இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, October 22, 2013

ஸ்டைலு ஸ்டைலுதான்...ஃபுட்டு ஸ்டைலுதான்!'

சஞ்ஜீதா ஃபுட் ஸ்டைலிஸ்ட்

பஞ்சே தோற்றுப் போகும். அத்தனை வெண்மையான, மென்மையான இட்லி...
தலையால் தண்ணீர் குடித்தாலும், வீட்டில் சாத்தியமே படாத மொறு மொறு தோசை...
பார்த்தாலே பசி தீர்க்கச் செய்கிற புசுபுசு பூரி...
இன்னும் இப்படி எத்தனையோ...
ஹோட்டல் மற்றும் உணவுப்பொருள்
விளம்பரங்களில் வருகிற பல படங்கள்
அதிலிருந்து எடுத்து ‘அப்படியே சாப்பிடலாமா’ என நினைக்க வைக்கும்!
‘அவங்களுக்கு மட்டும் எப்படித்தான் அவ்ளோ அழகா வருதோ... வீட்ல செய்தா அப்படி வர்றதில்லை’ என்கிற பொறாமையும் புலம்பலும் வீட்டுக்கு வீடு நிச்சயம் இருக்கும். உங்களை பிரமிக்க வைக்கிற உணவு விளம்பரங்கள் அத்தனையின் பின்னணியிலும், ‘ஃபுட் ஸ்டைலிஸ்ட்’ என்கிற உணவு அலங்கார நிபுணர்களின் கைவண்ணம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?


சென்னையின் பிரபல பெண் ஃபுட் ஸ்டைலிஸ்ட்டுகளில் ஒருவர் சஞ்ஜீதா. அவரது அனுபவங்களும், ஃபுட் ஸ்டைலிங் பற்றி அவர் சொல்கிற தகவல்களும் சுவையோ சுவை!

‘‘பூர்வீகம் உதய்பூர். எம்.ஏ. எகனாமிக்ஸும், எம்.பி.ஏ-வும் முடிச்சிட்டு ஒரு கம்பெனியில வேலை பார்த்திட்டிருந்தேன். அங்கே என் கணவர் கிருஷ்ணகுமாரை சந்திச்சேன். அவர் தமிழர். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு, சென்னை வந்தோம். குழந்தைகள் பிறந்ததும், அவங்க ஓரளவு வளர்ற வரைக்கும் வேலைக்குப் போக முடியலை. இயல்புலேயே எனக்கு சமையல் ரொம்பப் பிடிக்கும். ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சேன். அப்பல்லாம் எங்கம்மாவுக்கு போன் பண்ணி, சமையல் குறிப்பு கேட்டு, ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து சமைப்பேன். 

ஜெயின் சாப்பாடு பிரமாதமா பண்ணுவேன். கல்யாணத்துக்குப் பிறகு கணவர் வீட்டு தமிழ் சாப்பாட்லயும் விதம் விதமா கத்துக்கிட்டு செய்ய ஆரம்பிச்சேன். வெறுமனே வீட்ல சமைக்கிறதோட நிறுத்திக்காம, ஒரு வெப்சைட் தொடங்கி, அதுலயும் பகிர்ந்துக்க நினைச்சேன். அப்படித்தான் sanjeetakk.blogspot.in உதயமாச்சு. நான் டிராவல் பண்ற இடங்களோட ஸ்பெஷல் ரெசிபி, எல்லாருக்கும் பிடிச்ச அயிட்டங்கள்னு இதுல எல்லாத்துக்கும் இடமுண்டு. இன்னொரு பக்கம் www.litebite.in ன்னு இன்னொரு வெப்சைட் ஆரம்பிச்சு, அதுல வெறும் டயட் சமையல் மட்டும் எழுதறேன். 

மைதா, எண்ணெய், நெய், கொழுப்புன்னு எதுவுமே இல்லாத 100 பர்சென்ட் டயட் சாப்பாட்டுக்கான இடம் அது. ரெசிபிகளை மட்டும் பகிர்ந்துக்கிறதுக்குப் பதில், அதோட படங்களையும் சேர்த்துப் போட்டா நல்லாருக்குமேன்னு தோணவே, முதல்ல சாதாரண கேமராவுல நான் சமைக்கிறதை எல்லாம் படம் எடுத்துப் போட்டுக்கிட்டிருந்தேன். அப்புறம் புரொஃபஷனல் கேமரா வாங்கி, நானாவே போட்டோகிராபி கத்துக்கிட்டு, எடுக்க ஆரம்பிச்சேன். சமைச்ச உணவை அழகா ப்ரெசென்ட் பண்றதுங்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். அதுக்காக ரொம்ப மெனக்கெடுவேன். 

என் குழந்தைங்களுக்கு லன்ச் பாக்ஸ்ல இட்லியோ, தோசையோ கொடுத்தனுப்பினாகூட, அதையுமே வித்தியாசமா டெகரேட் பண்ணி,  டப்பாவை திறந்ததுமே சாப்பிடத் தூண்டற அளவுக்கு அழகுப்படுத்திக் கொடுப்பேன். என்னோட அந்த இயல்புதான் இன்னிக்கு என்னை ஒரு ஃபுட் ஸ்டைலிஸ்ட்டா அடையாளப்படுத்தியிருக்கு. என்னோட பிளாக்ல நான் போட்டிருந்த படங்களையும் அலங்காரங்களையும் பார்த்துட்டு, தீபா வாஸ்வானி-ன்னு ஒரு போட்டோகிராஃபர் கூப்பிட்டாங்க. அவங்க பண்ணப் போற ஃபுட் போட்டோகிராபிக்கு என்னை ஃபுட் ஸ்டைலிஸ்ட்டா ஒர்க் பண்ணக் கேட்டாங்க. 

பிரவுன் ட்ரீ-ன்னு ஒரு கம்பெனிக்கு அவங்க போட்டோகிராபி பண்ண, நான் ஃபுட் ஸ்டைலிங் பண்ணிக் கொடுத்தேன். அதுதான் ஆரம்பம். அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள்... அதுல டூ ஸ்கொயர்னு ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கும், பப்பட் ஜமால் கம்பெனிக்கும் ஒர்க் பண்ணின அனுபவம் மறக்க முடியாதது...’’ என்கிற சஞ்ஜீதா, ஃபுட் ஸ்டைலிங் பற்றிக் கொஞ்சம் விளக்குகிறார்.‘‘சாப்பிடற சாப்பாடு டேஸ்ட்டியா இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதோட அழகும் பிரசன்ட்டேஷனும். பார்த்ததும் சாப்பிடத் தூண்டணும். 

பொதுவா ரெஸ்டாரன்ட்டுல உணவு சமைக்கிற செஃப்தான் அதை டெகரேட் பண்ணுவாங்க. அவங்களோட கவனம் முழுக்க அந்த உணவு மேல மட்டும்தான் இருக்கும். ஆனா, ஒரு ஃபுட் ஸ்டைலிஸ்ட் வெறுமனே உணவை மட்டும் பார்க்காம, அதோட பின்னணி, கலர், அதோட தன்மை, லைட்டிங்னு சகலத்தையும் பார்த்து, அதுக்கேத்தபடி அழகுப்படுத்துவாங்க. ‘டெகரேஷன்தானே... யார் வேணா பண்ணிட முடியாதா’ன்னு நினைக்கலாம். அப்படியில்லை... அதீத கற்பனையும் புதுமையான முயற்சிகளும் வேணும். 

அரேபியன் ரெஸ்டாரன்ட்டுன்னா, உணவை வைக்கிற தட்டு, பாத்திரம், சுத்தியுள்ள அழகுப் பொருள்கள்னு எல்லாமே அதே ஸ்டைல்ல இருந்தாகணும். செட்டிநாடுன்னா, சாப்பாட்டைப் பார்த்ததுமே அந்த ஃபீலை கொண்டு வரணும்’’ என்கிறவர், தன் வீட்டின் ஒரு அறை முழுக்க ஃபுட் ஸ்டைலிங் செய்யத் தேவையான பொருள்களுக்காக ஒதுக்கியிருக்கிறார். உணவலங்காரம் செய்கிற ஃபுட் ஸ்டைலிஸ்ட்டுகளுக்கு தேவை அதிகமிருப்பதைத் தெரிவிக்கிற சஞ்ஜீதா, இந்த வேலைக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டியது அவசியமில்லை என்றும், தெரிந்து வைத்திருப்பது ஒரு கூடுதல் தகுதி என்றும் 
சொல்கிறார்.
style style It is ... food style! '

‘‘வீட்ல சமைக்கிறதும், சமைச்சதை அழகா பிரசென்ட் பண்றதும் தனி விஷயம். ஆனா, அதுவே ஒரு போட்டோ ஷூட்டுக்காக ஸ்டைலிங் பண்ற போது, அதுல ருசியை விட அழகு முக்கியம். அதுக்கு நாங்க சில கண்கட்டு வித்தைகளைச் செய்யறதுண்டு’’ என்றபடியே தொழில் ரகசியங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறார். ‘‘ஐஸ் கட்டிகள் மிதக்கற மாதிரியான இடங்கள்ல நிஜமான ஐஸ்கட்டிகளை உபயோகப்படுத்தினா, போட்டோ செஷன் முடியறதுக்குள்ள கரைஞ்சிடும். அதனால அக்ரிலிக் ஐஸ் கட்டிகளை உபயோகிப்போம். ஸ்ட்ராபெர்ரி மேல லிப்ஸ்டிக் தடவி, அதோட கலரை இன்னும் அதிகப்படுத்துவோம்.

அரை வேக்காடு சமைச்ச காய்கறிகள்தான் போட்டோவுல பசுமையா தெரியும். பழங்கள், அப்போ பறிச்ச மாதிரி ஃப்ரெஷ்ஷா தெரிய ஏரோசால் டியோடரன்ட் யூஸ் பண்ணுவோம். பஞ்சு உருண்டைகளை தண்ணியில நனைச்சு, மைக்ரோவேவ் செய்து வச்சா, ஆவி பறக்கற அயிட்டங்களுக்கு ஆவியைத் தரும். சமைக்காத அசைவ உணவுகள் மேல பிரவுன் கலர் ஷூ பாலீஷ் தடவினா, பொரிச்ச லுக் கிடைக்கும். வேக வச்ச உருளைக்கிழங்குல கலர் சேர்த்து, ஐஸ்கிரீமுக்கு பதிலா யூஸ் பண்ணுவோம். இதெல்லாம் ஜஸ்ட் ஃபார் போட்டோஸ். சாப்பிட முடியாது...’’ எனச் சிரிக்கிறவருக்கு, ஃபுட் ஸ்டைலிங் செய்யவென பிரத்யேக ஸ்டூடியோ ஆரம்பிப்பதே அடுத்தகட்ட ஆசை!

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites