இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Thursday, December 26, 2013

இயற்கை முறையில் இனிப்பான லாபம்... கலக்குது கற்பூரவல்லி..!


'வலுத்தவனுக்கு வாழை... இளைச்சவனுக்கு எள்ளு’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது, 'வாழைக்கு அதிக பண்டுதம் பார்க்க வேண்டும். அதனால் பண வசதி இருப்பவர்கள் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய முடியும். ஆனால், எள்ளுக்கு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை என்பதால், யார் வேண்டுமானாலும் சாகுபடி செய்யலாம்’ என்பதுதான் இதன் பொருள். ஆனால், இக்கருத்தைப் பொய்யாக்கும் விதமாக, ''இளைத்தவனுக்கும் ஏற்றதாக இருக்கிறது... கற்பூரவல்லி வாழை!’' என்று குஷியோடு சொல்கிறார், விழுப்புரம் மாவட்டம், சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.
உள்ளே வருபவர்களை தலை வணங்கி வரவேற்பு கொடுப்பதுபோல் வாழைத்தார்கள் தொங்கிக் கொண்டிருக்க... பசுமையான அந்த வாழைத் தோட்டத்தில் சுப்ரமணியனைச் சந்தித்தோம்.
கை விட்ட விவசாயம்!
''எங்க குடும்பத்தொழில் விவசாயம்தான். வீட்டுக்கு ஒரே பிள்ளை நான். எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சதுமே, அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். 35 வருஷமா விவசாயம் செஞ்சுட்டிருக்கேன். நெல், கேழ்வரகு, கத்திரி, வெண்டை, கரும்பு, வாழைனு பலவிதமான பயிர்களை சாகுபடி செய்வேன். சமயங்கள்ல விவசாயத்துல செலவு கட்டுபடியாகாமப் போய்... நகை, நட்டையெல்லாம் அடகு வைக்க வேண்டியதாயிடும். இப்படி கஷ்டப்பட்டு செய்தாலும், வர்ற வருமானம், அடகுல இருக்கற நகையை மீட்கறதுக்குகூட உதவாதுங்கறதுதான் நெஜம். அடுத்தடுத்து இப்படியே இருந்ததால... நிரந்தர வருமானத்துக்காக 'பால் உற்பத்தி பண்ணலாம்'கற யோசனையோட... வீட்டுல இருந்த நாட்டு மாடுகளை எல்லாம் வித்துட்டு, கலப்பின மாடுகளை வாங்கினேன். ஆனா... பால்ல கிடைச்ச வருமானம்... மாடுகளுக்கு தீவனம் வாங்கறதுக்கே போதல.
வழிகாட்டிய பசுமை விகடன்!
பிறகு, விவசாயத்துல நல்ல லாபம் தர்ற பயிர்களா தேட ஆரம்பிச்சேன். இதுக்காக நிறைய புத்தகங்கள வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். நண்பர் கொடுத்த தகவலை வெச்சு, நம்மாழ்வார் நடத்தின இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துகிட்டேன். அதுக்கப்பறம், பக்கத்து வீட்டுக்காரர் மூலமா 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல தெரிஞ்சுகிட்ட தொழில்நுட்பங்களை சோதனை செஞ்சு பார்த்தப்போ... நல்ல பலன் கிடைச்சுது. அதுக்கப்பறம்தான் இயற்கை விவசாயத்துல சின்ன நம்பிக்கை வந்துச்சு'' என்று முன்னுரை கொடுத்த சுப்ரமணியன், தொடர்ந்தார்.
நம்பிக்கை கொடுத்த ஜீரோ பட்ஜெட்!
''பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புலயும் கலந்துக்கிட்டேன். பாலேக்கர் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் தான் எனக்கு விவசாயத்து மேல இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்துச்சு. உடனே, ரசாயன உரங்களை நிறுத்திட்டு, முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். முதல் போகத்துல ஒரு ஏக்கர்ல பொன்னி நெல் சாகுபடி செஞ்சேன். 12 மூட்டைதான் (75 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது. தரமில்லாத விதைநெல்லை ஏமாந்து வாங்கிட்டதால, அறுவடை செஞ்ச நெல்லோட நிறம் மங்கலா இருந்துச்சு. அதனால, மார்க்கெட் கமிட்டியில நெல்லை கொள்முதல் செய்யமாட்டேணுட்டாங்க. அப்படியே அரிசியாக்கி விலைக்குக் கொடுத்துட்டேன். நல்ல சுவையாவும், மணமாவும் இருந்ததால... சீக்கிரமே வித்துப்போச்சு.
அப்பறம், தரமான விதைகளை தேடினப்போ... மாப்பிள்ளை சம்பா, பூங்கார் மாதிரியான பாரம்பரிய ரக விதைநெல் கிடைச்சுது. பல தானிய விதைப்பு செய்து, ஜீவாமிர்தம், பழக்கரைசல் மாதிரியான இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி... இந்த ரகங்களை சாகுபடி செஞ்சப்போ, ஏக்கருக்கு 25 மூட்டைக்குக் குறையாம கிடைச்சுது.
புயலுக்குப் பிறகும் மகசூல்!
கிட்டத்தட்ட இதேசமயத்துல... ஜீரோ பட்ஜெட் முறையில ஒரு ஏக்கர்ல கற்பூரவல்லி வாழை போட்டேன். அதுல போட்ட ஊடுபயிர் மூலமா கிடைச்ச வருமானத் துலேயே சாகுபடி செலவை முடிச்சுட்டேன். ஜீரோ பட்ஜெட்ங்கறதால... செலவும் குறைவுதான். வாழை நட்டு நாலு வருஷமாச்சு... மறுதழைவு மூலமாவே பலன் எடுத்துட்டு இருக்கேன். மரங்கள் நல்ல திடமாவே வர்றதால... முட்டு கொடுக்குறதுக்குக்கூட மரம் வெக்கிறதில்லை. 'தானே புயல்’ல எல்லா மரமும் பாதியில முறிஞ்சு போச்சு. அதையெல்லாம் வெட்டிட்டேன். வழக்கமா வாழைத் தோப்புல ஒரே சமயத்துலதான் தார் கிடைக்கும். ஆனா, மரங்களை வெட்டிவிட்டதால... ஒரே மாதிரி இல்லாம வேற வேற சமயங்கள்ல தார் விடுது. அதனால, 15 நாளைக்கு ஒரு முறை பத்து, பதினைஞ்சு தார், அளவுக்குக் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. இதன் மூலமா... வருஷம் முழுக்க வருமானம் கிடைக்குது.
என்கிட்ட மொத்தம் நாலு ஏக்கர் நிலமிருக்கு. ஒரு ஏக்கர் வாழை போக...
70 சென்ட்ல மாப்பிள்ளை சம்பா, 70 சென்ட்ல இலுப்பைப் பூ சம்பா, 70 சென்ட்ல சீரகச் சம்பா, 20 சென்ட்ல பசுந்தீவனம்னு இருக்கு. 70 சென்ட்ல சிறுதானியம் விதைக்கலாம்னு இருக்கேன்'' என்ற சுப்ரமணியன், கற்பூரவல்லி வாழை சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
அது அப்படியே பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 1,000 வாழை!
'கற்பூரவல்லி வாழையின் ஆயுள் காலம் 12 மாதங்கள். நல்ல வடிகால் வசதியோடு கூடிய அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடவு செய்யலாம். ஏக்கருக்கு 8 மாட்டு வண்டி என்ற கணக்கில், எருவைக் கொட்டி களைத்து, மண் பொலபொலப்பாக மாறும் வரை நன்கு உழுது நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, மாட்டு ஏர் மூலமாக, இரண்டு அடி இடைவெளியில் பார் ஓட்டவேண்டும். 8 அடி இடைவெளியில், செடிக்குச் செடி 5 அடி இடைவெளி என்ற அளவில் பார்களில் அரையடி ஆழத்துக்கு குழிகள் எடுக்க வேண்டும் (இடையில் உள்ள பார்களில் ஊடுபயிர் செய்யலாம்). குழியை நான்கு நாட்கள் ஆறப்போட்டு, ஒரு மாத வயதுடைய வாழைக் கன்றை பீஜாமிர்தத்தில் விதை நேர்த்தி செய்து நட வேண்டும். ஏக்கருக்கு சுமார் 1,000 வாழைக் கன்றுகள் வரை நடவு செய்யலாம். வாழைக்கு இடையில் உளுந்து, கத்திரி, தக்காளி, வெண்டை, மிளகாய் போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு பாரிலும் ஒவ்வொரு வகை ஊடுபயிரை நடவு செய்வது நல்லது.
பூச்சி, நோய் தாக்காது!
தாராளமாக தண்ணீர் விட்டு நடவு செய்ய வேண்டும். அடுத்து, நடவு செய்த 3-ம் நாளில் உயிர்தண்ணீர்விட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து தண்ணீர் கட்டினால் போதுமானது. 20-ம் நாள் களை எடுக்க வேண்டும். ஊடுபயிர்கள் வளர்ந்த பிறகு, களை எடுக்க வேண்டியிருக்காது. அறுவடை வரை 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை, பாசன நீரோடு கலந்துவிட வேண்டும். இதேபோல... நடவு செய்த 25-ம் நாளில் இருந்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா என்று மாற்றி மாற்றி தெளிக்க வேண்டும் (ஏக்கருக்கு,
100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் ஜீவாமிர்தம்; 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா என்று கலந்து தெளிக்க வேண்டும்). 3, 6 மற்றும் 9-ம் மாதங்களில் ஒவ்வொரு மரத்துக்கும் அரை கிலோ அளவுக்கு மண்புழு உரம் வைத்து, மண்ணை அணைத்துவிட வேண்டும். இயற்கை முறையில் பூச்சி, நோய் தாக்குதல் குறைவுதான். அப்படியே இருந்தாலும், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
பக்கக் கன்றுகள் ஜாக்கிரதை!
2-ம் மாதத்தில் இருந்து 3-ம் மாதத்துக்குள் ஊடுபயிர்களை அறுவடை செய்து விடலாம். அறுவடை முடிந்த செடிகளை அப்படியே, உழவு ஓட்டி மடித்து விட்டால், அவை உரமாகி விடும். 6-ம் மாதத்தில் வாழையில் பக்கக் கன்றுகள் தோன்றும். அவற்றில் வாளிப்பான ஒரு கன்றை மட்டும் விட்டுவிட்டு, மற்றவற்றைத் தோண்டி எடுத்து, நிலத்தில் ஆங்காங்கே மூடாக்காகப் போட்டுவிட வேண்டும். ஒன்பதாம் மாதத்தில் குலை தள்ள ஆரம்பிக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை... தேவையில்லாத பக்கக்கன்றுகளையும் காய்ந்த சருகுகளையும் கழித்து அவற்றை மூடாக்காகப் போட்டுவர வேண்டும்.
குலை தள்ளிய மூன்று மாதத்தில்... அதாவது, 12-ம் மாதத்துக்குப் பிறகு தார்கள், அறுவடைக்குத் தயாராகிவிடும். அதிகபட்சம் ஒரு மாதத்தில் அறுவடை செய்து விடலாம். தாரை மட்டும் வெட்டிவிட்டு, தாய் மரத்தை அப்படியே விட்டு விட வேண்டும். அதிலுள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு, பக்கக்கன்றுகள் நன்றாக வளரும். தொடர்ந்து, இடுபொருட்களைக் கொடுத்து பாசனம் செய்து வந்தால், அடுத்த 9 மாதங்களில் மீண்டும் பலன் எடுக்கலாம்.
ஏக்கருக்கு 90 ஆயிரம்!
சாகுபடிப் பாடம் முடித்த சுப்ரமணியன், ''ஒரு தார்ல ஏழுல இருந்து பதிமூணு சீப்பு வரை இருக்குது. ஒரு சீப்புல பதினஞ்சுல இருந்து இருபத்திரண்டு காய் வரை இருக்குது. ஒரு ஏக்கர்ல 1,000 வாழை மரம் நட்டா... சேதாரம் போக, குறைஞ்சது 900 தார் வரை கிடைக்கும். ஒரு கற்பூரவல்லி தார், குறைந்தபட்சமா 80 ரூபாய்க்கும், அதிகபட்சமா
150 ரூபாய் வரைக்கும் விக்குது. சராசரியா 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே...
900 வாழை தாருக்கும் சேர்த்து 90 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 20 ஆயிரம் ரூபாய் செலவு போக, 70 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்று மகிழ்ச்சி பொங்க செலவு-வரவு கணக்கைச் சொன்னார்!
தொடர்புக்கு,
சுப்ரமணியன்,
செல்போன்: 97913-79864.

Wednesday, December 18, 2013

உணவு தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம்


தூத்துக்குடியில் மீன் உணவுகள் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் மற்றும் செயல்விளக்கம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மீன்வளக் கல்லூரி முதல்வர் சுகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வளர்ப்பு மீன்களின் உணவு மற்றும் மேலாண்மை பற்றிய பயிற்சி முகாம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறுகிறது.
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இயங்கும் மீன் உணவு தரக்கண்காணிப்பு ஆய்வகம் அமைத்தல் என்ற ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்ச்சியில் மீன்களுக்கான செயற்கை உணவு தயாரிப்பது மற்றும் உணவு மேலாண்மை பற்றிய விளக்கவுரைகளும், செயல் முறை விளக்கமும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சி முகாமில் கெண்டை மீன் வளர்ப்போர், அலங்கார மீன் வளர்ப்போர், இறால் வளர்ப்போர் மற்றும் மீன்களுக்கான உணவு தயாரிப்பில் விருப்பமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
 பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் 9443002467 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டுத ங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கூடுதல் விவரங்கள் அறிய
பன்ணை சார்ந்த மீன் உணவு தயாரிப்பு குறித்த விவரங்களை அறிய “பேராசிரியர் மற்றும் தலைவர், கடல் சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புத்துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தருவைக்குளம், தூத்துக்குடி என்ற முகவரியிலும், 0461–2910336, 2340554, 94422 88850 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என்று பயிற்சி மைய தலைவர் சா.ஆதித்தன் தெரிவித்தார்.
Thanks:http://www.dailythanthi.com/Tuticorin,%20instead%20of%20marine%20aquatic%2

Sunday, December 15, 2013

வெற்றி தந்த வெயிலுக்கு நன்றி


வேலூரின் சிறப்புகளில் ஒன்று என்னத் தெரியுமா? வருடத்தின் ஒன்பது மாதங்களும் வெயில் வாட்டியெடுக்கும். அந்த வெயிலையே தன் தொழிலுக்கான அச்சாணியாகப் பயன்படுத்தியிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த லாவண்யா பாலாஜி. தாகத்துக்குத் தண்ணீரைவிட குளிர்பானங்களையே இன்று பலர் நாடுகிறார்கள். மக்களின் அந்த மனநிலைதான் இவரைக் குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கத் தூண்டியிருக்கிறது. இவர்களது நிறுவனத் தயாரிப்பில் உருவான குளிர்பானங்கள், இன்று நகரின் முக்கியக் கடைகளில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. கல்லூரி பேராசிரியராக இருந்தவர், தொழில்முனைவோராக மாறியதற்குப் பின்னால் குடும்பமும், தன்முனைப்பும் இருப்பதாகச் சொல்கிறார்.
“திருமணத்துக்குப் பிறகு நான் சென்னையில்தான் இருந்தேன். அப்போது கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என் கணவருக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அவருக்கு வேலூருக்குப் பணிமாறுதல் கிடைத்ததால் குடும்பத்துடன் இங்கே வந்துவிட்டோம். பொதுவாக வேலூரின் வெயிலைக் கண்டு பலரும் பயப்படுவார்கள். எங்களுக்கு என்னவோ அதிகமான வெயிலும், குளிரும் பிடித்துவிட்டது. அதனால் இங்கேயே நிரந்தரமாகக் குடியேறினோம். இங்கேயும் கல்லூரி பணி தொடர்ந்தது. என் இரண்டாவது குழந்தை பிறந்தபோது பணியைத் தொடரமுடியாமல் போனது” என்று முன்கதை சுருக்கம் சொல்கிறார் லாவண்யா.
கைகொடுத்த தொழில் மையம்
குழந்தை ஓரளவுக்கு வளர்ந்தாலும் தொடர்ந்து வேலைக்குச் செல்ல முடியாத சூழல். அதற்காக வீட்டை மட்டும் நிர்வகிப்பதோடு தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை லாவண்யா. தன் திறமையை நிரூபிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். தன் நினைப்பைப் பலரிடமும் கேள்வியாகக் கேட்டிருக்கிறார். அப்போது லாவண்யாவின் மாமனார்தான், தொழில்தொடங்கச் சொல்லி உற்சாகம் அளித்திருக்கிறார்.
“என் மாமனார் வீட்டில், சிறு அளவில் குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்தார்கள். அதையே நான் பெரிய அளவில் செய்யலாம் என்று நினைத்தேன். என் கணவரும், மாமனாரும் எனக்குத் துணை நிற்க, தொழில் தொடங்குவது என்று முடிவெடுத்தேன். குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க லட்சக் கணக்கில் பணம் வேண்டுமே. என்னச் செய்வது என்று யோசித்தபோது, மாவட்டத் தொழில் மையம் எங்களுக்குக் கைகொடுத்து உதவியது. மாவட்டத் தொழில் மையத்தை அணுகியபோது, பட்டதாரிகளுக்கு என்னவிதமான கடனுதவித் திட்டங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். முதல்கட்டமாக மாவட்டக் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் சந்திப்பு இருக்கும் என்று சொன்னார்கள். அதன்படி நான் கலெக்டரையும், அதிகாரிகளையும் சந்தித்து ஒப்புதல் வாங்கினேன். அதன் பிறகு ஒரு மாதம் பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்தப் பயிற்சி, என் ஆர்வத்துக்கு உரமிட்டது” என்கிறார் லாவண்யா.
லாவண்யா, படம் : வி.எம்.மணிநாதன்
வழிகாட்டிய தொழில்முனைவோர்கள்
ஒரு மாதம் நடந்த பயிற்சியில் பலதுறை நிபுணர்களும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள். தொழில்தொடங்கி வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடலும் நடந்திருக்கிறது. அதுதான், ‘என்னால் முடியுமா?’ என்ற லாவண்யாவின் தயக்கத்தைத் தகர்த்திருக்கிறது. கடனுதவி கிடைப்பதற்கு முன்னரே தொழிற்சாலை தொடங்குவதற்கான இடம், பணியாளர்கள், விற்பனை என்று சகலத்தையும் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார் லாவண்யா. குளிர்பானத் தயாரிப்பு ஃபார்முலாக்களில் இவருடைய மாமனாரின் பங்கு அதிகம் இருந்ததாகச் சொல்கிறார்.
வரவேற்ற வாடிக்கையாளர்கள்
“உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனக் குளிர்பானங்களுக்கு மத்தியில் எங்கள் தயாரிப்பு செல்லுபடியாக வேண்டும் என்றால் அது மிகப்பெரும் சவால்தானே? தரத்திலும் சுவையிலும் புதுமையைக் கூட்டினால்தான் அது சாத்தியமாகும் என்று புரிந்தது. குளிர்பானங்கள் இயற்கை மணத்துடனும் சுவையுடனும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். நம் மண்ணின் பானமான சோடா கலர் சுவையுடன் அது பொருந்திப் போகிற மாதிரியும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
உண்ணும் பொருள் என்பதாலேயே எதையுமே இரு மடங்கு பரிசோதனைக்குப் பிறகுதான் செயல்படுத்தினோம். என் மாமனாரின் தொழில்நுட்ப அறிவுடன் என் கணவரின் மார்க்கெட்டிங் அறிவும் எனக்குப் பக்கப் பலமாக இருந்தன” என்று சொல்கிற லாவண்யா, நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள, அவருடைய கணவர் பாலாஜி ராஜா, வர்த்தகத்தைக் கவனித்துக் கொள்கிறார். ஆரம்பத்தில் கடைகளை அணுகுவதே சிரமமாக இருந்தது என்கிறார் லாவண்யா.
“புதுத் தயாரிப்பு என்பதாலேயே பல கடைகளில் எங்கள் குளிர்பானங்களை வாங்க யோசித்தார்கள். ஆனால் ஒருமுறை வாங்கிய வாடிக்கையாளர்கள், அடுத்தமுறையும் கேட்கத் தொடங்கியதால் எங்களுக்கு அதிகமாக ஆர்டர் வந்தது. இன்று ஆற்காடு முதல் குடியாத்தம் வரை கிட்டத்தட்ட இரண்டாயிரம் கடைகளுக்கு எங்கள் குளிர்பானங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
வேலூர் நகரின் முக்கியக் கடையில்தான் நான் மாதா மாதம் மளிகைப்பொருள்கள் வாங்குவேன். அங்கே வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு மத்தியில் எங்கள் தயாரிப்பைப் பலர் விரும்பி கேட்டு வாங்கிச் செல்வதைப் பார்க்கும்போது பெருமிதமாக இருக்கும். இதுபோன்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு உழைக்கிறோம், நிச்சயம் வெற்றியும் பெறுவோம்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் லாவண்யா.

வெற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல - சாதித்துக் காட்டிய ஸ்ரீவித்யா பிரியா


என்னதான் பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு இணையாகப் பணிபுரிந்தாலும் சில துறைகளை ஆண்களுக்கென்றே நேர்ந்துவிட்டதுபோல இருக்கும். சுற்றி ஆண்கள் மட்டுமே நிறைந்திருக்க, பெண்கள் அங்கே பார்வையாளர்களாகக்கூட இடம்பெற முடியாது. ‘லாஜிஸ்டிக்ஸ்’ எனப்படும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சார்ந்த துறையும் ஆண்களால் மட்டுமே அரசாளப்படுவதுதான். ஆனால் அதில் தனித்துக் களமிறங்கி, சாதித்தும் காட்டியிருக்கிறார் வித்யா என்கிற ஸ்ரீவித்யா பிரியா.
“எதுல இருந்து ஆரம்பிக்கட்டும்? கொஞ்சம் வித்தியாசமா என் கல்யாணத்துல இருந்து தொடங்கட்டுமா?” - கலகலப்புடன் கேட்கிறார் வித்யா. சென்னை, பாரீஸில் இருக்கும் அவருடைய அலுவலகத்தில் பரபரப்புகளுக்கு நடுவில் எதையுமே பொறுமையுடன்தான் அணுகுகிறார். குறுக்கீடுகளைக்கூட இன்முகத்துடன் எதிர்கொள்கிறார். சென்னை வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் கவர்னர் கையால் வாங்கிய விருதுகள் மேஜைக்குப் பின்னால் இருக்க, தன் முன்னால் இருக்கும் சவால்கள் குறித்துப் பேசுகிறார் வித்யா.
“எங்களோடது பெற்றோர் சம்மதிக்காத காதல் திருமணம். என் கணவர் பாலச்சந்திரன், டிரான்ஸ்போர்ட் பிசினஸ்ல இருக்கார். அவர் வீட்ல சம்மதம் கிடைச்சாலும், என் வீட்டில் ஏத்துக்கவே இல்லை. நாங்க பரம்பரை பணக்காரர்கள் கிடையாது. கணவரோட வருமானம் போதவில்லை. காலேஜ்ல நான் படிச்ச பொருளாதாரமும், வாங்கின கோல்டு மெடலும் வாழ்க்கையில எந்த மாற்றத்தையும் பண்ணலை. படிச்சதுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த ஷிப்பிங் கம்பெனியில வேலைக்குப் போனேன். பெரிய பதவி எல்லாம் இல்லை. சாதாரண வேலைதான். கொடுத்த வேலையை, நிறைவா செய்தேன். மூத்த மகன் பிறந்தான். அவனைப் பார்த்தாலாவது எங்க வீட்டோட கோபம் தீரும்னு என் பிறந்த வீட்டுக்குப் போனேன். கைக்குழந்தையோட வாசல்ல நின்ன என்னைப் பார்த்து, ‘நாங்க இன்னும் இருக்கோமா, செத்துட்டோமான்னு பார்க்க வந்தியா’ன்னு கேட்டாங்க. ஏற்கனவே உடைஞ்சு போயிருந்த என்னை மொத்தமா நொறுக்கிப்போட அந்த வார்த்தைகளே போதுமானதா இருந்தது. சரி, எல்லாத்துக்கும் இன்னொரு பக்கம் இருக்கும் இல்லையா? அவங்க நிலையில நின்னுப் பார்த்தா அவங்க அப்படி நடந்துக்கறதும் சரிதானே” என்று பெற்றவர்களை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் வித்யா.
வீட்டின் வறுமையை எப்பாடுபட்டாவது சமாளித்தாக வேண்டும் என்ற உத்வேகம்தான் அவரை ஒரு நிறுவனத்தின் முதலாளியாக உயர வைத்திருக்கிறது.
“ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீட்டுல 400 ரூபாய் வாடகைக்குக் குடியிருந்தோம். வீட்டுச் செலவு, குழந்தைங்க படிப்புன்னு செலவு மட்டும் அதிகமா இருக்கும். வரவுக்கு எங்கே போறது? என் கணவர் வேலை பார்த்த நிறுவனம் நஷ்டத்துல இயங்கினதால அதை மூடிட்டாங்க. என்ன செய்யறதுன்னே தெரியலை.
“நான் செய்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டு சொந்தமா தொழில் தொடங்கலாம்னு முடிவு செய்தேன். என்னோட வேலை பார்த்த நாலு பேர், பங்குதாரர்களா சேர்ந்தாங்க. முதல் போட என்கிட்டே பணம் இல்லாததால ஆரம்பத்துல நான் வொர்க்கிங் பார்ட்னராதான் சேர்ந்தேன். எங்களுக்குத் தெரிஞ்சது லாஜிஸ்டிக்ஸ்தானே. அந்தத் தொழிலையே தொடங்கினோம். தொழில் இடத்துல பிரச்சினைகள் சகஜம்தானே. அதனால பங்குதாரர்கள் விலகிட்டாங்க. நானும் இன்னொருத்தரும் மட்டும் தொழிலைத் தொடர்ந்து நடத்தினோம். கடைசியில அவங்களும் விலகிட, நான் தனியாளா நின்னேன்” என்று சொல்கிற வித்யாவுக்கு அதற்கடுத்து ஏறுமுகம்தான்.
சவால்களைச் சமாளித்தேன்
“கப்பல், விமானம் போன்றவற்றில் வரும் சரக்குகளை உரியவரிடம் சேர்ப்பதுதான் எங்கள் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் வேலை. பொதுவா பரம்பரையா இந்தத் துறையில இருக்கறவங்கதான் இங்கே அதிகம். அவங்களுக்குத்தான் நிறைய வாடிக்கையாளர்கள் இருப்பாங்க. ஏன்னா அதிகமான பணம் புழங்கற, அதே சமயம் ரிஸ்க் நிறைந்த தொழிலும்கூட. நான் என்னோட கம்பெனிக்கு ஆர்டர் பிடிக்க எத்தனையோ கம்பெனிகள் ஏறி, இறங்கியிருக்கேன். என்னை நம்பி ஆர்டர் தர பலர் யோசிச்சாங்க. ஆனா சிலர் வாய்ப்பு தரவும் செய்தாங்க. அதைத் தடுக்க எத்தனை போட்டி தெரியுமா? நிறைய இடையூறுகள், தொந்தரவுகள். சமயங்கள்ல முக்கியமான டாக்குமெண்ட்ஸ் காணாமல் போயிடும்.
ஆண்கள் மட்டுமே நிலைச்சிருக்கும் இந்தத் துறையில என்னோட வரவை அத்தனை சீக்கிரம் யாருமே ஏத்துக்கலை. சிலர் என்னோட நடத்தையைக்கூட கேள்விக்குள்ளாக்கினாங்க. நான் உடைஞ்சுபோய் இந்தத் துறையில இருந்து விலகணும்கறதுதான் அவங்க நோக்கம். அப்படி நான் பின்வாங்கிட்டா, அவங்க ஜெயிச்சா மாதிரி ஆகிடுமே. எதைப் பத்தியுமே கவலைப்படாம என் கொள்கையில உறுதியா நின்னேன். இப்போ ஐ.டி.சி. மாதிரியான பெரிய பெரிய நிறுவனங்கள் என் வாடிக்கையாளரா இருக்கறது எனக்குப் பெருமையா இருக்கு” என்று சொல்லும்போதும் அவரது வார்த்தைகளிலோ, முகத்திலோ பெருமிதத்தின் சுவடு துளிக்கூட இல்லை.
வெற்றி ரகசியம்
“கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு மேல இருக்கற எங்கள் துறையில் நான் மூன்றாவது இடத்துல இருக்கறதா சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல இருந்து போன் வந்தப்போ நான் நம்பவே இல்லை. பரிசு வாங்கின அந்த நொடி எனக்கு இன்னும் சாதிக்கணும்கற உத்வேகத்தைக் கொடுத்துச்சு. குரூப் போட்டோவுக்கு நின்னப்போ அந்த குழுவில் நான் மட்டும்தான் பெண் என்பது தெரிஞ்சது. அது என் தன்னம்பிக்கையை அதிகரிச்சது. இப்போ ‘வீ வின் லாஜிஸ்டிக்ஸ்’னு இன்னொரு கம்பெனி துவங்கியிருக்கோம். நானும் என் பணியாளர்களும் அதுக்கான வேலைகளில் மும்மரமா இருக்கோம். காரணம் அவங்க பங்களிப்பு இல்லாம இந்த வெற்றி சாத்தியம் இல்லை” என்று தன் ஊழியர்களை உயர்த்திப் பேசுகிறார் வித்யா. தோல்வியில் துவளாத, வெற்றியில் துள்ளாத இந்த மனநிலைதான் வித்யாவின் வெற்றி ரகசியம்!

பள்ளியில் டீச்சர்..கடையில் புரோட்டா மாஸ்டர்!


புயலடிக்கும் பொழுதோடு புலர்கிறது விடியல். அலையடிக்கும் மனதோடு தொடர்கிறது அன்றாட வாழ்க்கை. நம்மில் அநேகம் பேரின் யதார்த்தம் இப்படித்தான் நகர்கிறது. செந்தூர் வள்ளியின் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. காரைக்குடிக்கு அருகே உள்ள பட்டமங்கலம், பிரபலமான குரு ஸ்தலம் உள்ள ஊர். இங்குள்ள வசந்தம் ஓட்டலுக்கு நாற்பது வருட பாரம்பரியம் உண்டு. பாரம்பரியத்தோடு ஏராளமான வாடிக்கையாளர்களையும் வளைத்துப் போட்டிருக்கிறது இந்த ஓட்டல்.
அப்படியென்ன இங்கு என்ன விசேஷம் என்கிறீர்களா.. புரோட்டா அறிமுகமான நாளில் இருந்தே இங்கு பெண்கள்தான் புரோட்டா மாஸ்டர்கள். பெண்களுக்கே உரிய கைபக்குவத்தில் புரோட்டா வீசுவதால், அதை சாப்பிடுவதற்கென்றெ பக்கத்து கிராமங்களில் இருந்து தினமும் பஸ் ஏறி வந்துவிட்டு போகிறார்கள் பலர்.
இந்த ஓட்டலில் இரண்டாம் தலைமுறை புரோட்டா மாஸ்டராக இருப்பவர் செந்தூர்வள்ளி டீச்சர். மாஸ்டர் சரி, அதென்ன டீச்சர்? படித்து வாங்கிய பட்டம்தான். ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, தற்போது உள்ளூர் பள்ளியிலேயே பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் செந்தூர்வள்ளி, வெட்கப்படாமல் தனது பாரம்பரியத் தொழிலையும் செய்து கொண்டிருக்கிறார்.
‘‘சின்ன வயசுல, அம்மா புரோட்டா வீசுறத பாத்துருக்கோம். நாங்க யாரும் கையில மாவை எடுத்துடக் கூடாதுங்கறது அம்மாவோட பயம். ஆனா, குடும்பச் சூழல் எங்களையும் புரோட்டா வீச வைச்சிருச்சு. இன்னைக்கி நாங்க தலை நிமிர்ந்து நிக்கிறோம்னா அதுக்குக் காரணம் நாங்க பழகி வைச்சிருக்கிற இந்த புரோட்டா மாஸ்டர் தொழில்தான்’’ என்கிறார் 13 வயதில் இருந்து புரோட்டா வீசிக்கொண்டிருக்கும் செந்தூர்வள்ளி டீச்சர். அவரே தொடர்கிறார்..
பொம்பளப் புள்ளைங்க இந்த வேலையச் செய்யக் கூடாதுங்கறது அப்பா, அம்மாவோட எண்ணம். ஆனா, முடியாத வயசுல அம்மா பட்ட கஷ்டத்தைப் பார்த்துட்டு நாங்களே களத்துல இறங்கிட்டோம். கடைக்கு வெளியில புரோட்டா வீசுனாத்தானே நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க. அதனால கடைக்குள்ளேயே புரோட்டா வீசுனோம். கல்யாணம் ஆன பின்னாடித்தான் கடை முகப்புலேயே புரோட்டா வீச ஆரம்பிச்சோம்.
நாங்க அக்கா தங்கச்சிக நாலு பேரு. எங்களுக்கு கல்யாணம் முடிச்சது, எங்க அத்தை பிள்ளைங்களுக்கு கல்யாணம் முடிச்சது, தம்பியை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புனது எல்லாமே நாங்க புரோட்டா வீசி சம்பாதிச்ச பணத்செந்தூர்வள்ளிதாலதான் சாதிக்க முடிஞ்சுது.

இப்போ தற்காலிகமா உள்ளூர் ஸ்கூல்ல வேலை குடுத்துருக்காங்க. காலையில புரோட்டோ வீசிக் குடுத்துட்டு ஸ்கூலுக்குப் போயிருவேன். அதை எல்லாம் கல்லுல போட்டு எடுத்து வியாபாரம் பாத்துருவாங்க அக்கா. சாயந்தரம் ஸ்கூல் விட்டு வந்ததும் மறுபடியும் கையில மாவை எடுத்துருவேன். எனக்கு ஏதாச்சும் வேலை இருந்தா அக்காவும் புரோட்டா வீசுவாங்க.
எங்களால முடிஞ்ச வரைக்கும் நாங்க இந்த வேலையை செஞ்சுட்டே இருப்போம்.. உறுதியாய் சொன்ன செந்தூர்வள்ளியிடம், ‘‘டீச்சருக்கு படிச்சுட்டு ஓட்டல்ல புரோட்டா வீசுறது கஷ்டமா தெரியலையா?’’ என்று கேட்டால் சிரிக்கிறார்.
‘‘இதுல கஷ்டப்பட என்ன இருக்கு? பொய் சொல்லக் கூடாது, களவாடக் கூடாது. நேர்மையா எந்தத் தொழிலைச் செய்தாலும் அது தெய்வத்துக்கு சமம். படிச்சுட்டு புரோட்டா சுத்தலாமான்னு அன்னைக்கி நான் யோசிச்சிருந்தா, இன்னைக்கி எங்க குடும்பம் கஷ்டப்படாம கஞ்சி குடிச்சிருக்க முடியாதே’’.. செந்தூர்வள்ளி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மைதாவை எடுத்து சின்னதாய் ஒரு புரோட்டா வீசிக் கொண்டிருந்தாள் அவரது ஏழு வயது மகள் தர்ஷினி !

படித்ததில் பிடித்தது


காதல் கணவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் அளித்ததன் மூலம் அவரை சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லச் செய்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்.
நடுத்தரக் குடும்பம். நல்ல கல்வி. ஐ.டி. நிறுவனத்தில் வேலை. ஐ.டி. நிறுவனத்திலேயே பணியாற்றும் பெண்ணை காதலிக்கும் வாய்ப்பு. காதலித்த பெண்ணுடன் பெற்றோர் சம்மதத்தில் திருமணம். இப்படியாய் மகிழ்ச்சிக் கடலில் நீந்தித் திளைத்தார் ஆர். ஹரிகுமார் (28).
ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இடி விழுந்ததுபோல அதிர்ச்சி தரும் செய்தி.
harikaran_saranyaஉடல் நலம் சற்று பாதித்த நிலையில் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர் ஹரிகுமாரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகக் கூறினார்.

சிறுநீரகம் கிடைப்பது கடினம்
“அவ்வப்போது தலைவலி, தலைச்சுற்றல் ஏற்படும். பணிச் சுமையே காரணம் என நினைத்து அலட்சியமாக இருந்து விட்டேன். ஆனால் எனக்குள் இருந்த ரத்த அழுத்தப் பிரச்னை எனது சிறுநீரகங்களின் செயல்பாட்டை முடக்கி விட்டது என்பதை பிறகுதான் உணர்ந்து கொண்டேன். அதன் பின்னர் ஏராளமான மருத்துவர்கள், பலவித சிகிச்சைகள் என அலைந்தேன். எவ்வித முன்னேற்றம் இல்லை. இறுதியில் நண்பர் ஒருவர் கூறியதன் பேரில் சேபியன்ஸ் அறக்கட்டளையைச் சேர்ந்த டாக்டர் ராஜன் ரவிச்சந்திரனை சந்தித்த பிறகுதான் நம்பிக்கை ஏற்பட்டது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது என முடிவாயிற்று. ஆனால் சிறுநீரகம் கிடைப்பது எளிதாக இல்லை. இறுதியில் எனது மனைவி சரண்யாவே தனது ஒரு சிறுநீரகத்தை தானமாகத் தந்து என்னைக் காப்பாற்றியுள்ளார்” என்றார் ஹரிகுமார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பங்கேற்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் கடந்த ஜூலை 29-ம் தேதிமுதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ஹரிகுமார், வட்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
“நம் குடும்பத்தில் ஒருவர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் போது, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சிறுநீரகம் தானம் அளிப்பதே சிறந்தது” என தனது அனுபவத்தின் மூலம் கூறுகிறார் ஹரிகுமார் மனைவி சரண்யா (25).
உறுப்பு தான விழிப்புணர்வு குறைவு
“இன்று சிறுநீரக நோயாளிகள் சிறுநீரகங்களைத் தானமாகப் பெற இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் தானமாகத் தர வேண்டும். இல்லையெனில் விபத்துகளின் காரணமாக மூளைச்சாவு ஏற்பட்டோரின் சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட வேண்டும். எனினும் மூளைச்சாவு ஏற்பட்டோரின் உறுப்புகளை தானம் அளிப்பதற்கான விழிப்புணர்வு நம் நாட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆகவே, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தானமாக அளிப்பதன் மூலம் விரைவான சிகிச்சை கிடைப்பதோடு விரைவில் நலம் பெறவும் முடியும். நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள் சிறுநீரகம் தானம் அளிப்பதால் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனது ஒரு சிறுநீரகத்தை எனது கணவருக்கு தானம் அளித்த நிலையில், மற்றவர்களைப் போல நானும் மிகவும் ஆரோக்கியமாகவே உள்ளேன்” என்கிறார் சரண்யா.
சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் மற்றவர்களுக்கு கூற விரும்புவது என்ன என ஹரிகுமாரிடம் கேட்டோம். “நல்ல ஆலோசனை தரும் மருத்துவரை விரைவாக அடையாளம் காண வேண்டும். எந்த வகையில் சிறுநீரகத்தை தானமாகப் பெறப் போகிறோம் என்பதையும் உடனடியாக முடிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் சிகிச்சைக்கு தேவையான பணத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் நம்மால் விரைவில் சிகிச்சை பெற முடியும். இது தொடர்பாக யாரேனும் என்னுடைய 97911 98017 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டால் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளேன்” என்றார் ஹரிகுமார்.

பெண்களுக்கான வங்கி


கடந்த மாதம் ஏழு மாநிலங்களில் பெண்களுக்கான பிரத்யேக வங்கிகள் தொடங்கப்பட்டன. மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் பெண்கள் வங்கிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது. அதன்படி மும்பையில் நவம்பர் 19ம் தேதியன்று பெண்களுக்கான வங்கியை பிரதமர் திறந்து வைத்தார். அதே நாளன்று சென்னை, அகமதாபாத், கொல்கத்தா உள்ளிட்ட ஏழு கிளைகளும் தொடங்கப்பட்டன.
பெண்களுக்குத் தனியாக வங்கி எதற்கு என்ற கேள்வி எழுவது இயற்கைதான். அதில் பெண்களுக்கென்று பிற வங்கிகள் அளிக்காத சிறப்புச் சேவைகள் இருக்கின்றனவா என்னும் கேள்வியுடன் சென்னை அண்ணா சாலையில் திறக்கப்பட்ட ‘பாரதிய மஹிளா பேங்க்’ஐ அணுகியபோது பெண்களுக்கான பிரத்யேகமாக வங்கித் திட்டங்கள், கடன்கள் கொடுப்பது, உள்ளிட்ட அம்சங்கள் இருப்பது தெரியவந்தது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், சிறு தொழில்களுக்கும், பெண்களின் ஆக்கபூர்வமான முன்னேற்றத்துக்கும் துணை புரியும் இந்த வங்கிகளில் குழந்தைகள் காப்பகம் நடத்தவும் உணவு தயாரிப்பு வேலை (catering) செய்யவும் கடன்கள் தரப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
கதம்பச் சுடர் சுய உதவிக் குழுவும் கண்மலை சுய உதவிக் குழுவும் சென்னை கிளையில் முதல் நாள் கடன் பெற்றன. ராயபுரத்தில் இருக்கும் இந்த இரண்டு மகளிர் குழுக்களிலும் தையல் தொழில் செய்யும் பெண்களே உறுப்பினர்கள். கண்மலை குழுவில் 13 பெண்களும் கதம்பச் சுடர் குழுவில் 15 பெண்களும் உள்ளனர்.
கண்மலை சுய உதவிக் குழு உறுப்பினர் சத்யா, பி.காம் படித்திருக்கிறார். முன்பு தனியார் நிறுவனத்தில் கணக்குகள் பிரிவில் வேலை பார்த்துவந்தார். பிறகு ஏற்றுமதி நிறுவனத்தில் நைட்டிகள் தைத்து வந்தார். வருமானம் போதாததால் வேலையை விட்டு வீட்டிலேயே தைக்க ஆரம்பித்தார் சத்யா. வீட்டு உரிமையாளர் தையல் மெஷின் சத்தத்தைப் பொறுத்துக்கொள்ளாததால் கண்மலை குழுவில் மற்றொரு உறுப்பினரான தனது சித்தி புஷ்பராணியின் வீட்டில் வைத்து த் தைத்துவருகிறார். அப்பாவுக்குக் கல்லீரலில் அறுவை சிகிச்சை, அண்ணனுக்கு ரூ.5000 மாத சம்பளம், அம்மா இல்லத்தரசி. இந்நிலையில் சத்யா ஏதாவது தொழில் செய்தால் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற சூழலில்தான் தைக்க ஆரம்பித்தார்.
கடன் என்னும் வரம்
கண்மலை குழு ஆரம்பித்து ஏழு மாதங்களிலேயே பெண்கள் வங்கியிலிருந்து கடன் கிடைத்திருக்கிறது. இதுதான் அவர்கள் வாங்கும் முதல் கடன் என்பதால் குழு உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். “இந்தக் கடன் அறிவித்திருப்பது வானத்தை எட்டியது போல் இருக்கிறது. கடனாகக் கொடுக்கப்பட்டிருக்கும் ரூ.1,30,000-ஐக் கொண்டு தையல் கடை ஆரம்பிக்கலாம் என்று ஆசைப்படுகிறோம்” என்கிறார் குழு உறுப்பினரும் சத்யாவின் சித்தியுமான புஷ்பராணி .

“சத்யா கூறியதால் பொழுது போக்காகத்தான் நான் தையல் கற்றுக்கொண்டேன். ஆனால் அதுதான் இப்போது எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறது” என்கிறார் புஷ்பராணி.

மீனவர் வாழ்வில்...
கதம்பச் சுடர் சுய உதவிக் குழுவில் நான்கு வருடமாக உறுப்பினராக இருப்பவர் ஷகீலா. மீனவராக இருந்த அவரது கணவர் திருமணமாகி ஆறு வருடங்களிலேயே விபத்தில் இறந்துவிட்டார். மூன்று வயது ஆண் குழந்தையுடன் வாழ்க்கையைத் தனியாக எதிர்கொள்ள ஆரம்பித்தார்.
அடுப்பில் இருக்கும் பால் பொங்குகிறதா இல்லையா என்று கவனித்துக் கொண்டே தனது தையல் மெஷினை ஓட்ட ஆரம்பிக்கிறார் ஷகீலா. தனது கஷ்டங்கள் எதையுமே முகத்தில் காட்டிக் கொள்ளாமல் கலகலப்பாகப் பேசத் தொடங்குகிறார். “அவர் இறந்த பின் நான் மிகவும் கலங்கிவிட்டேன். வாடகைக்கு தையல் மெஷின் வாங்கி வீட்டில் இருந்தே தைக்க ஆரம்பித்தேன். இந்த தொழிலை நம்பிதான் என் குடும்பமே ஓடிக்கிட்டு இருக்கு. தெரிந்த பெண்கள் பதினைந்து பேர் கூடி இந்த குழுவை ஆரம்பித்தோம்.” என்கிறார்.
எத்திராஜ் கல்லூரியில் இருக்கும் இந்தியன் ஓவர்சீஸின் பெண்களுக்கான தொழில்முனைவோர் வங்கியில் கடன் வாங்கி இதுவரை ஷகீலாவையும் சேர்த்து 10 பேர் சொந்தமாக மெஷின் வாங்கியுள்ளனர். பெண்கள் வங்கி கதம்பச் சுடருக்கு ரூ.3 லட்சம் கடன் தருவதாக அறிவித்துள்ளது.
“நாங்கள் முதலில் அலகாபாத் வங்கியில் கணக்கு வைத்திருந்தோம். எங்களுக்கு கடன் கொடுத்த மேலாளர் வேறு கிளைக்கு மாற்றப்பட்டு விட்டார். அதன் பிறகு வந்தவர் எங்களுக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை. எனவே ஐ.ஒ.பி. பெண்கள் வங்கிக்கு மாறினோம். அங்கு எல்லோரும் எங்களது நிலைமையை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். முகம் தெரியாத ஒருவரிடம் பேசவே தயங்கும் எனக்கு பெண்கள் வங்கி என்பதால் சுலபமாக பேசிப் பழக முடிந்தது. புதிதாக திறக்கப்பட்டிருக்கும் பெண்கள் வங்கியிலும் இதே வரவேற்பு இருக்கும் என்று கண்டிப்பாக நம்புகிறோம்” என்கிறார் ஷகீலா தன்னம்பிக்கையுடன்.

பாட்டியான பிறகும் படைப்பாளியாகலாம்


கடமைகளை எல்லாம் ஒருவழியாக முடித்துவிட்டு அப்பாடா என்று ஓய்ந்து உட்காருகிற வயதில் கலைகளின் பின்னால் செல்கிறார் சேலம், அழகாபுரம் சிவாய நகரைச் சேர்ந்த கெஜலஷ்மி. பறந்துகொண்டே இருக்கிற பட்டாம்பூச்சி போல எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கிறார். சோர்ந்து உட்கார்ந்துவிட்டால் உடல், மனம் இரண்டுமே துருப்பிடித்துப் போய்விடும் என்று சொல்கிற இவர், கலைகளின் மூலம் தன்னை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொள்கிறார்.

“நானும் உங்களில் ஒருத்திதான். என் கணவருக்குச் சுயதொழில். அதனால் திருமணமான புதிதில் அவரது வியாபாரம் தொடர்பான கணக்கு வழக்குகளில் உதவுவேன். அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். வீடு, வேலை, குழந்தைகள் என ஒவ்வொரு நாளும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பறக்கும். இரண்டு பெண்களையும் திருமணம் செய்துகொடுத்து, பேரன், பேத்திகளையும் பார்த்தாகிவிட்டது. இப்போது கிடைத்திருக்கும் இந்த ஆசுவாசம், எனக்குள் வேரூன்றி இருந்த கலையார்வத்தை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்தது. என் அக்கா மகள், ஃபேஷன் நகைகள் செய்வதில் வல்லவள். அவளைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது. அடிப்படை செய்முறையுடன் என் கைத்திறனையும் சேர்த்துப் புதுப்புது மாடல்களை நானே உருவாக்கினேன். என் வீட்டில் பெண்கள் அதிகம் என்பதால் நான் எத்தனை வகையான நகைகள் செய்தாலும் உடனே அவற்றுக்குக் கழுத்தோ, காதோ கிடைத்துவிடும்” என்று புன்னகையுடன் பேசுகிற கெஜலஷ்மி, பயன்படாத பொருட்களைக்கூடப் பளபளக்கும் கலைப்பொருள்களாக மாற்றிவிடுகிறார்.
கல்லையும் சிற்பமாக்கலாம்
எண்ணெய் கவர்கள், பால் கவர்களை முக்கோணமாக வெட்டி, சுருட்டி இவர் தொடுக்கும் மாலைகள் கொள்ளை அழகு. இளநீர் குடித்துவிட்டு நாம் ஸ்ட்ராவைத் தூக்கி போட்டுவிடுவோம். ஆனால் கெஜலஷ்மியோ அவற்றை வைத்து அலங்காரக் குடைகளை உருவாக்கி விடுகிறார். ஆம்லெட் போட்டுவிட்டு நாம் தூக்கியெறியும் முட்டை ஓடுகளில் கண்கவர் ஓவியங்கள் தீட்டுகிறார். அச்சுக் கலையையும் ஒரு கை பார்க்கிறார். புடவைகள், குழந்தைகளின் ஆடைகளில் விதவிதமான அச்சுகளைப் பதிக்கிறார். தையல் எந்திரத்தை நம்பாமல், கைகளிலேயே விதவிதமான எம்ப்ராய்டரி வடிவங்களைச் செய்கிறார். முகப்புவைத்த முத்துச்சரமும், பதக்கம் பதித்த சங்கிலியும் இவரது சிறப்புத் தயாரிப்புகள்.
“நான் இவ்வளவு பொருட்களைச் செய்தும் எதையும் விற்பனை செய்ததில்லை. என் மனத் திருப்திக்கும், என் குடும்ப உறுப்பினர்களுக்குமே இவை போதுமானதாக இருக்கின்றன. ஆயிரம் ஆயிரமாகக் கொடுத்துக் கடைகளில் வாங்குவதைவிட என் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு என் கையால் செய்த பொருட்களைக் கொடுக்கும்போது தோன்றுகிற மகிழ்ச்சிதான் என் வருமானம்!” என்று சொல்லும் கெஜலஷ்மி, இதுவரை யாரிடமும் இந்தக் கலைகளைப் பயின்றதில்லை.
நீங்களும் பங்கேற்கலாம்
பார்த்ததுமே உங்களுக்குள் இருக்கும் கலை உணர்வு மெல்லத் தலைகாட்டுகிறதா? உடனே அதை வெளிப்படுத்துங்கள். அது புகைப்படமோ, ஓவியமோ, ஆடைகளில் வரையும் அலங்கார டிசைனோ எதுவாக இருந்தாலும் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள், உலகறியச் செய்கிறோம். penindru@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

Saturday, December 14, 2013

கீரை சாகுபடி

தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, கூலியாட்கள் தட்டுப்பாடு.. என விவசாயத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். இத்தனையையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டு மென்றால், புதிய தொழில் நுட்பங்கள் கண்டிப்பாகத் தேவை. இதை சரியாகப் புரிந்து கொண்ட விவசாயிகள் பலரும் நவீன கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில், குறைந்த நேரமே கிடைக்கும், மின்சாரத்தையும், குறைந்தளவு தண்ணீரையும் வைத்து பாசனம் செய்யவும் பல நவீன கருவிகள் மற்றும் முறைகள் உள்ளன. அதில் 
ஒன்றுதான், தெளிப்புநீர் பாசனம். இந்த முறையில், பாசனம் செய்து கீரை சாகுபடி செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள கரிச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பொன்னுசாமி.
கொங்கு நாட்டின் நெற்களஞ்சியம் என்று கோபிச்செட்டிபாளையம் பகுதியை சொல்வார்கள். அந்தளவிற்கு வளமான பகுதி. ஆனால், அதே தாலுகாவோட தெற்கு பக்கம் இருக்கும் எங்கள் பகுதி வானம் பார்த்த பூமி. ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் எதுவும் இங்கே இல்லை. முழுக்க முழுக்க கிணற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பித்தான் வெள்ளாமை.
ஆயிரம் அடிக்கும் மேல், போர் போட்டு கிடைக்கும் கொஞ்சம் தண்ணீரை வைத்துதான் விவசாயம் செய்கிறோம். போதுமான தண்ணீர் இல்லாததால் கிடைக்கும் தண்ணீரை வைத்து பிஞ்சு வெள்ளாமையாக கீரையை சாகுபடி செய்கிறேன். ஆரம்பத்தில் வாய்க்கால் பாசனம்தான் செய்தேன். வாய்க்காலில் ஓடி, வயலை அடையவதற்குள்ளே போதும் போதும் என்று ஆகிவிடும். அந்த மாதிரி சமயத்தில்தான் ஒரு நாள் உழவர் சந்தையில் ஒரு விவசாயி, சொட்டுநீர்ப் பாசனத்தைப் பற்றி சொன்னார்.
வாய்க்கால் பாசனத்தில் ஒரு ஏக்கர் பயிருக்கு போகும் தண்ணீரை… சொட்டுநீர்ப்பாசனம் மூலமாக மூன்று ஏக்கருக்குப் பாய்ச்சிவிடலாம் என்றார், எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் கம்பெனியுடைய முகவரியை வாங்கிகொண்டு, அடுத்த நாளே மகனுடன் அங்கே சென்று விவரம் கேட்டேன்.
என்னுடைய வயல், கிடைக்கும் தண்ணீர், வெள்ளாமை எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டு உங்களுக்கு தெளிப்பு நீர்ப் பாசனம்தான் ஏற்றதாக இருக்கும் என்று சொன்னார்கள். அந்தக் கருவியை அமைத்திருக்கும் சில வயல்களையும் கூட்டிக்கொண்டு போய் காட்டினார்கள்.
எங்களுக்கும் அது திருப்தியாக தெரியவும், ஒரு ஏக்கர் கீரை சாகுபடிக்கு ஏற்ற அளவிற்குத் தேவையான கருவிகளை வாங்கிகொண்டு வந்து நாங்களே போட்டுக் கொண்டோம். 15 அடி இடைவெளியில் 4 அடி உயரத்திற்கு மரக்குச்சிகளை நட்டு, அதில் இரண்டரை உயரமுள்ள குழாய்களை அசையாமல் இருக்கும் மாதிரி கட்டிவிட்டோம்.
குழாய் முனையில் பட்டாம்பூச்சி நாசிலைப் பொருத்தினோம். தண்ணீரைப் பீச்சி அடிக்கும் இந்த நாசில் பட்டாம் பூச்சியோட இறக்கை மாதிரியே இருக்கும். அதனால், பட்டாம்பூச்சிப் பாசனம் தான் எங்க பக்கம் சொல்லுவாங்க. இதற்கு அரசு மானியம் கிடையாது. 15 அடி இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் பட்டாம்பூச்சிப் பாசனம் அமைப்பதற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றார்.
பூச்சிகளை விரட்டும் தெளிப்பு நீர்!
5 ஹெச்.பி.போர்வெல் மோட்டார் மூலமாகத்தான் பாசனம் செய்து கொண்டிருந்தோம். அதில் ஒரு ஏக்கர் பாசனம் செய்ய குறைந்தபட்சம் 6 மணிநேரம் ஆகும். அந்தளவிற்கு பாசனம் செய்வதற்கு  எங்கள் கிணற்றில் தண்ணீரும் இல்லை.
கரன்ட்டும் அவ்வளவு நேரம் கிடைக்காது. ஆனால், பட்டாம்பூச்சிப் பாசனம் அமைத்தபிறகு, அந்தக் கவலையே இல்லை. செங்கீரை, புதினா, அரைக்கீரை, மணத்தக்காளி, சிறுகீரை என்று ஐந்து வகையான கீரைகளைப் பயிர் செய்கிறோம்.
ஒரு ஏக்கர் நிலத்தை இரண்டாக பிரித்து, அதில் தனித்தனியாக சாகுபடி செய்வதால் சுழற்சி முறையில் தினமும் கீரையை அறுவடை செய்கிறோம். இந்தக் கீரையை சிறு கீரையைத் தவிர மற்ற நான்கு கீரைகளும் மறுதழைவு ரக கீரைகள். வெட்ட வெட்ட தழைந்து கொண்டே இருக்கும். அடியுரமாக கோழி எரு, தொழுவுரம் இரண்டையும் போடுகிறோம். மேலுரமாக யூரியா கொடுப்போம். ஆனால், பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதே இல்லை. அதற்கும் காரணம், பட்டாம்பூச்சிப் பாசனம்தான்.
தினமும் ஒரு மணி நேரம் பூவாளித்தூவல் போல் பத்தடி சுற்றளவிற்கு தண்ணீர் பீச்சி அடிப்பதால், இலைகள் எல்லாம் கழுவிட்ட மாதிரியாகிவிடுகிறது.
இலைவழியாக  செடியைத் தாக்கும் பச்சைப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, இலைப்பேன், முட்டைகள் என்று எல்லாவற்றையும் பீச்சி அடிக்கும் பாசன தண்ணீர் கழுவிடுவதால் செடிகளில் பூச்சிகளே இருப்பதில்லை. அதனால் பளபளவென்று தரமான கீரை கிடைக்கிறது என்றார்.
கட்டு இரண்டு ரூபாய்!
தொடர்ந்து பேசிய சதீஷ்குமார், ”கீரையை திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் கொண்டு போய்  அப்பா விற்றுவிட்டு வந்துவிடுவார். ஆரம்பத்தில் டவுன் பஸ்சில்தான் கீரைக் கட்டுகளைக் கொண்டு போனோம்.
பட்டாம்பூச்சிப் பாசனத்திற்கு மாறிய பிறகு, அதிக மகசூல் கிடைக்கிறது. சுழற்சி முறையில் அறுவடை செய்வதால் தினமும் ஆயிரத்து முன்னூறு கட்டு வரைக்கும் மகசூல் கிடைக்கிறது.
இப்போது சொந்தமாக மூன்று சக்கர டெம்போ வாங்கி, அதில்தான் கொண்டு போகிறார். ஒரு சின்னக்கட்டு இரண்டு ரூபாய் என்ற விற்கிறோம். நேரடியாக விற்பதால் கூடுதலான லாபம்” என்றார்.
தினமும் 2600 ரூபாய்
இந்த தெளிப்பு நீர்ப் பாசனம் மட்டும் இல்லையென்றால், நாங்கள் இந்த மண்ணை விட்டே போயிருப்போம் என்கிறார் பொன்னுசாமியின் மனைவி சிவகாமி.
எங்க நான்கு ஏக்கர் நிலத்தில் மட்டும் 11 போர்வெல் போட்டோம். எல்லாமே 900 அடி ஆழம். ஆனால், எதிலுமே சரியான தண்ணீர் கிடைக்கவில்லை. பத்து லட்சம் ரூபாய் கடனாளியானதுதான் மிச்சம். இருந்தாலும் நம்பிக்கையயை விடாமல் கடைசியாக  தோண்டிய கிணற்றில் ஓரளவு தண்ணீர் வந்தது. அதை வைத்து பெரிதாக  வெள்ளாமை செய்ய முடியாது. கீரை போட்டால் ஜெயிக்கலாம் என்று சொந்தக்காரர் ஒருத்தர் சொன்னார். அதன்படியே செய்தோம். ஓரளவிற்கு பிழைப்பு ஓடியது.
அதன்பிறகு தெளிப்புநீருக்கு மாறிய பிறகுதான். மாதத்திற்கு 75 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கிடைக்கிறது. இதில் செலவெல்லாம் போக மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் லாபம் கிடைக்கும். இதை வைத்தே பழையக் கடனையும் கட்டிவிட்டோம். நாங்க இந்த அளவிற்கு முன்னேற முக்கியக் காரணமே பட்டாம்பூச்சிப் பாசனம் தான் என்றார்.
தொடர்புக்கு
சதீஷ்குமார், செல்போன் : 98658 – 37804
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.04.13 http://www.vikatan.com

Wednesday, December 11, 2013

சாலையோரம் சங்கீதம் பாடும் சோலை.


.. ஒன்றரை ஏக்கரில் தினமும் 2,500...

சென்னை-புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில், வழி நெடுக இருக்கும் அழகழகானப் பண்ணை வீடுகள், தங்கும் விடுதிகளுக்கு அடுத்தபடியாக அனைவரையும் கவர்வது, ராதாகிருஷ்ணனின் பண்ணையாகத்தான் இருக்கும். பசுமைக் குடில், விதவிதமானச் செடிகள், காய்கறிகள், பழங்கள் விற்பனையகம், சிற்றுண்டிச்சாலை... என அங்கு நிலவும் பசுமையானச் சூழல்தான் இந்த ஈர்ப்புக்குக் காரணம்.  
10.11.2012 தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில், 'மாடித் தோட்டத்தில் ஒரு மகத்தான மகசூல்!’ என்கிற கட்டுரை மூலம் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான் ராதாகிருஷ்ணன். சென்னையிலிருந்து செல்லும்போது மரக்காணத்துக்கு ஒன்பது கிலோமீட்டருக்கு முன் வருகிறது, கோட்டைக்காடு எனப்படும் கிராமம். இங்குதான் உள்ளது, ராதாகிருஷ்ணனின் பண்ணை.
''சொந்த ஊர் கேரள மாநிலம் ஆலப்புழா. வக்கீலுக்குப் படிச்சுட்டு, ஐ.ஆர்.எஸ். தேர்வு எழுதி கஸ்டம்ஸ் டிபார்ட்மென்ட்ல வேலைக்குச் சேந்தேன். வேலையில சில நெருக்கடிகள் காரணமா வி.ஆர்.எஸ். கொடுத்துட்டு, வக்கீல் வேலையைப் பாக்க ஆரம்பிச்சேன். சின்ன வயசுல இருந்தே காய்கறிகள் வளர்க்கறது, பூச்செடிகள் வளர்க்கறதுல கொஞ்சம் ஆர்வம் அதிகம். அதனால, ரெண்டு வருஷத்துக்கு முன்ன வீட்டு மொட்டை மாடியில காய்கறித் தோட்டம் போட்டேன்.
என் வீட்டுக்குத் தேவையானதைவிட அதிகமாவே காய்கள் கிடைச்சுது. அப்போதான் சென்னையில எல்லாருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுக்கலாம்னு வீட்டுத் தோட்டப் பயிற்சியைக் கொடுக்க ஆரம்பிச்சேன். பலரும் தொட்டி, விதை, இயற்கை உரம்னு கேட்டு வர ஆரம்பிச்சாங்க. எல்லாருக்கும் இதையெல்லாம் வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சேன்.
என்கிட்ட கத்துக்கிட்டவங்கள்ல நூறுபேருக்கும் அதிகமானவங்க சென்னை நகரத்துல மாடியிலேயே காய்கறி உற்பத்தி செய்றாங்க'' என்று முன்னுரை கொடுத்த ராதாகிருஷ்ணன், தொடர்ந்தார்.
காய்கறி முதல் காளான் வரை !
''குறைஞ்ச இடத்துல தொட்டிகள்ல காய்கறிச் செடிகளை வளர்க்கறதை செயல் முறையா காட்டுறதுக்காகதான்... 35 உறுப்பினர்களைக் கொண்ட 'குட் கவர்னன்ஸ் கார்ட்ஸ்’ அமைப்பு மூலமா இந்த இடத்தை குத்தகைக்குப் பிடிச்சு பண்ணையை ஆரம்பிச்சுருக்கோம். இந்த ரோடு எப்பவுமே 'பிஸி'யா இருக்கும். அதனாலதான் இங்க ஆரம்பிச்சோம்.
விதை, தொட்டி, உரம், காய்கறிகள், பழங்கள், காளான்னு எல்லாத்தையும் விற்பனை செய்றோம். நாங்களே நேரடியா விற்பனை செய்றதால, குறைஞ்ச விலைக்கே ஃபார்ம் ஃபிரஷ் காய்களைக் கொடுக்குறோம். இதில்லாம, காய்கறிச் செடிகள் வளர்ப்பு, காளான் வளர்ப்புனு பயிற்சிகளும் கொடுக்கிறோம்.    
காலி பாட்டிலிலும் காய்கறிச் செடி !
6 ஆயிரத்து 200 சதுர அடியில பசுமைக் குடில் அமைச்சுருக்கோம். அதுக்குள்ளதான், தொட்டிகள்ல கத்திரி, வெண்டை, மிளகாய், தக்காளி, காலிஃபிளவர், முட்டைகோஸ், பீன்ஸ், அவரைனு வளர்க்கிறோம். வேஸ்ட் வாட்டர் பாட்டில், கிரீஸ் டப்பாக்கள்லயும் சின்னச்சின்னச் செடிகளை வளக்குறோம்.
முருங்கை, வாழை, பப்பாளி மாதிரியான மர வகைகளை பிளாஸ்டிக் ட்ரம்ல வளக்குறோம். பி.வி.சி. பைப்புகளை நட்டு வெச்சு, அதுல கயிறு கட்டி கொடி வகைகளைப் படர விட்டுருக்கோம். பழையவாட்டர் பாட்டில்ல சின்னதா துளை போட்டு அதுல துணி நாடாவைக் கட்டி தொட்டிக்குள்ள புதைச்சுடுவோம். இந்த நாடா மூலமா தண்ணி கொஞ்சம் கொஞ்சமா இறங்கிக்கும். பூச்சிகளை விரட்டறதுக்கு வேப்பெண்ணெய் கலந்த பூச்சி விரட்டிகளைத் தெளிக்கிறோம். கீற்றுக்கொட்டகைக்குள்ள காளான் வளக்குறோம். அதை ஒரு கிலோ 175 ரூபாய்னு வித்துக்கிட்டிருக்கோம்' என்ற, ராதாகிருஷ்ணன் நிறைவாக,
''காளான், காய்கறி, காளான் உணவுகள்னு விற்பனை செய்றது மூலமா, தினமும் 5 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்குது. ஆட்கள் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் போக, தினமும் 2 ஆயிரத்து 500 ரூபாய் லாபமா கிடைக்குது. இந்த மொத்தப் பண்ணையும் ஒண்ணரை ஏக்கர்லதான் இருக்கு. அதுலயே இந்தளவுக்கு வருமானம் கிடைக்குது. அதுக்கு முக்கிய காரணம், நேரடி விற்பனைதான்'' என்று சந்தோஷமாக விடை கொடுத்தார்.
 தொடர்புக்கு,ராதாகிருஷ்ணன், செல்போன்: 98410-23448
Thanks to Pasumai Vikatan

தொக்கு வாங்கலையோ தொக்கு -வாழைப் பூ தொக்கு!


வழக்கமான ஊறுகாய், மெழுகுவர்த்தி, பத்திக் குச்சிகள் தயாரிப்பிலிருந்து வித்தியாசமாக, வாழைப்பூ தொக்கு தயாரிக்கிறது திருச்சி அருகேயுள்ள மகளிர் சுய உதவிக் குழு.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள திருநாராயணபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீவேதா மகளிர் சுய உதவிக் குழு மேற்கொண்டு வரும் இந்தத் தொக்கு திருச்சி மட்டுமல்ல, நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களிலும் பிரபலமாகி வருகிறது.
முசிறி, தொட்டியம் பகுதிகள் வாழை
சாகுபடி நடைபெறும் பகுதிகள். எனவே, இங்கு கிடைக்கும் பொருள்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருள் தயாரிப்பு என்ற கருத்து இந்தக் குழுவுக்கு ஊட்டப்பட்டிருக்கிறது.
இயல்பாகவே வாழைப்பூவில்
விட்டமின் ஏ, கே மற்றும் இரும்புச் சத்து இருக்கிறது. ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும், சிறுநீரகக் கல்களைக் கரைக்கும், கொழுப்பைக் குறைக்கும், ரத்த அழுத்தம் குறையும் போன்ற விஷயங்கள் வாழைப்பூ தொக்கு தயாரிக்க உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றன.
இதன்படி, இப்பகுதியில் பணியாற்றி வரும் "கிராமாலயா' தொண்டு நிறுவனத்தின் முயற்சியில்தான் இப்போது வாழைப்பூ தொக்கு பிரபலமாகி இருக்கிறது. இந்த "ஸ்ரீ வேதா' சுய உதவிக்குழுவின் பிரதிநிதி பி. கோமதி கூறியது:
""தொடக்கத்தில் தொக்கு தயாரித்து குழுவிலுள்ள 12 பேரும், இருவர் இருவராக அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று வீடுவீடாக விற்பனை செய்தோம். உள்ளூரில் கிடைக்கும் விவசாய விளைபொருளில் இருந்து இப்படியொரு வித்தியாசமான உணவுப் பொருளைக் கண்டு பலரும் வியந்தனர்'' என்றார்.
""நாங்களும் ஆடு, மாடு கடன்தான் வாங்கினோம். பிறகுதான், வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றின் பயிற்சியால் வாழைப்பூ தொக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம்'' என்கிறார் குழுவின் ஊக்குநர் எஸ். கண்ணகி.
வாழைப் பூவை அதன் நடுவிலுள்ள நரம்பு நீக்கிவிட்டு, கொப்பறையில் கொட்டி வேக வைக்கின்றனர். அதன்பிறகு, மிக்ஸியில் போட்டு அரைத்த பிறகு, காரம், புளிப்பு, எண்ணெய் சேர்த்து தொக்கு தயாராகிறது.
சோற்றில் பிசைந்து சாப்பிடலாம், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கெட்டுப் போகாமல் இருக்க "எதையாவது' ஊற்றி பாட்டில்களில் அடைக்கலாம் என்ற வழிகாட்டுதல்கள் இருந்தாலும், இவர்கள் முற்றிலும் புளியையே நம்புகிறார்கள். ஆறு மாதங்கள் கெடாமல் இருக்கும் என்றும் உத்தரவாதம் தருகிறார்கள்.
திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மாநில கூட்டுறவு வார விழாவில் வாழைப்பூ தொக்கு வைத்திருந்த அரங்கில் மட்டும் கூட்டம் அதிகமாக இருந்து, கொண்டு வந்த பாட்டில்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்திருக்கின்றன.
நேரடியாக மகளிர் சுய உதவிக் குழுவே ஈடுபட்டு, உண்மையான மகளிர் தொழில் முனைவோருக்கான தன்மையுடன் எளிமையாக செயல்பட்டு வரும் தொக்கு தயாரிக்கும் பணி பாராட்டத்தக்கதே!

செம்பருத்தி..


பூக்கள் என்றதுமே… பூஜைக்கு அல்லது தலையில் சூடிக்கொள்வதற்கு என இரண்டு பயன்பாடுகள்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். அதையும் தாண்டி அழகுப்பொருள், மருந்துப்பொருள், வாசனைத் திரவியங்களுக்கான மூலப்பொருள்… என பல பயன்பாடுகள் பூக்களுக்கு உண்டு என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! இதைத் தெரிந்து வைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், மருத்துவ குணம் உள்ள பூக்களில் ஒன்றான செம்பருத்தியை சாகுபடி செய்து, சபாஷ் வாங்கும் வகையில் லாபம் ஈட்டி வருகிறார்!
கிலோ 160 ரூபாய்... மாசத்துக்கு 240 கிலோ... செழிப்பான லாபம் தரும் செம்பருத்தி..!</p>
<p>பூக்கள் என்றதுமே... பூஜைக்கு அல்லது தலையில் சூடிக்கொள்வதற்கு என இரண்டு பயன்பாடுகள்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். அதையும் தாண்டி அழகுப்பொருள், மருந்துப்பொருள், வாசனைத் திரவியங்களுக்கான மூலப்பொருள்... என பல பயன்பாடுகள் பூக்களுக்கு உண்டு என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! இதைத் தெரிந்து வைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், மருத்துவ குணம் உள்ள பூக்களில் ஒன்றான செம்பருத்தியை சாகுபடி செய்து, சபாஷ் வாங்கும் வகையில் லாபம் ஈட்டி வருகிறார்!</p>
<p>திருச்செந்தூர் தாலூகா, பரமன்குறிச்சியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமம்... காயாமொழி. இங்கேதான் இருக்கிறது முகமது இப்ராஹிமின் செம்பருத்தித் தோட்டம். காலைவேளையன்றில். மும்மரமாக பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தபோது, ''காயல்பட்டினம்தான் என்னோட பூர்விகம். பி.எஸ்.ஸி கெமிஸ்டரி, டிப்ளமோ ஃபுட்வேர் டெக்னாலஜி படிச்சுட்டு... ராணிப்பேட்டையில ஒரு லெதர் ஃபேக்டரியில 13 வருஷம் வேலை பாத்தேன். அங்க அழகானத் தோட்டம் போட்டிருப்பாங்க. அந்த இயற்கைச் சூழல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே விவசாயத்துலயும் ஆர்வம் அதிகங்கிறதால அந்தத் தோட்டத்தை ரசிச்சுட்டே இருப்பேன். விவசாயம் பத்தி பேப்பர்ல எந்த செய்தி வந்தாலும், முழுசா படிச்சுட்டுதான் அடுத்த வேலையைத் தொடுவேன். இந்தச் சூழல்ல வெளியான 'பசுமை விகடன்’ என் கவனத்தை ஈர்க்க... அதைப் படிக்கப் படிக்க, விவசாயம் செய்யணுங்கிற ஆர்வம் மேலிட ஆரம்பிச்சுச்சு. அதனால, முதல் புத்தகத்துல ஆரம்பிச்சு, பசுமை விகடனை சேகரிக்க ஆரம்பிச்சேன். இப்போ வரைக்கும் பத்திரப்படுத்திட்டும் இருக்கேன்.</p>
<p>'கருப்பையா’ன்றவர் செம்பருத்தி சாகுபடி பண்றதைப் பத்தி ஒரு தடவை எழுதியிருந்தீங்க. அதைப் படிச்சுட்டு, அவரைத் தேடி போய் பாத்தேன். 'செம்பருத்தியில் ஏக்கருக்கு ஒரு லட்சம் லாபம் எடுக்கலாம்’னு சொன்னார். உடனே, என் சிநேகிதன்கிட்ட இருந்து, இந்த அஞ்சு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ரெண்டரை ஏக்கர்ல செம்பருத்தி போட்டேன். நல்ல வருமானம் கிடைச்சுட்டு இருக்கு. மீதி நிலத்துல மலைவேம்பு வளர்ந்துட்டிருக்கு'' என்று முன்கதை சொன்ன முகமது இப்ராஹிம், ஒரு ஏக்கர் நிலத்தில் செம் பருத்தி சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.</p>
<p>ஆறடி இடைவெளி!</p>
<p>''செம்பருத்தி, செம்மண்ணில் நன்றாக வரும். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் நன்கு உழுது... வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி<br />
6 அடி இடைவெளி இருக்குமாறுவிட்டு, ஒரு கன அடி அளவுக்கு குழி எடுத்துக் கொள்ள வேண்டும். (ஒரு ஏக்கரில் 1,200 குழிகள் வரை எடுக்கலாம்). தொடர்ந்து சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்துக் கொள்ள வெண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கிலோ சாணம், ஒரு கிலோ மட்கிய தென்னைநார் ஆகியவற்றை இட்டு, தண்ணீர் ஊற்றி பத்து நாட்கள் அப்படியேவிட வேண்டும். 11-ம் நாள் செம்பருத்திக் கன்றுகளை நடவு செய்து, மண் அணைத்து தண்ணீர்விட வேண்டும். மண் எப்போதும் ஈரமாக இருக்குமாறு தொடர்ந்து, தண்ணீர் விட்டு வர வேண்டும்.</p>
<p>அதிக உரம்... ஆபத்து!</p>
<p>நடவு செய்த 2-ம் மாதத்தில் இருந்து, மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 6-ம் மாதத்துக்குப் பிறகு, செடிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பூக்கள் பூக்கும். 9-ம் மாதத்துக்குப் பிறகு அதிக அளவில் பூக்கள் பூத்து, 12-ம் மாதத்துக்குப் பிறகு முழு மகசூல் கிடைக்கத் தொடங்கும். அதன் பிறகு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, 200 லிட்டர் தண்ணீரில், 2 லிட்டர் மீன் அமினோ அமிலம் என்ற கணக்கில் கலந்து, பாசன நீருடன் தரவேண்டும். இந்த இயற்கை இடுபொருட்களை அளவாகத்தான் இடவேண்டும். அளவுக்கு அதிகமானால், இலை தடித்து பூக்களின் மகசூல் குறையும். செம்பருத்தியில் அதிகமாக மாவுப்பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இப்பூச்சிகள் தென்பட்டால், பச்சை மிளகாய்-பூண்டுக் கரைசலை அனைத்துச் செடிகளின் மீதும் செழிம்பாகத் தெளித்துவிட வேண்டும்.</p>
<p>ஈரப்பதம்... கவனம்!</p>
<p>செம்பருத்தியில் தினமும் பூக்கள் எடுக்கலாம். காலை 7 மணி முதல் 10 மணிக்குள் பூக்களைப் பறித்து வெயிலில் பரத்தி, ஒரு நாள் உலர்த்தி எடுக்க வேண்டும். வெயில் குறைவாக இருக்கும்பட்சத்தில் இரண்டு, மூன்று நாட்கள் வரை உலர்த்தலாம். பூக்கள் அரக்கு நிறத்துக்கு மாறுவதுதான் உலர்ந்ததற்கு அடையாளம். காய்ந்த பூக்களை எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் இருப்பு வைத்து விற்க முடியும். இருப்பு வைக்கப்பட்டுள்ள பூக்களில் தண்ணீர் பட்டால், பூஞ்சணம் உருவாகிவிடும். அதனால், ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, செம்பருத்தி யில் அதிக வருடங்கள் மகசூல் எடுக்க வேண்டும் என்று விரும்பினால், ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்துவிட வேண்டும்.'</p>
<p>நிறைவாகப் பேசிய முகமது இப்ராஹிம், ''இருப்பு வைக்கிற பூவை, வியாபாரிகளோட தேவையைப் பொருத்தோ அல்லது நம்மகிட்ட சேருற அளவைப் பொருத்தோ விற்பனை செய்யலாம். செம்பருத்தி விவசாயத்தைப் பத்தி எனக்கு வழிகாட்டின கருப்பையாவுக்கே நான் மாசாமாசம் லாரியில அனுப்பிடுவேன். அவர் எனக்கு, பணம் கொடுத்துடுவார். வருஷத்துல ஒன்பது மாசமும் பூ பறிக்கலாம். தினமும் சராசரியாக ஒரு ஏக்கர்லர்ந்து 8 கிலோ பூங்கிற முறையில ரெண்டரை ஏக்கர்லயும் 20 கிலோ கிடைக்குது. அதைக் காய வெச்சா, 8 கிலோ உலர்ந்தப் பூ கிடைக்கும்.</p>
<p>ரெண்டரை ஏக்கரிலும் மாசத்துக்கு 240 கிலோ உலர்ந்தப் பூ. ஒரு கிலோவுக்கு சராசரியா 160 ரூபாய் கிடைக்குது. இந்தக் கணக்குல 9 மாசத்துக்கு ரெண்டரை ஏக்கர்லேர்ந்து 3 லட்சத்து 45 ஆயிரத்து 600 ரூபாய் வருமானம். இதுல செலவு போக (குத்தகைத் தொகை இல்லாமல்) எப்படியும் ரெண்டரை லட்ச ரூபாய் லாபமா நிக்கும்'' என்றார், மகிழ்ச்சியோடு!</p>
<p>தகவல் - பசுமை விகடன்
திருச்செந்தூர் தாலூகா, பரமன்குறிச்சியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமம்… காயாமொழி. இங்கேதான் இருக்கிறது முகமது இப்ராஹிமின் செம்பருத்தித் தோட்டம். காலைவேளையன்றில். மும்மரமாக பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தபோது, ”காயல்பட்டினம்தான் என்னோட பூர்விகம். பி.எஸ்.ஸி கெமிஸ்டரி, டிப்ளமோ ஃபுட்வேர் டெக்னாலஜி படிச்சுட்டு… ராணிப்பேட்டையில ஒரு லெதர் ஃபேக்டரியில 13 வருஷம் வேலை பாத்தேன். அங்க அழகானத் தோட்டம் போட்டிருப்பாங்க. அந்த இயற்கைச் சூழல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே விவசாயத்துலயும் ஆர்வம் அதிகங்கிறதால அந்தத் தோட்டத்தை ரசிச்சுட்டே இருப்பேன். விவசாயம் பத்தி பேப்பர்ல எந்த செய்தி வந்தாலும், முழுசா படிச்சுட்டுதான் அடுத்த வேலையைத் தொடுவேன். இந்தச் சூழல்ல வெளியான ‘பசுமை விகடன்’ என் கவனத்தை ஈர்க்க… அதைப் படிக்கப் படிக்க, விவசாயம் செய்யணுங்கிற ஆர்வம் மேலிட ஆரம்பிச்சுச்சு. அதனால, முதல் புத்தகத்துல ஆரம்பிச்சு, பசுமை விகடனை சேகரிக்க ஆரம்பிச்சேன். இப்போ வரைக்கும் பத்திரப்படுத்திட்டும் இருக்கேன்.
‘கருப்பையா’ன்றவர் செம்பருத்தி சாகுபடி பண்றதைப் பத்தி ஒரு தடவை எழுதியிருந்தீங்க. அதைப் படிச்சுட்டு, அவரைத் தேடி போய் பாத்தேன். ‘செம்பருத்தியில் ஏக்கருக்கு ஒரு லட்சம் லாபம் எடுக்கலாம்’னு சொன்னார். உடனே, என் சிநேகிதன்கிட்ட இருந்து, இந்த அஞ்சு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ரெண்டரை ஏக்கர்ல செம்பருத்தி போட்டேன். நல்ல வருமானம் கிடைச்சுட்டு இருக்கு. மீதி நிலத்துல மலைவேம்பு வளர்ந்துட்டிருக்கு” என்று முன்கதை சொன்ன முகமது இப்ராஹிம், ஒரு ஏக்கர் நிலத்தில் செம் பருத்தி சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
ஆறடி இடைவெளி!
”செம்பருத்தி, செம்மண்ணில் நன்றாக வரும். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் நன்கு உழுது… வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி
6 அடி இடைவெளி இருக்குமாறுவிட்டு, ஒரு கன அடி அளவுக்கு குழி எடுத்துக் கொள்ள வேண்டும். (ஒரு ஏக்கரில் 1,200 குழிகள் வரை எடுக்கலாம்). தொடர்ந்து சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்துக் கொள்ள வெண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கிலோ சாணம், ஒரு கிலோ மட்கிய தென்னைநார் ஆகியவற்றை இட்டு, தண்ணீர் ஊற்றி பத்து நாட்கள் அப்படியேவிட வேண்டும். 11-ம் நாள் செம்பருத்திக் கன்றுகளை நடவு செய்து, மண் அணைத்து தண்ணீர்விட வேண்டும். மண் எப்போதும் ஈரமாக இருக்குமாறு தொடர்ந்து, தண்ணீர் விட்டு வர வேண்டும்.
அதிக உரம்… ஆபத்து!
நடவு செய்த 2-ம் மாதத்தில் இருந்து, மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 6-ம் மாதத்துக்குப் பிறகு, செடிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பூக்கள் பூக்கும். 9-ம் மாதத்துக்குப் பிறகு அதிக அளவில் பூக்கள் பூத்து, 12-ம் மாதத்துக்குப் பிறகு முழு மகசூல் கிடைக்கத் தொடங்கும். அதன் பிறகு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, 200 லிட்டர் தண்ணீரில், 2 லிட்டர் மீன் அமினோ அமிலம் என்ற கணக்கில் கலந்து, பாசன நீருடன் தரவேண்டும். இந்த இயற்கை இடுபொருட்களை அளவாகத்தான் இடவேண்டும். அளவுக்கு அதிகமானால், இலை தடித்து பூக்களின் மகசூல் குறையும். செம்பருத்தியில் அதிகமாக மாவுப்பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இப்பூச்சிகள் தென்பட்டால், பச்சை மிளகாய்-பூண்டுக் கரைசலை அனைத்துச் செடிகளின் மீதும் செழிம்பாகத் தெளித்துவிட வேண்டும்.
ஈரப்பதம்… கவனம்!
செம்பருத்தியில் தினமும் பூக்கள் எடுக்கலாம். காலை 7 மணி முதல் 10 மணிக்குள் பூக்களைப் பறித்து வெயிலில் பரத்தி, ஒரு நாள் உலர்த்தி எடுக்க வேண்டும். வெயில் குறைவாக இருக்கும்பட்சத்தில் இரண்டு, மூன்று நாட்கள் வரை உலர்த்தலாம். பூக்கள் அரக்கு நிறத்துக்கு மாறுவதுதான் உலர்ந்ததற்கு அடையாளம். காய்ந்த பூக்களை எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் இருப்பு வைத்து விற்க முடியும். இருப்பு வைக்கப்பட்டுள்ள பூக்களில் தண்ணீர் பட்டால், பூஞ்சணம் உருவாகிவிடும். அதனால், ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, செம்பருத்தி யில் அதிக வருடங்கள் மகசூல் எடுக்க வேண்டும் என்று விரும்பினால், ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்துவிட வேண்டும்.’
நிறைவாகப் பேசிய முகமது இப்ராஹிம், ”இருப்பு வைக்கிற பூவை, வியாபாரிகளோட தேவையைப் பொருத்தோ அல்லது நம்மகிட்ட சேருற அளவைப் பொருத்தோ விற்பனை செய்யலாம். செம்பருத்தி விவசாயத்தைப் பத்தி எனக்கு வழிகாட்டின கருப்பையாவுக்கே நான் மாசாமாசம் லாரியில அனுப்பிடுவேன். அவர் எனக்கு, பணம் கொடுத்துடுவார். வருஷத்துல ஒன்பது மாசமும் பூ பறிக்கலாம். தினமும் சராசரியாக ஒரு ஏக்கர்லர்ந்து 8 கிலோ பூங்கிற முறையில ரெண்டரை ஏக்கர்லயும் 20 கிலோ கிடைக்குது. அதைக் காய வெச்சா, 8 கிலோ உலர்ந்தப் பூ கிடைக்கும்.
ரெண்டரை ஏக்கரிலும் மாசத்துக்கு 240 கிலோ உலர்ந்தப் பூ. ஒரு கிலோவுக்கு சராசரியா 160 ரூபாய் கிடைக்குது. இந்தக் கணக்குல 9 மாசத்துக்கு ரெண்டரை ஏக்கர்லேர்ந்து 3 லட்சத்து 45 ஆயிரத்து 600 ரூபாய் வருமானம். இதுல செலவு போக (குத்தகைத் தொகை இல்லாமல்) எப்படியும் ரெண்டரை லட்ச ரூபாய் லாபமா நிக்கும்” என்றார், மகிழ்ச்சியோடு!
தகவல் – பசுமை விகடன்

விவசாயிகளுக்கு அறிய வாய்ப்பு! ஆமணக்கில் அதிசய லாபம்!



                                                                                                             எம்.கே.கலாராணி

"மண்ணோடும் மரங்களோடும் இனைந்து வாழ்ந்தால் மானுடம் மகத்தான வாழ்வை பெரும் என நம் முன்னோர்கள் சொல்வதுண்டு.  இயற்கை வெல்ல முற்படமால் இனைந்து வாழ்ந்தும்,இயற்கையை சுரண்ட நினைக்காமல் அதை தேவைக்கு பயன்படுத்தும் வகையில் முன்னெடுத்து சென்றால் சிறப்பாக இருக்கும். ஆனால் வேகமான உலகில் உற்பத்தி, லாபத்தை குறிவைத்து செல்ல இந்த போட்டியில் எளிய நிலையில் உள்ள விவசாயிகள் வீழ்ச்சியை சந்திக்கின்றனர்.
இதை போக்க குறிப்பாக பல கோடி வர்த்தகம் உள்ள ஆமணக்கு பயர் வகையில் நம் விவசாயிகள் முன் னேற்றம் காணவே உருவாக்கியுள்ளோம் 'கெஸ்டர் கோல்ட்' எனும் பயிர் வளர்ச்சி ஊக்கி கலவை"எ ன்கிறார் முனைவர் எம்.கே.கலாராணி.
ஏத்தாபூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் பேராசிரியர் மற்றும் தலைவராக உள்ள பழனிச்சாமி, எம்.ஆர்.வெங்கடாசலம் மற்றும் முனைவர் எம்.கே.கலாராணி ஆகியோர் இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கினர்.  சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் முகாமில் இந்த புதிய கண்டுபிடிப்பை குறித்து எம்.கே.கலாராணி விளக்குகிறார்.

" ஆமணக்கு எண்ணெய் லூப்ரிகண்ட் ஆயில் அதாவது வளவளப்பு கொண்ட ஆயில் தொழிற்சாலைகள் உட்பட்ட பல இடங்களில் பயன்படுகிறது..உலக நாடுகளுக்கு இதன் தேவை அதிகம்...மேலும் மருத்துவ குணங்களும் கொண்டவை...எனவே சர்வதேச சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்று.உலகளவில் உற்பத்தியில் நம் இந்தியா முக்கிய இடம் இவ்வணிகத்தில் வகிக்கிறது..இதன் மூலம் மட்டும் 2253 கோடி வரை அந்நிய செலாவணி கிடைக்கிறது.
இந்தியாவில் குஜராத், ஆந்திராவில் முக்கிய உற்பத்தி...தமிழகத்தில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட் டத்தில் ஊடுபயிராக பயிர் செய்யப்பட்டு வருகிறது.
எங்கள் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் 2009 இல் வெளியிடப்பட்ட ஏத்தாபூர் 1 என்ற வீரிய ஒட்டு ராகம் ஏக்கருக்கு மானாவாரியாக 800 கிலோ மற்றும் இறவையில்  1200 கிலோ மகசூல் தரவல்லது.
இந்த பயிருக்கு அதிக வெயில் போன்ற சுற்று சூழல் நிலவும் சீதோசன நிலையால் மகசூல் எண்ணிக்கை குறையும் ஆபத்து இருக்கிறது....வழக்கமாக ஆண் பூக்களில் இருந்த மகரந்த தூள்கள் காற்றின் வழியோ, தேனிக்கள் மூலமாகவோ பெண் பூக்களில் சேரும் போது இன பெருக்கம் ஏற்படுகிறது....ஆனால் தற்போது சீதோசன நிலையால் பெண் பூக்கள் எண்ணிக்கை குறைகிறது.
இதனால் மகசூல் குறைகிறது இதை போக்க கண்டுபிடிக்கப்பட்டது தான் 'ஆமணக்கு கோல்ட்' எனும் நாங்கள் கண்டுபிடித்த பயிர் வளர்ச்சி ஊக்கி கலவை...இதை 5மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஆமணக்கு பயிர் இலைகளில் 25 நாட்களுக்கு ஒருமுறை தெளித்தால் பெண் பூக்கள் அதிகளவு வளர்ச்சி ஆகும். எண்ணிக்கை கூடும்.
இதன் மூலம் 25,000 ஏக்கருக்கும் மேல் இந்த ஆமணக்கு விதைத்துள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்...' என்றார் உண்மையான அக்கறையோடு.  இதை பயன்படுத்தும் விவசாயிகளும் நல்ல பலன் தருவதாக கூறுகின்றனர்...என்க 'ஆம் நல்ல மகசூல் தந்து எனக்கு லாபம் தந்துள்ளது' என்றார் அருகில் இருந்த விவசாயி கணபதி.
இந்த கலவையின் விலை ரூ 50 தான்....நிச்சயம் நல்ல பலன் தரும்...எளிய செலவில் அதிக மகசூலை நம் விவசாயிகள் பெற வேண்டும் என்பதே எம் ஆராய்ச்சி நிலையத்தின் விருப்பம் கோடிக்கணக்கில் தமிழக விவசாயிகளுக்கு லாபம் உண்டு ' என்கிறார் இதை தயாரித்த பேராசிரியர் கலாராணி அடக்கத்துடன்.
எளிய வகையில் உயரிய விவசாயம் நடந்தால் விவசாயி மட்டுமல்ல ஏனைய மக்களும் நலமோடு இருப்பார்...ஏனெனில் விவசாயி நல்ல நிலையில் இருந்தால் நாடு நல்ல நிலையில் இருக்கும்.
- இளங்கோவன்

நீங்களே தயாரிக்கலாம்... சோலார் ஸ்பிரேயர்!


'நமக்குத் தேவையான எல்லா விஷயங்களும், கைக்கு எட்டுற தொலைவுலதான் இருக்கு. என்ன... கொஞ்சம் மெனக்கெட்டு யோசிச்சா, எல்லாமும் சாத்தியப்படும்''
- தன் அனுபவத்திலிருந்து இப்படி அழகாகப் பாடம் சொல்கிறார் உடையாம்பாளையம், கார்த்திகேயன். இவர், தன் சொந்த முயற்சியில் சூரிய சக்தியில் இயங்கும் விசைத் தெளிப்பான் (சோலர் பவர் ஸ்பிரேயர்) ஒன்றை மிகஎளிதாக வடிவமைத்து, அதன் மூலம் நிறைந்தப் பலனை அடைந்து கொண்டிருக்கிறார்.
உடையாம்பாளையம், கோயம்புத்தூர் மாநகர எல்லைக்குள் வரும் பகுதி, இதையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு... காய்கறி, கீரை, மலர் சாகுபடி என்று தினந்தோறும் காசு தரும் 'மார்க்கெட் வெள்ளாமை’ செய்து நல்ல வருமானமும் பார்த்து வருகிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.  ரசாயன முறையில் விவசாயம் செய்தாலும் சரி... இயற்கை வழியில் செய்தாலும் சரி... விசைத் தெளிப்பானின் பயன்பாடு முக்கியமே. ஆனால், பெட்ரோல் விலை உயர்வு, மின்சாரத் தட்டுப்பாடு என்று பலவும் தாண்டவமாடுவதால்... விசைத் தெளிப்பான்களைப் பயன்படுத்துவதில் ஏக பிரச்னை. 'என்ன செய்யலாம்' என்று யோசித்தபோதுதான் நண்பர்கள் உதவியுடன் 'சூரியசக்தி விசைத் தெளிப்பான்' உருவாக்கிவிட்டார் கார்த்திகேயன்.
தன் கீரை வயலுக்கு மருந்து தெளித்த கையோடு, பக்கத்தில் உள்ள நண்பரின் செண்டுமல்லித் தோட்டத்தில் தெளித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரைச் சந்தித்தோம். ''நாங்க எல்லாம் பட்டணத்து விவசாயிங்க, ஒரு காலத்துல பருத்தி, வாழை, கரும்புனு செழிப்பான வெள்ளாமை கொடிகட்டி பறந்த ஊருங்க இது. நகரமயமாக்கல்ல தொழிற்சாலை, குடியிருப்புகள்னு... காடு, கழனியெல்லாம் கட்டடமாயிடுச்சு. இதுலயும் ஒரு நன்மை இருக்குங்க. என்னைப் போல சிலர் விவசாயத்தை இன்னும் விடாம செய்யறதால... நல்ல லாபம் பார்க்கிறோம். மக்கள் தொகை பெருகப் பெருக, அவங்களுக்கான காய்கறி தேவையையும் மனசுல வெச்சு சாகுபடி செய்து, உள்ளூரிலேயே உற்பத்திப் பொருளுங்கள வித்து தீர்த்துடறோம். ஆனா, ஆள் பற்றாக்குறை இருக்கறதால... கால் ஏக்கர், அரை ஏக்கர்னுதான் விவசாயம் பண்ண முடியுதுங்க'' என்று ஆதங்கப்பட்டவரிடம், சூரியசக்தி விசைத் தெளிப்பான் உருவாக்கியது பற்றி கேட்டோம்.
படுத்தி எடுத்த ஸ்பிரேயர்கள்!
''அரை ஏக்கரில் பல ரக கீரைகளைப் போட்டிருக்கேன். இன்னொரு அரை ஏக்கரில் வாழை நட்டிருக்கேன். பக்கத்து வயல்கள்ல செண்டுமல்லி, கோழிக்கொண்டைனு மலர் சாகுபடியை நிறையபேரு செய்றாங்க. அவங்க தோட்டத்துப் பயிருக்கெல்லாம் பூச்சிக்கொல்லி தெளிக்கிற வேலையும் நமக்கு வந்து சேரும். மேலும் கீழும் கையால இழுத்து இழுத்து, ஹேண்ட் ஸ்பிரேயர் மூலமாதான் ஆரம்பத்துல தெளிச்சேன். ஆனா, ஒரு பத்து டேங் அளவுக்குத் தெளிக்கறதுக்குள்ள கை வலி எடுத்துடும். 'சரி, பவர் ஸ்பிரேயர்’ல தெளிக்கலாம்னு அதையும் செஞ்சு பார்த்தேன். பெட்ரோல் விக்கிற வெலைக்கு, என்னை மாதிரி சின்ன அளவுல விவசாயம் பண்றவங்களுக்கு கட்டுப்படியாகல. போதாக்குறைக்கு அது போடுற சத்தம் அக்கம்பக்கத்துல தொந்தரவா இருக்குனு குற்றச்சாட்டு வேற. வெயிட்டும் ரொம்ப அதிகம். பொழுதன்னிக்கும் சுமந்து தெளிக்கறது ஆகற காரியம் அல்ல.
'மாற்று வழியா என்ன செய்யலாம்?'னு யோசிச்சப்பதான், 'பேட்டரி ஸ்பிரேயர், மானிய விலையில் விவசாய ஆபீஸ்ல கிடைக்கும்'னு கேள்விப்பட்டு முறைப்படி பதிவு செய்து வாங்கினேன். சார்ஜர் பேட்டரியில இயங்குற அந்த ஸ்பிரேயர்,
10 லிட்டர் கொள்ளளவு கொண்டது. ரெண்டு மணி நேரம் சார்ஜ் ஏத்தினா, ஒரு மணி நேரம் (100 லிட்டர்) தெளிக்கலாம். அப்புறம் வீட்டுக்கு வந்து ரெண்டு மணி நேரம் சார்ஜ் ஏத்தணும். கரன்ட் கட் பயங்கரமா இருக்கற நேரம்கிறதால... சார்ஜ் ஏத்த முடியாம போய், பாதி வெள்ளாமை காலி ஆயிடுச்சு.
நிம்மதி தந்த நிரந்தரத் தீர்வு!
'நிரந்தரத் தீர்வு வேணும்'னு தேடினப்போதான்... 'சோலார் பவரை பயன்படுத்தி வீட்டு லைட், விவசாய பம்ப்செட் எல்லாத்துக்கும் மின்சாரம் தயாரிக்க முடியும்ங்கிறப்ப... ஏன் சோலார் பவர் ஸ்பிரேயர் உருவாக்கக் கூடாது'னு தோணுச்சு. உடனே, புதுசா ஒரு பேட்டரி ஸ்பிரேயர் (7 ஏ.ஹெச். பேட்டரி உள்ளது), 10 வாட்ஸ் சோலார் பேனல் (பள்ளிக்கூட ஸ்லேட் அளவில் இருக்கும்) இதையெல்லாம் வாங்கினேன். அந்த பேனலை, ஸ்பிரேயர் டேங்க்ல பொருத்தினேன். சோலார் ஸ்பிரேயர் தயாராயிடுச்சு. இதுக்கு மொத்தமே. வெறும் 4,600 ரூபாய்தான் செலவு. ஆனா வரவு... பல ஆயிரங்கள்'' என்று குஷியோடு சொன்ன கார்த்திகேயன்,
''காலையில 7 மணியில இருந்து சாயந்திரம் 3 மணி வரை தொடர்ந்து, இதைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி தெளிக்கிறேன். கரன்ட் பத்தி கவலைப்படாம சரியான நேரத்துல தெளிச்சு பயிர்களைக் காப்பாத்த முடியுது. சில பயிர்களுக்கு அதிகாலை நேரத்துலதான் மருந்து தெளிக்கணும். அதுக்கு தோதா முந்தின நாள் சாயந்திரமே கரன்ட் மூலமா சார்ஜ் போட்டு வெச்சுட்டா... தெளிக்கலாம். விடிஞ்சதும் சார்ஜ் ஏத்துற வேலையை ஆட்டோமேட்டிக்கா சோலார் பேனல் கவனிச்சுக்கும்.
டெல்டா மாவட்டங்கள்ல, மின்சாரம் சரிவர கிடைக்காத இந்தக் காலத்துல... ஹேண்ட் ஸ்பிரேயர், பவர் ஸ்பிரேயர்னு வெச்சுக்கிட்டு ரொம்ப சிரமப்பட்டுதான் அங்கெல்லாம் விவசாயிங்க நெல்லு பயிர் பண்றாங்க. அவங்களுக்கு இது பயன்தரும். வாடகைக்குத் தெளிக்கறவங்களுக்கும் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தக் கரைசல்னு இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துறவங்க... நல்லா வடிகட்டி பயன்படுத்தணும்'' என்று ஆலோசனைகளையும் தந்தவர், நிறைவாக,
''சோலார் மாதிரியான இயற்கை சக்திகள் குறித்த விழிப்பு உணர்வு மக்கள்கிட்ட ரொம்ப குறைவாவே இருக்கு. என்னை மாதிரி சின்ன விவசாயிகளும் சூரியசக்தியைப் பயன்படுத்தி பலனடையறதுக்குத் தேவையானத் திட்டங்கள், முயற்சிகள்னு அரசாங்கம் முழு உத்வேகத்துடன் செயல்படுத்தினா... எரிபொருளுக்காக எங்கயும் நாம கையேந்தத் தேவையே இருக்காது'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.
நிஜம்தானே!
தொடர்புக்கு,
கார்த்திகேயன்,
செல்போன்: 93677-89456.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites