இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, October 1, 2012

மீன் வளம் :: தரக் கட்டுப்பாடு

தரக் கட்டுப்பாடு

இந்திய ஏற்றுமதி வர்த்தகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதில் மீன் மற்றும் மீன் வளப் பொருட்களை தரக் கட்டுப்பாடு மற்றும் சோதனைகள் அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் சில விதிகள் உள்ளன. 1964ல் விதி11- ஏற்றுமதி விதிகள் (தரக்கட்டுப்பாடு மற்றும் சோதனைகள்) பகுதி II, பிரிவு -3, துணை பிரிவு (ii) நவம்பர் 1, 1994ன் கீழ் இந்திய அரசின் சட்டத்தின் படி வர்த்தக அமைச்சகம் எண் 785(E) கீழ்.
 1. மீன் மற்றும் மீன் வள பொருட்கள் கிடைத்ததை நுண்ணுயிர்கள் பாதிக்காமல் இருக்க வேண்டும்.
 2. சரியாக கையாளாமல் மற்றும் சுகாதாரம் இல்லாமல் இருந்தால் நோய்க் கிருமிகள் வரும்.
 3. குளிர்ந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் மீன்பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் எடுத்துச் செல்லும் போது சுத்தமான பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்.
 4. இந்த கட்டுப்பாட்டு முறைகளை சரியாக பயன்படுத்த வேண்டும்.
 5. இறக்குமதி செய்யப்படும் நாடுகள் தேவையான பொருட்களை தகுந்த வழிமுறையின்படி கண்கானித்து பாதுகாத்து வைக்க வேண்டும்.
 6. இந்திய அரசு தரத்தில் ஏதேனும் குறைந்தால் அதிகாரத்துடன் நடவடிக்கைகள் மத்திய அரசு எடுக்கும்.
 7. இதன் மூலம் அப்படியே குளிர்ந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் மீன் பொருட்கள் என்றால் அனைத்து கடல்நீர் மற்றும் நண்ணீர் உயிரினங்கள் அதன் சினைத்திரள்கள், குளிர்ந்த நிலையில் உள்ள பதப்படுத்தப்பட்டவை, தவளையை தவிர அனைத்துப் பெருட்களும்.

விவரங்கள்


இறால்
விவரங்கள்

பொதுவானவை: நிறம் மற்றும் தோற்றத்தில் குறிப்பிட்ட வகையில் (அப்படியே/சமைத்த) மாற்றம் இருக்கும். உலர்ந்த, நிறமாற்றம் மற்றும் கருப்பு புள்ளிகள் இல்லாமல் இருக்க வேண்டும். தரம் கெடாமல் மற்றும் மணம் மாராமல் இருக்கணும். இறாலின் சதை அமைப்புகள் மென்மையாக இருக்க வேண்டும்.
எண்
பாக்டீரியா ஆராய்ச்சிகள்
குளிர்ந்த
வேகவைத்த
1.
மொத்த தட்டுகளின் எண்ணிக்கை (370’C)
500000
100000
2.
ஈ.கோழை/கி
20
-
3.
செப்டிபிலோகாக்கஸ்/கி
100
100
4.
சால்மொன்னல்லா /25கி
-
-
தலைக்காளிகள் விவரங்கள்: (ஊசிக் கணவாய், கணவாய், பேய் கணவாய் மற்றும் அதன் உடம்பு உறுப்புகள்).                                                                                                          
பொதுவானவை

தலைக்காளிகள் நிறைய வகை உண்டு. அவைகளை ஒன்றாக மூட்டை (பொதியம்) கட்ட கூடாது. ஒரே மாதிரியான நிறம் மற்றும் அளவுடைய மீன்களை சேர்த்த கட்டலாம். அவைகளை சுத்தம் செய்து பதப்படுத்தி குறிப்பிட்ட நிறம், அமைப்பு, மணம், என இருக்க வேண்டும். தலைக்காளிகளின் தரம் கெடாமல் மற்றும் சதைகள் மென்மையாக ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

பாக்டீரியா
ஆராய்ச்சிகள்
 1. மொத்த தட்டுகளினட எண்ணிக்கை - 500000-10000 (370’C)
 2. ஈ-கோலை /கி - அதிகபட்சம் 20
 3. செப்ட்பிலோகாக்கஸ்/கி - 100
 4. சாமொன்னல்லா/25கி
மீன்களின் விவரங்கள்- முழுவதும், குடல், தலை நீக்கிய மீன், ஏலும்பில்லாத மீன்கள் (நெய்மீன், சாளை மீன், கறிமீன், கானாங்கத்தி, செவ்வாமீன்)

பொதுவானவை:


ஒரே அளவு மற்றும் நிரமுடைய மீன்களை ஒன்றாக மூட்டை கட்டலாம். ஆனால் வெவ்வேறு இன மீன்களை ஒன்றாக மூட்டை கட்ட கூடாது. மீன்களை சுத்தம் செய்து பதப்படுத்தி குறிப்பட்ட நிறம், அமைப்பு, மணம் என இருக்க வேண்டம். மீன்களின் தரம் மற்றும் நிறம் மாராமல் இருக்க வேண்டும். மீன் சதைகள் மென்மையாக இருக்க வேண்டும்.

பாக்டீரிய
ஆராய்ச்சிகள்: (அப்படியே, குளிர்ந்த, உலர்ந்த, வேகவைத்த)
 • மொத்த தட்டுகளின் எண்ணிக்கை 370’C/கி - 500000-100000
 • ஈ-கோலை /கி - அதிகபட்சம் 20
 • செப்ட்பிலோகாக்கஸ்/கி - 100
 • சாமொன்னல்லா/25கி

நண்டு
மற்றும் நண்டு கறி வகைகள்
பொதுவானவை


ஒரே மாதிரியான நண்டுகளை ஒன்றாக கட்ட வேண்டும்.(நிறம் மற்றும் அளவில் ஒன்றுபோல). உடம்பு மற்றும் நகம் கறிகளை தனியாக அல்லது அதற்கென்று தனி முறையில் கட்ட வேண்டும். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு நண்டுகளை சுத்தம் செய்து, பதப்படுத்தி, நிறம், குணம், மாராமல் இருக்க செய்தல். மென்மையாக மற்றும் ஒன்றுபோல் இருக்க வேண்டும்.
பாக்டீரியா ஆராய்ச்சிகள்: (அப்படியே, குளிர்ந்த, உலர்ந்த, வேகவைத்த)
 • மொத்த தட்டுகளின் எண்ணிக்கை 370’C/கி - 100000-100000
 • ஈ-கோலை /கி - அதிகபட்சம் 20
 • செப்ட்பிலோகாக்கஸ்/கி - 100-100
 • சாமொன்னல்லா/25கி  - -
1. நண்டை வெண்ணீரில் நனைத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் தசைகளை சுலபமாக எடுக்கலாம்.
2. சுத்தம் செய்த நண்டுகளை குறிப்பிட்ட நேரத்திற்குளி சமைத்துவிட வேண்டும்.
3. கடல்நத்தை, மட்டி, கடற்காய்கறி, ஆகியவை நண்டுக்கு மேற்கொளடளும் விவரங்களே ஆகும்.

1.மூலப்பொருட்கள்
கலனடைப்பு இறாளில் உப்பு நீர் கலந்து சுத்தமாக செய்யப்படுகிறது. இதற்கு மூலப்பொருட்கள் உப்பு அதுவும் சுத்தமான IS: 594-1962ய் பயன்படுத்த வேண்டும்.

2. கலன்கள்
பொருட்களை வெளிபுற மற்றும் உட்புற ஏற்ற கலன்களில் அடைக்க வேண்டும். கலன்களில் வெளிப்புறத்தில் மெருகெண்ணெய் தேய்க்க வேண்டும். இதனால் பதப்படுத்தும் மற்றும் பாதுகாத்து வைக்கும் போதும் எந்தவித கெடுதலும் வராமல் காக்கும். இந்த மெருகெண்ணெய் உப்புநீரில் எப்போதும் கரையக்கூடாது. கலனை சீல் வைத்த பிறகு கசிவு மற்றும் ஒழுகுதல் இருக்கக் கூடாது. கலனை திறக்கும் போது உளளே எந்தவித கருப்பு நிறம், துரு அல்லது பேறு எதுவும் இருக்க கூடாது.

3. உப்பு நீர்
உபயோகிக்கும் உப்பு நீர் சுத்தமாக மற்றும் நிறம் மாராமல் இருக்க வேண்டும்.

4. பொட்டணம் செய்தல் மற்றும் குறிப்புச் சீட்டிடுதல்:
 • ஒரே இனத்தோடு பொருட்களை மட்டும் ஒன்றாக அடைக்க வேண்டும்.
 • எந்த நாட்டிற்கு நாம் ஏற்றுமதி செய்கிறோமோ அந்த நாட்டின் விதிகள் மற்றும் வழிமுறைகள்படி குறிப்புச்சீட்டு இருக்க வேண்டும்.

5. வடிகட்டிய
எடை மற்றும் தரம் அளவு
 • அறிவித்த எடையை விட நிகர வடிகட்டிய எடை குறைவாக இருக்க கூடாது.
 • கலனில் கொடுக்கப்பட்டுள்ள தரம் அளவுக்கு தகுந்த மாதிரி அளவு எண்ணிக்கை இருக்க வேண்டும்.

6. புலன்கள் மூலம் தரமறி திறன்
 • கலன்களை திறக்கும் போது எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்க வேண்டும். நீக்கப்பட்ட தேவையற்ற இறால் பாகங்களை பயன்படுத்தக் கூடாது.
 • இறாலின் மேல் பாகம் கொழகொழப்பாக இருக்கக் கூடாது. மென்மையாக ஆனால் திடமாக இருக்க வேண்டும். இரண்டு விரல் நடுவில் வைத்து அழுத்தினால் பொடியாக நொறுங்காமல் இருக்க வேண்டும்.
 • இறால் துண்டுகளை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க வேண்டும். எடுக்கும் போது தனித்தனியாக வர வேண்டும்.
 • மணம் மற்றும் சுவை மாராமல் இருக்க வேண்டும். வேகவைத்த இறால் தீக்காமல் மற்றும் கசப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
 • பொருள் நிறம் மாராமல் பச்சை மஞ்சள் கலந்த நிறம் இல்லாமல் இருக்க வேண்டும்.இருந்தால் பொருள் கெட்டுவிட்டது என்று தெரியும். அதேபோன்று கருப்பு நிறமில்லாமல் இருக்க வேண்டும்.
 • மண், தூசி, முடி, பூச்சு இல்லாமல் இருக்க வேண்டும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites