இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, January 3, 2013

கயிறு திரிக்கும் குடும்பங்கள்!





'சும்மா கயிறு திரிக்காதடா’ என்பதன் அர்த்தம் வேறாகத் தொனித்தாலும் தமிழகத்தின் பாரம்பரியக் குடிசைத் தொழில்களில் கயிறு திரித்தலும் ஒன்று. அதைக் குடிசைத் தொழிலாக இல்லாமல் குடும்பத் தொழிலாகவே செய்துவருகின்றனர் விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூரைச் சேர்ந்த சிலர்.
''50 வருடங்களுக்கும் மேலாக இந்தத் தொழி லைச் செய்துவருகிறோம். கிணற்றில் நீர்இறைக்க, பந்தல் போட, கூரை வீடுகள் மேய்வதற்கு என்று பலவற்றுக்கும் தேங்காய் நாரால் செய்யப்படும் கயிறுகள்தான் பயன்பட்டுவந்தன. அப்போது எல்லாம் இந்தத் தொழிலை நம்பி இருந்த எங்கள் குடும்பங்களுக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைத்துவந்தது. நைலான் கயிற்றின் வருகைக்குப் பிறகு, எங்கள் தொழில் நலிவடைய ஆரம்பித்து விட்டது.
தேங்காய் நார்களைக் கடலூரில் இருந்து வாங்கிவருவோம். பிறகு அதில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து இரும்புக் கம்பியால் அடிப்போம். தூசு துகள்கள் எல்லாம் போய் நைசான நார் மட்டும் கிடைக்கும். அதை வைத்து மெஷின் மூலம் கயிறு திரிக்கிறோம். முதலில் சிறிய கயிறாகத் தயாரிப்போம். அப்புறம் நான்கு, எட்டு, பத்துச் சிறிய கயிறுகளைச் சேர்த்தும் வடம், தாம்புக் கயிறு தயாரிக்கிறோம்.
20 அடி முதல் 30 அடி நீளம் வரை உள்ள கயிறுகள் செய்கிறோம். பெரிய அளவு வருமானம் இல்லை என்றாலும் கயிறுதான் எங்களுக்குக் கை கொடுக்கிறது'' என்கிறார் இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் ஏழுமலை.
- அற்புதராஜ்
படங்கள்: ஆ.நந்தகுமார்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites