இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, July 15, 2012

பானை ஓவியம்

நட்சத்திர ஓட்டல்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், பிரபலங்களின் வீடுகளில் வரவேற்பறையை அலங்கரிக்கும் அழகழகான பானைகளைப் பார்த்திருப்பீர்கள். வெறும் பானையாகவோ அல்லது பூங்கொத்து அலங்காரங்களுடனோ அழகு சேர்க்கும் அந்தப் பானைகளுக்கு ‘டெரகோட்டா பாட் பெயின்டிங்’ என்று பெயர்! டேபிளின் மேல் வைக்கிற குட்டி பானை முதல், ஆளுயர பானை வரை விதம்விதமான அளவுகளில் டெரகோட்டா பானை ஓவியங்கள் 
என்னென்ன தேவை? முதலீடு?
‘‘டெரகோட்டா பானைகள் (சாதாரண பானைகள் விற்பவர்களிடமே கிடைக்கும்), செராமிக் பவுடர், ஃபேப்ரிக் பெயின்ட், ஆயில் பெயின்ட், வார்னிஷ், பிரஷ், பசை.... பானை 30 ரூபாயிலிருந்து கிடைக்கும். செராமிக் பவுடர் 1 கிலோ 40 ரூபாய். பானைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, மத்த பொருள்களுக்கும் சேர்த்து ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானது.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?
‘‘பானையின் வடிவத்தைப் பொறுத்தது மாடல்... வட்டம், நீளம், கிண்ண வடிவம், கூஜா வடிவம் என விதம்விதமான வடிவங்கள்ல பானைகள் கிடைக்கும். தேவைக்கும், இட வசதிக்கும் ஏத்தபடி டிசைன் பண்ணிக்கலாம். பூ டிசைன்தான் ரொம்பப் பிரபலம். பழக்கொத்து, மரக்கிளையில பறவைகள் உட்கார்ந்திருக்கிற மாதிரியும் பண்ணலாம். பெயின்ட் பண்ணி, வார்னிஷ் அடிச்சிட்டா, எத்தனை வருஷமானாலும் பானையோட அழகு மாறாம, புதுசாவே இருக்கும்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘நட்சத்திர ஓட்டல்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், பார்ட்டி ஹால், வீடுகள்னு எல்லா இடங்கள்லயும் இதுக்கான தேவை இருக்கு. கிரகப்பிரவேசத்துக்கு பொருத்தமான அன்பளிப்பு. சின்ன சைஸ் பானைக்கான அடக்க விலை 150 ரூபாய் ஆகும். அதை 300 ரூபாய்க்கு விற்கலாம்.’’


தேவையான பொருட்கள்:
மண்பானை 1
சிவப்பு எனாமல் கலர் 50மில்லி
வார்னிஷ்
செராமிக்பவுடர்
ஃபெவிக்கால்
தண்ணீர்
பாலித்தீன் கவர்
கத்தரிக்கோல்
ரங்கோலி கலர் பவுடர்
கண்ணாடி உருண்டை வடிவம்
கோல்டன் கலர் 3டி அவுட்லைனர்.

செய்முறை:

முதலில் பானையை கழுவி காயவிடவும்
காய்ந்ததும் சிவப்பு எனாமல்கலர் அடித்து காய்ந்ததும் மறுபடி இன்னொரு கோட் அடிக்கவும் அப்பொழுதுதான் ஷைனிங்காக இருக்கும்.
பாலித்தீன் கவரை கோன்போல் செய்துக்கொள்ளவும்.
செராமிக்பவுடரில் தேவையான கலர்பவுடரை சேர்த்து ஃபெவிக்கால்விட்டு கலந்துகொள்ளவும் மேலும் பேஸ்ட் போல் வருவதற்கு தண்ணீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இதை கோனுக்கு மாற்றி டேப் போட்டு ஒட்டவும்.
கோனில் சிறு ஓட்டை போட்டு டிசைனை வரையலாம்.இந்த பானையில் முதலில் உருண்டை வடிவம் வரைந்து அதன் மேலும் கீழும் அவுட்லைன் போடவும், மேலும் 
கற்பனைக்கு ஏற்றவாரு டிசைன் செய்து, ரவுன்ட் ஷேப்பில் கண்ணாடி பதித்து சுற்றி கோல்டன் க்ளிட்டர் கலரை அவுட்லைன் கொடுக்கவும்.
முழுவதும் முடிந்து காய்ந்ததும் வார்னிஷ் அடிக்கவும்.இதனால் இன்னும் ஷைனிங்காக இருக்கும்.


0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites