இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, October 22, 2013

அடுத்த தலைமுறை அவஸ்தைப்படலாமா

இந்தியா ஆசீர்வதிக்கப்பட்ட நாடு. நமக்குத் தேவையான உணவுப் பொருட்களை வருஷத்தின் எல்லா நாட்கள்லயும் கொடுக்கிறது நம்ம பூமி.  தானியம், காய்கறி, பழங்கள், எண்ணெய் வித்துக்கள்னு கொடுத்து நம்மை வாழ வைக்குது. ஆனா, நமக்குதான் உணவின் மகத்துவம் தெரியறதில்லை.  உணவுப் பொருட்களை வீணடிக்கறதும்கூட ஒரு வகையில் உணவுப் பஞ்சத்துக்குக் காரணம்’’. அழுத்தம் திருத்தமாகப் பேச ஆரம்பிக்கிறார் கவிதா  அபிராமி. தஞ்சாவூர், ‘இந்திய பயிர் பதன தொழில்நுட்ப நிறுவன’த்தின் (Indian Institute of Crop Processing Technology)  துறைத் தலைவர்.  உணவுகளைப் பதனிட்டு, பாதுகாத்து, தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும்  கற்றுத்தரும் பணியில் இருப்பவர். 

‘‘திருச்சிக்கு அருகே இருக்கும் குமுளூர்ல ‘பி.இ. அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங்’ படிச்சேன். விவசாயம் படிக்கறவங்க மண்ணின் தன்மையில ஆரம்பிச்சு  விதை, நடவு, அறுவடை செய்யும் முறைகளை எல்லாம் படிப்பாங்க. ‘விவசாய பொறியியல்’ படிப்போ, விவசாயத்துக்குத் தேவையான மெஷின்களைப்  பயன்படுத்தும் தொழில்நுட்பம் தொடர்பானது. உழவுக்கு எந்த இயந்திரத்தைப் பயன்படுத்தலாம், விதை தூவுவதற்கு எந்த மெஷின் சிறந்தது,  அறுவடைக்கு எந்த இயந்திரத்தைப் பயன்படுத்தினால் சீக்கிரமே வேலைகள் முடியும் என்பதையெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். 

இறுதியாண்டு படிச்சப்போதான் ‘உணவுப் பதனிடுதல்’ முறைகளுக்காகவே தனி கோர்ஸ் இருப்பது தெரிஞ்சுது. கோயம்புத்தூர், ‘தமிழ்நாடு விவசாய  பல்கலைக்கழக’த்தில் ‘எம்.இ. ஃபுட் ப்ராசஸிங் இன்ஜினியரிங்’ சேர்ந்தேன். 2 வருஷப் படிப்பு. பருவ காலங்களில் தேவைக்கு அதிகமாக உணவுப்  பொருள்கள் உற்பத்தியானால் வீணாகும். அதை எப்படிப் பாதுகாத்து மற்ற நாட்களில் பயன்படுத்தலாம் என்பதைக் கத்துக் கொடுத்தாங்க. உணவுப்  பொருள்களை பதப்படுத்தி சாப்பிடுவது பற்றிய போதிய அறிவு நம்மிடம் இல்லை. 

‘இந்திய அளவில் வெறும் 3 சதவிகிதம் உணவுப் பொருள்கள் மட்டுமே பதப்படுத்தப்படுகின்றன. சுமார் 30 சதவிகிதம் காய்கறிகள், பழங்கள்  வீணாகின்றன’ என்பதை எங்கள் ஆய்வில் கண்டுபிடித்தோம். உலக அளவில் பால் உற்பத்தி யில் முதலிடம், இறைச்சி, வாசனைப் பொருட்கள்,  பயிர்கள் உற்பத்தியில் இரண்டாம் இடம் என பல பெருமைகள் நம்ப நாட்டுக்கு இருக்கு. ஆனா, அவற்றை வீணடிக்காமல் சரியான முறையில்  பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. இதை எப்படிச் சரி செய்யலாம்கறதை கத்துக் கொடுக்குறதுதான் ‘பதனிடுதல்’ படிப்பு. 

அறுவடையாகும் தானியங்கள், காய், கனிகளை பத்திரமா ‘பேக்’ பண்ணி குடோனுக்கு கொண்டு போறது கூட முக்கியமானது. ஏன்னா அதுல பாதி,  வழியிலேயே வீணாகலாம். பதனிடுதல் படிக்கிறவங்க முதல்ல காய்கறி, பழங்களை உயிருள்ள பொருளா நினைக்கணும். அப்போதான் அதைப்  பாதுகாக்க முடியும். பயிர்களும் செடிகளும் மரங்களும் நம்மைப் போலத்தான் சுவாசிக்குது. காற்று அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் நமக்கு  என்ன பிரச்னை வருமோ அது அவற்றுக்கும் வரும். சரியான டெம்பரேச்சர்ல இல்லைன்னா காய்கறிகள், பழங்கள் கெட்டுப் போகும்... சரியாக பழுக்காம  வெம்பிப் போகும்.  

முனைவர் பட்டத்துக்கு ‘மாற்றியமைக்கப்பட்ட சூழலில் தக்காளியை இருப்பு வைத்தல்’ என்ற ஆய்வை செய்தேன். உயர் ஆராய்ச்சிக்காக கனடா  போனேன். பிறகு, இந்தப் பதனிடுதல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். தஞ்சாவூரை சுற்றி இருக்கும் இடமெல்லாம் விவசாய பூமி. தேவைக்கு  அதிகமாகவே பொருள்கள் விளையும்... நம் கண் முன்னாடியே வீணாகும். இங்கே இருக்கும் விவசாயிகளுக்கு ‘பதனிடு தல்’பற்றிய விழிப்புணர்வு  தேவைப் படுது. அவங்க உற்பத்தி செய்வதைப் பதனிட்டு, பாதுகாத்து வைத்து, தேவையான போது கொடுக்கிறோம். 

உதாரணமா, சீசனில் தேவைக்கு அதிகமாக விளையும் மாம்பழங்களிலிருந்து மில்க்ஷேக், ஜூஸ்னு செய்யறோம். இதனால உணவுப் பொருள்கள்  வீணாவது குறையுது. உணவுப் பொருட்களில் என்னென்ன தயாரிக்கலாம் என்பதற்கான பயிற்சிகளையும் தர்றோம். இந்திய அளவில் பதனிடுதல்  தொழில்நுட்பத்துக்கான உயர்ரக இயந்திரங்களை நாங்க மட்டும்தான் வச்சிருக்கோம். அதை இங்கே இருக்கும் விவசாயிகள் பயன் படுத்திக்கிறாங்க. 

இன்னும் சில வருடங்களில் தண்ணீர், மண்வளம் குறையும். அப்போ உணவுக்கான தேவை அதிகமாகும். இப்போ நாம பதப்படுத்தி, சேமிச்சு  வைக்கலைன்னா ரொம்பக் கொடூரமான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உணவுக்காக அடுத்த தலைமுறை அவஸ்தைப்படக்  கூடாது என்பதுதான் எங்களோட நோக்கம்’’- ஆதங்கத்துடன் சொல்கிறார் கவிதா அபிராமி.         
                                            
உணவுத் தொடர்பான படிப்புகளில் சேர வேண்டுமா? 


ஆலோசனை சொல்கிறார் ‘சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ துறைத் தலைவர் திரிலோகசந்தர்... உணவு சார்ந்த படிப்புகளில் பல துறைகள் இருக்கின்றன. பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராஃப்ட் படிப்பாகவும், பிளஸ் டூவில் தேறியவர்களுக்கு  டிப்ளமோ கோர்ஸாகவும் கிடைக்கிறது. பேக்கிங் ஒன்றரை வருட டிப்ளமோ படிப்பு. முதல் வருடம் இன்ஸ்டிடியூட்டில் படிக்க வேண்டும். அடுத்த 6  மாதங்கள் இண்டஸ்ட்ரியல் ட்ரெயினிங். வருடத்துக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவாகும். ‘ஃபுட் புரொடக்ஷன்’ என்ற ஒரு வருட படிப்புக்கு ரூ.25  ஆயிரம் செலவாகும். 

‘பி.ஜி. டிப்ளமோ இன் டயட்டிக்ஸ் அண்ட் ஹாஸ்பிட்டல் ஃபுட் சர்வீசஸ்’ படித்தால் டயட்டீஷியனாகலாம். வருடத்துக்கு ரூ.30 ஆயிரம் செலவாகும்.  இந்தக் கட்டணங்கள் அரசு கேட்டரிங் கல்லூரிகளுக்கானவை. தனியார் கல்லூரிகளில் இதைப் போல இரு மடங்கு செலவாகும். சென்னை தரமணியில்  இருக்கும் ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்’, திருச்சி துவாக்குடியில் அமைந்திருக்கும் ‘ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல்  மேனேஜ்மென்ட்’ - இரண்டும் அரசு கேட்டரிங் கல்லூரிகள். இங்கே வருடத்தின் எல்லா நாட்களிலும் இலவச கேட்டரிங் பயிற்சியை வழங்குகிறார்கள். 

48 நாட்கள் பயிற்சி வகுப்பு. 18 முதல் 28 வயது வரை உள்ள ஆண், பெண்கள் பங்கேற்கலாம். எட்டாம் வகுப்பு தேறியிருந்தால் போதும். தஞ்சாவூரில்  இருக்கும் ‘பயிர் பதன தொழில் நுட்ப நிறுவனம்’, ‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்’, ‘கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம்’ ஆகியவற்றில்  ‘பி.டெக்., ஃபுட் ப்ராசஸிங் இன்ஜினியரிங்’ கற்றுக் கொடுக்கப்படுகிறது. 4 வருடப் படிப்பு. எம்.டெக். படிப்பும் உண்டு. வேளாண் பல்கலையில்  முதுகலைப் படிப்பாக ‘அக்ரிகல்ச்சர் பிராசஸிங்’ வழங்கப்படுகிறது. இதற்கு வருடத்துக்கு ரூ.80 ஆயிரம் செலவாகும். சென்னை, பெசன்ட் நகர், ராஜாஜி  பவனில் உணவு பதப்படுத்துதலுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது.depression the next generation?

The Director
Indian Institute of Crop Processing Technology
Ministry of Food Processing Industries, Government of India
Pudukkottai Road, Thanjavur - 613 005
Tamil Nadu
India

 
(: 91 4362 228155
Fax : 91 4362 227971
* director@iicpt.edu.in,

SOUTHERN REGION

CFNEU, A-1-A, Rajaji Bhawan, Besant Nagar, Chennai-600 090
4916004
CFNEU, Block No.1, Ground Floor Kendriya Sadan, Sultan bazar Hyderabad - 500195
4658085
CFNEU, Ground Floor, 'A' Wing, Kendriya Sadan 100 ft. Road Koramangala, Bangalore - 560034
5536270
CFNEU, No.1, Ramamurthy Road, Madurai-625002
530838
CFNEU, Andhra University Campus Waltair, Visakhapatnam - 530003
555835
CFNEU, "Peace Home", T.C.No. 26/930 Panavila Junction, Thiruvananthapuram - 695001
331239
CFNEU, 28/217-1/Tripunithura Road Manorama Junction, Cochin - 682036
311267
CFNEU, 48-12-1, Ringh Road, Gunadala Vijayawada - 520005
541662
CFNEU, 3rd Floor, Manipady Complex Old Kent Road, Pandeswar Mangalore - 575001
420692
CFNEU, No.30, Suryagandhinagar 11 Cross, Near Ambika Theatre Pondicherry - 605003
39007

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites