இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, July 2, 2012

பட்டுப்புழு வளர்ப்பு குடிலுக்கான மானிய தொகை அதிகரிப்பு

சென்னை: "பட்டுப்புழு வளர்ப்புக் குடில் கட்டுவதற்கான மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படும்' என, ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத், சட்டசபையில் அறிவித்தார்.
இத்துறை மீதான மானியத்தில், அமைச்சர் அறிவித்த புதிய அறிவிப்புகள்:
* பட்டுப்புழு வளர்ப்பு, புழு வளர்ப்புக் குடில் மற்றும் தனி நபர் விபத்து காப்பீட்டிற்கான தவணைத் தொகையில், 25 சதவீதத்தை தற்போது பயனாளிகள் செலுத்தி வருகின்றனர். அவர்களின் பங்களிப்பு, 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகவும், மாநில அரசின் பங்களிப்பு, 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக மாற்றப்படும்.
* சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், சிறிய அளவிலான இளம்புழு வளர்ப்பு மையங்கள் அமைத்து, மானிய விலையில் தளவாடங்கள் தரப்படும். இதற்காக, நடப்பு நிதியாண்டில் 50 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
* விவசாய தோட்டங்களின் வரப்பு ஓரங்களில், மூன்று லட்சம் மல்பரி மரக் கன்றுகள் நடவு செய்ய, நடப்பு நிதியாண்டில், 26.25 லட்ச ரூபாய் மானியம் தரப்படும். இந்த மல்பரி தோட்டங்களுக்கு, மண் பரிசோதனையின்படி, விலையில்லா நுண்ணூட்ட சத்துக்கள் வழங்க, 40 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) மூலம், கைவினைஞர்களுக்கு நேரடி சந்தை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக நடப்பு நிதியாண்டில், 1.65 கோடி ரூபாய் செலவில், 220 கண்காட்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
* பூம்புகார் நிறுவனம் தமது விற்பனை அதிகரிக்க, கைவினைப் பொருட்களை கணினி மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* பட்டு விவசாயிகளுக்கு புழு வளர்ப்புக் குடிலின் அளவிற்கேற்ப வழங்கப்படும் மானியத் தொகை, 75 ஆயிரம் ரூபாயிலிருந்து, ஒரு லட்ச ரூபாய்; 50 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரம் ரூபாய்; 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 37 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு, அமைச்சர் சம்பத் அறிவித்தார்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites