இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Tuesday, January 29, 2013

ஒரு கலை... ஒரு கண்ணாடி



ண்ணாடிப்பொருள் ஏதாவது உடைந்து விட்டால் என்ன செய்வோம்? ஈரத்துணியை வைத்து ஒற்றியெடுப்போம். இல்லையென்றால், 'கண்ணாடி உடைந்துவிட்டால் கைகளில் படாமல் எடுக்க வேண்டுமா? கோதுமை மாவில் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து அதை கண்ணாடி துண்டுகளின் மேல் ஒற்றியெடுத்தால் கைகளில் காயம் ஏற்படாது' என்று டிப்ஸ் தரலாம். ஆனால் சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த வைதேகி, உடைந்த கண்ணாடி துண்டுகளை அற்புதமான கலைப்படைப்பாக்கிவிடுகிறார். அந்தக் கலையை நம் தோழிகளுக்கும் கற்றுத் தருகிறார்.

தேவையான பொருட்கள்:

டிரேசிங் பேப்பர், 2 மி.மீ 10ஜ்10 கண்ணாடி, கிளாஸ் கலர் அவுட் லைனர், கிளாஸ் கலர், ஃபேப்ரிக் க்ளோ, பிரஷ், வட்ட வடிவ கண்ணாடி துண்டுகள், வெள்ளைப்பசை, உடைந்த கண்ணாடி துண்டுகள்.

 
  செய்முறை:


 
 
 
  • கண்ணாடிக்கு அடியில் டிரேசிங் பேப்பரை வைக்கவும் (படம் 1).
  • டிரேசிங் பேப்பரில் இருக்கும் டிசைனில் திராட்சைக்கொத்து தவிர மற்ற டிசைன்களை கிளாஸ் அவுட் லைனர் மூலம் கண்ணாடி மேலே வரையவும் (படங்கள் 2, 3).
  • இதை பத்து நிமிடம் காயவிட்டால், கிளாஸ் கலர் காய்ந்துவிடும். டிசைன் கட்டங்களுக்கு ஏற்ற அளவில் இருக்கும் கண்ணாடி துண்டுகளை வெள்ளைப்பசை மூலம் கண்ணாடியில் ஒட்டவும் (படங்கள் 4, 5).
  • திராட்சைக்கொத்து டிசைனில் வட்ட வடிவ கண்ணாடி துண்டுகளை ஒட்டவும் (படம் 6).
  • பழங்களுக்கு மேலே இலை போல வெள்ளைநிற கிளாஸ் கலரால் வரையவும் (படம் 7). 
  • இப்போது கண்ணாடி துண்டுகளுக்கு கலர் அடிக்க வேண்டும். முதலில் அன்னாசிப்பழ இலை மீது பச்சை நிற கிளாஸ் கலரை துளித்துளியாகக் கொட்டி, பிரெஷ்ஷின் பின்புறத்தால் கண்ணாடி துண்டுகள் மீது பரவலாக அடிக்க வேண்டும் (படங்கள் 8, 9). 
  • டிசைனுக்கு வெளியே வரைந்திருக்கும் இலைகளுக்கும் இதே போல கலர் அடிக்க வேண்டும் (படம் 10). 
  • வாழைப்பழத்துக்கு மஞ்சளும், அன்னாசிப்பழத்துக்கு ஆரஞ்சும் அடிக்க வேண்டும் (படங்கள் 11, 12). 
  • ஆப்பிள்களுக்கு சிவப்பும், பேரிக்காய்க்கு அடர் பச்சைநிறமும் அடிக்க வேண்டும் (படம் 13). 
  • பழக்கூடைக்கும், வாழை சீப்பின் காம்புக்கும் பிரவுன் கலர் அடிக்கவும் (படம் 14). 
  • திராட்சைக்கொத்தை அப்படியே விட்டுவிட்டால், பளிச்சென்று கண்ணைப்பறிக்கும் பழக்கூடை தயார் (படம் 15).
உடைந்த கண்ணாடி துண்டுகளும் வண்ணங்களும் மட்டும்தான் மூலப்பொருள் என்பதால் தயாரிப்பு செலவு இருநூறு ரூபாய்க்குள்தான் இருக்கும். கிளாஸ் கலரை பலநிறங்களில் வாங்கிவைத்துக்கொண்டால், இதேபோல விதவிதமான டிசைன்கள் செய்யலாம். ஃபிரேம் செய்து மாட்டிவிட்டால் எந்த வீட்டு வரவேற்பறையாக இருந்தாலும் அதிக அழகோடு மிளிரும்! இதை நண்பர்களுக்குப் பரிசளிப்பதோடு, கேட்கிறவர்களுக்கு நல்ல விலைக்கு விற்கலாம். இனி கண்ணாடி உடைஞ்சுதேன்னு கவலைப்படமாட்டீங்க, தேவையில்லாத கண்ணாடி பொருட்களை நீங்களே உடைச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை!''

வாழ்க்கை வண்டியும் சூப்பரா ஓடுது!


பெரிய படிப்பெல்லாம் ஒண்ணும் படிக்கலை. ஆனா, கைத்தொழில் கத்துக்கிட்டேன் இன்னைக்கு என்னை நம்பி நான் நம்பிக்கையுடன் சொல்கிறார் இருபதெட்டு வயதாகும் கலா.


ன்ன தொழில் கத்துக்கிட்டீங்க என்று கேட்டால், " அவரின் பேச்சு வேகத்தோடு ஓட ஆரம்பிக்கிறது தான் கற்றுக்கொண்ட டிரைவிங் தொழிலை நோக்கி... வெறும் ஒன்பதாவது வகுப்பு வரைதாங்க படிச்சேன். அதுக்குபிறகு, வீட்ல படிக்க வைக்க வசதியில்லை. அதன்பின் ஐந்து வருடமா வீட்லதான் இருந்தேன் வீட்டு வேலைகளை மட்டும் செய்துக்கொண்டு, எங்க படிப்பு இல்லாம போச்சு, வேற எதுவுமே நமக்கு தெரியாது, எப்படி வாழ போறோம்னு யோசிச்சுட்டு இருந்தப்ப, ஏதாவது வேலைக்கு போகலாம்ன்னு தோணிச்சு. படிப்புதான் இல்லை தெரிஞ்ச வீட்டு வேலையை வைத்து முதலில் ஹோம் நர்ஸிங் வேலைக்குதான் ட்ரை பண்ணினேன். அப்படி நான் போனப்பதான் என் வாழ்க்கை பாதை(சாலை) வேறு ஒன்றை நோக்கி பயணம் செய்ய ஆரம்பமானது. ஆமாங்க, அனுசந்திரன்கிறவங்க படிக்காத பெண்களுக்கு சுயமா கைத்தொழில் அமைச்சு தருகின்ற டிரெஸ்ட் வச்சு நடத்திகிட்டு இருக்காங்க. அவங்ககிட்டதான் போய் வேலைகேட்டேன். அப்ப அவங்க என்கிட்ட டிரைவிங் தெரியுமான்னு கேட்டாங்க.
 
அப்பதான் நான் சொன்னேன் எனக்கு ரோடே ஒழுங்கா க்ராஸ் பண்ண தெரியாது அப்புறம் எங்க டிரைவிங் தெரியறது சொன்னவுடனே, அவங்க நீ டிரைவிங் கத்துக்கோன்னு சொல்லி எனக்கு டிரைவிங் கத்துக்கொடுத்தாங்க. என் மேலே எனக்கே நம்பிக்கை இல்லாதபோது அவங்க என்மேல வைத்த நம்பிக்கைதான் எனக்கு பயணத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கு. இருபதே நாளில் கத்துக்கிட்டேன். முதலில் ஆட்டோதான் ஓட்டினேன். சிலபேர் கிண்டல் கூட பண்ணினாங்க. வீட்டுல ரொம்பவே பயந்தாங்க. அப்பாவும் அண்ணனும் ஆட்டோலாம் ஓட்ட வேண்டாம்னு சொல்லி திட்டினாங்க. ஆனா, எங்கம்மாதான் என் பொண்ணு சிறப்பா வருவான்னு நம்பி எனக்கு பக்கபலமா இருந்தாங்க. சின்மயா வித்யாலயா பள்ளியில்தான் ஆட்டோ ஓட்டினேன். குழந்தைகளை பத்திரமா ஏத்தி கொண்டு போய் விடுறது. ரொம்பவே பொறுப்பு நிறைந்த வேலை. அந்த பொறுப்புதான் எனக்கு டிரைவிங்கோட நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொடுத்தது. வாழ்க்கைமேல ஒரு பிடிப்பும் வந்ததுன்னும் சொல்லலாம். அதன்பின், அப்பா அண்ணா நம்பி விட்டுட்டாங்க.
 
ஐந்து வருடமா ஆட்டோ ஓட்டினேன். அப்பவே கார், வேன் எல்லாம் ஓட்டவும் விருப்பமெடுத்து கத்துக்கிட்டேன். லாரி, பஸ் தவிர மற்ற எல்லாவகை வண்டியும் ஓட்டுவேன். அதன்பின், என்னை Banyan organising அமைப்பில் வேலை பார்த்தேன். அங்க என்னோட வேலை ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. அதாவது, ரோட்டோரமா இருக்கிற மனநல பாதிக்கப்பட்டவங்களை கண்டுபிடித்து அவங்கள கொண்டு போய் சேர்க்கணும். நான் வண்டி எடுத்துட்டு கிளம்பி போய் எல்லா இடமும் சுத்துவேன். இதனாலயே எனக்கு சென்னை சிட்டி டிராபிக்கில் எப்படியெல்லாம் ஓட்டலாம்கிற அணுகுமுறை தெரிஞ்சது. மூன்று வருடங்கள் அந்த அமைப்பிலதான் வண்டி ஓட்டிட்டு இருந்தேன். இப்படி ஓடிக்கொண்டே இருந்தவரை... சடன்பிரேக் போட்டு கேட்டோம், திருமணம் பற்றி...
 

என்னோடது காதல் திருமணம்தான். என்னோட தைரியத்தையும் விடாமுயற்சியையும் பார்த்து நேசித்த வந்த காதல். கடவுளோட அருளால கிடைத்தவர் என் கணவர் அருள். என் அப்பா அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்கிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆட்டோ, வண்டி ஓட்டுற பொண்ணு குடும்பத்துக்கு ஒத்துவராதுன்னு சொல்லி, அவரோட வீட்ல சம்மதிக்கலை. அதெல்லாம் தாண்டிதான் எங்க கல்யாணம் நடந்தது. அந்த நம்பிக்கையின் அடையாளம்தான் எங்க பையன் சபரீஷ். இன்னைக்குவரைக்கும் அவங்க வீட்ல ஏத்துக்கலை. கல்யாணத்துக்கு பிறகு கொஞ்சநாள்தான் வண்டி ஓட்டினேன். அதன்பின் நான் ஓட்டலை. என் பையன் பிறந்தபிறகுதான் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சிட்டு இருந்தப்ப, இதுவரைக்கும் நான் கத்துக்கிட்ட டிரைவிங்க மத்தவங்களுக்கும் சொல்லி தரலாம் முடிவு எடுத்து என் கணவர்கிட்ட சொன்னேன். உன் விருப்பப்படி செய்யுன்னு சொன்னாரு.
 
அப்பதான் மாருதி கார் இண்டியாவில டிரைவிங் கத்துக்கொடுக்க ஆள் எடுத்துகிட்டு இருந்தாங்க. பொதுவா இதுபோன்ற பெரிய கம்பெனியில மெக்கானிசம் படிச்சவங்களதான் எடுப்பாங்க. ஆனாலும் நம்பிக்கையோடு இண்டர்வியுவில் கலந்துகிட்டேன். நான் கார் ஓட்டினதையும், கத்துக்கொடுத்த விதத்தையும் பார்த்து என்னை செலக்ட் பண்ணினாங்க. அந்த தன்னம்பிக்கை கொடுத்ததுதான் இங்கே இரண்டு வருடங்களாகியும் இன்னைக்கும் நிறையபேர் கலாகிட்டதான் கத்துக்கணும்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன். இந்த வளர்ச்சிக்கும் என்னை நம்பி வாழ கத்துக்கொடுத்ததுக்கும் நான் என்னைக்குமே அனுசந்திரன் மேடத்துக்கு நன்றிகடன் பட்டிருக்கிறேன். அதுமட்டுமில்லை, பெண்களுக்கு மட்டுமல்ல நான் ஆண்களுக்கும் டிரைவிங் கத்துக்கொடுக்கிறேன். சமயங்களில், அவங்களே என்கிட்ட கத்துக்கணும்னு கேட்கிறாங்க. அதனால, வேலை அதிகமா இருந்தாலும், எனக்கு சந்தோஷம்தான். ஏன்னா, நம்ம வேலையை பிடிச்சுதான கேட்கிறாங்க. இந்த துறைக்கு வந்து பத்து வருடங்கள் ஆகுதுங்க, அதில எனக்கு ரொம்ப சந்தோஷம் தந்தது. 60 வயது அம்மா ஒருத்தவங்களுக்கு டிரைவிங் கத்துக்கொடுத்ததுதான். இன்னைக்கு அவங்களே தனியா கோயம்பேட்டிலிருந்து தி.நகர் வரை கார் ஓட்டிட்டு போறாங்க.
 
அந்தளவுக்கு கத்துக்கொடுக்கிறது ரொம்ப பிடிச்சிருக்குஏன்னா,ஒரு குருவுக்கான அங்கீகாரம் கத்துக் கொடுக்கிறதில தான் கிடைக்குது. அதே நேரத்தில், ஒவ்வொரு நாளும் நானும் புது விஷயங்களை கத்துக்கிறேன். அதோடு, காவல்துறை அதிகாரி லத்திகாசரண் அவர்கள்கிட்ட நல்லா டிரைவிங் பண்றதுக்கான சர்டிபிகேட் கூட வாங்கியிருக்கேன். சரி, உங்க இந்த துறையில உங்களோட ஆசை என்ன என்று கேட்டதற்கு... இன்னும் நல்லா கத்துக்கொடுக்கிறேன்னு நல்ல பேர் வாங்கனும். அப்புறம் சொந்தமா ஒரு கார் வாங்கனும்ங்க. இப்பகூட சமீபத்தில் திருவண்ணாமலை வரை குடும்பத்தோடு போனாம். சொந்தக்காரங்ககிட்ட வண்டி வாங்கிட்டு நானேதான் ஓட்டிட்டு போனேன். சீக்கிரமே சொந்தமா கார் வாங்க வாழ்த்துக்கள் கூறியபோது... கூடுதல் தகவல் ஒன்றை சந்தோஷமாய் கூறினார் என் கணவருக்கு கார் ஓட்ட கத்துக்கொடுத்ததே நான்தாங்க. அதுமட்டுமில்லை, பொதுவா கணவன் மனைவி இரண்டுபேருமே ஒரே தொழில் இருந்தாதான் விட்டுக்கொடுக்கிறதும் புரிதலும் இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, அந்த விஷயத்தில நாங்க இருவருமே வேறு வேறு துறைதான். ஆமாங்க, என் கணவர் எல்லோரையும் அழகு படுத்துற வேலையில இருக்கிறார். பியுட்டீசியன் வேலை அவரோடது. அவருக்கு திங்கள்கிழமை தாங்க லீவு அதனால நானும் அன்னைக்கேதான் லீவு எடுத்துப்பேன். ஏன்னா, வேறு வேறு துறையில் வேலை இருந்தாலும் மனசு ஒண்ணுதானங்க.
 
- லட்சுமி சுந்தரம்

பப்பாளி சாகுபடி!


வறட்சி நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்ட தமிழக மாவட்டங்களில் ஒன்று சிவகங்கை. இதன் காரணமாக பெரும்பாலான விளை நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன.
இத்தகைய சூழலுக்கு நடுவே… சிவகங்கை சூரக்குளம் கிராமத்தில், ஜீரோ பட்ஜெட் முறையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது பப்பாளி சாகுபடி!
புதுச்சேரி மாநிலத்தில் கூரியர் நிறுவன முகவராக இருக்கும் சிவா என்பவருக்குச் சொந்தமான பண்ணைதான் இது.

ஒரு காலத்தில் இந்தப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட அவர், தற்போது தன் தொழிலைப் பார்த்துக் கொண்டே… விவசாயத்தையும் கையில் எடுத்திருக்கிறார். தோட்டத்தை முழுக்க கவனித்துக் கொள்வதற்காக செல்வம் என்பவரை பண்ணை மேலாளராக நியமித்திருக்கிறார் சிவா. இங்கே… பண்ணையை நமக்குச் சுற்றிக. காட்டியபடியே விஷயங்களைப் பகிர்கிறார் மேலாளர் செல்வம்.

“உரிமையாளர், வாரம் ஒரு முறை தோட்டத்துக்கு வந்து செல்கிறார். தினமும் செல்போன் மூலமாக அவர் சொல்கிற ஆலோசனைப்படி விவசாயம் நடக்கிறது. இங்க 5 ஏக்கரில் ‘ரெட்லேடி’ ரக பப்பாளியைக் கூட்டுப்பயி்ரோடு சோர்த்து ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்கிறோம். இந்த ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்கிறோம். இந்த பப்பாளியோட வயது இரண்டு வருடம் தான். இப்ப மகசூல் முடிகிற நேரம்” என்றவர், ஜீரோ பட்ஜெட் முறையில் பப்பாளி சாகுபடி செய்யும் முறைகளைப்பற்றி சொல்லத் தொடங்கினார்.
‘செம்மண் மற்றும் செஞ்சரளை பூமியில் பப்பாளி ந்னறாக வளரும். முதல் கடவை பப்பாளி விதையை கடையில் வாங்கலாம். அடுத்த தடவைகளில் இருந்து நதமே நாற்று தயாரித்துக் கொள்ளலாம். 4X7 இஞ்ச் அளவுள்ள பிளாஸ்டிக் பையில், பப்பாளி விதைகளை நட்டு, நிழலில் வைத்து தினமும் இரண்டு வேளை பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு ஒரு தடவை தண்ணீரில் ஜீவாமிர்தத்தையும் கலந்து தெளித்தால்… நோய் எதிர்ப்புச் சக்தியோடு நாற்று வளரும். விதைத்த 10-ம் நாளில் முளைக்கத் தொடங்கும். அரையடி உயரத்துக்கு மேல் செடிகள் வளர்ந்ததும், நடவு செய்யலாம். அதிகபட்சம் 40-ம் நாளுக்குள் நடவு செய்து விடவேண்டும். நாற்றுத் தயாராகும் நேரத்தில் நடவுக்கான நிலம் தயாரிக்கும் வேலைகளை முடித்துவிட வேண்டும்.

நிலத்தை நன்றாக உழது கொள்ள வேண்டும். பின்பு, ஒரு ஓரத்திலிருந்து வயல் தயாரிப்புப் பணிகளை செய்ய வேண்டும். வரப்பிலிருந்து ஒரு அடி தள்ளி, இரண்டு அடி அகலம் மற்றும் ஆழத்தில் நீளமாக கால்வாய் வெட்ட வேண்டும். அந்தக் கால்வாய்களிலிருந்து 24 அடி தள்ளி அதே போல மற்றொரு கால்வாய் எடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு 24 அடிக்கும், வயலின் அளவைப் பொறுத்து கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும். பிறகு, அவற்றில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழைக் காலங்களில் மேல்மண் அரித்துச் செல்வதைத் தடுப்பதோடு, மழை நீர் நிலத்திலேயே சேகரமாவதற்கும் இந்தக் கால்வாய்கள் உதவும். இரண்டு கால்வாய்களுக்கும் இடையில் இரண்டு அல்லது மூன்று அடி அகலத்தில், வசதிக்கு ஏற்ப மேட்டுப் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இதே போல வயல் முழுவதும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

வயலில் உள்ள காய்ந்த புற்களைக் கொண்டு மேட்டுப் பாத்திகளில் மூடாக்கு போட வேண்டும். பின்பு, சணப்புச் செடிகளைப் பாத்திகளில் பரவளாக நடவு செய்ய வேண்டும். செடிக்கு செடி 9 அடி இடைவெளியும் வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியும் வருவது போல பப்பாளிச் செடிகளை நட வேண்டும். (முதல் வரிசையில் பாத்தியின் ஆரம்பத்தில் ஒரு பப்பாளிச் செடியும், அடுத்த வரிசையில் 9 அடி தள்ளி ஒரு பப்பாளியும், நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் 9 அடிக்கு 6 அடி இடைவெளியில் முக்கோண முறையில் செடிகள் இருக்கும்.) இந்த முறையில் ஏக்கருக்கு 600 செடிகள் வரை நடலாம்.
பப்பாளிக்கு இடையில் ஊடுபயிராக முருங்கை அல்லது வழையை நடவு செய்யலாம். பாத்தியில் இரண்டு பப்பாளிச் செடிகளுக்கு மத்தியில் ஒன்று என் முருங்கை அல்லது வாழையை நட வேண்டும். மீதமுள்ள இடங்களில் செண்டுமல்லி, மக்காச்சோளம், சணப்பு, தட்டைப் பயறு, அகத்தி, காய்கறிகள் போன்றவற்றை பயிர் செய்து கொள்ளலாம். செண்டுமல்லி நடுவதால், மாவுப் பூச்சித் தாக்குதலில் இருந்து பப்பாளியைக் காப்பாற்றலாம். காற்றிலுள்ள நைட்ரஜன் சத்துக்களை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையை தட்டைப் பயறு போன்ற வேர்முடிச்சுப் பயிர்கள் செய்துவிடும். சணப்பு, வேகமாக வளர்ந்து, வயலில் ஒரு நிழல்வலையைப் போல் செயல்படுவதால் பப்பாளிச் செடிகள் பாதுகாப்பாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.
பப்பாளி சாகுபடி
பப்பாளி மரம்
வழக்கமாக பாத்திகளின் மேல் சொட்டுநீர்க் குழாய்களை அமைப்பது போல் இல்லாமல், ஒவ்வொரு பப்பாளிச் செடிக்கும் அருகில் குழாய்கள் வருமாறு குறுக்குவசத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு புறமும் வாய்காலில் உள்ள தண்ணீர், சொட்டுநீர் மூலம் கசியும் தண்ணீர் மற்றும் பாத்திகளில் உள்ள மூடாக்கு ஆகிய காரணங்களால் பாத்திகள் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். எனவே, ஊடுபயிர்களுக்கு என்று தனியாக நீர்ப்பாசனம் செய்யத் தேவையில்லை.
வாரம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். ஏக்கருக்கு 100 விட்டர் ஜீவாமிர்தத்தை ஒரு வாரம் பாசனத்தின் மூலமாகவும், மறுவாரத்தில் தெளிப்பு முறையிலும் மாற்றி மாற்றி செடிகளுக்கு கொடுக்க வேண்டும். இலை வழியாக தெளிக்க பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டாட ஜீவாமிர்தம் வீதம் கரந்து தெளிக்க வேண்டும். பயரின் தேவைக்கு ஏற்ப எத்தனை டேங்க் என்று முடிவு செய்து கொள்ளலாம். 20 நாட்களுக்கு ஒரு தடவை 200 லிட்டர் தண்ணீரில், 5 லிட்டர் மோரைக் கலந்து செடிகள் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நடவு செய்த முதல் 5 மாதம் வரை அக்னி அஸ்திரத்தைத் தெளிக்க வேண்டும். நடவு செய்த 6-ம் மாதம் பப்பாளி பூக்கும். பொதுவாக, பூக்கும் தருணத்தில்தான் பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்கும். தொடர்ந்து மோர்க்கரைசலை தெளித்தால் பூச்சித் தாக்குதல் சுத்தமாக இருக்காது.

நடவு செய்த 8-ம் மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை வீதம் காய்களை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 16 மாத காலம் வரை மகசூல் கிடைக்கும். நன்கு பெருத்த, முனையில் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள காய்களை மட்டுமே பறிக்க வேண்டும். ஒரு மரம் 50 கிலோ முதல் 150 கிலோ வரை மகசூல் கொடுக்கும். 16 மாத காலத்தில் ஒர மரம் குறைந்தபட்சம் 50 கிலோ மகசூல் கொடுப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு ஏக்கரில் உள்ள 600 மரங்களில் இருந்து 30 டன் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ பப்பாளி 7 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது. குறைந்தபட்சம் 7 ரூபாய்க்கு விற்பனை செய்தால்… 2 இலட்சத்து 10 ஆயிரம் கிடைக்கும். இதில் செலவு போக ஏக்கருக்கு ஒரு செலவு போக ஏக்கருக்கு ஒர லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
ஊடுபயிராக சாகுபடி செய்யும் முருங்கை அல்லது வாழைக்குத் தனியாக எந்தப் பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. வாழையைத் தாக்கும் நூற்புழுவை செண்டுமல்லி கட்டுப்படுத்திவிடும். வாழையைத் தாக்கும் வைரஸ் நோயை, வயலில் ஆங்காங்கே உள்ள அகத்தி விரட்டிவிடும். மோர்க் கரைசலும், அக்னி அஸ்திரமும் முருங்கையில் புழு தாக்காமல் செய்கிறது.

ஒரு ஏக்கர் பப்பாளிக்கு நடுவே ஊடுபயிராக 600 வாழை அல்லது 600 முருங்கையை நடலாம். ஒரு முருங்கைச் செடியிலிருந்து குறைந்தபட்சம்15 கிலோ காய் கிடைக்கும். ஆக, 600 முருங்கைச் செடிகளில் இருந்து, 9,000 கிலோ மகசூல் கிடைக்கும். செலவு போக 30 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.
மற்றொரு ஊடுபியிரான செண்டுமல்லி, குறைந்தபட்சம் 1,600 கிலோ என்கிற அளவில் கிடைக்கும். கிலோ 15 ரூபாய் விலையில் விற்பனை செய்தால் 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். காய்கறிகள் மூலமாக 10 ஆயிரம் ரூபாயும் கிடைக்கும். தட்டைப்பயறு மகசூலை ஜீவாமிர்தம் தயாரிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
“பப்பாளி, தட்டைப்பயறு, செண்டுமல்லி, முருங்கை என்று சொல்லும் போது மலைப்பாக இருந்தாலும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது விவசாயம் என்பது எளிமையான இலாபகரமான விவசாயம். பப்பாளி மற்றும் ஊடுபயிரின் மூலமாக ஒரு ஏக்கரில், 24 மாதத்தில் குறைந்தபட்சம் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.

பண்ணை உரிமையாளர் சிவா கூறியது: சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி பக்கத்திலிருக்கிற முத்தூர் இவரது பூர்வீகம். விவசாயம் தான் பரம்பரைத் தொழில். இடையில் எல்லோரும் படிப்பிற்காக குடிபெயர்ந்துவிட்டனர். ஆனாலும் விவசாயத்தின் மீது தனி ஈடுபாடு.
இவரது நிலம் செம்மண் சரளை பூமி. மழை வந்தால் தண்ணீர் தேங்காது. மண்ணை அரித்துக் கொண்டு ஓடிவிடும். இப்படி பல பிரச்சனைகளால், ஆரம்பத்திலிருந்தே பப்பாளியை இயற்கை முறையில் சாகுபடி செய்தாலும் பெரிய வருமானம் இல்லாமல் இருந்துள்ளது. இதற்கு தீர்வாக தனக்கு கிடைத்தது ஜீரோ பட்ஜெட்.
அவர் அறிவுரைப்படி 5 ஏக்கரில் ரெட்லேடி பப்பாளியையும், இடையில் முருங்கை, செண்டுமல்லி, சணப்பு, தட்டைப் பயறு என பல பயிர்களைக் கலந்து பயிர் செய்தார். கூட்டுப்பயிரா செய்வதால் நோய் தாக்குதல் இல்லை. மேட்டுப்பாத்தி அமைத்ததால் களை எடுக்கும் செலவு இல்லை. ஜீரா பட்அஜட்டில் விளையும் காயின் தோல் கெட்டியாக இருப்பதால் அதிக நாள் கெடாமல் இருக்கும்.

வழக்கமாக பப்பாளி இலை சுருங்கி, காய் சின்னதாக இருக்கும். செண்டுமல்லி நட்டதால் அந்தப் பிரச்சனையும் இல்லை. கால்வாய் வெட்டி, நிலத்தைத் தயாரிக்கிற தொழில்நுட்பம் அவருக்கு மிகசும் உதவியாக இருக்கிறது. இவரது செஞசரளை பூமியில் மழை பெய்தால் தண்ணீர் வயலையே அரித்துவிடும். இப்போது எல்லாத் தண்ணீரும் சத்தும் நிலத்திற்குள்ளேயே சேகரமாகிறது என்கிறார்.
இவர் பண்ணையில் விளைகிற பப்பாளியை சென்னையில் இருக்கும் இயற்கை விளைபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு கொடுக்கிறார். இயற்கை முறையில் பப்பாளிக் கூழையும் தயாரிக்கிறார். பப்பாளியைப் பொருத்தவரைக்கும் விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உள்ளூர் பழமுதிர்சோலையிலேயே விற்றிடலாம். இயற்கை முறையில் பப்பாளியை விளைவிக்கும் விவசாயிகள் விற்பனை செய்ய முடியாத நிலையிருந்தால் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் தான் விற்பனைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறுகிறார்.

தொடர்புக்கு: சிவா, 98942-40000

நன்றி: பசுமை விகடன்(25.3.11)
தகவல்: மருதன்

கருப்பை பாதித்தால் ஆப்ரேசன் அவசியமா?


1. சிறுவயதிலேயே பருவமடைவது ஏன்?


அதிகப்படியான கொழுப்புச் சத்து மற்றும் வேதியல் பொருட்கள் நிறைந்த உணவுகளாலும், முறை தவறிய உணவுப் பழக்கங்களாலும் சீக்கிரமே உடல் பருமன் அடைந்துவிடுவார்கள். அதனால் சிறுவயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள். பரம்பரை காரணமாகவும், உடல் & மன ரீதியாக எதாவது பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் சிறுவயதிலேயே பூப்படைந்துவிடுவார்கள். அதுமட்டுமில்லை; இயல்பாகவே பருவம் அடையும் வயது இப்போது குறைந்துவிட்டது. அதனால், இதுபற்றி கவலைப்படவேண்டிய தேவையில்லை. ஆனால், மனதளவில் குழந்தைக்கு பயம் ஏற்படாத அளவுக்கு மாதவிடாய் பற்றி தாய் எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளியில் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு இதுபற்றிய கல்வியை புகட்டவேண்டும்.

2. எந்தெந்த உணவுகளில் கொழுப்புச்சத்து அதிகம் இருக்கிறது?

பிஸா, பர்க்கர், வறுத்த மற்றும் பொறித்த உணவுகள், பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கிறது. அதேபோல பிஸ்கட், சில வகை சாக்லேட்களில் கொழுப்பு அதிகமாக இருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் பிஸா, பர்க்கர் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், நம்முடைய சீதோஷன நிலையே வேறு. இங்கு இவ்வளவு அதிகப்படியான கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் நமக்கு தேவையே இல்லை. நார்மலாக நம்முடைய உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து, நாம் அன்றாடம் உட்கொள்கிற உணவுமுறையிலேயே போதுமான அளவுக்கு இருக்கிறது. அதனால், தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

3. பருவம் வந்த பெண்கள் எந்தமாதிரி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்..?
பருவம் வந்த பெண்களுக்கு ஓரளவு கொழுப்புச் சத்து, அதிகமான புரதச் சத்து தேவைப்படுகிறது. கருப்பை வளர்ச்சிக்கு கொழுப்பும் புரதமும் மிகவும் அவசியம். அதனால்தான் நம்முடைய முன்னோர் பெண் குழந்தைகள் பூப்படைந்ததும் கொழுப்பு, புரதம் உள்ள உளுந்து கஞ்சி, உளுந்து களி செய்து கொடுத்தார்கள். முட்டை கொடுத்து பிறகு நல்லெண்ணெய் உட்கொள்ள வைத்தார்கள். அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே நம் முன்னோர் உணவு பழக்க வழக்கங்களில் எவ்வளவு ஆராய்ந்து ஈடுபட்டு இருக்கிறார்கள்.

4. பூப்படைந்ததும் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிடுமா?
சிலருக்கு பூப்படைந்ததும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் சுழற்சி ஏற்படும். சிலருக்கு ஆறுமாதம்கூட ஆகலாம். ஆனால், ஒரு வருடத்துக்குள் இந்த சுழற்சி சரியாக வந்தாக வேண்டும். சில நேரங்களில் ரத்த சோகை இருந்தால்கூட உதிரப்போக்கு ஏற்படாமல் இருக்கும். அதனால், மூன்று மாதங்களுக்குள் சுழற்சி ஏற்படவில்லை என்றால், என்ன காரணத்தால் ஏற்படவில்லை என்பதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தெரிந்துகொள்வது நல்லது. காரணம், சில நேரங்களில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையும் ஏற்படும். மாதவிடாய் ஏற்படுவதற்கு சரியான ஹார்மோன் சுழற்சி தேவைப்படுகிறது. இது சரியான விகிதாசாரத்தில் ஏற்படாமல் போனாலும், ஊட்டச்சத்து குறைவு ஏற்பட்டாலும் சரியான சுழற்சி ஏற்படாது.
5. மாதவிடாயின்போது உதிரம் எங்கிருந்து வெளியேறுகிறது?

கருப்பையில் ஒரு சவ்வு இருக்கிறது. அது ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் இருந்து 14&ம் நாள் வரைக்கும் வளரும். அதன்பிறகு கரைய ஆரம்பித்து 28&ம் நாள் வரைக்கும் கரையும். அதன்பிறகு அது உதிரமாக வெளியேறும். கர்ப்ப காலத்தில் கருவைப் பாதுகாப்பதற்கு இந்த சவ்வு பயன்படுகிறது. அதனால்தான் கர்ப்பமாக இருக்கும்போது மாதவிடாய் ஏற்படுவது இல்லை.

6. அதிக உதிரப் போக்கு ஏன் ஏற்படுகிறது?

பல வகைகளில் உதிரப் போக்கு அதிகமாகலாம். 1. (இள வயது மற்றும் முதிய பெண்களாக இருந்தால்) தாறுமாறான ஹார்மோன் உற்பத்தி 2. (நடுத்தர வயது பெண்களாக இருந்தால்) கருப்பை அல்லது கருவகத்தில் உள்ள கட்டிகள் 3. தைராய்டு அதிகமாக சுரப்பதால் 4. சர்க்கரை நோய் இருந்தால் 5. கருப்பையில் தைப்ராய்டு கட்டிகள் இருந்து, அது பெரிதாக வளர்ந்தால் 6. கருவகத்தில் ஏற்படும் கட்டிகளால் 7. ஹார்மோன் குறைபாடு. 8. ரத்த சோகை 9. திருமணமான பெண்களுக்கு கரு கலைந்து இருந்தால் அதிக உதிரப் போக்கு ஏற்படலாம். இதில் எதனால் அதிகமாக உதிரம் போகிறது என்பதை மருத்துவ பரிசோதனை மூலமே உறுதிப்படுத்த முடியும்.

7. குறைவான உதிரப்போக்கு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

இதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன. 1. தைராய்டு குறைவாக சுரப்பது 2. ரத்தம் இல்லாமல் போவது 3. சிறுநீரக நோய்கள் 4. போதிய அளவு உணவு உட்கொள்ளாமல் போதல் 5. கருவகம், கருப்பை சரியான வளர்ச்சி அடையாமல் இருந்தாலும் உதிரம் குறைவாகப் போகும். இதில் எந்தக் காரணத்தால் உதிரப் போக்கு குறைவாக இருக்கிறது என்பதை மருத்துவ பரிசோதனை மூலமே கண்டறிய முடியும்.

8. சுத்தமாக உதிரப்போக்கே இல்லாமல் போவது பற்றி சொல்லுங்கள்...
சுத்தமாக உதிரப்போக்கே இல்லாமல் இருப்பதற்கான காரணங்கள்: 1. பருவம் அடைந்தபிறகு சுத்தமாக உதிரமே வராமல் இருந்தால் கருவகம், கருப்பை வளர்ச்சி அடையாமல் இருக்கலாம் 2. ஹார்மோன் குறைபாடு 3. குரோமோசோம் குறைபாடு இருந்தாலும் சுத்தமாக உதிரப்போக்கு ஏற்படாமல் போகலாம்.

9. கருப்பை மற்றும் கருவகத்தில் உள்ள கட்டிகளை எப்படி அகற்றுவது?

முன்பெல்லாம் அறுவைசிகிச்சை மூலமாக நீக்குகிற முறை மட்டுமே இருந்தது. இப்போது அதைவிட சுலபமாக லேப்ரோஸ்கோப்பி முறையில் துளை இட்டு அதன் வழியாக கட்டியை அகற்ற முடியும்.

10. மெனோபாஸ் ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்ய முடியுமா?

உணவுமுறை மூலமாக ஓரளவுக்கு ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்ய முடியும். புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் சோயா, கீரை வகைகள், காய்கறிகள், பழங்களை உட்கொள்ளவதாலும், மாவுச் சத்து நிறைந்த உணவுகளை குறைவாக உட்கொள்வதாலும் ஹார்மோன் குறைபாட்டை கட்டுப்படுத்தலாம். தேவையென்றால் மாத்திரை உட்கொள்ளவேண்டி வரலாம். ஹார்மோன் குறைபாடு இருந்தாலும் அதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள யோகா, உடற்பயிற்சி செய்ய வேண்டும். எப்போதும் பதட்டமில்லாத அமைதியான மனநிலையில் இருப்பது நல்லது. இதையெல்லாம் கடைப்பிடித்தால் ஹார்மோன்களால் வரும் பாதிப்பை தவிர்க்கலாம்.

11. அடி இறங்குதல் என்றால் என்ன?

கருப்பை தனது இடத்திலிருந்து கீழே இறங்கி நமது தொடுதலுக்கும் பார்வைக்கும் தென்படுவதுதான் அடி இறங்குதல். கருப்பையைத் தாங்கக் கூடிய தசைகள் வலுவிழங்கும்போது அடி இறங்கிப்போகும். அதனால், தசைகளை இறுக்கமாகவும், எலும்புகளை வலுவாகவும் வைத்துக்கொள்வதன் மூலம் இதைத் தவிர்க்க முடியும். அதற்கு கால்சியம், புரதச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதோடு யோகா, உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் இந்த பாதிப்பிலிருந்து தப்ப முடியும்.

12. மாதவிடாய் நின்றுபோன பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?

செயற்கை முறை கருத்தரிப்புகள் இப்போது சாத்தியப்படுகின்றன.

13. மாதவிடாய் நின்றுபோனபிறகு உதிரப்போக்கு ஏற்படுமா..?

அப்படி ஏற்படக்கூடாது. ஏற்பட்டுவிட்டால் அபாயகரமானது. அது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

14. கருப்பை புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

இதுதான் காரணம் என்று சொல்லமுடியாது. பரம்பரையாகவும் வரலாம். தவறான உணவுப் பழக்கத்தாலும் வரலாம். எந்தக் காரணத்துக்காவது ஹார்மோன் மாத்திரை அதிக அளவில் சாப்பிட்டு இருந்தாலும் வரலாம். அதனால், எந்த காரணத்தால் கருப்பை புற்று வருகிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இருந்து, அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் சிகிச்சை மூலமாக குணப்படுத்த முடியும். அதேநேரத்தில், கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு முதலில் கருப்பை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு இருக்கவேண்டும். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்வதன் மூலமும், விழிப்புணர்வுடன் இருந்து ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலமும் புற்றுநோய் வருவதை தவிர்க்கலாம். மெனோபாஸுக்குப் பிறகு உதிரப்போக்கு ஏற்படும் போதும், தாறுமாறான உதிரப்போக்கு ஏற்படும்போதும் மருத்துவ ஆலோசனை செய்துகொள்வது நல்லது.

15.  கருப்பை பாதிக்கப்பட்டால் அகற்றித்தான் தீரவேண்டுமா?

பெரிய கட்டிகள், புற்றுநோயாக மாறக்கூடிய கட்டிகள் இருந்தால், உடல்நலத்தைப் பாதிக்கக் கூடிய மிக அதிக அளவிலான உதிரப்போக்கு ஏற்பட்டால் எடுத்துதான் தீரவேண்டும். அதிகப்படியான உதிரப்போக்கை மருந்து மாத்திரைகளால் கட்டுப்படுத்தும் வாய்ப்பு இருந்தால் கருப்பையை அகற்றத் தேவையில்லை.

16. கருப்பை, கருவகம் அகற்றிய பிறகு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

சிறுவயதாக இருந்தால் ஹார்மோன் தேவை ஏற்படலாம். எலும்பு தேய்மானம் ஏற்பட்டால் தடுக்கப்பட வேண்டும். இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

17. மாதவிடாய் நின்றுபோன பிறகு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

தோல் உலர்ந்து போகலாம். எலும்பு தேய்மானம் ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படலாம். இதையெல்லாம் தடுத்துக்கொள்வது நல்லது.


18. மாதவிடாயின்போது எதனால் வலி ஏற்படுகிறது?

மாதவிடாயின்போது கருப்பை சுருங்கி விரிந்து ரத்தத்தை வெளியேற்றும்போது அதை மூளை உணர்ந்து வலி ஏற்படுத்துகிறது. உதிரப்போக்கு அதிகமாக இருக்கும்போதும் வலி ஏற்படலாம். கருப்பையில் கட்டி, நோய்த் தொற்று ஏற்பட்டாலும் வலி வரலாம். இளவயது பெண்களுக்கு எந்தக் காரணமும் இல்லாமல் வலி ஏற்படலாம். இதை மருத்துவத்துறை பீஹ்sனீமீஸீஷீக்ஷீக்ஷீலீமீணீ என்று அழைக்கிறது.


19. கருவகத்தில் ஏன் நீர்க்கட்டிகள் உண்டாகின்றன?

எந்தக் காரணமும் இல்லாமல் மாதச் சுழற்சியின்போது ஏற்படலாம். அதேபோல மாதச் சுழற்சியின்போது ஏற்படும் நீர்க்கட்டி சுழற்சியில் உடைந்து போகாமல் அப்படியே தங்கியும் போகலாம். ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாலும், நோய்த் தொற்று இருந்தாலும்கூட கருவகத்தில் நீர்க்கட்டி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.


20. கருப்பையைச் சுற்றி எந்தெந்த வகையில் நோய்த் தொற்று ஏற்படுகிறது?

சிறுநீர் பாதையை சுத்தமாக வைத்துக்கொள்ளாத போதும், சுத்தமான உள்ளாடைகளை அணியாத போதும் நோய்த் தொற்று ஏற்படலாம். அதனால், எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடும்ப உறவின் போது சுத்தமான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படும்போது ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி ஆலோசனை செய்துகொள்வதால் பெரிய பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

திருமணம் தாண்டிய உறவுகள்

திருமணம் தாண்டிய உறவுகள்
- என்ன காரணம்... 
எப்படித் தடுப்பது..?

ஜெயா என்ற தோழியின் இந்தக் கடிதம் ஒரு சாம்பிள்...

தோழமை என்பது தோள்கொடுத்து உதவுவது. ஆனால் நட்பு பாராட்டி நெருங்கிய பெண்ணால் சிதைந்துபோன குடும்பத்து வேதனையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இதை எழுதுகிறேன்... நாங்கள் குடியிருக்கும் காம்பவுண்டில் வசித்த அந்தக் குடும்பம், அன்பால் கட்டப்பட்டது! அந்தக் குடும்பத்தலைவனுடன் அலுவலக ரீதியாக தொடர்பு கொண்ட ஒரு பெண், நாளடைவில் அவருக்கு நெருக்கமானவராகவும் ஆகிவிட்டாள். அதுவரை மனைவி, குடும்பம் என்று இருந்தவர், அந்தப் புது வரவால் தலைகீழாக மாறிவிட்டார். அந்தப் பெண் சொல்வதுதான் அவருக்கு வேதவாக்கு. நாளடைவில் கணவன் & மனைவிக்கு இடையே விரிசல் அதிகமானது.
அப்போதும் அந்தப் பெண், �மற்றவர்கள் தவறாகப் பேசுகிறார்கள் என்பதற்காக நாங்கள் ஏன் எங்கள் நட்பை விட்டுத்தர வேண்டும்?� என்று பேசினாளே தவிர, அந்தக் குடும்பத்தைவிட்டு ஒதுங்கிவிடவில்லை. அழகான குடும்பம், எங்கள் கண் எதிரிலேயே சின்னாபின்னமாகிவிட்டது. இத்தனைக்குப் பிறகும் அவர்களின் நட்பு தொடர்வதுதான் வேதனை!�� என்று வருத்தத்துடன் முடிந்திருந்தது அந்தக் கடிதம்.

* நம்மிடம் தொலைபேசியில் பேசிய சென்னை தோழி ஒருவர் பகிர்ந்துகொண்ட விஷயமும் பகீர் ரகம்.
��என் பையனை பள்ளியில் இருந்து அழைத்துவரும்போது அறிமுகமானவர் அந்தப்பெண். அவரது மகனும் என் மகனின் வகுப்புதான் என்பதால் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். குழந்தைகள் தாண்டி, குடும்பம் குறித்தும் பேசுவோம். அவருடையது காதல் திருமணம். பாசமான கணவன், ஒரு மகன், ஒரு மகள் என்று அழகான குடும்பம்! கணவருக்கு தன் தொழிலை கவனித்துக்கொள்ளவே நேரம் போதவில்லை என்பதால் குழந்தைகளின் முழுப்பொறுப்பும் அந்தப் பெண்ணுடையதுதான். தனது மகனை ஒரு ஸ்போர்ட்ஸ் அகடமியில் சேர்த்துவிட்டார். மகனுடன் காலையில் அவரும் சீக்கிரம் கிளம்பி அகடமிக்குப் போய்விடுவார். பயிற்சி முடிகிற வரை காத்திருப்பார். அங்கிருந்து அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வார்.

நாட்கள் செல்லச் செல்ல தன் மகனுக்கு பயிற்சி கொடுக்கும் மாஸ்டரிடம் அவருக்கு நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த மாஸ்டருக்கு குளிர்பானம், சிற்றுண்டி என எடுத்துச் செல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் நடுவே நெருக்கம் அதிகமாகிவிட, குழந்தைகளை நண்பர்கள் வீட்டில் விட்டுவிட்டு இருவரும் வெளியே செல்ல ஆரம்பித்தனர். அந்த மாஸ்டர் இல்லாமல் தன்னால் வாழவே முடியாது என்று இவர் முடிவு செய்தபோது, கணவருக்கும் விஷயம் தெரிந்துவிட்டது. தன்னை யாரும் தப்பு சொல்லக்கூடாது என்பதற்காக தன் கணவரைப் பற்றி மற்றவர்களிடம் தரக்குறைவாக சொல்ல ஆரம்பித்தார்.

இப்போது தன் மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டு, தன் மகனை அழைத்துக்கொண்டு இவருடன் புதுவாழ்க்கை தொடங்கத் தீர்மானித்துவிட்டாராம் மாஸ்டர். ஆனால் இவரது இரண்டு குழந்தைகளின் கதி? அதை நினைத்து தற்போது குழப்பத்தில் இருந்தாலும் அந்த மாஸ்டரைத் தவிர்த்து தனக்கு வேறு வாழ்க்கை இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியவில்லை�� என்று வருத்தம் மேலிட முடித்தார் அந்த வாசகி.

ஊரின் எங்கோ ஒரு மூலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் கேள்விப்பட்ட சம்பவங்கள், இப்போது நமக்கு மிக அருகில் நடக்கத் துவங்கியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. திருமணம் தாண்டிய இந்த வகை உறவுகள் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதுபோன்ற உறவுச்சிக்கல்களை எப்படிக் களைவது என்ற கேள்வியுடன் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனைச் சந்தித்தோம்.
��இன்றைய சூழலில் நிச்சயம் அலசப்பட வேண்டிய விஷயம் இது. காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் திருமணமோ... எதுவாக இருந்தாலும் கணவன் & மனைவி உறவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை பெரும்பாலும் யாரும் செய்வதில்லை. திருமணத்துக்குப் பிறகு இருவருமே மற்றவரை �டேக்கன் ஃபார் கிராண்டட்� என நினைத்துவிடுகிறார்கள். இவர் என் கணவர்/மனைவிதானே என்கிற அசட்டை இயல்பாகவே வந்துவிடுகிறது. குழந்தை பிறந்ததும் நிலைமை இன்னும் மோசம். இருவரும் அப்பா & அம்மாவாக இருப்பார்களே ஒழிய, கணவன் & மனைவியாக இருக்கிற நேரம் குறைவுதான். தங்களின் பிறந்த நாள், திருமண நாள் என்று சில தங்களுக்கேயான பிரத்யேக தினங்களைக்கூட இருவரும் தனிமையில் கழிக்க முற்படுவது இல்லை.

திருமணத்துக்குப் பிறகு மாமியார், மாமனார், நாத்தனார் என்று புது உறவுகளின் அறிமுகம், அவர்களுடனான சிக்கல் என்று இன்னொரு வகையிலும் பிரச்னை தலைதூக்கும். இவை எல்லாவற்றுக்கும் நடுவில்தான் கணவன் & மனைவிக்குள் இருக்கும் நெருக்கத்தைக் காப்பாற்றியாக வேண்டியிருக்கிறது. மேலோட்டமான காரணங்களால் இருவருக்குமே தெரியாமல் இடைவெளி விழும்போது, எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத நபரால் அந்த இடைவெளி நிரப்பப்படுகிறது. கணவன் & மனைவி உறவு வலுவிழக்கும்போது வேறொரு புதிய உறவுக்கு அங்கே வாசல் திறக்கப்படுகிறது.
பொதுவா கணவன் & மனைவிக்குள்ளே இரண்டு முக்கியமான உணர்வுத் தேவைகள் கட்டாயம் இருக்கணும். �எனக்காக நீ� என்கிற பிணைப்புதான் முதல் தேவை.
ஒருவருக்காக இன்னொருவர் ஆத்மார்த்தமா விட்டுக்கொடுக்கறது, அவருக்காக செய்கிற எதையுமே உணர்வுப்பூர்வமா செய்யறது, இன்னொருத்தரோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கறது... இதெல்லாம்தான் அந்த உணர்வுப் பிணைப்பை வலுப்படுத்தும். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டாலே, �நமக்குள்ளே என்ன இருக்கு மனசு விட்டுப் பேசறதுக்கு� என்கிற எண்ணம் ரெண்டு பேருக்குமே வந்துடுது. �ஏன் இல்லை?� என்பதுதான் என் கேள்வி. திருமணமாகி ஐம்பது வருஷமானாலும் கணவன் & மனைவிக்குள்ளே பேசிக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கும். அந்த விஷயங்களை நம்ம வசதிக்கு ஏத்தமாதிரி நாமதான் மறந்துடறோம்.

நீ இல்லைன்னா நான் இல்லை... இதுதான் ரெண்டாவது உணர்வு. நீ என் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை தம்பதிகள் ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் உணர்த்தணும். �நீ இல்லைன்னா என்னால எதையுமே ரசிக்க முடியலை, எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க முடியலை�ன்னு தெரியப்படுத்தணும். அதுக்காக பக்கம் பக்கமா எழுதி வச்சு வசனம் பேசணும்னு இல்லை. அந்த அன்பையும் புரிந்துகொள்ளுதலையும் செயல்ல வெளிப்படுத்தணும். தன்னோட துணைக்கு எல்லாத்துலயும் முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கிறபோது திருமண உறவுல யாராலயும் எந்தச் சூழலிலும் சிக்கல் வராது. �உன்கிட்டே மறைச்சு சொல்ல என்னிடம் எதுவுமே இல்லை. உன்னைக் கேட்காம எந்த முடிவையும் நான் தன்னிச்சையா எடுக்கறது இல்லை...� இதை ரெண்டு பேருமே உணர்ந்து நடக்கிறபோதுதான் திருமண பந்தம் அதன் முழுமையைப் பெறும்.

திருமண உறவை வலுப்படுத்தறதுல சூழ்நிலைக்கும் முக்கிய பங்கு இருக்குது. இப்போ பெரும்பாலான வீடுகள்ல தனிக்குடித்தனம்தான். அதுலயும் கணவன், மனைவி ரெண்டு பேருமே வேலைக்குப் போறவங்களா இருந்துட்டா, அந்த இடத்துல அன்புக்குப் பஞ்சம் வந்துடுது. ரெண்டு பேருமே வேலையில பிஸியா இருக்கறதால குடும்பத்தோடு சேர்ந்து வெளியே போறதுகூட குறைஞ்சுடுது. பெரும்பாலான வீடுகளில் பண்டிகை நாட்களுக்கான ஷாப்பிங் தவிர இப்படி அனைவருமாக வெளியே செல்லும் வழக்கமே கிடையாது. யாராவது ஒருத்தர் வேலையில மட்டுமே பிஸியாகவும் இன்னொருத்தர் வீடே கதி என்று இருந்தாலும் சிக்கல்தான். �கழுத்தை நெரிக்கிற வேலைப்பளுவுக்கு நடுவில் கொஞ்சிக்கொண்டு இருக்கமுடியுமா?� என்று கேட்கலாம். அந்தக் கொஞ்சல்தான் வேலைப்பளுவில் கனத்துப்போன மனதுக்கு மருந்து என்பதைப் பலர் மறந்துவிடுகின்றனர். கிடைக்கிற நொடிகளில்கூட அன்பைப் பரிமாறிக்கொள்ளலாம். இப்படி அன்பை உயிர்ப்பிக்கச் செய்யும் விழிப்புணர்வு இருவரில் ஒருவருக்கு இருந்தால்கூட போதும். ஆனால் இருவருமே அதை கவனிப்பதில்லை என்கிறபோதுதான் பிரச்னை தலைதூக்குகிறது.

அந்தக் காலம் போல இல்லை இப்போது. ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை பார்க்கிற இந்தக் காலத்தில் ஆண், பெண் பேசிக்கொள்வதை யாரும் தப்பென்று சொல்லமுடியாது. ஆனால் அதற்கும் ஒரு எல்லையை வரையறுத்துக்கொள்ள வேண்டும். என்னதான் நட்பு என்று நாம் சொல்லிக்கொண்டாலும் ஆண், பெண்ணுக்கிடையே ஈர்ப்பு இருப்பது இயற்கை. அப்படி இருக்கும்போது தங்கள் குடும்ப விவகாரத்தையோ, அந்தரங்கமான விஷயங்களையோ அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. கணவன் அல்லது மனைவிக்கிடையே ஏற்படுகிற சிக்கல், காலப்போக்கில் மாறிவிடும். ஆனால் இன்னொருவரிடம் ஆறுதலுக்காக அதைச் சொல்கிறபோதுதான் அந்தச் சிக்கல் உண்மையிலேயே விஸ்வரூபம் எடுக்கிறது. என்னைத் தவிர்த்து இன்னொருவரிடம் அப்படி என்ன பேச்சு என்ற சந்தேகம் வாழ்க்கைத்துணைக்கு ஏற்பட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். �இன்று எங்களுக்குள் தப்பே இல்லை� என்று சொல்லிக்கொண்டு அனைத்து விஷயங்களையும் இன்னொருவரிடம் பகிர்ந்துகொள்கிறபோது நாளடைவில் தப்பு நடக்கக்கூடும். அதன் பிறகு கணவன் அல்லது மனைவி இருவருக்குமே இன்னொருவர் செய்கிற சின்னச்சின்ன செயல்கூட வெறுப்பை ஏற்படுத்தும். அதனால் ஆறுதல் தேடுகிறேன், வேதனையைக் குறைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கைத்துணை தவிர்த்த யாரிடமும், அவர்கள் எத்தனை நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தாலும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்�� என்று விளக்கமாகவே சொன்னார் பிருந்தா ஜெயராமன்.

திருமண பந்தம் தாண்டிய இன்னொரு உறவில் சிக்கிக் கொள்வதில் இருக்கிற அபாயங்களை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிற இவர், அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும் சொன்னார்...

��இப்படி ஏற்படுகிற தகாத உறவுகளுக்கு இரண்டுவிதமான காரணங்கள் உண்டு. உடல் தேவையை மையமாக வைத்து ஏற்படுகிற முதல் வகை உறவுக்கு ஆயுளும் குறைவு, அதில் இருந்து வெளிவருவதும் சுலபம். மனதை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொண்டு, குடும்பத்துடன் அதிக நேரம் செலவழித்தாலே போதும். இதிலிருந்து எளிதில் மீண்டுவிடலாம். ஆனால் புதிய உறவிடம் உணர்வுப்பூர்வமான பந்தம் ஏற்படும்போது, இருவரும் கணவன் & மனைவி போலவே வாழத்தொடங்கிவிடுகிறார்கள். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்கிற முடிவுக்கும் வந்துவிடுகிறார்கள். அப்போது குடும்பம், குழந்தை இதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. இதுபோன்ற நேரத்தில் அந்தப் புதிய உறவில் இருக்கிற வாழ்க்கைத்துணையை மிக கவனத்துடன் மீட்டெடுக்க வேண்டும். இருவரும் பார்த்துக் கொள்ளவோ, பேசிக் கொள்ளவோ வாய்ப்பு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறவர்களாக இருந்தால், வேறு கிளைக்கு மாற்றல் வாங்கிச் செல்லலாம். ஒரே தெருவாகவோ, ஊராகவோ இருந்தால் கூடுமானவரை புதிய இடத்துக்கு குடிபெயர்வது நல்லது. இப்படி ஒருவரையொருவர் பார்க்காமல் இருக்கிறபோது, அவர்களைப் பற்றிய நினைவுகள் மறக்கத் துவங்கி, தங்கள் குடும்பத்தின் மீது கவனம் திரும்பும்.
இதைவிட்டுவிட்டு, �எனக்கு அங்கேதான் மனநிம்மதி� என்று குடும்பத்தைப் பிரிந்து செல்கிற பெரும்பாலானோர் அந்த இன்னொரு உறவிலும் திருப்தியடையாத சம்பவங்கள்தான் அதிகம். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல பந்தத்தில் இணையாதவரை அந்த இன்னொரு உறவும் இனிக்கத்தான் செய்யும். சேர்ந்து வாழ்கிறபோதுதான், �இவரிடம் இருக்கிற குறைகளுக்கு, நம் வாழ்க்கைத்துணை எவ்வளவோ மேல்� என்று தோன்றும். அப்போது எல்லாமே கைமீறிப் போயிருக்கும். இதுபோன்ற உறவுகளில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். நம் அன்பின் அடையாளமான அந்தக் குழந்தைகளை அன்பின் பெயராலேயே வதைப்பது கொடுமை. எனவே கணவன், மனைவி இருவருமே தங்களுக்குள் இருக்கும் அன்பை வற்றவிடாமல் பார்த்துக்கொண்டாலே போதும்... அங்கே பிரிவுக்கோ, வேறொரு உறவுக்கோ இடமில்லை!�� என்று அக்கறையுடன் முடித்தார் பிருந்தா ஜெயராமன்.

இந்த ஆண்டிலாவது இத்தகைய செய்திகள் குறையட்டும்!

இதயம் தொடும் பரிசு!


நேசத்தையும் அன்பையும் உணர்த்த ஆயிரம் வார்த்தைகளை அடுக்குவதைவிட ஒற்றைச் செயலால் வெளிப்படுத்தலாம். சொற்கள் செய்யாத மாயத்தை அந்த அன்புப் பரிசு செய்துவிடும். அப்படியொரு பரிசு செய்யக் கற்றுத்தருகிறார் சென்னையைச் சேர்ந்த சுபாஷினி. டெக்ஸ்டைல் துறையில் பணிபுரிகிற இவருக்கு ஃபோட்டோகிராபியும் கிராஃப்ட்டும் இரு கண்கள். அதனால்தானோ என்னவோ, ஃபோட்டோ ஃபிரேம் செய்ய கற்றுத் தருகிறார். நண்பர்கள் வட்டத்தில் நடக்கும் சின்ன சின்ன கொண்டாட்டங்களுக்கும் இந்த ஃபோட்டோ ஃபிரேமை பரிசளித்து மகிழலாம். 


தேவையானவை
ஃபோம் போர்டு  (foarm board) - 2, சிகப்பு நிற ஸ்டிக்கர் ஷீட், கத்தரிக்கோல், மார்க்கர், ஃபேன்சி ரோப், கெமிக்கல் க்ளே, டபுள் சைடட் ஸ்டிக்கி டேப். ( Double sided sticky tape )
 
 
 
  
 
 
செய்முறை
  • சிகப்பு நிற ஸ்டிக்கர் ஷீட்டை ஃபோம் போர்டு மீது  ஒட்டவும்(படம் 1). 
  • அதன் பின்பக்கம் மார்க்கரால் இதய வடிவ டிசைனை வரையவும் (படம் 2). 
  • கத்தரிக்கோல் அல்லது கட்டர் உதவியுடன் இதய வடிவ டிசைனை கட் செய்து எடுக்கவும்(படம் 3). 
  • வெட்டிய இரண்டு டிசைன்களில் ஒன்றின் நடுவே மட்டும் போஸ்ட்கார்டு அளவுக்குஒரு செவ்வக பகுதியை வெட்டி எடுக்கவும்(படம் 4). 
  • இப்போது இரண்டு இதய வடிவ டிசைனிலும் மேற்பகுதியில் பஞ்சிங் மிஷின் கொண்டு  இரண்டு துளைகள் இடவும் (படம் 5). 
  • செவ்வக வடிவம் வெட்டப்பட்ட இதய டிசைனை மேலேயும் மற்றொரு டிசைனை கீழேயும் வைத்து, இரண்டிலும் இருக்கிற துளைகளில் ஃபேன்சி ரோப்பை நுழைத்து கட்டவும் (படம் 6). 
  • ஃபிரேமில் வைக்கப்போகும் புகைப்படத்தின் பின்பக்கத்தில் டபுள் சைடட் டேப்பை நான்கு முனைகளிலும் ஒட்டவும் (படம் 7). 
  • புகைப்படத்தை அடியில் இருக்கும் இதய டிசைன் மீது ஒட்டவும் (படம் 8). 
  • கெமிக்கல் க்ளேவில் சின்ன சின்ன இதய வடிவ டிசைன் செய்யவும் (படம் 9). 
  • இவற்றை ஃபிரேமின் இருபுறமும் ஒட்டி அலங்கரித்தால் கண்ணைக் கவரும் ஃபோட்டோ ஃபிரேம் தயார் (படம் 10).
- சூர்யா,
படங்கள்: சுபாஷினி.

உடலின் பாத்ரூம் ஒழுங்கா இருக்கா?


ரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்...�� என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன்.


சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன் சிறுநீரகம் தொடர்பான நம் ட்வென்டி 20க்கு பளிச் பதில்கள் அளித்தார். இதோ அந்த டிவென்டி 20.

யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்புநீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழப்பு ஏற்படும்.

பாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன?


வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப்போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா?

முடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.

அதை எப்படி கண்டுபிடிப்பது..?

வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதித்துக்கொள்வது நல்லது. பிரச்னை இருந்தால், இந்த சோதனையில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. அவசியமாக சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை செய்துகொள்வது நல்லது.

அறிகுறிகள் இருக்குமா..?

இருக்கும். கை&கால்களில் வீக்கம் ஏற்படும். ஆனால், எல்லா வீக்கமும் சிறுநீரக பாதிப்பால் மட்டுமே ஏற்படுவது இல்லை. ஆனால், சிறுநீரக பாதிப்பால்தான் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும்.

எதனால் கை&கால் வீக்கம் ஏற்படுகிறது..?

தண்ணீரை வெளியேற்ற முடியாமல் சீறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கை&கால் வீக்கம்.

தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?

அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்தவேண்டும், சிறுநீரை அடக்கிக் கொள்வதை தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதை தடுக்கமுடியும்.

உணவு முறைகள் என்ன?

பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வரை எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம். ஆனால், எதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாஷியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாஷியம் சேர்த்துக்கொள்ளலாம்.

எந்தெந்த உணவுகளில் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது..?

வாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு இவற்றிலெல்லாம் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாஷியம் சாப்பிடக்கூடாதா..?

அப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலை வரைக்கும் போனவர்கள் பொட்டாஷியத்தை முழுமையாக தவிர்க்கவேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ளவேண்டும்.

வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு இரண்டும் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே...

வாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீர்ப் பெருக்கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா?

முடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் டி உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும்.

சிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்...

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப்போடலாம்.

இல்லாவிட்டால்...

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ்கொள்வது நல்லது.

அப்புறம்..
இளைய வயதினராக இருந்து நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.

இளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..?

அப்படி இல்லை. கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதற்கு பல லட்சம் செலவாகும். அதேநேரத்தில் இளைஞர்களாக இருப்பவர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலைபார்க்கவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், வயதானவர்களுக்கு செய்யும்போது கிட்னி பொருந்திப் போவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அப்படிச் செய்வதால், எதிர்பாராத வகையில் மாரடைப்பு வரவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம்.

கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..?

என்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா?

முடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்துக்கு இவ்வளவு தட்டுப்பாடு இருப்பதால்தான், மூளை மரணம் அடைந்தவர்களின் உடலில் இருந்து சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..?


முடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

நிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?


நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.

ஊறுகாய் டிப்ஸ்


டிக்கும் வெயிலை வீணாக்காமல், ஊறுகாய் தயாரித்து வைத்துக் கொண்டால், வருடம் முழுவதும் உபயோகிக்கலாம். சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொண்டால் அற்புதமாக ஊறுகாய்களை தயாரித்து விடலாம்.


- ஊறுகாய்க்கு முதல் எதிரி ஈரம்தான். எனவே பாட்டில், கத்தி, பாத்திரம், காய்கறி, உங்கள் கைகள் உட்பட எல்லாமே உலர்வாக இருக்க வேண்டும்.

- ஊறுகாய்க்கு கழுவித் துடைத்து உலர்த்த வேண்டிய பொருட்களை கொஞ்சம் தாமதம் ஆனாலும் சரி என்று நிழலில் தான் உலர்த்த வேண்டும்.

- ஊறுகாய் போடுவதற்கு பொடி உப்பை விட, கல் உப்புதான் சிறந்தது. கல் உப்பை மிக்ஸியில் பொடித்து பயன்படுத்தலாம்.

- புளியும், மிளகாயும் புதியதாக பளிச் நிறத்தில் இருந்தால், ஊறுகாயும் நல்ல நிறத்தில் இருக்கும். சீக்கிரம் கருத்துப் போகாது.

- ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பையை மட்டும் உபயோகிக்க வேண்டும்.

-தாளிப்பதற்கு நல்லெண்ணெய் உபயோகிப்பது சிறந்தது. ஊறுகாயை பாட்டிலில் ஊற்றிய பின், மேலே ஒரு இஞ்ச் அளவுக்கு எண்ணெய் நின்றால், ஊறுகாய் ஒரு வருடமானாலும் கெடாது.

- பாட்டில் (அ) ஜாடியில் முட்ட முட்ட ஊறுகாயை நிரப்பக் கூடாது. ஒரு இஞ்ச் அளவு வெற்றிடம் இருக்க வேண்டும்.

- எலுமிச்சை ஊறுகாய் போடும்போது, மெல்லிய தோல் உள்ள பழங்களைத் தேர்ந்தெடுக்கவும். அதில் தான் சாறு அதிகமாக இருக்கும்.

- பூண்டு ஊறுகாய் தயாரிக்கும்போது, சிறிதளவு பூண்டை விழுதாக அரைத்துக் சேர்த்தால், நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

- ஆவக்காய்க்கு மாங்காய் புதியதாக இருந்தால், நன்றாக வரும்.

- ஜெய்னம்பு, கீழக்கரை

வெற்றியைத் தந்த கனிவும் பொறுமையும்


வெளிநாட்டில் தங்கிப் படித்த என் மகனைப் பார்க்க ஃபிளைட் டிக்கெட் புக் செய்வதற்குப் போனேன். அதற்காக டிராவல் ஏஜென்ஸியில் அரை மணிநேரம் காத்திருந்தேன். அந்தக் காத்திருப்புதான், இன்று என்னை டிராவல் ஏஜென்ட்டாக்கி இருக்கிறது�� என்கிற சரோஜினி நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த இல்லத்தரசி. கணவர், குழந்தைகள் என வீடே உலகமாக இருந்தவர், மாதம் சுமார் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற பிசினஸ் வுமனாக மாறியது சக்ஸஸ் ஸ்டோரிதானே. அதை அவரே சொல்கிறார்...

 
 சென்னையின் தென்கோடியில் உள்ள கொட்டிவாக்கம் பகுதியில் பேர் சொன்னாலே தெரிகிற அளவுக்கு பிரபலமாக இருக்கிறார் சரோஜினி. �வீட்டில் ஒரு கம்ப்யூட்டரை மட்டுமே மூலதனமாக வைத்துக்கொண்டு இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியுமா?� என்ற நம் கேள்விக்கு புன்னகையை பதிலாகத் தந்துவிட்டு பேசினார் சரோஜினி.��என் சொந்த ஊர் மதுரை. திருமணத்துக்குப் பின்னாலதான் சென்னை எனக்கு அறிமுகம். என் கணவர் வக்கீல்ங்கறதால அவருக்கு நிறைய லெட்டர்கள், டாக்குமென்ட்கள் டைப் செய்து தர்ற வேலை இருந்தது. அவருக்கு உதவியா இருக்கறதுக்காக எங்க வீட்டு பக்கத்துல இருந்த கோத்தாரி அகாடமியில் செக்ரட்டரி கோர்ஸ் படித்தேன்.
 
அதே அகாடமியில் வேலையும் செய்தேன். என் பொண்ணு பிறந்ததும் அவளுக்காக வேலையை விட்டேன். அடுத்து பையன் பிறந்தான். அவங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு போனதும் வீட்ல சும்மாதானே இருக்கோம்னு ஜெர்மன், இந்தி மொழிகளைக் கத்துக்கிட்டேன். எல்.ஐ.சி ஏஜென்ட் ஆனேன். அதோடு ஒரு தனியார் நிறுவனத்துல ஏஜென்சி எடுத்து அவங்களோட தயாரிப்புகளை விற்றேன். அதுல ஓரளவுக்கு லாபம் வந்தது. மத்தவங்களோட துணை இல்லாம என்னால சாதிக்க முடியும்னு அப்பதான் தோணுச்சு. அந்த நேரம் பார்த்து நாங்க வேற ஏரியாவுக்கு குடிபோனோம். என்னோட பழைய வாடிக்கையாளர்களை அடிக்கடி சந்திக்கமுடியாத நிலையில், புதுசா வந்த ஏரியாவில நிறைய பேரை நண்பர்களாக்கினேன்.
 
ஆனா முன்ன இருந்த அளவுக்கு பிசினஸ்ல லாபம் இல்லை. இதுக்கு இடையில பசங்களும் ஸ்கூல் படிப்பை முடிச்சு காலேஜ்ல சேர்ந்தாங்க�� என்றவருக்கு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது, முதலில் விவரித்த காத்திருப்பு சம்பவம்.
��ஆஸ்திரேலியாவில படிச்சிட்டிருந்த என் பையனைப் பார்க்கறதுக்காக டிக்கெட் புக் பண்ண நானும் என் பொண்ணும் ஒரு டிராவல் ஏஜென்ஸிக்கு போனோம். கிடத்தட்ட அரை மணிநேரம் அங்கே இருந்தேன். அப்போ அங்க டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கவனிக்கற சந்தர்ப்பம் கிடைச்சுது. வீட்டுக்கு வந்த பிறகும் அந்த விஷயங்களே மனசுல ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஏற்கனவே என் கணவருக்கு டெல்லி, மும்பை, மதுரைனு பல ஊர்களுக்கு டிக்கெட் புக் செய்த அனுபவமும் எனக்கு இருந்ததால நாமே டிக்கெட் புக்கிங் மற்றும் ஃபாரின் டூர் ஏஜென்சி தொடங்கலாமேன்னு தோணுச்சு. ஆஸ்திரேலியாவுல இருந்து திரும்பினதுமே என் எண்ணத்தை கணவரிடம் சொன்னேன். அவரும் உற்சாகப்படுத்த, உடனே டூர்ஸ் மற்றும் டிக்கெட்டிங் தொடர்பான 3 மாத ஐ.ஏ.டி.ஏ (மிகிஜிகி) படிப்பில் சேர்ந்தேன். முதல்நாள் வகுப்பறைக்குள் நுழைந்தபோது அங்கிருந்த மாணவர்கள் அனைவருமே -21 வயதுக்குள் இருந்தனர்.
 
எனக்கு அப்போ 44 வயது. என் மகன் வயதுள்ளவர்களோடு சேர்ந்து படிக்க மிகவும் கூச்சமாகவும் சற்று பயமாகவும் இருந்தது. ஆனாலும் விடாப்பிடியாக படித்து அந்த வகுப்பின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன். முதலில் ஒரு டிராவல் ஏஜென்ட்டுக்கு சப் ஏஜென்ட்டாகப் பணியைத் தொடங்கினேன். முதலில் யாருக்கு டிக்கெட் புக் செய்து தொழிலைத் தொடங்குவது என யோசித்தேன். எங்களோட ஃபிரெண்ட்ஸையே வாடிக்கையாளர்களாக மாற்றினேன்�� என்றவர், ஆரம்பத்தில் பல சரிவுகளைச் சந்தித்திருக்கிறார்.

��2008-ல் முதல் வெளிநாட்டு சுற்றுலா திட்டத்தைத் தொடங்கினேன். அந்த 8 நாட்கள் சீனா சுற்றுலா திட்டம் ஓரளவுக்கு லாபம் தந்தது. தொட்டதுமே லாபம் கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்த ஆண்டே 9 நாட்கள் கொண்ட சீனா சுற்றுலா மற்றும் 7 நாட்கள் ஜப்பான் சுற்றுலா இரண்டையும் நடத்தினேன். சீனா சுற்றுலாவுக்காக டிக்கெட் புக் பண்ணும்போது எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான கட்டணத்தை உயர்த்தியது. ஏற்கனவே கட்டணம் நிர்ணயித்து பயணிகளிடம் வசூலித்துவிட்டதால், அவர்களிடம் மேலும் பணம் கேட்ட முடியாத சூழ்நிலை. நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதால் கட்டண உயர்வை நாங்களே ஏற்றுக்கொண்டோம். இதனால் கிட்டத்தட்ட 60,000 ரூபாய் நஷ்டம். ஆனால் அப்போது கிடைத்த நல்ல பெயரால் எங்கள் நட்பு வட்டத்தைத் தாண்டி வியாபார எல்லை விரிவடையத் துவங்கியது. தொடர்ந்து சிங்கப்பூர், -மலேசியா, எகிப்து, நியூசிலாந்து என பல நாடுகளுக்கு பலரை டூர் அழைத்துச் சென்றோம். எகிப்து சுற்றுலா திட்டத்துக்குப் பிறகு ஐரோப்பா சுற்றுலா டூர் ஒன்றை ஏற்பாடு செய்தோம். அதற்காக ஐரோப்பா ஏஜென்ட்டுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தினோம். அப்போது ஐஸ்லாந்து எரிமலை வெடித்ததால் ஐரோப்பா முழுவதும் புகை மண்டலமானது.
 
அதனால் பலர் ஐரோப்பா சுற்றுலாவுக்கு வர மறுக்க, அந்தத் திட்டத்தை கைவிட வேண்டியதாகி விட்டது. ஆனால் எங்கள் ஐரோப்பா ஏஜென்ட், முன்பணத்தை திரும்பத் தரவே இல்லை. அதையும் சமாளித்தாக வேண்டிய கட்டாயம்.
இதுபோன்ற பண விவகாரங்களை விடவும் சுற்றுலா பயணிகளை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று பத்திரமாகத் திரும்பக் கூட்டி வருவதில் ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. திட்டமிட்ட சுற்றுலா என்பதால் உள்ளூர் சுற்றுலா ஏஜென்ட்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். ஒவ்வொருவரையும் அன்பாகவும், பொறுமையாகவும் ஹேண்டில் செய்ய வேண்டும். சிலர் காலையில் தங்களது இஷ்டத்துக்கு எழுந்திருப்பார்கள். சிலர் ஒரு இடத்தில் அதிக நேரம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். வேறு சிலர் உணவு விஷயத்தில் சற்று கறாராக இருப்பார்கள். இப்படி அனைவரையும் சமாளித்து அந்தக் குழுவை வழிநடத்தும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியாக சுற்றுலாவை அனுபவித்தால்தான் அடுத்தமுறையும் தேடி வருவார்கள். அதனால் கனிவும் பொறுமையும் எப்போதும் எங்களிடம் இருக்கும்.
 
தவிர அனைத்து விஷயங்களையும் வீட்டில் அமர்ந்தபடியே இன்டர்நெட் மூலம் முடித்துவிடுவதால் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள முடிகிறது. மாறாத புன்னகையும் கனிவும்தான் எங்களின் வெற்றிக்குக் காரணம்�� என்கிற சரோஜினி, டூர் சம்பந்தமான போன் விசாரிப்புகளுக்கு பொறுமையான வார்த்தைகளில் பதில் சொல்லியபடியே நமக்கு விடை தருகிறார்.  
& ஸ்ரீஹரி

முதல்நாள் வகுப்பறைக்குள் நுழைந்தபோது அங்கிருந்த மாணவர்கள் அனைவருமே -21 வயதுக்குள் இருந்தனர். எனக்கு அப்போ 44 வயது. என் மகன் வயதுள்ளவர்களோடு சேர்ந்து படிக்க மிகவும் கூச்சமாகவும் சற்று பயமாகவும் இருந்தது.
 

Sunday, January 27, 2013

தள்ளிவைத்தனர்... தலைநிமிர்ந்தோம்!


 
கோவை டவுன் ஹாலில் இருக்கும் `தம் பிரியாணி ஸ்டால்` பிரியாணி, கொஞ்சமல்ல ரொம்பவே ஸ்பெஷல். காரணம் அந்தக் கடையின் உரிமையாளர்கள் அனைவரும் திருநங்கைகள்! ஒரு தொழிலை ஆரம்பித்து, வெற்றிபெறுவது ஆண்களுக்கே சவால்நிறைந்ததுதான். ஆனால் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் தன்னம்பிக்கையோடு சாதித்துக்காட்டியிருக்கிறார்கள் இவர்கள். கடைக்கு வருகிற வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்று, அவர்கள் உபசரிக்கிற பாங்குக்கே நூறு மார்க் கொடுக்கலாம். இந்தக் கடை தவிர, வீட்டு விசேஷங்களுக்கும் சமைத்துக் கொடுக்கிறார்கள். ஒரு திருமண வீட்டில் மும்மரமாக சமையல் தயாரிப்பில் இருந்த திருநங்கை கனகாவிடம் பேசினோம்...

``எங்க அம்மாதாங்க ரொம்ப நம்பிக்கையோட இந்த சமையல் தொழிலை ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கு பெத்தவங்க கிடையாது. கோவைதான் அம்மாவுக்கு சொந்த ஊர். இப்பவே எங்களைப் பார்த்தா மதிக்க மாட்டேங்கிறாங்க. அப்பலாம் நினைச்சுகூட பார்க்க முடியல. அப்படிபட்ட சூழ்நிலையிலையும் அம்மா வீட்லயும் ஹோட்டலயும் வேலைபார்த்து இன்னைக்கு எங்களையும் ஒரு நல்ல நிலைமைக்கு வச்சிருக்காங்க`` என்று வார்த்தைக்கு வார்த்தை அம்மா புகழ்பாடுகிறார் கனகா. அந்த அம்மா மனோவும் திருநங்கைதான். இவரைப்போன்ற திருநங்கைகளுக்கு அடைக்கலம் தருவதோடு வேலைவாய்ப்பும் தருகிறார் மனோ. பிரியாணிக்குத் தேவையான மசாலாவை வதக்கியபடியே தொடர்ந்தார் கனகா.

``நான் அம்மாகிட்டே வந்தது பதிமூணு வயசுல. எந்த வீட்டுல திருநங்கைகளுக்கு ஆதரவு தர்றாங்க? நான் திருநங்கைன்னு தெரிஞ்சதும் என்னைப் பெத்தவங்க வீட்டைவிட்டு வெளிய அனுப்பிட்டாங்க. அதுக்குப் பிறகு நான் ஒரு ஹோட்டல்லதான் வேலை பார்த்துட்டு இருந்தேன். எங்களைச் சுத்தியிருக்கற சமூகம் எங்களை கேலிப்பொருளாதான் பார்க்குது. ஐந்தறிவு ஜீவன்களுக்குக் கொடுக்கற அங்கீகாரத்தைக்கூட எங்களுக்கு தர்றதில்லை. நாங்க அனுபவிக்கற கஷ்டத்தையெல்லாம் வார்த்தையால சொல்லமுடியாதும்மா. ஒருநாள் நான் வேலை பார்த்துட்டு இருக்கும்போது அம்மா என்னைப் பார்த்தாங்க. என்கிட்டே எதுவுமே விசாரிக்கலை. அவங்களோட என்னைக் கூட்டிட்டு வந்துட்டாங்க. என்னோட சேர்த்து மொத்தம் பதினேழு திருநங்கைகள் அம்மாகூடதான் இருக்கோம். என்னை மாதிரியே என்கூட இருக்கற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும்மா. எல்லாரும் ஒரே இடத்துக்கு வந்துட்டோமே தவிர, எங்க கஷ்டம் மட்டும் குறையவே இல்லை`` என்றவர், ஆரம்பத்தில் தாங்கள் சந்தித்த வேதனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

``சுத்தியிருக்கறவங்களோட கேலிப்பேச்சுகளோடு வயித்துப்பசியும் எங்களை வாட்டும். ஆனால் அந்த நிலையிலகூட பிச்சை எடுக்கவோ, பாலியல் தொழிலுக்கோ போகக்கூடாது, உழைச்சுதான் வாழணும்னு வைராக்கியத்தோட இருந்தோம். நாங்க குடியிருக்கறதுக்கு வீடு கேட்டாகூட தரமாட்டாங்க. வாரத்துக்கு ஒரு வீடுன்னு இருக்க இடம்தேடியே பலநாள் எங்களுக்குப் போச்சு. நாங்க குடியிருந்த இடங்களில் பக்கத்து வீடுகளில் போய் வேலை கேட்டோம். வீட்டு வேலை, சமையல் வேலை செய்து தர்றோம்னு சொன்னோம். சாதாரணமான பெண்கள் கேட்டாலே வேலை தர அவ்ளோ யோசிப்பாங்க. எங்களுக்கு சொல்லவா வேணும்? ரொம்ப யோசிச்சாங்க. சிலர் கேவலமா பேசினாங்க. ஆனா அந்த நிலையிலும் நாங்க நம்பிக்கையைத் தளரவிடலை. அப்போதான் உழைக்கணும்ங்கற எங்க ஆர்வத்தைப் பார்த்துட்டு நாங்க தங்கியிருந்த வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மா அவங்க வீட்டு விசேஷத்துக்கு முதல் முறையா சமைக்கச் சொன்னாங்க. அன்னைக்குத்தான் இருட்டா இருந்த எங்க வாழ்க்கையில சின்னதா ஒரு ஜன்னல் திறந்துச்சு. நாங்கதான் சமைக்கிறோம்னு வந்தவங்களுக்குத் தெரியாது. சாப்பிட்ட எல்லோருமே யார் சமைச்சது? ரொம்ப நல்லாயிருக்குன்னு கேட்டாங்க. நாங்கதான்னு தெரிஞ்சதுமே சிலர் பாராட்டினாங்க.. சிலர் முகம்சுளிச்சாங்க. கோபப்படறவங்க எப்பவுமே நல்ல விஷயங்களைப் பார்க்கறதில்லைனு சொல்லுவங்க. ஆனா நாங்க பாராட்டுகளை மட்டும் எடுத்துக்கிட்டோம், முகம் சுளிக்கறவங்களைப்பத்தி கவலைப்பட எங்களுக்கு நேரமில்லை. நம்பிக்கையோட எங்க பயணத்தைத் தொடர்ந்தோம். நாங்களே ஒவ்வொரு வீடா போய் வாய்ப்பு கேட்க ஆரம்பிச்சோம். எங்களைப் புரிஞ்சுகிட்டவங்க வாய்ப்பு கொடுத்தாங்க. கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிட்டோம். அதுக்கு அப்புறம் எங்க சாப்பாட்டோட சுவையே எங்களுக்கு விசிட்டிங் கார்டா மாறிடுச்சு!`` என்றவரின் முகத்தில் வெற்றியின் பிரதிபலிப்பு.

``பதினைந்து வருஷமா வீட்லதான் கேட்டரிங் செய்தோம். நமக்குனு ஒரு கடை இருந்தா நல்லா இருக்குமேன்னு கலெக்டர் ஆபீசுல மனு கொடுத்தோம். `மகளிர் சுய உதவி காம்ப்ளக்ஸ்`ல எங்களுக்கு ஒரு கடை கொடுத்தாங்க. இப்ப மூணு வருஷமா இந்த `தம் பிரியாணி` கடையை நடத்திக்கிட்டு வர்றோம். வி.ஐ.பி வீட்டு விஷேசம், மில் ஓனர்கள், மினிஸ்டர்கள் வீட்டுக்கும் எங்க பிரியாணிதான். எங்க வாடிக்கையாளர் வட்டத்தைப் பெருக்கறதுக்காக நியூஸ்பேப்பர், லோக்கல் டிவி சேனல்களிலும் விளம்பரம் கொடுத்திருக்கோம். இன்டர்நெட்லகூட எங்களைப்பத்தின தகவல் இருக்கு. வெளியூர்ல இருக்கிறவங்ககூட தெரிஞ்சவங்க மூலமா கேள்விப்பட்டு எங்ககிட்ட ஆர்டர் தர்றாங்க. இத்தனைக்கும் நாங்க ஒரு கப் பிரியாணியை ஐம்பது ரூபாய்க்குதான் கொடுக்கிறோம். விலையக் குறைக்கறதுக்காக நாங்க என்னைக்குமே தரத்தைக் குறைச்சது இல்லை. பிரியாணி மட்டுமல்ல, வெரைட்டி ரைஸ், பரோட்டா, முட்டை அயிட்டங்களும் நாங்க செய்து தர்றோம். முதல் இருந்ததுக்கு இப்ப சமூகத்துல எங்களை கொஞ்சம் நல்ல கண்ணோட்டத்தோட பார்க்கறாங்க. எல்லாமே நாம நடந்துகிறதைப் பொறுத்துதாங்க இருக்கு. பத்து பேர் இருக்குற இடத்துல இரண்டு பேர் எங்களை கிண்டல் செய்தாலும் மீதி இருக்கிற எட்டுபேர் எங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க`` என்கிறார் கனகா. வெளியூர்களுக்கு சென்று சமையல் வேலை செய்யும்போது சட்டையும் கைலியும் அணிகிறார்கள். தலையில் துண்டு கட்டியிருக்கிறார்கள். மற்றபடி இவர்களது விசேஷங்களில் புடவை அணிகிறார்கள். தங்கள் வெற்றிக்கதையை சொல்கிறே வேளையில் மற்ற திருநங்கைகளைப் பற்றியும் வருத்தத்துடன் பேசினார் கனகா.

``எங்களுக்குள்ளே உழைக்கணும், முன்னேறணும்ங்கற முனைப்பு இருந்தது, அதனால ஜெயிச்சோம். ஆனா தொண்ணூறு சதவீத திருநங்கைகள் தவறாதான் பயன்படுத்தப்படுறாங்க. எங்களை மாதிரி பத்து சதவீதம் பேர்தான் தடைகளைத் தாண்டி வர்றாங்க. இந்த பத்து ஒருநாள் நூறாகும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்குதுங்க. இப்போ இருக்கிற சூழ்நிலையில் நாங்க மத்தவங்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமா வாழ்ந்து காட்டணும்ங்கறதுதான் எங்க லட்சியம். ஒரு பெரிய ஹோட்டல் ஆரம்பிக்கணும், தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் எங்க பிரியாணி பெயர் வாங்கணும்னு கனவு இருக்கு`` என்று கண்களில் நம்பிக்கை ஒளிர கனகா முடிக்க, பிரியாணி தயாராகியிருந்தது. அந்த பிரியாணியைப் போலவே இவர்களது வாழ்க்கையும் மணக்கிறது!

கிராஃப்ட்



 
மக்கு பச்சைக்கிளிகளைத் தெரிந்திருக்கும்.. பஞ்சவர்ண கிளிகளையும் அறிந்திருப்போம். சிலருக்கு வெள்ளைக்கிளிகள்கூட அறிமுகம் ஆகியிருக்கலாம். ஆனால் நீலம், சிவப்பு என கற்பனைக்கு எட்டாத நிறங்களில்கூட கிளிகள் இருக்கும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த கிராஃப்ட் டீச்சர் இந்திராகாந்தி. ஊசி, நூல், காட்டன் துணியோடு கொஞ்சம் கற்பனை வளமும் இருந்தால் போதும்.. பல வண்ண கிளிகள் நம் தோழிகளின் வீடுகளில் பறக்கும் என்று உத்திரவாதம் தருகிறார் இவர்.

தேவையான பொருட்கள்

பல வண்ண காட்டன் துணிகள் & அரை மீட்டர், ரெக்ரான் பஞ்சு & தேவைக்கு, ஊசி, நூல், கத்தரிக்கோல், ஃபேப்ரிக் க்ளோ, சமிக்கி, வெள்ளை ஸ்டோன், சில்வர் அல்லது தங்கநிற ரிப்பன், பல வண்ண மணிகள்.

 
செய்முறை:

அலங்காரப் பொருட்களை அவ்வளவாக யாரும் விரும்புவதில்லை.. அதனால் அவற்றைச் செய்வதில் தயக்கம் இருக்கிறது என்பதுதான் பெரும்பாலான தோழிகளின் வாய்ஸ். ஆனால் எதையுமே வித்தியாசம் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் நிச்சயம் ஜெயிக்கலாம். பொதுவான மாவிலைத் தோரணமோ, மணிகளோ, பூச்சரமோதான் வாசலை அலங்கரிக்கும். நாம் வித்தியாசமாக பல வண்ண கிளிகளைப் பறக்கவிட்டால் நிச்சயம் வரவேற்பு இருக்கும். வீட்டில் இருக்கும் காட்டன் துணிகளை வைத்தே இந்தக் கிளிகளைத் தைத்துவிடலாம் என்பதால் இதற்கான தயாரிப்பு செலவு குறைவு. ஆனால் இரண்டு மடங்கு விலைவைத்து விற்பனை செய்தாலும் போட்டிபோட்டுக் கொண்டு வாங்குவார்கள். சரி.. இப்போது கிளிகள் கொஞ்சும் வாசல் தோரணத்தை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

     

    Thursday, January 24, 2013

    சுருக்கு பை சுருக்கு பை




















    Hope you enjoyed this tutorial! 
    Happy Making!

    Share

    Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites