இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 20, 2013

அன்புக்கும் உண்டு அழகான பெட்டி!

அன்பளிப்பை அசத்தலாகக் கொடுப்பவர்கள் ஒரு ரகம் என்றால், அன்பளிப்பு வைத்துக் கொடுக்கும் அட்டைப்பெட்டியையே அழகாகக் கொடுப்பவர்கள்  இன்னொரு ரகம். உள்ளே இருப்பது 2 ரூபாய் சாக்லெட்டாக கூட இருக்கலாம். அதை வைத்துக் கொடுத்த பெட்டியின் மதிப்போ, பரிசுப் பொருளைவிட  அதிகமாக இருக்கும். சென்னையைச் சேர்ந்த மணிமேகலை டிசைன் செய்கிற அன்பளிப்புப் பெட்டிகள் ஒவ்வொன்றையுமே அன்பளிப்பாகக்  கொடுக்கலாம். அத்தனை அழகு!
It has a beautiful box!
‘‘சுற்றுச்சூழலுக்கு உகந்த பேப்பர்ல நிறைய கைவினைப் பொருள்கள் செய்யத் தெரியும். அதுல ஒண்ணுதான் இந்த கிஃப்ட் பாக்ஸ். சாக்லெட்டோ,  குட்டிக்குட்டி நகைகளோ எதை அன்பளிப்பா கொடுக்கிறதா இருந்தாலும், அதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவுக்குள்ளதான் வச்சுக் கொடுப்போம். பிளாஸ்டிக்  சுற்றுச்சூழலுக்குக் கெடுதலானதுன்னு சொல்லிக்கிட்டே, இன்னொரு பக்கம் ஏதோ ஒரு ரூபத்துல அதை உபயோகப்படுத்தறது எந்த வகையில  நியாயம்? 

என்னோட ஃப்ரெண்ட்ஸ், குடும்ப நபர்களுக்கெல்லாம் அன்பளிப்பு கொடுக்கும்போது, என் கைப்பட செய்த பேப்பர் கிஃப்ட் பாக்ஸுக்குள்ளதான் வச்சுக்  கொடுப்பேன். உள்ளே இருக்கிற அன்பளிப்பைவிட, கிஃப்ட் பாக்ஸுக்கு அதிகமான பாராட்டு கிடைக்கும். ரீசைக்கிள்டு பேப்பர், கன்ஸ்ட்ரக்ஷன் பேப்பர்,  சார்ட் பேப்பர், ஹேண்ட்மேடு பேப்பர்னு பலவிதமான பேப்பர்ல இதைச் செய்யலாம். தரத்தைப் பொறுத்து ஒரு ஷீட் 30 ரூபாய்லேருந்து கிடைக்கும். 

ஏ3, ஏ4 சைஸ் பேப்பராகவும் வாங்கலாம். வட்டம், சதுரம், செவ்வகம்னு சாதாரண வடிவங்கள் தவிர, ஸ்ட்ராபெர்ரி, திறந்து மூடும் அலமாரி டிசைன்,  பென்சில், பேனா வடிவம், இதய வடிவம்னு கற்பனைக்கேத்தபடி 25க்கும் அதிகமான மாடல்கள் பண்ணலாம். பெட்டிகளைச் செய்து முடிச்சதும், அதுல  குந்தன் ஸ்டோன், முத்து, சமிக்கி ஒட்டறது, சாட்டின் ரிப்பன் கட்டறதுன்னு இன்னும் அழகுப்படுத்தலாம். நமக்குத் தேவையான எந்த சைஸ்லயும்  பண்ண முடியும். அன்பளிப்பு வந்த பெட்டியை, அப்புறமா வேற விதமாவும் பயன்படுத்திக்கலாம்.

ஒரு நாளைக்கு 12 முதல் 15 பெட்டிகள் வரைக்கும் செய்ய முடியும். 30 முதல் 100 ரூபாய் வரை விற்கலாம். கண்காட்சிகள், நகைக் கடைகள்,  அன்பளிப்புப் பொருள்கள் விற்கற கடைகள்ல விற்பனைக்கு வைக்கலாம். உட்கார்ந்த இடத்துலயே கை நிறைய சம்பாதிக்க இதுதான் சரியான சாய்ஸ்’’  என்கிற மணிமேகலையிடம் ஒரே நாளில் 5 மாடல் அன்பளிப்புப் பெட்டிகளை 500 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம்.  (98846 12156)

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites