இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, December 11, 2013

செம்பருத்தி..

பூக்கள் என்றதுமே… பூஜைக்கு அல்லது தலையில் சூடிக்கொள்வதற்கு என இரண்டு பயன்பாடுகள்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். அதையும் தாண்டி அழகுப்பொருள், மருந்துப்பொருள், வாசனைத் திரவியங்களுக்கான மூலப்பொருள்… என பல பயன்பாடுகள் பூக்களுக்கு உண்டு என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! இதைத் தெரிந்து வைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், மருத்துவ குணம் உள்ள பூக்களில் ஒன்றான செம்பருத்தியை சாகுபடி செய்து, சபாஷ் வாங்கும் வகையில் லாபம் ஈட்டி வருகிறார்!
கிலோ 160 ரூபாய்... மாசத்துக்கு 240 கிலோ... செழிப்பான லாபம் தரும் செம்பருத்தி..!

பூக்கள் என்றதுமே... பூஜைக்கு அல்லது தலையில் சூடிக்கொள்வதற்கு என இரண்டு பயன்பாடுகள்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். அதையும் தாண்டி அழகுப்பொருள், மருந்துப்பொருள், வாசனைத் திரவியங்களுக்கான மூலப்பொருள்... என பல பயன்பாடுகள் பூக்களுக்கு உண்டு என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! இதைத் தெரிந்து வைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், மருத்துவ குணம் உள்ள பூக்களில் ஒன்றான செம்பருத்தியை சாகுபடி செய்து, சபாஷ் வாங்கும் வகையில் லாபம் ஈட்டி வருகிறார்!

திருச்செந்தூர் தாலூகா, பரமன்குறிச்சியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமம்... காயாமொழி. இங்கேதான் இருக்கிறது முகமது இப்ராஹிமின் செம்பருத்தித் தோட்டம். காலைவேளையன்றில். மும்மரமாக பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தபோது, ''காயல்பட்டினம்தான் என்னோட பூர்விகம். பி.எஸ்.ஸி கெமிஸ்டரி, டிப்ளமோ ஃபுட்வேர் டெக்னாலஜி படிச்சுட்டு... ராணிப்பேட்டையில ஒரு லெதர் ஃபேக்டரியில 13 வருஷம் வேலை பாத்தேன். அங்க அழகானத் தோட்டம் போட்டிருப்பாங்க. அந்த இயற்கைச் சூழல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே விவசாயத்துலயும் ஆர்வம் அதிகங்கிறதால அந்தத் தோட்டத்தை ரசிச்சுட்டே இருப்பேன். விவசாயம் பத்தி பேப்பர்ல எந்த செய்தி வந்தாலும், முழுசா படிச்சுட்டுதான் அடுத்த வேலையைத் தொடுவேன். இந்தச் சூழல்ல வெளியான 'பசுமை விகடன்’ என் கவனத்தை ஈர்க்க... அதைப் படிக்கப் படிக்க, விவசாயம் செய்யணுங்கிற ஆர்வம் மேலிட ஆரம்பிச்சுச்சு. அதனால, முதல் புத்தகத்துல ஆரம்பிச்சு, பசுமை விகடனை சேகரிக்க ஆரம்பிச்சேன். இப்போ வரைக்கும் பத்திரப்படுத்திட்டும் இருக்கேன்.

'கருப்பையா’ன்றவர் செம்பருத்தி சாகுபடி பண்றதைப் பத்தி ஒரு தடவை எழுதியிருந்தீங்க. அதைப் படிச்சுட்டு, அவரைத் தேடி போய் பாத்தேன். 'செம்பருத்தியில் ஏக்கருக்கு ஒரு லட்சம் லாபம் எடுக்கலாம்’னு சொன்னார். உடனே, என் சிநேகிதன்கிட்ட இருந்து, இந்த அஞ்சு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ரெண்டரை ஏக்கர்ல செம்பருத்தி போட்டேன். நல்ல வருமானம் கிடைச்சுட்டு இருக்கு. மீதி நிலத்துல மலைவேம்பு வளர்ந்துட்டிருக்கு'' என்று முன்கதை சொன்ன முகமது இப்ராஹிம், ஒரு ஏக்கர் நிலத்தில் செம் பருத்தி சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

ஆறடி இடைவெளி!

''செம்பருத்தி, செம்மண்ணில் நன்றாக வரும். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் நன்கு உழுது... வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி

6 அடி இடைவெளி இருக்குமாறுவிட்டு, ஒரு கன அடி அளவுக்கு குழி எடுத்துக் கொள்ள வேண்டும். (ஒரு ஏக்கரில் 1,200 குழிகள் வரை எடுக்கலாம்). தொடர்ந்து சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்துக் கொள்ள வெண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கிலோ சாணம், ஒரு கிலோ மட்கிய தென்னைநார் ஆகியவற்றை இட்டு, தண்ணீர் ஊற்றி பத்து நாட்கள் அப்படியேவிட வேண்டும். 11-ம் நாள் செம்பருத்திக் கன்றுகளை நடவு செய்து, மண் அணைத்து தண்ணீர்விட வேண்டும். மண் எப்போதும் ஈரமாக இருக்குமாறு தொடர்ந்து, தண்ணீர் விட்டு வர வேண்டும்.

அதிக உரம்... ஆபத்து!

நடவு செய்த 2-ம் மாதத்தில் இருந்து, மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 6-ம் மாதத்துக்குப் பிறகு, செடிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பூக்கள் பூக்கும். 9-ம் மாதத்துக்குப் பிறகு அதிக அளவில் பூக்கள் பூத்து, 12-ம் மாதத்துக்குப் பிறகு முழு மகசூல் கிடைக்கத் தொடங்கும். அதன் பிறகு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, 200 லிட்டர் தண்ணீரில், 2 லிட்டர் மீன் அமினோ அமிலம் என்ற கணக்கில் கலந்து, பாசன நீருடன் தரவேண்டும். இந்த இயற்கை இடுபொருட்களை அளவாகத்தான் இடவேண்டும். அளவுக்கு அதிகமானால், இலை தடித்து பூக்களின் மகசூல் குறையும். செம்பருத்தியில் அதிகமாக மாவுப்பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இப்பூச்சிகள் தென்பட்டால், பச்சை மிளகாய்-பூண்டுக் கரைசலை அனைத்துச் செடிகளின் மீதும் செழிம்பாகத் தெளித்துவிட வேண்டும்.

ஈரப்பதம்... கவனம்!

செம்பருத்தியில் தினமும் பூக்கள் எடுக்கலாம். காலை 7 மணி முதல் 10 மணிக்குள் பூக்களைப் பறித்து வெயிலில் பரத்தி, ஒரு நாள் உலர்த்தி எடுக்க வேண்டும். வெயில் குறைவாக இருக்கும்பட்சத்தில் இரண்டு, மூன்று நாட்கள் வரை உலர்த்தலாம். பூக்கள் அரக்கு நிறத்துக்கு மாறுவதுதான் உலர்ந்ததற்கு அடையாளம். காய்ந்த பூக்களை எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் இருப்பு வைத்து விற்க முடியும். இருப்பு வைக்கப்பட்டுள்ள பூக்களில் தண்ணீர் பட்டால், பூஞ்சணம் உருவாகிவிடும். அதனால், ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, செம்பருத்தி யில் அதிக வருடங்கள் மகசூல் எடுக்க வேண்டும் என்று விரும்பினால், ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்துவிட வேண்டும்.'

நிறைவாகப் பேசிய முகமது இப்ராஹிம், ''இருப்பு வைக்கிற பூவை, வியாபாரிகளோட தேவையைப் பொருத்தோ அல்லது நம்மகிட்ட சேருற அளவைப் பொருத்தோ விற்பனை செய்யலாம். செம்பருத்தி விவசாயத்தைப் பத்தி எனக்கு வழிகாட்டின கருப்பையாவுக்கே நான் மாசாமாசம் லாரியில அனுப்பிடுவேன். அவர் எனக்கு, பணம் கொடுத்துடுவார். வருஷத்துல ஒன்பது மாசமும் பூ பறிக்கலாம். தினமும் சராசரியாக ஒரு ஏக்கர்லர்ந்து 8 கிலோ பூங்கிற முறையில ரெண்டரை ஏக்கர்லயும் 20 கிலோ கிடைக்குது. அதைக் காய வெச்சா, 8 கிலோ உலர்ந்தப் பூ கிடைக்கும்.

ரெண்டரை ஏக்கரிலும் மாசத்துக்கு 240 கிலோ உலர்ந்தப் பூ. ஒரு கிலோவுக்கு சராசரியா 160 ரூபாய் கிடைக்குது. இந்தக் கணக்குல 9 மாசத்துக்கு ரெண்டரை ஏக்கர்லேர்ந்து 3 லட்சத்து 45 ஆயிரத்து 600 ரூபாய் வருமானம். இதுல செலவு போக (குத்தகைத் தொகை இல்லாமல்) எப்படியும் ரெண்டரை லட்ச ரூபாய் லாபமா நிக்கும்'' என்றார், மகிழ்ச்சியோடு!

தகவல் - பசுமை விகடன்
திருச்செந்தூர் தாலூகா, பரமன்குறிச்சியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமம்… காயாமொழி. இங்கேதான் இருக்கிறது முகமது இப்ராஹிமின் செம்பருத்தித் தோட்டம். காலைவேளையன்றில். மும்மரமாக பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தபோது, ”காயல்பட்டினம்தான் என்னோட பூர்விகம். பி.எஸ்.ஸி கெமிஸ்டரி, டிப்ளமோ ஃபுட்வேர் டெக்னாலஜி படிச்சுட்டு… ராணிப்பேட்டையில ஒரு லெதர் ஃபேக்டரியில 13 வருஷம் வேலை பாத்தேன். அங்க அழகானத் தோட்டம் போட்டிருப்பாங்க. அந்த இயற்கைச் சூழல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே விவசாயத்துலயும் ஆர்வம் அதிகங்கிறதால அந்தத் தோட்டத்தை ரசிச்சுட்டே இருப்பேன். விவசாயம் பத்தி பேப்பர்ல எந்த செய்தி வந்தாலும், முழுசா படிச்சுட்டுதான் அடுத்த வேலையைத் தொடுவேன். இந்தச் சூழல்ல வெளியான ‘பசுமை விகடன்’ என் கவனத்தை ஈர்க்க… அதைப் படிக்கப் படிக்க, விவசாயம் செய்யணுங்கிற ஆர்வம் மேலிட ஆரம்பிச்சுச்சு. அதனால, முதல் புத்தகத்துல ஆரம்பிச்சு, பசுமை விகடனை சேகரிக்க ஆரம்பிச்சேன். இப்போ வரைக்கும் பத்திரப்படுத்திட்டும் இருக்கேன்.
‘கருப்பையா’ன்றவர் செம்பருத்தி சாகுபடி பண்றதைப் பத்தி ஒரு தடவை எழுதியிருந்தீங்க. அதைப் படிச்சுட்டு, அவரைத் தேடி போய் பாத்தேன். ‘செம்பருத்தியில் ஏக்கருக்கு ஒரு லட்சம் லாபம் எடுக்கலாம்’னு சொன்னார். உடனே, என் சிநேகிதன்கிட்ட இருந்து, இந்த அஞ்சு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ரெண்டரை ஏக்கர்ல செம்பருத்தி போட்டேன். நல்ல வருமானம் கிடைச்சுட்டு இருக்கு. மீதி நிலத்துல மலைவேம்பு வளர்ந்துட்டிருக்கு” என்று முன்கதை சொன்ன முகமது இப்ராஹிம், ஒரு ஏக்கர் நிலத்தில் செம் பருத்தி சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
ஆறடி இடைவெளி!
”செம்பருத்தி, செம்மண்ணில் நன்றாக வரும். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் நன்கு உழுது… வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி
6 அடி இடைவெளி இருக்குமாறுவிட்டு, ஒரு கன அடி அளவுக்கு குழி எடுத்துக் கொள்ள வேண்டும். (ஒரு ஏக்கரில் 1,200 குழிகள் வரை எடுக்கலாம்). தொடர்ந்து சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்துக் கொள்ள வெண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கிலோ சாணம், ஒரு கிலோ மட்கிய தென்னைநார் ஆகியவற்றை இட்டு, தண்ணீர் ஊற்றி பத்து நாட்கள் அப்படியேவிட வேண்டும். 11-ம் நாள் செம்பருத்திக் கன்றுகளை நடவு செய்து, மண் அணைத்து தண்ணீர்விட வேண்டும். மண் எப்போதும் ஈரமாக இருக்குமாறு தொடர்ந்து, தண்ணீர் விட்டு வர வேண்டும்.
அதிக உரம்… ஆபத்து!
நடவு செய்த 2-ம் மாதத்தில் இருந்து, மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 6-ம் மாதத்துக்குப் பிறகு, செடிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பூக்கள் பூக்கும். 9-ம் மாதத்துக்குப் பிறகு அதிக அளவில் பூக்கள் பூத்து, 12-ம் மாதத்துக்குப் பிறகு முழு மகசூல் கிடைக்கத் தொடங்கும். அதன் பிறகு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, 200 லிட்டர் தண்ணீரில், 2 லிட்டர் மீன் அமினோ அமிலம் என்ற கணக்கில் கலந்து, பாசன நீருடன் தரவேண்டும். இந்த இயற்கை இடுபொருட்களை அளவாகத்தான் இடவேண்டும். அளவுக்கு அதிகமானால், இலை தடித்து பூக்களின் மகசூல் குறையும். செம்பருத்தியில் அதிகமாக மாவுப்பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இப்பூச்சிகள் தென்பட்டால், பச்சை மிளகாய்-பூண்டுக் கரைசலை அனைத்துச் செடிகளின் மீதும் செழிம்பாகத் தெளித்துவிட வேண்டும்.
ஈரப்பதம்… கவனம்!
செம்பருத்தியில் தினமும் பூக்கள் எடுக்கலாம். காலை 7 மணி முதல் 10 மணிக்குள் பூக்களைப் பறித்து வெயிலில் பரத்தி, ஒரு நாள் உலர்த்தி எடுக்க வேண்டும். வெயில் குறைவாக இருக்கும்பட்சத்தில் இரண்டு, மூன்று நாட்கள் வரை உலர்த்தலாம். பூக்கள் அரக்கு நிறத்துக்கு மாறுவதுதான் உலர்ந்ததற்கு அடையாளம். காய்ந்த பூக்களை எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் இருப்பு வைத்து விற்க முடியும். இருப்பு வைக்கப்பட்டுள்ள பூக்களில் தண்ணீர் பட்டால், பூஞ்சணம் உருவாகிவிடும். அதனால், ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, செம்பருத்தி யில் அதிக வருடங்கள் மகசூல் எடுக்க வேண்டும் என்று விரும்பினால், ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்துவிட வேண்டும்.’
நிறைவாகப் பேசிய முகமது இப்ராஹிம், ”இருப்பு வைக்கிற பூவை, வியாபாரிகளோட தேவையைப் பொருத்தோ அல்லது நம்மகிட்ட சேருற அளவைப் பொருத்தோ விற்பனை செய்யலாம். செம்பருத்தி விவசாயத்தைப் பத்தி எனக்கு வழிகாட்டின கருப்பையாவுக்கே நான் மாசாமாசம் லாரியில அனுப்பிடுவேன். அவர் எனக்கு, பணம் கொடுத்துடுவார். வருஷத்துல ஒன்பது மாசமும் பூ பறிக்கலாம். தினமும் சராசரியாக ஒரு ஏக்கர்லர்ந்து 8 கிலோ பூங்கிற முறையில ரெண்டரை ஏக்கர்லயும் 20 கிலோ கிடைக்குது. அதைக் காய வெச்சா, 8 கிலோ உலர்ந்தப் பூ கிடைக்கும்.
ரெண்டரை ஏக்கரிலும் மாசத்துக்கு 240 கிலோ உலர்ந்தப் பூ. ஒரு கிலோவுக்கு சராசரியா 160 ரூபாய் கிடைக்குது. இந்தக் கணக்குல 9 மாசத்துக்கு ரெண்டரை ஏக்கர்லேர்ந்து 3 லட்சத்து 45 ஆயிரத்து 600 ரூபாய் வருமானம். இதுல செலவு போக (குத்தகைத் தொகை இல்லாமல்) எப்படியும் ரெண்டரை லட்ச ரூபாய் லாபமா நிக்கும்” என்றார், மகிழ்ச்சியோடு!
தகவல் – பசுமை விகடன்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites