இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Wednesday, September 26, 2012

கறி மசாலா பொடி

இன்று அவசர காலத்தில் அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஆனால் வீட்டில் இருந்து சமையலுக்கு தேவையா பொருள்கள் தயார் பண்ணுவதில் நேரம் இல்லை .எனவே இது போன்ற பொருள் மார்க்கெட்டில் நல்ல வரவேற்ப்பு இருக்கும் .குறைந்த முதலிடு இதற்கான இயந்திரம் மற்றும்  உதிரி பாகம்  தமிழ் நாட்டில் கிடைக்கும் .அணை வரும் விட்டில் இருந்த படி இந்த தொழில் செய்யலாம் .முதலீடுகட்டமைப்பு: மெஷின் நிறுவ, பணியாற்ற 10க்கு 10 அடி அறை போதும். பைகளை இருப்பு வைக்கவும், அலுவலக பயன்பாட்டிற்கும் கூடுதலாக ஒரு அறை தேவை.நிரந்தர முதலீடு: பேக்கிங் மெஷின் ரூ.200000 லட்சம் ஆகும் .  பயிற்சி  தயாரிப்பு தொடர்பான பயிற்சியை வேளாண் பல்கலைக்கழகம், மகளிர் திட்டம், மாவட்ட...

Monday, September 24, 2012

இட்லி வியாபாரம்

‘இட்லி வியாபாரமா?’ - தனது விசிட்டிங் கார்டை கொடுத்து அறிமுகப்படுத்திக் கொண்ட அத்தனை பேரிடமும், இனியவன் எதிர்கொண்ட முதல் கேள்வி இதுதான்! இன்று திரையுலகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பெரும்புள்ளிகள் தேடும் முக்கிய இடத்தில் இருக்கிறார் இனியவன். இட்லி வியாபாரமா என இளக்காரமாகப் பார்த்த அதே பிசினஸ்தான், இன்று அவரை இத்தனை உயரம் தொட வைத்திருக்கிறது. ‘மல்லிப்பூ இட்லி’ என்கிற பெயரில் இவர் தயாரிக்கிற இட்லி, ரொம்பவே ஸ்பெஷல்! பிரபலங்கள் வீட்டு விசேஷ விருந்துகளில் இனியவனின் இட்லிக்கே முதலிடம்! ‘‘பெரிசா படிக்கலை. எட்டாவது படிச்சிட்டு தொழிலதிபராகியிருக்கிறவன் நான். அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சின்னு பெரிய குடும்பம். இட்லி, தோசை, பூரிங்கிறதெல்லாம்...

டெல்லி அப்பள ஸ்டால்

இதாங்க தஞ்சை அண்ட் கோ(வடசேரி) -வின் டெல்லி அப்பள ஸ்டால்..... அப்பளம் ஆகும் முன் அடிவாங்குகிறது தண்ணீரும் அப்பள மாவும்... நீருடன் சேர்த்து இளகுவான அதாவது பதமான நிலையில் சுழலுகிறது..... தட்டில் ஊற்றப்பட்ட மாவு ஒரே சுழற்றில் தட்டுமுழுவதும் பரவுகிறது.... மாவுடன்கூடிய தட்டு கடாயில் கொதிக்கும் தண்ணீரில் இட்டு வேக வைக்கப்படுகிறது.. தட்டில் வெந்த அப்பளம் தட்டிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது.... அணிவரிசையாக அடுக்கப்பட்ட அப்பளங்கள்..... பிறகு இங்கு அவற்றை காய வைக்கப்படுகிறது.... நன்றி :http://arumaii.blogspot.com/2012/01/blog-post_22.ht...

நம்பிக்கைதான் மூலதனம்

தொழில் செய்ய அதிக முதலீடு தேவையில்லை... உழைப்புதான் தேவை. எந்த தொழிலையும் நேர்மையாகவும், முழு கவனத்துடனும் செய்தால் நிச்சயம் சாதிக்கலாம் என்கிறார் அருள். இவர், தன் மனைவி லதாவுடன் இணைந்து கொளத்தூரில் ‘அக்ஷயா குடில்’ என்ற சிற்றுண்டி உணவகத்தை நிர்வகித்து வருகிறார். இந்த தம்பதி தமது தொழில் அனுபவத்தை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்...பள்ளிப்படிப்பை முடிச்சிட்டு, சொந்தமா பிளே ஸ்கூல் அல்லது முதியோர் இல்லம் அல்லது சின்னதா ஒரு உணவகம் ஆரம்பிக்க நினைச்சேன். ஆனா குடும்பம், குழந்தைகள்... வேலைக்கு போகும் கட்டாயம் ஏற்பட்டது. கை நிறைய சம்பளம் இருந்தாலும், மனதில் தொழில் செய்யணும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. அதற்கு அடிதளம் போட்டவர் பூ விற்கும் பெண்மணி ஒருவர்.கூடை நிறைய பூ, விற்றால் தான் அவருக்கு வருமானம். ஒரு பெண் கஷ்டப்பட்டு தொழில் செஞ்சு குடும்பத்தை காப்பாற்றும் போது, நம்மால் ஏன் முடியாது என்று...

சிப்ஸ் தயாரிப்பில் சிறப்பான வாழ்க்கை

சிம்பிளான உணவுதான்! ஆனாலும், சாதாரண ரசம் சாதத்தையும் அறுசுவையாக்குவதில் இருந்து, அறுசுவை விருந்தில் தவிர்க்க முடியாத இடம் பெறுவது வரை சிப்ஸின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். சாப்பிடவே அடம் பிடிக்கிற பிள்ளைகளுக்கும், சிப்ஸ் இருந்தால், இரண்டு வாய் அதிகமாகவே இறங்குவதை மறுப்பதற்கில்லை. இப்படி எல்லா வயதினருக்கும் எல்லாக் காலத்திலும் பிடித்த உணவாக இருக்கும் சிப்ஸை கடைகளில் வாங்குவது எந்தளவு ஆரோக்கியமானது? திரும்பத் திரும்ப உபயோகிக்கிற எண்ணெய், கிழங்கின் தரம், செய்கிற சூழல் என எல்லாவற்றிலும் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் இல்லை. ‘வீட்லயே செய்யலாம்தான்... ஆனா கடைகள்ல வாங்கற மாதிரி டேஸ்ட்டும் கலரும் கிடைக்கிறதில்லையே...’ என்பது அம்மாக்கள் சொல்லும் நியாயமான காரணம். ‘‘நான் சொல்ற மாதிரி செய்து பாருங்க. அப்புறம் கடையில விக்கிற சிப்ஸ் வேணாம்னு சொல்ற அளவுக்கு நீங்க சிப்ஸ் எக்ஸ்பர்ட் ஆயிடுவீங்க’’ என்கிறார்...

கொட்டாங்குச்சி தொழில்

பிள்ளையார், மனித உருவங்கள், கோமாளி, பேனா ஸ்டாண்டு, பூக்கூடை... இன்னும் இப்படி எத்தனையோ இருக்கின்றன அங்கு! அத்தனை பொருட்களும் கொட்டாங்குச்சியில் செய்யப்பட்டவை என்றால் நம்ப முடியவில்லை. சென்னையிலுள்ள பள்ளி ஒன்றில் கைவினைக் கலை ஆசிரியராக வேலை பார்க்கிற லட்சுமியின் கைவண்ணத்தில் சாதாரண கொட்டாங்குச்சி கூட கலைப் பொருளாகிறது.‘‘32 வருஷங்களா கைவினைப் பொருட்கள் பண்ணிட்டிருக்கேன். புதுசா எதையாவது வாங்கி, ஒரு கலைப் பொருளை உருவாக்கிறதைவிட... தேவையில்லைன்னு ஒதுக்கித் தள்ற பல பொருட்களை, அழகான கலைப் பொருளாக்கிக் காட்டறதுல எனக்கு ஆர்வம் அதிகம். அதுல ஒண்ணுதான் இந்தக் கொட்டாங்குச்சி டிசைன்கள்’’ என்கிற லட்சுமி, கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.என்னென்ன தேவை? முதலீடு?‘‘உபயோகமில்லாத கொட்டாங்குச்சி, ஃபேப்ரிக் கலர், எம் சீல், வார்னிஷ், அலங்காரப் பொருட்கள்... வெறும் 75 ரூபாய் முதல் 100 ரூபாய் வரைதான்...

Saturday, September 22, 2012

விடிவெள்ளி’

தேவைகள்தான் நம்மை வெளிச்சத்தை நோக்கி நகர வைக்குது. ரெண்டு குழந்தைகளோட அநாதரவா நின்ன நிலைதான், என்னையும் சுயமுன்னேற்றத்தை நோக்கி ஓடவெச்சுது. உழைப்பும், உறுதியும் கைகொடுக்க, ‘வெற்றிகரமான சுயதொழில் முனைவோர்’ங்கற பெருமையோட இப்ப நான் நிமிர்ந்து நிக்கறேன்!” – நிதானமான வார்த்தைகளில் ஆரம்பித்தார், சென்னை, கிண்டியைச் சேர்ந்த ஸ்டெல்லா. இன்று ‘பேப்பர் ஃபைல்’ பிஸினஸில் மாதம் சுமார் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கும் ஸ்டெல்லாவின் நேற்றைய பக்கங்கள், துயரமும் தோல்வியும் நிரந்தரமல்ல என்கிற பாடம் சொல்பவை. சென்னை, ராயபுரம், காசிமேடு பகுதியில் ‘விடிவெள்ளி’ என்று போர்டு மாட்டிய தன் கடையில், வேலைகளுக்கு இடையே நம்மிடம் பேசினார் ஸ்டெல்லா.”தஞ்சாவூர்தான் நான் பிறந்த...

புதிய தொழில் முனைவோருக்கு 'டிக்' முன்னுரிமை

தமிழகத் தொழில் முதலீட்டு கழகம் (டிக்), வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கு, நடப்பு 2012-13ம் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளது.நிலம், கட்டடம், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு, நீண்ட கால தவணையில் கடன் வழங்கி வரும், தமிழக அரசின், 'டிக்' மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. அரிசி மற்றும் மாவு ஆலைகள், எண்ணெய் உற்பத்தி, கடல் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் போன்ற 25க்கும் மேற்பட்ட வேளாண் பொருள் மதிப்புக்கூட்டு தொழில் துவங்குவோருக்கு, கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மாறுபடும் வட்டி விகிதம்: ஒரு தொழில் நிறுவனத்திற்கு, குறைந்தபட்சம் 14.75 சதவீதம், அதிகபட்சம் 16.25 சதவீதம் வட்டியில், இரண்டு லட்சம் ரூபாய் முதல் 20 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் கடன்களுக்கு, மாறுபடும் வட்டி விகித...

Sunday, September 16, 2012

கைத்தறி

நம் நாட்டின் பாரம்பரியத் தொழில்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாகக் கருதப்படுவது கைத்தறி நெசவுத் தொழில். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் குடும்பங்கள் கைத்தறி நெசவுத் தொழிலை வாழ்வின் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. விவசாயத்தைத் தொடர்ந்து தற்போது கைத்தறி நெசவுத் தொழிலும் அழியும் நிலையில் இருப்பதாகக் கவலை தெரிவிக்கிறார்கள் நெசவாளர்கள். ஏன் இந்த நிலமை? எந்தத் தொழிலாக இருந்தாலும் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைத்தாலே தொழிலாளர்களின் மனமும் வயிறும் நிரம்பிவிடும். எல்லா சிறு தொழில்களிலும் இருப்பதைப் போலவே கைத்தறி நெசவாளர்களுக்கான கூலியைக் கைத்தறி முதலாளிகளே நிர்ணயிப்பதுதான் பிரச்னையின் அடிநாதம். இந்தப் பிரச்னைகுறித்து கைத்தறி நெசவாளியான சேலம் மாவட்டம்,...

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்

இது கதையா, இல்லை உண்மையா? கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடி யில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும். அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும். மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !! வலிக்கு தே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் ” என்று தீர்மானித்துக் கொள்ளும். அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும். சரி, இதுதான் நமது விதி. இந்த கூண்டுக்குள்...

Thursday, September 13, 2012

வாழ்த்து அட்டைகள்

'கையிலே கலைவண்ணம் கண்டார்!’ என்று பாட்டுப் பாடவைக்கிறார் ஜோதி. பேனா ஸ்டாண்ட், வாழ்த்து அட்டைகள், போட்டோ ஃபிரேம்கள், கோப்புகள், பரிசுப் பெட்டிகள் என்று அழகழகாய் கைவினைப் பொருள்களை உற்பத்தி செய்யும் 'லட்சுமி கிராஃப்ட்ஸ்’ நிறுவன உரிமையாளர் ஜோதி. ''கைவினைப் பொருள்கள் மீது சிறு வயதிலேயே இருந்துவந்த ஈடுபாடுதான், இப்போது ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் அளவுக்கு என்னை உயர்த்தி இருக்கு. வாழ்த்து அட்டைகள்தான் எங்கள் கைவினைப் பொருள்களிலேயே ரொம்பவும் ஸ்பெஷல். காரணம், அட்டையில் பயன்படுத்தப்படும் இயற்கையான மலர்களும், இலைகளும்! இதற்கு என்றே அலுவலக மாடியில் மலர்ச் செடிகளை வளர்த்துவருகிறோம். நான் பிறந்தது நாசிக். ஆனா படிச்சது, வளர்ந்தது எல்லாமே புதுச்சேரிதான்....

அன்பளிப்புப் பெட்டி செய்வது

சின்ன சாக்லெட்டில் இருந்து, ஸ்பெஷல் பரிசு வரை எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன அன்பளிப்பு கொடுத்தாலும், அதை அழகான பெட்டியில் வைத்து, அலங்கரித்துக் கொடுப்பதுதான் இப்போது ஃபேஷன். உள்ளே இருக்கும் பரிசைப் போலவே, அதைச் சுற்றியிருக்கும் அட்டையும் அலங்காரமும்கூட ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை எந்த வயதினருக்குமான பரிசுப் பொருள்களையும் வைத்துக் கொடுக்க விதம் விதமான வடிவங்களில், வெவ்வேறு அளவுகளில் பெட்டிகள் கிடைக்கின்றன இன்று. அன்பளிப்புப் பெட்டிகள் செய்வதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் சென்னையைச் சேர்ந்த மணிமேகலை. ‘‘படிச்சது கெமிஸ்ட்ரி. பேரும் பணமும் சம்பாதிச்சுக் கொடுக்கிறதென்னவோ சின்ன வயசுலேர்ந்து நான் கத்துக்கிட்ட கலைகள்தான். பேப்பர் பை மற்றும் பேப்பர் பொருள்கள் பண்ணிட்டிருந்தேன். வித்தியாசமான பொருள் எது கிடைச்சாலும், அதைப் பிரிச்சு, எப்படிப் பண்ணியிருக்காங்கனு...

பணம் தரும் பழைய உடை பைகள்

உடைகளுக்கும், அழகு சாதனங்களுக்கும் அடுத்தபடியாக பெண்களை அதிகம் கவர்வது கைப்பைகள். வேலைக்குச் செல்ல ஒன்று, விருந்தினர் வீட்டுக்கு ஒன்று, ஷாப்பிங் செய்ய ஒன்று என ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் ஒவ்வொரு விதமான பைகளை எடுத்துச் செல்ல விரும்புவது அவர்களது இயல்பு. வசதி இருப்பவர்களுக்கு அது சாத்தியம். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? ''கவலையே வேண்டாம். உங்களோட பழைய புடவை, சல்வார், ஜீன்ஸ், டாப்ஸ்னு என்ன இருந்தாலும், அதை அழகான ஹேண்ட்பேகா மாத்தலாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்ரா. பி.காம் பட்டதாரியான இவர் இன்று முழுநேர கை வினைக் கலைஞர். ஐந்நூறுக்கும் மேலான கைவினைக் கலைகள் கற்று வைத்திருக்கிற சித்ரா, வேஸ்ட் துணிகளில் வித்தியாசமான கைப்பைகள் செய்வதில் நிபுணி. ஆர்வமுள்ளோருக்கு வழிகாட்டுகிறார் அவர். என்னென்ன தேவை? முதலீடு? ‘‘தையல் மெஷின், பழைய புடவை, பாவாடை, சுடிதார், ஜீன்ஸ் பேன்ட், பிளவுஸ் பிட் என கைவசம்...

உபயோகித்த உடையில் பை (BAG ) செய்வோம்

சில வருடங்களுக்கு முன் உடைகள் வாங்கும் போது கூடவே அந்த கடையின் விளம்பரத்தோடு ஒரு மஞ்சள் பை கிடைக்கும்.அதிகமானோர் வீட்டில் உயர் கூடை சில அளவுகளில் டிசைன்களில் இருக்கும்.இப்போ இது இரண்டுமே உபயோகத்தில் குறைந்து விட்டது.வருடங்கள் அதிகரிக்க அதிகரிக்க,நாகரீகமும் அதிகரித்து மக்களின் தேவைகளிலும்,உபயோகத்திலும் மாற்றங்கள்,முன்னேற்றங்கள். உபயோகிக்கும் பைகளிலும் மாற்றங்கள். பல வண்ணங்களிலும்,வடிவங்களிலும்,பைகள் வரத்தொடங்கி மக்களால் உபயோகிக்கப்படுகின்றன.தற்போது சாமானியர்கள் அதிகம் உபயோகிப்பது இரண்டு மரப்பிடிகள் கொண்ட’ கட்ட பை’ என பேச்சு வழக்கில் சொல்லப்படும் பைகள்.இந்த பைகள் தனியாக விற்கப்படுவதல்லாமல்,மஞ்சள் பை கொடுத்த துணிக் கடைகள்,மளிகை சாமான் மற்றும்...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites