இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, September 13, 2012

அன்பளிப்புப் பெட்டி செய்வது

சின்ன சாக்லெட்டில் இருந்து, ஸ்பெஷல் பரிசு வரை எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன அன்பளிப்பு கொடுத்தாலும், அதை அழகான பெட்டியில் வைத்து, அலங்கரித்துக் கொடுப்பதுதான் இப்போது ஃபேஷன். உள்ளே இருக்கும் பரிசைப் போலவே, அதைச் சுற்றியிருக்கும் அட்டையும் அலங்காரமும்கூட ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை எந்த வயதினருக்குமான பரிசுப் பொருள்களையும் வைத்துக் கொடுக்க விதம் விதமான வடிவங்களில், வெவ்வேறு அளவுகளில் பெட்டிகள் கிடைக்கின்றன இன்று. அன்பளிப்புப் பெட்டிகள் செய்வதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் சென்னையைச் சேர்ந்த மணிமேகலை.

‘‘படிச்சது கெமிஸ்ட்ரி. பேரும் பணமும் சம்பாதிச்சுக் கொடுக்கிறதென்னவோ சின்ன வயசுலேர்ந்து நான் கத்துக்கிட்ட கலைகள்தான். பேப்பர் பை மற்றும் பேப்பர் பொருள்கள் பண்ணிட்டிருந்தேன். வித்தியாசமான பொருள் எது கிடைச்சாலும், அதைப் பிரிச்சு, எப்படிப் பண்ணியிருக்காங்கனு ஆராய்ஞ்சு பார்த்து, மறுபடி அதே மாதிரி பண்றது வழக்கம். அப்படித்தான் கிஃப்ட் பெட்டியும் வித்தியாசமா இருக்கேன்னு பிரிச்சுப் பார்த்து, செய்யக் கத்துக்கிட்டேன்.

‘கிஃப்ட் டேக்’னு சொல்ற வாழ்த்து எழுதிக் கொடுக்கிற சின்னச் சின்ன அட்டைகளும் பண்றேன். பரிசு கொடுக்கற கலாசாரம் இருக்கிறவரைக்கும் இந்தப் பெட்டிகளுக்கான மவுசு குறையாது’’ என்கிற மணிமேகலை, இதைக் கற்றுக்கொண்டு பிசினஸில் இறங்க நினைப்போருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?


‘‘திக்கான கலர் சார்ட் பேப்பர், ரீசைக்ளிங் பேப்பர், டிஷ்யூ பேப்பர், சாட்டின் ரிப்பன், வெள்ளை கம், பன்ச்சிங் மெஷின், அலங்கரிக்க ஸ்டிக்கர்கள், சமிக்கிகள்... முதலீடு 500 முதல் 1,500 ரூபாய் வரை.’’

எத்தனை மாடல்கள்? ஒரு நாளைக்கு எத்தனை?


‘‘முயல், மிக்கி மவுஸ்னு குழந்தைகளுக்கான வடிவங்கள், பெரியவங்களுக்குக் கூடை வடிவம், சதுர வடிவம், கூம்பு வடிவம்னு கற்பனைக்கேத்தபடி எவ்வளவு மாடல் வேணா பண்ண முடியும். ஒரு நாளைக்கு 15 பெட்டிகள் வரை பண்ணலாம். பெட்டிகள் செய்யறப்ப வெட்டி எறியற குட்டி பேப்பர்கள்ல கிப்ட் டேக் பண்ணிடலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘பரிசுப் பொருள்கள் விற்பனையாகிற எல்லா கடைகள்லயும் ஆர்டர் எடுக்கலாம். பிறந்த நாள் பார்ட்டிகளுக்கு குழந்தைகளுக்கு ரிட்டர்ன் கிப்ட் போட்டுக் கொடுக்கவும் ஆர்டர் எடுக்கலாம். 25 ரூபாய்லேர்ந்து 100 ரூபாய் வரைக்கும் பெட்டிகள் இருக்கு. 50 சதவிகித லாபம் வச்சு விற்கலாம்.’’

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites