இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, October 1, 2012

மீன் வளம் :: சந்தை

மீன்வள வர்த்தகம்
இந்தியாவில் மீன்வள வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கேரளாவில், 2006-07ல் மீன்களின் மதிப்பு US டாளரில் 70 லட்சம் கோடி. இந்த வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு US டாளரில் 1.85 இலட்சம் கோடி (ரூ.8,363 கோடி).
முக்கியமான கடல் பொருட்களின் வர்த்தகம்
வர்த்தகரீதியாக கடல் பொருட்களை 9 வகையாக பிரிக்கலாம்
1. உறை குளிர்ப்பதன இறால்
துரித உறைபதன உலர்ந்த இறால், வேகவைத்த காய்கறி கலவை கலந்த இறால், வளர்ப்பு இறால்
2. உறை குளிர்ப்பதன மீன்கள்வாவல், வெள்ளை மற்றும் கருப்பு வாவல், விலாங்கு மீன், மீன் தண்டுகள், மீன் சினை, நன்னீர் மீன்கள், மீர்காள், ரீப் காட், வாளைமீன், சாளை மீன், நெய் மீன், சுறா, விளமீன், கிளிவாளை.
3. உறை குளிர்ப்பதன கணவாய் / ஊசி கணவாய்
ஊசி கணவாய், வேகவைத்த ஊசி கணவாய், ஊசி கணவாய் எலும்பு, எலும்பற்ற ஊசி கணவாய் துண்டுகள், ஊசி கணவாய் சினைத்திரள், ஊசி கணவாய் உணர்கொம்பு, சுத்தம் செய்ய பட்ட ஊசி கணவாய்.
4. உறை குளிர்ப்பதன சிங்கிறால்
முழு பாறை சிங்கிறால், மணற் சிங்கிறால், ஆல்கடல் சிங்கிறால், சிங்கிறால் வால், சிங்கிறால் இறைச்சி மற்றும் முழுவதும் வேகவைத்த சிங்கிறால்.
5. உயிருள்ள பொருட்கள்
காட்சியக மீன்கள், நண்டு, சிங்கிறால், இறால், நத்தை.
6. குளிர்ந்த பொருட்கள்
மட்டி இறைச்சி, மீன்கள், நன்னீர் மீன்கள், சிங்கிறால், இறால் மற்றும் வாவல்.
7. உலர்ந்த பொருட்கள்
இறால் பொடி, கடற்பாசி, கடல்பட்டை, பம்பாய் வாத்து மீன், புறத் தோட்டின் மூலப்பொருள், மட்டி இறைச்சி, கணவாய் எலும்பு, கணவாய் மீன், மீன் பசை, கடற்காய் இறைச்சி, ஆளி பொடி, இறால் உணவு, கடற்குதிரை, சுறா, சுறா பொடி, ஊசி கணவாய், மீன் தொல், சுறா எலும்பு மற்றும் சுறா வால்.
8. கிளிஞ்சல்
நண்டு கிளிஞ்சல், கடல் கிளிஞ்சல் மற்றும் கடலாமை கிளிஞ்சல்.
9. மற்றவை
கலனடைப்பு மட்டி, தேங்காய் சேர்த்து மற்றும் சேர்க்காமல் செய்த மீன் சட்னி, மீன் ஊறுகாய், மீனுடன் காய்கறி கலவை, மீன் எண்ணெய், மீன் பொடி, உறை குளிர்பதன நண்டு, நண்டு இறைச்சி, பதப்படுத்திய நண்டு, தினித்த நண்டு, மட்டி, பொரித்த மீன் அல்லது இறால், காய்கறி கலந்த கடல் உணவு கலவை, வேகவைத்த சுறா, இறால் ஊறுகாய்.

கடல் உணவு ஏற்றுமதி
கடந்த வருடங்களாக உலக சந்தையில் இந்தியாவின் கடல் உணவு பொருட்கள் அதிகரித்து வருகிறது. 2001-07ல் 40% மதிப்பளவில் அதிகரித்துள்ளது. கடல் உணவின் மதிப்பு மற்றும் அளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 2006-07ல் இந்திய கடல் பொருட்களின் ஏற்றுமதி 6.12 வட்சம் டன், இதனின் மதிப்பு ரூ.8,363 கோடி.
இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி
வருடம்
ஏற்றுமதி
அளவு (மெ.டன்)
% மாற்றங்கள்
மதிப்பு (ரூ)
% மாற்றங்கள்
2001-02
424470
- 3.63
5957.05
-7.56
2002-03
467297
+10.09
6881.31
+15.52
2003-04
412017
-11.83
6091.95
-11.47
2004-05
461329
+11.97
6646.69
+9.11
2005-06
512164
+11.02
7245.30
+9.05
2006-07
612641
+19.62
8363.53
+15.43
(ஆதாரம்: MPEDA 2007)

முக்கிய ஏற்றுமதி பொருட்கள்
இந்தியாவின் மொத்த கடல் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பில் உறை குளிர்பதன இறாலின் மதிப்பு 54% மற்றும் உறை குளிர்பதன மீன்களின் மதிப்பு 44% ஆகும். தலைக்காலி, கணவாய் மற்றும் ஊசிகணவாய் போன்ற பொருட்களின் மூலம் சந்தையில் அதிக விலை கிடைக்கிறது.
2006-07ல் கடல் பொருட்களின் ஏற்றுமதி
பொருட்கள்
ஏற்றுமதி
அளவு (மெ.டன்)
% பங்கு
மதிப்பு (ரூ)
% பங்கு
உறை குளிர்ப்பதன இறால்
137397
22.43
4506.08
53.88
உறை குளிர்ப்பதன மீன்கள்
270751
44.19
1452.88
17.37
உறை குளிர்ப்பதன ஊசி கணவாய் மீன்
55701
9.09
797.37
9.53
உறை குளிர்ப்பதன கணவாய் மீன்
47252
7.71
568.32
6.80
உலர்ந்த பொருட்கள்
24293
3.97
183.16
2.19
உயிருள்ள பொருட்கள்
2478
0.40
64.06
0.77
குளிர்ந்த பொருட்கள்
7200
1.18
117.30
1.40
மற்றவை
67571
11.03
674.35
8.06
மொத்தம்
612641
100.00
8363.53
100.00
(ஆதாரம்: MPEDA 2007)
சந்தைகள்
ஐரோப்பிய சங்கத்தில் இந்திய கடல் பொருட்களின் விற்பனை உயர்ந்துள்ளது. 2006-07ல் இதனுடைய பங்கு 29% இருந்து 33% ஆக உயர்ந்துள்ளது. இருந்தாலும் சீனா, இந்திய கடல் பொருட்களின் விற்பனையில் (33%)  முதல் இடம் வகிக்கிறது. அதன் பறகு தான் ஐரோப்பிய (24%). இந்திய கடல் பொருட்கள் விற்பனை மூலம் ஜப்பான் (16%) இரண்டாவது இடம் வகிக்கிறது.
முக்கிய நாடுகளின் கடல் பொருட்கள் ஏற்றுமதி 2006-07
நாடு
ஏற்றுமதி
அளவு (மெ.டன்)
% பங்கு
மதிப்பு (ரூ)
% பங்கு
ஜப்பான்
67437
11.01
1353.38
16.18
அமெரிக்கா
43758
7.14
1347.80
16.12
ஐரோப்பிய
149760
24.44
2759.92
33.00
சீனா
203513
33.22
1156.96
13.83
தென் கிழக்கு ஆசிய
67650
11.04
616.70
7.37
மத்திய கிழக்கு ஆசிய
23599
3.85
371.47
4.44
மற்ற நாடுகள்
56924
9.29
757.30
9.05
மொத்தம்
612641
100.00
8363.53
100.00
(ஆதாரம்: MPEDA 2007)

சிறப்பு அம்சங்கள்
    • இந்திய உறை குளிர்பதன இறால் அமெரிக்காவில் தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதி ஐரோப்பியா (28%), ஜப்பான் (20%), மற்றும் தென்கிழக்கு ஆசியா (5%) ஏற்றுமதியாகிறது.
    • 2005-06ல் உறை குளிர்பதன மீன்கள் 63 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் பெரும்பாலும் சீனாவிற்கு தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தென் கிழக்கு ஆசியா (14%) மற்றும் மத்திய கிழக்கு (7%) ஆகும்.
    • மொத்த உறை குளிர்பதன ஊசி கணவாய் மீன் ஏற்றுமதியில் நான்கில் மூன்று பங்கு அதிகமாக ஜரோப்பியவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சீனா (14%). 2005-06ல் மொத்தமாக 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
    • இந்திய உறை குளிர்பதன கணவாய் மீன்கள் அதிகமாக ஜரோப்பியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது
    • அதில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கா (16%) மற்றும் ஜப்பான் (5%) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது
    • உலர்ந்த பொருட்களின் ஏற்றுமதி 36 நாடுகளுக்கு செய்யப்பட்டுள்ளது.
    • உயிருள்ள பொருட்களின் ஏற்றுமதி 27 நாடுகளுக்கு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஹாங்காங் (27%) மற்றும் தாய்லாந்து (14%) செய்யப்பட்டுள்ளது.
    • குளிர்ந்த மீன் 30 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குளிர்ந்த மீனின் முக்கியமான ஏற்றுமதி சந்தைகள் சிங்கபூர் (23%), ஜரோப்பியா (23%), தாய்லாந்து (15%).
இந்தியாவில் உள்ள சில வண்ண மீன் வர்த்தகர்கள்
பெயர் மற்றும் முகவரி
K.R. புஸ்பகார்தன்,
திருவாங்கூர் சுக்பாபெட்ஸ்,
IV 342 A>
கொல்லையில் ஹெயுஸ்
கும்பலம்(p.o)
கொச்சி - 682506
K.D. பிரவீன்குமார்,
டிராப்பிகல் மீன்
அக்வேரியம்,
என் 29/2, 19B வீதி,
சிக்பஜார் ரோடு,
சிவாஜி நகர்,
பெங்களூர் - 560051
K.M. மொஹமத் சஷித்,
ஓசினிய அக்வோரியம்,
கட்டகத் வெள்ளிபரம்பில்,
இடவிலாங் (p.o)
கொடுங்கலூர்,
திருச்சூர்
ஜெயசீலன்,
நெட்லின் சுக்கிவரியம்,
என் 60, 6வது வீதி,
SRP காலனி,
சென்னை - 600082
B. இலம்பர்த்தி குமார்,
தென் இந்திய
அக்வார்சிஸ்ட்,
என் 8, கிரிரோடு,
டி-நகர்,
சென்னை - 600017
ஏல்பின் மைக்கில்,
கோஸ்ட்லைன் மீன்வளம்,
என் 93, லேன்,
P.A.N ராஜரத்தினம் ரோடு,
தன்டையார்பெட்,
சென்னை - 600021
ஆதாரம்: www.vuat.kerela.org
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள மீன் சந்தைகள்
இடம்
மாநிலம்
மாவட்டம்
பெங்களூர்
கர்நாடகம்
பெங்களூர்
பெய்பூர்
கேரளா
காலிகட்
காலிகட்
கேரளா
காலிகட்
சிந்தெரிபெட்
தமிழ்நாடு
சென்னை
சின்ன முட்டம்
தமிழ்நாடு
கன்னியாகுமரி
கடலூர்
தமிழ்நாடு
கடலூர்
இட்முமன்னூர்
கேரளா
கோட்டயம்
களியகவிலை
தமிழ்நாடு
கன்னியாகுமரி
மதுரை
தமிழ்நாடு
மதுரை
மங்களூர்
கர்நாடகம்
மங்களூர்
முனம்பம்
தமிழ்நாடு
-
நாகப்பட்டினம்
தமிழ்நாடு
நாகப்பட்டினம்
நீன்டாகரா
கேரளா
குயிலோன்
பங்கோட்
கேரளா
திருவனந்தபுரம்
பரிப்பள்ளி
கேரளா
-
இராமேஸ்வரம்
தமிழ்நாடு
ராம்நாடு
ராயபுரம்
தமிழ்நாடு
சென்னை
தெல்லிச்செரி
கேரளா
-
தொப்பும்படி
கேரளா
எர்னாகுளம்
தூத்துக்குடி
தமிழ்நாடு
தூத்துக்குடி

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites