சேலைக்கேற்றபடி ஜாக்கெட் அணிந்தது அந்தக் காலம். இப்போது ஜாக்கெட்டுக்கேற்றபடி சேலை வாங்குவதே லேட்டஸ்ட். ஆடம்பரமான வேலைப்பாடு செய்த ஜாக்கெட், சிம்பிளான சேலைதான் இன்றைய பெண்களின் ட்ரெண்ட். அதிலும் குறிப்பாக பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட ஜாக்கெட்டுகளுக்கு எல்லா வயதுப் பெண்களிடமும் வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த லட்சுமி, பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட ஜாக்கெட்டுகளை டிசைன் செய்வதில் நிபுணி!
‘‘டென்த் வரைக்கும்தான் படிச்சிருக்கேன். 13 வருஷங்களா டெய்லரிங்தான் சோறு போடுது. ஜாக்கெட் தைக்கிறதுல நான் எக்ஸ்பர்ட். என்கிட்ட கொடுத்தா ஃபிட்டிங் கச்சிதமா இருக்கும்னு நல்ல பேரை சம்பாதிச்சு வச்சிருக்கேன். டிசைனர் ஜாக்கெட்டும் தச்சுக் கொடுக்கிறேன். ஜாக்கெட் தச்சுக் கொடுத்திட்டிருந்தப்ப, சிலர் அதுலயே டிசைன் பண்ணித் தரச் சொல்வாங்க. சின்னச் சின்ன டிசைன்கள் வச்சுத் தச்சுக் கொடுக்கிறது சுலபம். ஆனா, பேட்ச் ஒர்க் ரொம்பவே கஷ்டம்.
புடவைக்கு மேட்ச்சா, அதே கலர்ல, அதே டிசைன்ல துணியை கட் பண்ணி, ஜாக்கெட்ல வச்சு டிசைன் பண்ணிக் கொடுக்கற அந்த விஷயம் எல்லா டெய்லர்களுக்கும் வராது. நிறைய பெண்கள் பேட்ச் ஒர்க் பண்ணித்தரச் சொல்லிக் கேட்டதும், நான் முறைப் படி அதைக் கத்துக்கிட்டு, தைக்க ஆரம்பிச்சேன். பேட்ச் ஒர்க்னு சொன்னதும் நிறைய பேர், புடவையிலேருந்து ஒரு துண்டுத்துணியை வெட்டி, அட்டாச் பண்ணிக் கொடுக்கிறதுதானேன்னு நினைக்கிறாங்க. அது அப்படியில்லை... எல்லா மெட்டீரியல்லயும் அதைச் செய்ய முடியாது.
என்ன கலர், என்ன மெட்டீரியல் பொருத்தமா இருக்கும்னு பார்க்கணும். வெட்டறதோ, டிசைன் பண்றதோ கொஞ்சம் தப்பானாலும், ஜாக்கெட் வேஸ்ட் ஆயிடும். சிலர் புடவை கிராண்டா இருக்கணும், ஜாக்கெட் சிம்பிளா வேணும்னு கேட்பாங்க. ஒருசிலர், சிம்பிளான சேலையை எடுத்துட்டு, ஜாக்கெட்டை கிராண்டா டிசைன் பண்ணித்தரச் சொல்லிக் கேட்பாங்க. வயசு, சேலையோட தன்மை, பட்ஜெட்னு பல விஷயங்களை மனசுல வச்சுக்கிட்டுத்தான் இதை டிசைன் பண்ணணும்’’ என்கிற லட்சுமி, பேட்ச் ஒர்க் உடன், எம்பிராய்டரி வேலைப்பாடும் சேர்த்துக் கேட்போருக்கு அதையும் செய்து கொடுக்கிறாராம்.
‘‘சாதாரண ஜாக்கெட்னா ஒரு நாளைக்கு 10 கூட தைக்கலாம். டிசைனர் ஜாக்கெட்டும் பேட்ச் ஒர்க் ஜாக்கெட்டும் 3தான் தைக்க முடியும். ஆனா, தைக்கிற நுணுக்கமும் கற்பனையும் கை வந்துட்டா, லாபத்துக்குக் குறைவே இருக்காது. ஒரு ஜாக்கெட்டுக்கு டிசைனை பொறுத்து 350 ரூபாய்லேருந்து அதிகபட்சமா 2 ஆயிரம் வரைக்கும் வாங்கலாம். 100 சதவிகித லாபம் நிச்சயம்’’ என்கிறவர், 3 மாடல் பேட்ச் ஒர்க் ஜாக்கெட்டுகளை 3 நாள் பயிற்சியில் 1,500 ரூபாய் கட்டணத்தில் கற்றுத் தருகிறார். ( 97100 44540)