இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, October 8, 2012

ஆடுகளைத் தேர்ந்தெடுத்தல்


கிடாக்கள் மந்தையில் பாதி என்பார்கள். சுமார் 30 முதல் 50 ஆடுகளுக்கு ஒரு பொலி கிடா போதுமானது. பொலி கிடாவை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை.
மற்றவர்கள் பண்ணையில் தேர்வு செய்யும்போது
 •  நல்ல ஆரோக்கியமானதாகவும், சுறுசுறுப்பாகவும், வயதிற்கு தகுந்த நல்ல வளர்ச்சியுள்ளதாகவும், நல்ல எடையுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.
 • கிடாக்கள் உயரமாகவும், உடல்நீளமாகவும், மார்பு அகன்றதாகவும், விரிந்த மார்பெலும்புகளைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும்.
 •  கிடாக்களின் பின்னங்கால்கள் நன்கு திடமாக இருத்தல் வேண்டும்.
 • கால்கள் நேராக இருக்க வேண்டும்.
 • கிடாக்கள் வீரியத்துடன் பொலிவு செய்யும் திறன் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
 • ஒரு விதைப்பையினுள் இரண்டு ஒரே அளவுள்ள விதைகள் இருக்க வேண்டும். விதைப்பையின் சுற்றளவு குறைந்த பட்சம் 25-35 செ.மீட்டராவது இருக்க வேண்டும்.
 • ஒரு விதையுள்ள கிடாக்களை வாங்கக்கூடாது.
 • இனத்திற்கான பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.

சொந்த பண்ணையில் தேர்வு செய்யும்போது
மேற்கண்ட குணங்களுடன்,
 • 2-3 குட்டிகளை ஈனும் பெட்டையாட்டின் குட்டிகளிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.
 • நல்ல எடையுள்ள, ஆரோக்கியமான குட்டிகளை 6 மாதவயதில் தேர்வு செய்ய வேண்டும்.
 •  3-4 சதவீத குட்டிகளை தேர்வு செய்ய வேண்டும்.
 • சுமார் 9 முதல் 12 மாதங்களில் பருவமடைந்திருக்க வேண்டும்.  

பெட்டை ஆடுகளைத் தேர்ந்தெடுத்தல்
மற்றவர்கள் பண்ணையில் தேர்வு செய்யும்போது
 • தலை குறுகியதாகவும், கழுத்து மெலிந்தும், உடல் நீளமாகவும் இருக்க வேண்டும்.
 • நன்கு வளர்ச்சியடைந்த, மிருதுவான மடி உடலுடன் நன்கு ஒட்டியிருக்க வேண்டும்.
 • மிருதுவான மற்றும் பால் கறந்தவுடன் சுருங்கக்கூடிய பால் காம்புகளாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட காம்புகள் உள்ள ஆடுகளை வாங்கக்கூடாது.
 • முதுகுப்புறமும், பின்பகுதியும் அகன்று விரிந்து இருக்கும் ஆடுகளை வாங்க வேண்டும்.
 • நல்ல எடையுள்ள, ஆரோக்கியமான பெட்டை ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். 

சொந்த பண்ணையில் தேர்வு செய்யும்போது
மேற்கண்ட குணங்களுடன்,
 • பெட்டை ஆடுகள் 6 முதல் 9 மாதங்களில் பருவமடைந்திருக்க வேண்டும்.
 • ஒரு ஈற்றில் 2  ஈனும் ஆடுகளின் குட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • நல்ல எடையுள்ள, ஆரோக்கியமான பெட்டை குட்டிகளை 3 மாத வயதில் தேர்வு செய்ய வேண்டும்
 • 30-35 சதவீத குட்டிகளைத் தேர்வு செய்ய வேண்டும். 

‘தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை’ என்ற பழமொழிக்கேற்ப நல்ல தரமான ஆட்டுக்குட்டிகளைப் பெறுவதற்கு நல்ல பெட்டை ஆடுகளும், தரமான பொலிக் கிடாக்களும் மிகவும் அவசியம். பொதுவாக பொலி கிடாக்கள் நல்ல குட்டிகளை உருவாக்குவதில் 80-90 பங்கு வகிக்கின்றன. ஆகவே அதிக விலையில் நல்ல பொலி கிடாக்களை வாங்க வேண்டும்.

ஆடுகளின் ஆயுட்காலம் 10-12 வருடங்கள் ஆகும். 5 -7 ஆண்டுகள் வரை பண்ணையில் லாபகரமாக வளர்த்தலாம். ஆடு வளர்ப்போர் ஆடுகளின் பற்களைக் கொண்டு வயதை தீர்மானித்து கீழ்க்கண்ட பயன்களை அடையலாம்.
·                     -  ஆடுகளை வாங்கும்போது அதன சரியான வயதைக் கண்டறிந்து இடைத்தரகர்கள் மூலம் ஏற்படும் இழப்பைத் தவிர்க்கலாம்.
·                              -  சரியான வயதில் ஆடுகளை விற்பனைக்கு அனுப்பலாம்.
·                       -  வயதான மற்றும் உற்பத்தித் திறனற்ற ஆடுகளைக் கண்டறிந்து அவற்றை பண்ணையிலிருந்து நீக்கம் செய்யலாம்.
·                              -   ஆடுகளைக் காப்பீடு செய்வதற்கு வயதை நிர்ணயிப்பது மிக அவசியமாகும்.

ஆடுகளில் வெட்டும் பற்கள், முன் தாடைப் பற்கள் மற்றும் பின் தாடைப் பற்கள் (அரைக்கும் பற்கள்) காணப்படுகிறது. ஆடுகளின் மேல் தாடையில் வெட்டும் பற்கள் காணப்படுவதில்லை. அதற்கு பதிலாக ஈறு மட்டுமே காணப்படும். கீழ் தாடையில் பக்கத்திற்கு 4 வீதம் 8 வெட்டும் பற்கள் காணப்படும். கீழ் தாடையின் உதடுகளை விலக்குவதன் மூலம் இந்த பற்களைக் காணலாம். பொதுவாக வெள்ளாடுகளில் 20 தற்காலிகப் பற்களும், 32 நிரந்தரப் பற்களும் காணப்படும். மேல் தாடையிலும், கீழ் தாடையிலும் கீழ்க்கண்டவாறு பற்கள் காணப்படும்.


வெட்டும் பற்கள்
முன்தாடைப் பற்கள்
பின்தாடைப் பற்கள்
மொத்தம்
தற்காலிகப் பற்கள்
0/8
6/6
0/0
6/14
நிரந்தரப் பற்கள்
0/8
6/6
6/6
12/20

      ஆடுகளை வெளியில் இருந்து வாங்கும்போது அதன் பற்களின் அமைப்பு மற்றும் எண்ணிக்கையை வைத்துதான் வயதைக் கண்டறிய முடியும்.

தற்காலிகப் பற்கள் (அ) பால் பற்கள்
நிரந்தரப் பற்கள்
சிறியதாக, நீள் செங்குத்தாக இருக்கும்
முன் பகுதி அகன்றும், பின் பகுதி குறுகியும் காணப்படும். வயது அதிகரிக்கும்போது பற்கள் தேய்ந்து முன் பகுதி கூறாக மாறி விடும்.
பற்களுக்கு இடையில் இடைவெளி இன்றி காணப்படும்.
ஒரு பல்லிற்கும் அடுத்த பல்லிற்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருக்கும்.

வயது
பற்களின் அமைப்பும் எண்ணிக்கையும்
பிறந்தவுடன்
0-2 ஜோடி பால் பற்கள்
6-10 மாதம்
கீழ்த் தாடையின் முன்புறம் 8 முன் பற்கள் இவை அனைத்தும் பால் பற்கள்
11/2 வயது
நடுவில் உள்ள இரண்டு முன் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும்
2-21/2 வயது
நான்கு நிரந்தரப் பற்கள் காணப்படும்
3-31/2 வயது
ஆறு நிரந்தரப் பற்கள் காணப்படும்
4 வயது
எட்டு நிரந்தரப் பற்கள் காணப்படும்
6-7 வயது
பற்கள் விழுந்து விடும்


பரண் மேல் ஆடு வளர்ப்பு

 • வெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்க சிறந்த முறை பரண் மேல் வளர்க்கும் முறையாகும். 
 • பரண் மேல் ஆடு வளர்ப்பில் ஆடுகள் மரத்தினால் ஆன பரண் போன்ற அமைப்பின் மேல் வளர்க்கப்படுகிறது.
 • பரண் மேல் ஆடு வளர்ப்பு கொட்டகை தரையிலிருந்து உயரமான இடத்தில் குறைந்த்து 4 - 5 அடி உயரத்தில் இருப்பதால் ஆட்டு சாணி மற்றும் சிறுநீர் போன்றவை கீழே சேகரமாகிறது. ஆதலால் தினமும் சுத்தம் செய்யும் பணி மிகவும் குறைவாக இருக்கிறது.
 • பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையில் வளர்ப்பதால் ஆடுகள் சுகாதரமாகவும் நோய் பரவும் தன்மை குறைவாகவும் இருக்கும்.
 • வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டகையிலே பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்கப்படுகிறது.
 • வெள்ளாடுகளுக்கு ஏற்ற பசுந்தீவன பயிர்கள்- கோ 3 , கோ 4, கோ எப் எஸ் 29 , அகத்தி, கிளிசீடியா, வேலி மசால்.
 • வெள்ளாடுகளுக்கு அளிக்க வேண்டிய தடுப்பூசிகள் - ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி (PPR ), துள்ளுமாரி நோய் தடுப்பூசி (ET)மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி (FMD). கால்நடை மருத்துவர்களை அணுகி தகுந்த நேரத்தில் தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம்.
 • வெள்ளாடுகளுக்கு குடற்புழுநீக்கம் செய்யும் முறை. --- புதிதாக வாங்கி வரும் வெள்ளாடுகளை தனியாக பிரித்து வைத்து குடற்புழு நீக்கம் செய்த 15 நாட்களுக்கு பிறகே பண்ணை வெள்ளாடுகளுடன் சேர்க்கவேண்டும். குடற் புழு நீக்க மருந்துகளில் பலவகை உண்டு. அவைகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சுழற்சி முறையில் கொடுக்கவேண்டும். அப்போது தான் அனைத்து வகையான குடற்புழுக்களை நீக்கமுடியும். வெள்ளாட்டு குட்டிகள் பசுந்தீவன உண்ண ஆரம்பித்த உடனே குடற்புழுநீக்க மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி சரியான கால இடைவெளியில் கொடுக்கவேண்டும்.
 • பரண் மேல் ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்கும் முன் ஒன்றுக்கு மேற்பட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்பட்டு வரும் பண்ணைகளை பார்வையிடுவதும்  வெள்ளாட்டு பண்ணையாளர்களை கலந்தலோசிப்பதும்  நல்லது.
 • பரண் மேல் ஆடு வளர்ப்பு பண்ணைகளில் ஆடுகளை விடுவதற்கு முன்பே பசுந்தீவன பயிர்களை பயிரிட்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும்.பரண் மேல் வெள்ளாடு வளர்க்கும் பண்ணையாளர்கள் விவரம் 
 1. புவனன் - 915-013-0127
 2. சதாசிவம் -94420-94446
 3. நல்லுசாமி -  975-139-9630


மரு.மகேந்திரன் எம்.வி.எஸ்.சி.  944-500-1168
மரு.தெய்வவிருதம் எம்.வி.எஸ்.சி. 9842-480-986
திருவாரூர் மாவட்டம்0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites