இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, February 20, 2014

திருச்சி பொண்ணுங்க ரொம்ப லக்கி!''
''மாடர்ன் டிரெஸ்ஸா இருந்தாலும் சரி, சேலையாக இருந்தாலும் சரி அதுக்கு உரிய நகைகள் போடும்போதுதான்  மதிப்புகூடும். தங்கம், பேப்பர், குந்தன், கிரிஸ்டல் நகைகளைவிட இந்த ஜங்கிள் நகையைப் போடும்போது எல்லோர் பார்வையும் உங்க மேலதான் இருக்கும். வயசைக் குறைச்சு அழகு கூட்டுற ரகசியம் இதுல இருக்கு'' என்கிறார் திருச்சியில் ஜங்கிள் ஜுவல்ஸ் செய்யும் பாலமுரளி.
நெல், கல் வாழை, யானை குண்டுமணி, மயில் கொன்றை போன்ற 15 வகையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு  200-க்கும் மேலான டிசைன்களில் நகை செய்கிறார்கள். '' இந்த ஜங்கிள் நகைகள் மாடல், பாரம்பரியம் என எல்லா ஆடைகளுக்கும் மேட்ச் ஆகிறதால, போற இடத்துல ஒரு கூட்டத்தைக் கூட்டிடலாம்'' என்கிறார் பாலமுரளி.
இரண்டு குழுவாகப் பிரிந்து, மிகவும் பொறுமையாகச் செய்யவேண்டிய வேலை இது. வேலை செய்பவர்கள் கைகளை உற்றுக் கவனித்தால் நம் தலை 'கிர்ர்ர்...' என சுற்றும் அளவுக்கு செம ஸ்பீடாக இருக்கிறது. ''பாசிமணி, கிரிஸ்டல், முத்து மணி, பவள மணி இல்லாமல் மூலிகை விதைகளில் இருந்து நகைசெய்ய ஐடியா கொடுத்தது பாலா சார்தான்'' என்கிறார்கள் எக்ஸ்பிரஸ் டீம் தோழிகள்.
''எங்க தாத்தா, அப்பா காலத்துல இருந்தே மூலிகைத் தோட்டம் வெச்சிருக்கோம்.  முன்னாடி, காய்ச்சல்னா வீட்டுலேயே மூலிகை கஷாயம் போட்டுத்தருவாங்க.  இப்போ சின்னதா ஒரு எறும்பு கடிச்சாலும் டாக்டர்கிட்ட ஓடுறாங்க. இப்ப உள்ள மக்களுக்கு மூலிகைகளின் பயனை எப்படிக்கொண்டு சேர்க்கலாம்னு நானும் என் நண்பன் வினோத்தும் சேர்ந்து யோசிச்சோம். இதுல இருந்து கலைப்பொருள், பெண்கள் பயன்படுத்துற நகை பண்ணலாம்னு ப்ளான் பண்ணினோம்.
ஆரம்பத்துல நாங்களே சில மாடல்ஸ் கிரியேட் பண்ணி, அதை ஆர்வமுள்ள பெண்களுக்கும் சொல்லிக்கொடுத்தோம். அதே குழு பெண்களை வெச்சே பெரிய அளவுல நகை பிசினஸ் ஆரம்பிக்க நினைச்சோம். ஆனா, எனக்கு உறுதுணையா இருந்த நண்பன் வினோத், பிசினஸ் ஆரம்பிச்ச அன்னைக்கே விபத்துல இறந்துட்டான். 'அவனே போய்ட்டான்... இனிமே இது எதுக்கு’னு இருந்தேன். ஆனா, ஒரே ஒரு நாள் மட்டுமே பயிற்சிக்குவந்த பெண்கள் யாரும் என்னைவிடலை. அவங்களோட ஆர்வம் காரணமாக நானும் இதுல இறங்கினேன்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாடல்ல கிரியேஷன் பண்ணுவாங்க. இங்கே வேலைசெய்ற எல்லோரும் நிறைய படிக்கலைனாலும் திருச்சியைத்தாண்டி சென்னை, கோவைவரைக்கும் ஸ்டால் போட்டு விற்பனை செய்றாங்க. வாங்குகிற எல்லோருமே கேட்கும் முதல் கேள்வி, ' இது எதுல செஞ்சது?’ என்பதுதான். விதைனு சொன்னா நம்பமாட்டாங்க. 25 ரூபாய்ல இருந்து 750 ரூபாய் வரைக்கும் விலையில் இருந்தாலும், யாரும் விலையைப் பார்க்காம டிசைனை மட்டுமே பார்த்து வாங்குறாங்க
.
இந்த நகைகளை பாம்பே, டெல்லி, ஜெய்ப்பூர், பெங்களூரு, அமெரிக்காவரைக்கும் ஏற்றுமதி பண்றோம். அதிலும் வெப்சைட் மூலமா ஆன்லைன்ல நிறைய சேல்ஸ் ஆகுது. நம்ம சைடுல சாதாரண நெல்லுதானேனு அலட்சியப்படுத்துறாங்க. ஆனா, நெல்லுனா என்னன்னே தெரியாத மக்கள் இதை ரொம்ப விரும்புறாங்க.
திருச்சியில உள்ள பொண்ணுங்க ரொம்பக் கொடுத்து வெச்சவங்க. ஏன்னா... அவங்க டிரெஸ்ஸுக்கு மேட்ச்சா, பிடித்த  டிசைன்ல செய்யச்சொல்லி வாங்கிட்டுப் போகமுடியுது. அதிலும் பொண்ணுங்களைவிட அதிகமா பசங்கதான், அவங்க லவ்வரை இம்ப்ரஸ் பண்றதுக்காக வாங்கிட்டுப் போறாங்க. அதனால, திருச்சி பொண்ணுங்க டபுள், டிரிபிள் லக்கிதான்''  சிரிக்கிறார் பாலமுரளி!
- மா.நந்தினி

2 comments:

ivarhalai eppadi thodarbu kolvadhu?

தங்கள் வருகைக்கு நன்றி திருநவநீத கிருஷ்ணா அவர்கள்

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites