இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, January 3, 2013

'ஃப்ரெண்ட்ஸ்!



சாமி கும்பிடுவதற்காகத் தேங்காய்ப் பறித்துத்தர அம்மா சொன்னதும் சரசரவென தென்னை மரத்தில் ஏறிய பத்தாம் வகுப்பு சிறுவன் பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்தான். கீழே விழுந்ததில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டதால் இடுப்புக்குக் கீழே உறுப்புகள் செயல் இழந்து வீட்டில் முடங்கிவிடும் சூழல். ஆனால், அந்தச் சிறுவன் பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு டைலரிங், ஸ்கிரீன் பிரிண்டிங் கற்றுக்கொண்டு  'ஃப்ரெண்ட்ஸ்’ எனும் அமைப்பை ஏற்படுத்தி ஊனமுற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் அற்புதனாய் மாறிவிட்டான்.
''பத்தாம் வகுப்புவரை நண்பர்களோடு ஓடி விளையாடிய என்னை, முடமாக்கிய அந்தச் சம்பவத்தை இப்போ நான் நினைக்கிறதே இல்லை''- முகம் கொள்ளா சிரிப்போடுப் பேசுகிறார் வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞரான பச்சமுத்து. 

''ரொம்ப வருஷமா படுத்த படுக்கையா கிடந்த என்னைப் பார்க்கவந்தவங்க ஆறுதல் சொன்னாங்களே  தவிர, யாரும் உதவ முன்வரவில்லை. ஒன்றரை வருஷம் என்னை ஆஸ்பத்திரியில் வைத்து எப்படியும் குணப்படுத்திடலாம்ங்கிற நம்பிக்கையில் அம்மாவும் அப்பாவும் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. ஆனா, என்னால் ஒரு அடிகூட நடக்க முடியலை. கடைசியில் வேறு வழி இல்லாம, வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துட்டாங்க.   வீட்டு வாசலில்  உட்கார்ந்து வெளியில வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பேன். தினமும் என்னுடன் படிச்ச பசங்க பள்ளிக்கூடம் போறதையும் விளையாடுறதையும் பார்க்கும்போது மனசு ரணமாகும். அதனாலேயே திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறதையே நிறுத்திட்டேன். 
 நான் கைகளை ஊன்றிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர ஆரம்பித்தாலும்

 கால்களில் உணர்ச்சி இருக்காது. அதுக்காக மணிக்கணக்கில் வெயிலில் உட்கார்ந்திருப்பேன். கால்களைக் கிள்ளிக் கிள்ளிப் பார்ப்பேன். ஒரு கட்டத்தில் என் கால்களில் கொஞ்சம் உணர்ச்சிகள் தெரிஞ்சப்ப,  மெள்ள குச்சிகளைப் பிடித்துக்கொண்டு நடக்க முயற்சி செஞ்சேன். பேலன்ஸ் கிடைக்காமல் அடிக்கடி கீழே விழுந்தேன். ஒரு முறை கீழே விழுந்த எனக்குக் கையில் அடிபட்டதால் குச்சிகளையும் பிடிக்க முடியவில்லை. ஆனாலும், நம்பிக்கையைவிடலை. எதையாவதுப் பிடிச்சிக்கிட்டு என்னால் நடக்க முடியும்கிற அளவுக்கு முன்னேற்றம் வந்தப்ப, டைலரிங் கத்துக்க ஆரம்பித்தேன்.  முதலில் ரொம்ப நேரம் நாற்காலியில் உட்கார முடியாது. இருந்தாலும் பிடிவாதமாக டைலரிங் கத்துகிட்டேன். அதன்பிறகு தையல் மெஷின் வாங்க காசு இல்லை. என்ன செய்றதுனு தெரியாம தவிச்சப்ப, இந்தியத் தொழுநோய் அறக்கட்டளை மையத்தின் தொடர்பு கிடைச்சது. அவங்க உதவியோட ஸ்க்ரீன் பிரின்டிங் கத்துக்கிட்டேன். அவர்களுடைய வழிகாட்டுதல்படி, கடைகளுக்குப் பை தயாரிச்சு, அதில் ஸ்க்ரீன் பிரின்டிங் செஞ்சு கொடுக்கும் தொழில் தொடங்கினேன். எனக்கு இரண்டு மெஷின் வாங்கிக் கொடுத்தோடு, கடைக்கு அட்வான்ஸ் கொடுத்தும் உதவி செஞ்சாங்க.
என்னுடைய நிலையைப் பார்த்த பலர் எனக்கு நிறைய ஆர்டர் கொடுத்தாங்க. ஆனால், வேலை செய்ய ஆள் இல்லை. அப்போதுதான் என்னை மாதிரி மாற்றுத் திறனாளிகளைக் கண்டுபிடிச்சு, அவங்களுக்குத் தொழில் சொல்லிக் கொடுக்கலாம்கிற எண்ணம் வந்துச்சு. அதன் பிறகு இந்தப் பகுதியில் உள்ள  மாற்றுத் திறனாளிகளை  நேர்ல சந்தித்துப் பேச ஆரம்பித்தேன். வடகராம்பூண்டி  கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி, மஞ்சுளா, மகாதேவி, மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஜெனிஃபரும் என்னிடம் ஸ்க்ரீன் பிரின்டிங் கத்துக்கிட்டாங்க. இன்று எல்லோரும் சேர்ந்து 'ஃப்ரெண்ட்ஸ் பிரின்டர்ஸ்’ னு நடத்திக்கிட்டு வருகிறோம். 'ஃப்ரெண்ட்ஸ்’ என்ற அமைப்பாக இதை மாற்றி கடலூர் மாவட்டத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளை ஒருங்கிணைத்துப் பொருளாதார அளவில் அவர்களை மேம்படுத்த முயற்சி செஞ்சுட்டு இருக்கிறோம். நான் தனியாள்கிற நிலை மாறி, இப்போ 40 நண்பர்கள் இந்த அமைப்பில் இருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகள் பலருக்கு  உதவித் தொகை, அடையாள அட்டை வாங்கித் தர்றது, அவர்களுக்கு சுயதொழில் தொடங்குவது குறித்து விழிப்பு உணர்வினை ஏற்படுத்திட்டு வர்றேன். என்னைப் போல மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் எப்போதும் நம்பிக்கை கொள்ளவேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே!'' நம்பிக்கையோடு நடக்கிறார் பச்சமுத்து.
- சி.ஆனந்தகுமார்
படங்கள்: எம்.ராமசாமி
  தமிழகத்தில் மொத்தமாக துணிப் பை வாங்க வேண்டும் என்றால்,  திருப்பூர் மற்றும் ஈரோடுக்குத்தான் போக வேண்டும் என்ற கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்ட மக்களின் நிலையை சக்சஸ்ஃபுல்லாக மாற்றி இருக்கிறது இந்த ஃப்ரெண்ட்ஸ் அமைப்பு!

2 comments:

great sir appadiya engalaiyum joint pannunga sir

தாங்கள் வருகைக்கு நன்றி

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites