இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, May 1, 2012

கர்ப்பிணிகள் ஹேர் ட்ரையர் யூஸ் பண்ணாதீங்க : குழந்தைக்கு ஆபத்து

கர்பிணிப் பெண்கள் ஹேர் ட்ரையர் உபயோகித்தாலோ, மைக்ரோவேவ் ஓவன், வாக்வம் கிளீனர் ஆகியவை உபயோகித்தாலே கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமாவரும் என்று ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது.

வாழ்க்கையில் வசதிகள் பெருக பெருக இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கிராமங்களில் கூட இன்றைக்கு சமைக்க மைக்ரோவேவ் ஓவன் பயன்படுத்தி வருகின்றனர். வீட்டில் தூசிகளை சுத்தம் செய்த வாக்வம் கிளீனர் என வாழத்தொடங்கிவிட்டனர் மக்கள். வசதிக்காக வாங்கிய பொருட்கள் இன்றைக்கு மக்களின் ஆரோக்கியத்தை அசைத்து பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டது. குறிப்பாக கர்பிணிப் பெண்கள் வாக்குவம் கிளீனர், ஓவன் பயன்படுத்தினால் அது கருவில் உள்ள குழந்தையின் நுரையீரலை பதம் பார்க்கிறதாம். அதேபோல் கூந்தலை சீக்கிரம் உலர வைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஹேர் ட்ரையர் கூட குழந்தையை பாதிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் உள்ளிட்ட மின்காந்த சக்திதான் என்று தெரியவந்துள்ளது.

வடக்கு கலிபோர்னியாவில் வசிக்கும் 801 கர்ப்பிணிகளிடம் மைக்ரோவேவ் அதிகம் உள்ள கருவிகளின் பயன்பாடு பற்றி கருத்து கேட்டனர்.

பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் மருத்துவ விவரங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர். 13 ஆண்டுகள் கழித்து அந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான அறிகுறிகள் பற்றி ஆராய்ந்தனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மின்காந்த கருவிகளை குறைவாக பயன்படுத்தியவர்களைவிட அதிக நேரம் பயன்படுத்திய கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது.

இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள குழுவின் தலைவர் டிகுன் லி, கர்ப்பிணிகள் மின்காந்த கருவிகளின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது அவசியம். அத்துடன் அவை இயங்கும் போது அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதை தடுக்க முடியும் என அறிவுறித்தியுள்ளார்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites