடம் ஊறவைத்து நடவு செய்வதன் மூலம் நூற்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
நோய்கள் :
பூண்டு அழுகல் நோய்
நடவிற்கு முன் ஒரு கிலோ பூண்டிற்கு 2 கிலோ கார்பன்டாசிம் கொண்டு நேர்த்தி செய்து (அ) இதனை 1 கிராம் / லிட்டர் தண்ணீரில்  கலந்து வேர்ப்பாகம் நனையுமாறு ஊற்றவேண்டும்.
இலைத்தீயல் நோய்
இந்நோயினைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 500 கிரர்ம கார்பன்டாசிம் கலந்து தெளிக்கவேண்டும்.
அறுவடை
இலைகள் மஞ்சளாக மாறியவுடன், பயிரை அறுவடை செய்யலாம். பொதுவாக 120 முதல் 130 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். அறுவடை செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பே நீர்ப் பாய்ச்சுதலை நிறுத்திவிட வேண்டும். வேரையும் பொய்த் தண்டையும் அறுத்துவிட்டு பூண்டை காயவைத்து பிறகு விற்பனை செய்ய வேண்டும்.
அறுவடை செய்யப்பட்ட பூண்டுகள்

Sunday, September 21, 2014

வெனிலா (வெனிலா பிளானிபோலியா)


ஆர்கிடேசியே
வெனிலா தோப்பு
மண்  
அங்ககச்சத்து நிறைந்த நல்ல வடிகால் வசதியுடைய மண் சாகுபடிக்கு ஏற்றதாகும்.

தட்பவெப்பநிலை 
சிறந்த வளர்ச்சிக்கு 150-300 செ.மீ சராசரி வருட மழையளவு கொண்டிருத்தல்  வேண்டும். இந்த மழையளவு பயிர் வளர்ச்சியின் போது (9 மாதங்கள்) கொண்டிருக்க வேண்டும். மேலும் பூக்கும் தருணத்தில் (3 மாதங்கள்) மழையிருத்தல் கூடாது.
உயரம் : இப்பயிரினை கடல் மட்டத்திலிருந்து 700 முதல் 1500 மீட்டர் வரை உயரம் மற்றும் 100 வடக்கு மற்றும் 200 தெற்கு அட்சரேகை கொண்ட பகுதியில் சாகுபடி செய்யலாம்.
வெப்பநிலை: 210 செ – 320 செ.
கொடி படர துணை மரம் நடவு செய்தல்
கிளிரிசிடியா, கல்யாண முருங்கை, காட்டாமணக்கு, சம்பங்கி மற்றும் சவுக்கு போன்ற மரங்களை மழைக்காலங்களில் (மே மற்றும் ஜூன்) நடவு செய்யலாம்.
வெனிலா நடவு பருவம்
துணை மரங்கள் நட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு வெனிலா நடவு செய்ய வேண்டும். அதாவது செப்டம்பர் – அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடவு செய்ய வேண்டும்.
பயிர்ப்பெருக்கம்
வேர்விடாத குச்சிகள் (60 - 120 செ.மீ)

இடைவெளி
  • சமவெளி பகுதி : 2.0 to 2.5 மீ X 1.2 – 1.5 மீ
  • மலைப்பகுதி : 1.5 x 1.5 மீ
நடவு 
தாங்கு மரம் மற்றும் வெண்ணிலா நடவு  செய்ய 30 x 30 x 30 செ.மீ குழிகள் எடுக்கவேண்டும். வேர்விடாத குச்சிகளை (60 - 120 செ.மீ)  தேர்வு செய்து நடவின்பொது குச்சிகள் மண்ணுள் புதையும்படி நடவு செய்யவேண்டும்.
வளர்ச்சி சீரமைப்பு 
கொடிகளை 1.2 - 1.5 மீட்டர் வளரச் செய்து பின் பற்று மரத்தாங்குகளில் கீழ்நோக்கி வளருமாறு சீரமைக்கவேண்டும். அவ்வாறு வளர்ந்த கொடிகள் மண்ணில் புதையச் செய்து வேரூட்டம் செய்யவேண்டும். வேர் ஊன்றிய பின்னர் மேல் நோக்கி வளரச் செய்து பற்று / தாங்கு மரங்களில் படரச் செய்யவேண்டும். இம்முறையினைத் தொடாந்து செய்தல்வேண்டும்.
உர நிர்வாகம் 
வெண்ணிலா வளர்ச்சிக்கு மக்கு உரங்களைப் பெருமளவில் பயன்படுத்தவேண்டும். எனவே வளர்ந்த தாவரப் பகுதிகளை கவாத்து செய்து வேர்ப்பகுதியிலிட்டு மக்கச்செய்யலாம். மேலும் ஒரு வருடத்திற்கு கொடி ஒன்றிற்கு 40-60 கிராம் தழைச்சத்து + 20-30 கிராம் மணிச்சத்து + 60-100 கிராம் சாம்பல் சத்து இடவேண்டும். இதனை 2 (அ) 3 முறை பிரித்து இடவேண்டும். சிறந்த வளர்ச்சிக்கு இலை வழியாக ஊட்டச்சத்துக்களை தெளிக்கவேண்டும்.  1 சதவீதம் 17:17:17 தழை, மணி, சாம்பல் சத்துக்கலவையினை மாதம் ஒரு முறை தெளிக்கவேண்டும்.
பூத்தல்
வெண்ணிலா நடவு செய்த மூன்றாவது வருடத்திலிருந்து பூக்கத் தொடங்கும். இப்பயிரானது டிசம்பர் - ஜனவரி மாதங்களில் பூக்கத் தொடங்கும்.  பூக்கும் தரணத்திற்கு 6-8 மாதத்திற்கு முன்பு நுனிப் பகுதியினை 7.5 – 10 செ.மீ அளவில் வெட்டி விடுதல்வேண்டும். இவ்வாறு பூக்கும் / அரும்பு முதிர்ந்த தண்டுகளைக் கவாத்து செய்தவன் மூலம் அதிக மொட்டுக்கள் கிடைக்கும். ஒவ்வொரு பூங்கொத்திலும் 15-20 பூக்களைக் கொண்டிருக்கும்.
வெனிலா பூக்கள்

மகரந்தச்சேர்க்கை 
மகரந்தச்சேர்க்கையினை மலர்ந்த அன்றே காலை 4.00 முதல் மதியம் 1.00 மணிக்குள் செய்து முடிக்கவேண்டும். ஒரு கொடியில் 10 முதல் 20 பூங்கொத்துகளை மகரந்தசேர்க்கை செய்தல்வேண்டும். பொதுவாக பூ கொத்தில் கீழ்ப் பகுதியிலுள்ள 5-6  பூக்களை மகரந்தச்சேர்க்கை செய்தல்வேண்டும். ஒரு பழக்கப்பட்ட / கைத்தேர்ந்த வேலையாள் நாளொன்றுக்கு 1000-1500 பூக்கள் மகரந்தச்சேர்க்கை செய்யலாம்.
வெனிலா முதிராத பீன்ஸ்
பயிர் பாதுகாப்பு
பூச்சிகள்
இலைத் தின்னும் புழுக்கள், உண்ணும் வண்டுகள் மற்றும் புழுக்கள்
குயினால்பாஸ் 0.05 % தெளிக்கவும்.
நோய்கள்
புசேரியம் வாடல் நோய்
  • இதனை கட்டுப்படுத்த 0.1 சதவீதம் கார்ப்னடாசிம் வேர்ப்பகுதி நனையுமாறு ஊற்றவேண்டும். மேலும் அதே அளவினை இலையின் மீது தெளிக்கவேண்டும்.
பைடோப்தோரா அழுகல் நோய் 
இந்நோயினை கட்டுப்படுத்த 1 சதவீதம் போர்டோக்கலவையினை தெளிக்கவேண்டும். மேலும் 0.2 சதவீதம் காப்பர் ஆக்சிகுளோரைடை வேர்ப்பாகத்தில் கரைத்து ஊற்றவேண்டும்.
நுனி அழுகல் மற்றும் ஸ்கிளோர்சியம் அழுகல் நோய் 
0.1 % கார்பன்டாசிம் கொண்டு மண்ணை நனைக்க வேண்டும்.
அறுவடை
காய்கள் / பீன்ஸ் மலர்ந்த 6 முதல் 9 மாதங்களில் அறுவடை செய்யலாம். முதிர்ந்த காய்கள் பச்சை நிறத்திலிருந்து இள மஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் அறுவடை செய்யவேண்டும். தினசரி முதிர்ந்த காய்களை கத்தியினைக் கொண்டு அறுவடை செய்யவேண்டும்.

மகசூல்
  • ஒரு வருடத்தில் ஒரு எக்டரலிருந்து 300-600 கிலோ பதப்படுத்தப்பட்ட பீன்ஸ் கிடைக்கும்.
  • 1 கிலோ பதப்படுத்தப்பட்ட பீன்ஸ் கிடைக்க 6 கிலோ பச்சை பீன்ஸ் தேவைப்படும்.
  • இலாபகரமான மகசூலுக்கு கொடிகளை 12-14 வருடம் வரை வளர்க்கலாம்.
பதப்படுத்தப்பட்ட பீன்ஸ்

சீரகம் (ஃபியோனிகுலம் வல்கேர்)


ஏபியேசியே
சீரக செடி
இரகங்கள் :கோ 1, கோ 2, யூ எஃப் 32, பி ஃப் 35 மற்றும் குஜராத் சீரகம் 1
கோ 1
மண் : ஆழமான வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மண்ணில் நன்கு செழித்து வளரும்.
தட்பவெப்பநிலை : குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலையில் நன்கு வளரும்.
பருவம் :
மலைப்பகுதிகளுக்கு : மே - ஜுன்,
சமவெளிப் பகுதிகளுக்கு : அக்டோபர் - நவம்பர்.  அதிக மழை பெய்யும் காலங்களில் பயிர் செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
விதையளவு
நேரடி விதைப்பிற்கு எக்டருக்கு 9-12 கிலோ நாற்று விட்டு நடவு செய்ய 3-4 கிலோ, ஒரு எக்டர் நடவு செய்ய நாற்றாங்காலுக்கு 100 சதுர மீட்டர் அளவுள்ள பரப்பு தேவை.
நிலம்  தயார்படுத்துதல்
  • நடவு வயலை நன்றாக உழ வேண்டும்.
  • ஹெக்டருக்கு 10 கிலோ தொழுவுரம் கடைசி உழவின் போது இட வேண்டும்.
  • பாத்திகளை அமைக்க வேண்டும்.
  • முளைக்கும் முன் ஹெக்டருக்கு 1 கிலோ பென்டிமெத்திலின் தெளிக்க வேண்டும்.
நடவு : 5-6 வாரங்கள் ஆன நாற்றுக்களைப் பிடுங்கி 60 x  30 செ.மீ இடைவெளியில் நடவேண்டும்.
பயிர்க்கலைத்தல் :
நேரடி விதைப்பு முறையில் 4-5 வார வயதுள்ள நாற்றுகளை 25-30 செ.மீ இடைவெளியில் கலைத்தல் வேண்டும்.
நீர் நிர்வாகம் :
விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். பின்பு, 3 முதல் 4 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சவேண்டும். பிறகு மண்ணின் ஈரத்தைப் பொறுத்து 7 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
அடியுரமாக எக்டருக்கு தொழு உரம் 10 டன்கள், 25 கிலோ தழைச்சத்து, 10 கிலோ மணிச்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும்.
மேலுரம் : செடிகள் பூ விடும் தருணத்தில் எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும்.
பயிர்இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)இப்கோ டிஏபி, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ)
தழைமணிசாம்பல்டிஏபியூரியா
சீரகம்அடியுரம்
25
10
0
22
46
மேலுரம்
25
0
0
0
55
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி :
களைகள் முளைக்கும் முன்னர் எக்டருக்கு ஒரு லிட்டர் பென்டிமித்திலின் களைக்கொல்லி தெளிக்கவேண்டும். பிறகு இரண்டு அல்லது மூன்று முறை கைக்கிளை எடுக்கவேண்டும். 3வது மாதத்தில் செடிகளுக்கு மண் அணைக்கவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
அசுவினிப் பூச்சி : இப்பூச்சியைக் கட்டுப்படுத்த டைமித்தோயேட் 30 இசி 2 மில்லி அல்லது மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி மருந்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.
சாம்பல்நோய் : நோய் தோன்றும் போது எக்டருக்கு 25 கிலோ சல்பரை தூவ வேண்டும் அல்லது லிட்டருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
சீரக பூ
அறுவடை :
பயிர் 7-8 மாதத்திற்குள் அறுவடைக்குத் தயாராகிவிடும். 10-15 நாட்கள் இடைவெளியில் காய்ந்த பூங்கொத்துக்களை அறுவடை செய்யவேண்டும். பிறகு இவற்றை வெய்யிலில் 4-5 நாட்கள் உலர்த்தி, பின் குச்சியில் தட்டி விதைகளைத் தனியாகப் பிரித்து எடுக்கவேண்டும்.
சீரக விதைகள்

மகசூல் : எக்டரிலிருந்து 500-750 கிலோ விதைகள் ஒரு வருடத்திற்கு.

கடுகு (பிரேசிகா ஜன்சியா)


பிரேசிகேசியே
கடுகு செடிகடுகு பூ
பயிர்ப்பெருக்கம்
விதை - எக்டருக்கு 6 - 7 கிலோ

இடைவெளி
படுக்கைகள் - 45 x 30 செ.மீ
உர நிர்வாகம்
25 டன் தொழு உரம், 25 கிலோ தழைச்சத்து மற்றும் 60 கிலோ மணிச்சத்து போன்றவற்றை அடியுரமாக இட வேண்டும். மேலும் 25 கிலோ தழைச்சத்தினை மேலுரமாக இட வேண்டும்.
களையெடுத்தல்
2- 3 முறை களையெடுத்தல் வேண்டும்.
அறுவடை
3 முதல் 4 மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். காய்கள் பழுப்பு நிறம் அடைந்த பிறகு பயிரினை அறுவடை செய்து, வெயிலில் காய வைத்து பின்பு கதிரடிக்க வேண்டும்.
கடுகு விதைகள்
மகசூல்
எக்டருக்கு 1000 - 1200 கிலோ கிடைக்கும்.

வெந்தயம் (டிரைகோனெல்லா ஃப்யோனம் கிரேகம்)


லெகுமினோசே
வெந்தய செடி
இரகங்கள் :கோ 1, பூசா எரிலி பன்சிங், லேம் தேர்வு 1, ராஜேந்திர கிராந்தி, கிஸார் சோனாலி, ஆர். எம்.டி 1 மற்றும் கோ 2.
மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதியுள்ள கரிசல் அல்லது அங்ககச்சத்து மிகுந்த மணங்பாங்கான நிலத்தில் நன்கு வளரும். மிதமான தட்பவெப்பநிலை ஏற்றது.
பருவம் : ஜுன்  - ஜுலை மற்றும் அக்டோபர் - நவம்பர்
விதையளவு  : எக்டருக்கு 12 கிலோ விதைகள்
விதை நேர்த்தி
எக்டருக்கு 12 கிலோ விதைக்கு 1.5 கிலோ அசோஸ்பைரில்லம் + 50 கிராம் டிரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதைப்பு : நிலத்தை நன்கு உழுதபின்பு, 3.5 x 1.5 மீட்டர் அளவுள்ள பாத்திகளாகப் பிரித்து கொள்ள வேண்டும். விதைகளை 20 x 15 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். பயிர் முளைக்கும் முன் 700 மிலி ப்ளுகுளோரலின் களைக்கொல்லியை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் களையைக் கட்டுப்படுத்தலாம்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
அடியுரம் : எக்டருக்கு 20 - 25 கிலோ தொழு உரத்தை கடைசி உழவின் போது இடவேண்டும். மேலும் 30 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும்.
மேலுரம் : விதைத்த 30 நாட்கள் கழித்து மேலுரமாக எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரத்தை இடவேண்டும்.
நீர் நிர்வாகம் : விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு மூன்றாம் நாளும் அதனைத் தொடர்ந்து 7-10 நாட்களுக்கு ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சவேண்டும்.
பின்செய்நேர்த்தி : விதைத்த 20-25 நாட்களுக்குப் பிறகு பயிர் களைதல் வேண்டும். களைந்த பயிரை பசுங்கீரையாக உபயோகப்படுத்தலாம். தேவையான போது களையெடுத்தல் வேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
பயிர் பாதுகாப்பு:
நோய்கள்:
வேரழுகல் :  நோய் தோன்றும் போது 0.5 கிராம் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பாகத்தில் ஊற்றவேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி கலந்து  விதைநேர்த்தி செய்து விதைக்கவேண்டும். எக்டருக்கு 50 கிலோ புண்ணாக்கை நோய் தோன்றும் போது இடவேண்டும்.
சாம்பல் நோய் : நோய் தோன்றும் போது எக்டருக்கு 25 கிலோ சல்பரை தூவ வேண்டும் அல்லது 2 கிராம் நனையும் கந்தகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இலைமேல் தெளிக்க வேண்டும்.
வெந்தய பூவெந்தய விதைகள்
அறுவடை : விதைத்த 20-25 நாட்கள் கழித்து அறுவடை செய்து பசுங்கீரையாக உபயோகப்படுத்தலாம். 90-100 நாட்களில் விதைகள் உருவாகிவிடும்.
மகசூல் : எக்டருக்கு பசுங்கீரை 4000 - 5000 கிலோ, விதைகள் 500-700 கிலோ.

கொத்தமல்லி (கொரியேண்டிரம் சட்டைவம்)


 ஏப்பியேசியே
கொத்தமல்லி இலை
இரகங்கள் : கோ 1, கோ 2, கோ 3, கோ (சி.ஆர்) 4, ஜி ஏ யூ 1, யூ டி 1, யூ டி 2, யூ டி 20 மற்றும் யூ டி 21.
மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதி உள்ள இரு மண்பாட்டு நிலம் பயிரிட மிகவும் ஏற்றது. மண்ணின் அமில காரத் தன்மை 6-8 வரை இருக்கவேண்டும். மானாவாரியாகப் பயிரிட ஈரமான கரிசல் மண் ஏற்றது, வெப்பநிலை சராசரியாக 20-25 செல்சியஸ் இருந்தால் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
காலநிலை : குளிர் மற்றும் உலர்ந்த, பனி இல்லாத பகுதி கொத்தமல்லி சாகுபடிக்கு ஏற்றது.
பருவம் :ஜூன் - ஜூலை மற்றும் அக்டோபர் - நவம்பர்.
விதையளவு : 10-12 கிலோ / எக்டர் (இறவைக்கு) 20-25 கிலோ / எக்டர் (மானாவாரிக்கு) கொத்தமல்லி விதைகளை இரண்டாக உடைத்து விதைக்கவேண்டும். உடைக்காமல் முழு விதைகளை நடவு செய்தால் விதை முளைக்காது.
விதை நேர்த்தி : விதைகளை நீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்றாக பயிர் உருவாவதற்காக விதைகளை ஹெக்டருக்கு 1.5 கிலோ அசோஸ்பைரில்லத்துடனும், வாடல் நோயினை கட்டுப்படுத்த எக்டருக்கு 50 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். மானாவாரி பயிர்களின் விதைப்பிற்கு முன்பு ஒரு லிட்டர் நீரில் 10 கிராம் பொட்டாசியம் டைஹெட்ரஜன் பாஸ்பேட் கொண்டு 16 மணி நேரம் விதையைக் கடினமாக்குதல் அவசியமாகும். நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது பண்படுத்திய பிறகு இறவைப் பயிராக இரந்தால் பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும். விதை விதைப்பான் மூலம் 20 x 15 செ.மீ இடைவெளியில் விதைக்கவேண்டும். விதைகள் 8-15 நாட்களுக்குள் முளைத்துவிடும். மானாவாரி சாகுபடியில் விதைகளைத் தூவும் முறையில் விதைத்து விட்டு நாட்டுக் கலப்பைக் கொண்டு மூடிவிடவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
அடியுரம் : எக்டருக்கு 10 கிலோ தொழு உரம் கடைசி உழவின் போது இடவேண்டும். விதைப்பதற்கு முன் இறவை மற்றம் மானாவாரிப் பயிர்களுக்கு 10 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும்.
மேலுரம் : இறவைப் பயிருக்கு மட்டும் விதைத்த 30வது நாள் எக்டருக்கு 10 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தை அளிக்கவேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் மற்றும் மூன்றாம் நாள் அதன் பின்னர் 7 முதல் 10 நாட்களுக்குள் ஒரு முறை நீர்ப் பாய்ச்சவேண்டும்.
சொட்டுநீர் உரப்பாசனத்தில்
கொத்தமல்லி சாகுபடி
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
களைகள் முளைக்கும் முன்னர் புளுக்குளோரலின் எக்டருக்கு 700 மில்லி மருந்தை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். விதைத்த 30 நாட்கள் கழித்து பயிர் களைதல் வேண்டும். தேவைப்படும் போது களை எடுக்கவேண்டும். மானாவாரிப் பயிருக்கு விதைத்த 30 நாட்கள் கழித்து 250 பிபிஎம்  சிசிசி என்ற பயிர் ஊக்கி தெளித்தால் பயிர் வறட்சியைத் தாங்கி வளரும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
அசுவினிப்பூச்சி : இப்பூச்சியைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 20 இசி மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
நோய்கள்
சாம்பல் நோய் : ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் பீளுரசன்ஸ் (Pf1) கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும் மற்றும் லிட்டர் நீருக்கு 2 கிராம் Pf1 என்ற அளவில் கலந்து தெளிக்க  வேண்டும். அல்லது ஹெக்டருக்கு 1 கிலோ நனையும் கந்தகம் அல்லது 250 மிலி டைனோகேப் இரண்டுமுறை நோய் தோன்றும் போதும் அதன் பின் 10 நாட்களுக்கு பிறகும் தெளிக்க வேண்டும். 5% வேப்பங்கொட்டை சாறினை மூன்று முறை தெளிக்க வேண்டும் (முதல் தெளிப்பு - நோய் தோன்றியவுடன், 2 வது மற்றும் 3வது தெளிப்பு – 10 நாள் இடைவெளியில்).
வாடல் நோய் :ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் ப்ளுரசன்ஸ் கொண்டு விதை நோ்த்தி செய்ய வேண்டும். அதன்பின் ஹெக்டருக்கு 5 கிலோ Pf1 யை மண்ணில் இட வேண்டும்.
தானிய பூஞ்சை நோய் : ஹெக்டருக்கு 0.1% (500 கிராம்) கார்பென்டாசிம்மை தானியம் உருவாகிய 20 நாள் கழித்து தெளிக்க வேண்டும்.
கோ (Cr) 4 இரகத்தின்
பூக்கும் பருவம்
பழ வளர்ச்சி பருவம்
அறுவடை :
விதைத்த 30வது நாளில் செடிகளைக் கலைத்து விடுவதன் மூலம் கீரைகளாக அறுவடை செய்யலாம். சாதாரணமாக விதைத்த 90 முதல் 110 நாட்களில் விதைகளை அறுவடை செய்யலாம். காய்கள் நன்கு பழுத்தவுடன், காயின் நிறம் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக மாறும் போது அறுவடை செய்யவேண்டும்.
கொத்தமல்லி விதைகள்
மகசூல் (எக்டருக்கு) : மானாவாரி சாகுபடியில் 300-400 கிலோ விதைகள், இறவையில் 500-600 கிலோ விதைகள் கீரையாக 6-7 டன்கள்.
சந்தை தகவல்கள் :
பயிரிடும் மாவட்டங்கள்தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் கோயமுத்தூர்
முக்கிய சந்தைகள்விருதுநகர்
முன்னுரிமை இரகங்கள்கோ 3
தரம்காரம், பொன்னிறம், நன்கு உலர்ந்த மற்றும் முதிர்ந்த, சுருக்கமில்லாத இலைகள்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites