இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Sunday, July 15, 2012

பானை ஓவியம்

தேவையான பொருட்கள்:

செராமிக் பவுடர்
ஃபெவிக்கால்
தண்ணீர்
ப்ரஷ்(flat)
plywood
ஸ்ப்ரே (spray color)
தேவையான கலர்பவுடர் (அ) acrylic colors
கார்ன்ஃப்ளோர் க்ளே

செய்முறை:

முதலில் செராமிக் பவுடர், ஃபெவிக்கால், தண்ணீர் சேர்த்து 3:2:1 என்ற விகிதத்தில் கலந்து, ப்ளைளைவுட்டின்மேல் ஆள்காட்டி விரலில் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தடவிக்கொண்டேவரவேண்டும். நன்றாக காய்ந்த‌தும் தேவையான அக்ரிலிக் கலரை தடவி காய விடவேண்டும். நன்றாக காய்ந்த‌தும் கலர் ஸ்ப்ரே ஆங்காங்கே அடிக்க வேண்டும், இதை 8 மணி நேரம் காயவிடவும்.இப்பொழுது க்ளே பூக்கள் மற்றும் இலைகள் செய்து அழகுபடுத்தவும். படத்தில் பார்த்தால் நன்றாக புரியுமென நினைக்கிறேன். dark and light shade வருவதற்கு கொஞ்சம் க்ளேயில் டார்க் பிங்க், அடுத்து light pink அடுத்து அதைவிட லைட்கலரில் கலந்து கொள்ள வேண்டும்.







பானை ஓவியம்

பானைக்கு முதலில் கறுப்பு ஃபேப்ரிக் கலர் கொடுத்து காயவிடவேண்டும்.காய்ந்ததும் பிங்க் பியர்ல் கலர் கொடுத்து(தேவைப்பட்டால் மீடியம் சேர்த்துக்கொள்ளலாம்) ஜாயிண்ட் இடங்களைதவிர மீதி இடங்களில் அடித்து கொள்ளலாம். காயவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது பானை ரெடி.

மேலும் இது மினியேச்சர் ரோஸ் என்பதால் சிறு விளக்கத்துடன்....
க்ளேவை 5 பாகமாக பிரித்து வைத்துக்கொள்ளவும். மேலும் இந்த 5 பாகத்தை ஒவ்வொரு பாகத்தையும் இரண்டாக பிரித்து சிவப்பு டார்க் மற்றும் லைட் ஷேட் கலர் கொடுத்து பிசைந்து வைத்துக்கொள்ளவும் இவ்வாறு மீதியுள்ள க்ளேவிற்கும் எந்த கலர் தேவையோ இரண்டு ஷேட் கலர் கொடுத்து ஸிப்லாக் கவரில் வைத்துகொள்ள வேண்டும்.
தேவைப்படும் போது எடுத்து ரோஜாப்பூக்கள் செய்துக்கொள்ளலாம்.
முதலில் சிறிது எடுத்து திலகம் போல் உருட்டி கொள்ள வேண்டும்.இன்னொரு சிறு உருண்டை எடுத்து தட்டையாக்கி அந்த திலகத்தின் மேல் ஒட்டினால் இதழ் போல் இருக்கும் இவ்வாறுஒன்ரின் மேல் ஒன்றாக ஒட்டிக்கொண்டே வரவேண்டும்.இப்படியே அனைத்து ரோஜாக்களும் செய்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒவ்வொரு பானைக்கும் ஒரேகலரில் உள்ள ரோஜாக்களை 4,5 அடுக்கலாம்.
பார்ப்பதற்கு அழகான கண்ணைகவரும் பானை மற்றும் ரோஜாக்கள் ரெடி.





பானை ஓவியம்


தேவையான பொருட்கள்:
  • பானை
  • உப்பு காகிதத் தாள்
  • பிரஷ்
  • fabric கலர்கள் (சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு, மெட்டல்)
  • எம்சீல்
  • பெவிகால்
  • வார்னிஸ்
செய்முறை:
  • பானையை உப்புத்தாள் கொண்டு நன்கு தேய்க்கவும்.
  • பின்பு நன்றாக தண்ணீரில் 1மணி நேரம் ஊறவைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பானை முழுவதிற்கும் கருப்பு fabric கலரை அடிக்கவும். 1/2மணி நேரம் காயவிடவும்.
  • பின்பு பாதியளவு மெட்டல் கலரை அடிக்கவும். 1/2மணி நேரம் காயவிடவும்.
  • எம்சீலில் இரண்டு கலர் இருக்கும். அதனை எடுத்து நன்றாக மிக்ஸ் பண்ணி பிசைய வேண்டும்… 5 நிமிடம் ஊறவிடவும்.
  • பின்பு பூ இதழ்களுக்கு சிறிது எம்சீல் கலவையை எடுத்து திலகம் shapeல் உருட்டி ஒரு விரல் கொண்டு அழுத்தினால் மேலே மட்டும் விரியும். மேலே மட்டும் இரண்டு சைடு சுருட்டி விடவும். இப்படி எவ்வளவு தேவையோ எடுத்து காயவைத்துக் கொள்ளவும்.
  • இலைகளுக்கு திலகம் shapeல் உருட்டி ஒரு விரல் கொண்டு அழுத்தினால் இலை shape வந்து விடும். அதில் சிறு குச்சி எடுத்துக் கொண்டு இலைகளில் இருப்பது போல் கோடுகள் வரையவும். எவ்வளவு தேவையோ எடுத்து காயவைத்துக் கொள்ளவும்.
  • கொடிகளுக்கு சிறு உருண்டை எடுத்து நீளமாக மெல்லதாக உருட்டி எடுத்துக்கொள்ளவும். இதனை காயவைக்க தேவையில்லை.
  • பின்பு பானையில் பூவிதழ் கொண்டு பூவையையும் இலையையும் கொடியையும் பசை கொண்டு ஒட்டி காய விடவும்.
  • பூவிற்கு சிவப்பு கலரும், இலை மற்றும் கொடிக்கு பச்சை மஞ்சள் கலரையும் அடிக்கவும்.
  • பின்பு நன்றாக நிழலில் காயவிடவும்.
  • காய்ந்த பின்பு வார்னிஸ் அடித்து காயவிடவும்.
  • அழகான பூந்தொட்டி தயார்.

பானை ஓவியம்

நட்சத்திர ஓட்டல்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், பிரபலங்களின் வீடுகளில் வரவேற்பறையை அலங்கரிக்கும் அழகழகான பானைகளைப் பார்த்திருப்பீர்கள். வெறும் பானையாகவோ அல்லது பூங்கொத்து அலங்காரங்களுடனோ அழகு சேர்க்கும் அந்தப் பானைகளுக்கு ‘டெரகோட்டா பாட் பெயின்டிங்’ என்று பெயர்! டேபிளின் மேல் வைக்கிற குட்டி பானை முதல், ஆளுயர பானை வரை விதம்விதமான அளவுகளில் டெரகோட்டா பானை ஓவியங்கள் 
என்னென்ன தேவை? முதலீடு?
‘‘டெரகோட்டா பானைகள் (சாதாரண பானைகள் விற்பவர்களிடமே கிடைக்கும்), செராமிக் பவுடர், ஃபேப்ரிக் பெயின்ட், ஆயில் பெயின்ட், வார்னிஷ், பிரஷ், பசை.... பானை 30 ரூபாயிலிருந்து கிடைக்கும். செராமிக் பவுடர் 1 கிலோ 40 ரூபாய். பானைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, மத்த பொருள்களுக்கும் சேர்த்து ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானது.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?
‘‘பானையின் வடிவத்தைப் பொறுத்தது மாடல்... வட்டம், நீளம், கிண்ண வடிவம், கூஜா வடிவம் என விதம்விதமான வடிவங்கள்ல பானைகள் கிடைக்கும். தேவைக்கும், இட வசதிக்கும் ஏத்தபடி டிசைன் பண்ணிக்கலாம். பூ டிசைன்தான் ரொம்பப் பிரபலம். பழக்கொத்து, மரக்கிளையில பறவைகள் உட்கார்ந்திருக்கிற மாதிரியும் பண்ணலாம். பெயின்ட் பண்ணி, வார்னிஷ் அடிச்சிட்டா, எத்தனை வருஷமானாலும் பானையோட அழகு மாறாம, புதுசாவே இருக்கும்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘நட்சத்திர ஓட்டல்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், பார்ட்டி ஹால், வீடுகள்னு எல்லா இடங்கள்லயும் இதுக்கான தேவை இருக்கு. கிரகப்பிரவேசத்துக்கு பொருத்தமான அன்பளிப்பு. சின்ன சைஸ் பானைக்கான அடக்க விலை 150 ரூபாய் ஆகும். அதை 300 ரூபாய்க்கு விற்கலாம்.’’


தேவையான பொருட்கள்:
மண்பானை 1
சிவப்பு எனாமல் கலர் 50மில்லி
வார்னிஷ்
செராமிக்பவுடர்
ஃபெவிக்கால்
தண்ணீர்
பாலித்தீன் கவர்
கத்தரிக்கோல்
ரங்கோலி கலர் பவுடர்
கண்ணாடி உருண்டை வடிவம்
கோல்டன் கலர் 3டி அவுட்லைனர்.

செய்முறை:

முதலில் பானையை கழுவி காயவிடவும்
காய்ந்ததும் சிவப்பு எனாமல்கலர் அடித்து காய்ந்ததும் மறுபடி இன்னொரு கோட் அடிக்கவும் அப்பொழுதுதான் ஷைனிங்காக இருக்கும்.
பாலித்தீன் கவரை கோன்போல் செய்துக்கொள்ளவும்.
செராமிக்பவுடரில் தேவையான கலர்பவுடரை சேர்த்து ஃபெவிக்கால்விட்டு கலந்துகொள்ளவும் மேலும் பேஸ்ட் போல் வருவதற்கு தண்ணீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இதை கோனுக்கு மாற்றி டேப் போட்டு ஒட்டவும்.
கோனில் சிறு ஓட்டை போட்டு டிசைனை வரையலாம்.இந்த பானையில் முதலில் உருண்டை வடிவம் வரைந்து அதன் மேலும் கீழும் அவுட்லைன் போடவும், மேலும் 
கற்பனைக்கு ஏற்றவாரு டிசைன் செய்து, ரவுன்ட் ஷேப்பில் கண்ணாடி பதித்து சுற்றி கோல்டன் க்ளிட்டர் கலரை அவுட்லைன் கொடுக்கவும்.
முழுவதும் முடிந்து காய்ந்ததும் வார்னிஷ் அடிக்கவும்.இதனால் இன்னும் ஷைனிங்காக இருக்கும்.


பானை ஓவியம்

பானை அலங்காரம் 
தேவையான பொருட்கள்:
மண்பானை 1
ஃபெவிக்கால்
டிஷ்யூ பேப்பர்
தண்ணீர்
கருப்பு(ஃபேப்ரிக் கலர்)
கோல்ட் டஸ்ட்
ப்ரஷ்

செய்முறை:

முதலில் ஃபெவிக்கால், தண்ணீர் (1:3) என்ற விகிதத்தில் கலந்து வைத்துகொள்ளவேண்டும்.
மண்பானையின் மேல் டிஷ்யூ பேப்பர் வைத்து இந்த ஃபெவிக்கால் கலவையை சிறிது சிறிதாக பூச வேண்டும்.
முதலில் பானை முழுவதும் ஒட்டி நன்றாக காய்ந்ததும், அடுத்த லேயரை ஒட்ட வேண்டும்.

இப்பொழுது இந்த லேயரும் காயவைக்க வேண்டும்.
இந்த லேயர் காய்வதற்குள், நம்க்கு தேவையான டிசைனில் பூக்கள் செய்து வைத்துக்கொள்ளலாம்.
எம்சீலை எடுத்து இரண்டு கலவையும் நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை திலகம் போல் உருட்டி கத்தியில் நடுவில் கோடு போட்டால் பூக்களுக்கு இதழ்கள் ரெடி. இப்பொழுது சிறிது எடுத்து காம்பு,இலைகள் போண்றவற்றை செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது பானையும் காய்ந்துவிட்டிருக்கும். இதன் மேல் செய்து வைத்திருக்கும் பூக்களை ஒட்ட வேண்டும். இவை நன்றாக காய்ந்ததும்,
ஃபேப்ரிக் கருப்பு கலரை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து கலர் அடிக்க வேண்டும். லேசாக கலர் காய்ந்ததும் அங்கங்கே கோல்ட் டஸ்ட் தூவி டிஷ்யூ பேப்பரில் அனைத்து இடங்களுக்கும் ஒற்றி ஒற்றி எடுத்தால் அழகான கண்ணை கவரும் பானை ரெடி.பூக்களுக்கு மட்டும் நான் கோல்ட் கலர் கொடுத்திருக்கேன்.




பானை ஓவியம்


இது நானேயல்ல!….(சுயசரிதை)

20FEB
ஒர் ஆங்கில தம்பதியினர் ஒரு முறை பொருட்க்கள் வாங்க கடைக்கு சென்றார்கள். இவர்களுக்கு பழங்காலத்து அழகிய பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே மிக அழகாக வண்ணம் தீட்டப்பட்ட ஓர் அழகு தேனீர் குவளை (tea cup) ஒன்றை பார்த்தார்கள்.“ இந்த குவளை மிகவும் அழகாக இருக்கிறதே. இதையே நாம் வாங்கி விடலாமே! இதைப்போன்ற ஓர் அழகான குவளையை நான் இது வரை பார்த்ததில்லை” என்றாள் மனைவி.குவளையை கைகளில் வாங்கிய அந்த மனைவி அதன் அழகை ரசித்துக் கொண்டிருக்கையில் அந்த குவளை பேசத் துவங்கியது:“நான் எப்படி இவ்வளவு அழகான குவளையாக மாறினேன். தெரியுமா?” என்றது.
இப்படி அழகான குவளையாக ஆகும் முன் நான் ஒரு அழுக்கான சிவப்பு நிறம் கொண்ட ஒரு அழுக்கான சிவப்பு நிறம் கொண்ட ஒரு களிமண்ணாயிருந்தேன். என்னுடைய முதலாளியான குயவன் அழுக்கான என்னை எடுத்து என்னை தட்டி ஒரு உருண்டையாக மாற்றினார். அவர் என்னை தட்டி உருண்டையாக அழுத்தியபோது “ஜயா வேண்டாம்.. வேண்டாம்” என்று கதறி அழுதேன்.
“என்னை விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சினேன். ஆனால் அவரோ “உன்னை விட்டுவிடும் நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.
அதற்கு பின் உருண்டையான என்னை ஒரு சக்கரத்தின் மீது வைத்தார். திடீரென்று என்னை அவர் சுற்றிவிட நான் சுற்றி சுற்றி வந்தேன். “ஜயோ! நிறுத்துங்கள்! எனக்கு மயக்கமாக வருகிறது. என்னை விட்டுவிடுங்கள். என்று கதறினேன்.
ஆனால் என் குயவனோ “உன்னை விட்டுவிடும் நேரம் இன்னும் வரவில்லை” என்றார். அதற்கு பின் என்னை ஒரு சூளையில் போடட்டார். அப்பப்பா! அதைப் போல் வேதனையை என் வாழ் நாளில் எப்பொழுதும் நான் அனுபவிக்கப்போவதும் கிடையாது. “எதற்க்காக இந்த கொடிய குயவன் இப்படி என்னை வேதனைப்படுத்துகிறான்?” என்று புலம்பினேன்.
கதறினேன்! அழுதேன்! சூளையின் சுவர்களை உதைத்தேன். சூளையின் வாய் வழியாக அவர் முகம் தெரிந்தது. கைகளை கூப்பி “தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சினேன்! அதற்கு அவர் உன்னை விட்டுவிட நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.
ஒரு வழியாக சூளையின் கதவை திறந்தார். அந்த குயவன். என்னை ஒரு பரண் மேல் வைத்து ஆற விட்டார். அப்பா! சொஞ்சம் இன்பமாக இருந்தது. பின்பு தன் கரங்களால் அழகான வர்ணத்தை என் மீது திட்டினார். ஜயா! அந்த வண்ண பிரஷை என் மீது தடவ தடவ எனக்கு மறுபடியும் வெதனை உண்டாயிற்று “நிறுத்து! நிறுத்து” என்றேன்.
நிறுத்தும் நேரம் இன்னும் வரவில்லை” என்றார். தீடிர்ரென்று என்னை மறுபடியும் ஒரு சூழையில் போட்டார். இது இதற்கு முன் இருந்த சூழையைப்போல் இல்லை அதைப்போல் இரண்டு மடங்கு சூடு எனக்கோ முச்சு திணறியது கெஞ்சினேன் மன்றாடினேன்.
கதறினேன். “இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா? உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? என்னுடைய இடத்தில் கொஞ்சம் உங்களை வைத்துப் பாருங்களேன்?” என்றேன். கோபமாக அவரும் தலையசைத்துக்கொண்டே “உன் நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.
“இதற்கு மேல் எந்த நம்பிக்கையும் இல்லை” என்ற முடிவிற்க்கு வந்தேன். இவரிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்று நினைத்தேன். முற்றிலும் சரணடைந்தேன். உடனே தீடிர் என்று கதவுகள் திறந்தன. என்னை அவர் கையில் ஏந்தினார். ஒரு அலங்கார இடத்தில் வைத்தார். சுமார். ஒரு மணிநேரம் அப்படியே நான் நின்ற பின் உள்ளே சென்று ஒரு கண்ணாடியை எடுத்துக்கொண்டு வந்து “இதோ! இதில் பார்” என்றார்.
பார்த்தவுடன் அதிர்சியுற்றேன். “இது நானல்ல!” என்று கதறினேன். நான் அவ்வளவு அழகாக காணப்பட்டேன்.
இப்பொழுது அவர் பேசினார் “மகனே! உன்னை உருட்டி சுற்றுவதால் உனக்கு எவ்வளவு துரம் வேதனையாய் இருக்கும் என்பதை நன்கு அறிவேன். ஆனால் நான் மட்டும் உன்னை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டிருந்தால் நீ காய்ந்து ஒரு மண்கட்டியாக போயிருப்பாய் நான் உன்னை வனையும் சக்கரத்தின் மீது போட்ட போதும் அந்த சக்கரத்தை சுற்றிவிடும் போதும் அது உனக்கு எவ்வளவு வேதனையை கொடுத்திருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும் ஆனால் நான் மட்டும் அப்படி செய்யாதிருந்தால்நீ நொறுங்கி போயிருப்பாய். உன்னை சூளையில் போட்ட போது அது உன்னை சுட்டெரிக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும் ஆனால் அப்படி நான் செய்யாதிருந்தால் நீ இந்நேரம் வீறல் விட்டிருப்பாய்.
நான் உன்மேல் ஓவியம் தீட்டும்போது உன் கன்னங்கள் வலித்தது எனக்கு தெரியும் நான் அதை அறிவேன். நான் அப்படி செய்யாதிருந்தால் உன் வாழ்க்கையில் வண்ணமயமான அற்புதங்கள் நடந்திருக்காது.
இப்பொழுது என் கைவண்ணம் உன் மேல் பட்டு நீ ஒர் அழகான குவளையாய் மாறியிருக்கிறாய் நீ என்னவாக வேண்டும் என்று நான் என் மனதில் திட்டமிட்டிருந்தேனோ? அதேபொல் மாறியிருக்கிறாய்.
இதை வாசிக்கும் அன்பு நண்பர்களே! உன்னுடைய வாழ்கையிலும் இதையே தான் செய்கிறார். உன்னை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும் அவர் குயவன் நீ வெறும் களிமண். உன்னை அநேக வேதனைக்குள் வழிநடத்தக்கூடிய நிர்ப்பந்தங்கள் எற்ப்படலாம்.சுட்டெரிக்கும் தீயினால் உன் விசுவாசம் சோதிக்கப்படலாம் ஆனால் என்னதான் உன் சூழ்நிலைகள் உன் பெலத்தை மிஞ்சி போனாலும் சரி. உன் வாழ்க்கை அவரது கரங்களில் பத்திரமாக இருக்கிறது என்பதை மறவாதே.
நீ காண்கிற உன் சுழ்நிலைகளை வைத்து உன் எதிர்காலத்தையோ கர்த்தரையோ எடைபோட்டுவிடாதே. உன்னை அவரது உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிறார். என்பதை மறவாதே. ஆகவே! உன் சூழ்நிலைகளின் மேல் அவரது வல்லமை விளங்கி கொண்டிருக்கிறது என்பதை மறவாதே.

Sunday, July 8, 2012

செயற்கை ரப்பர் பயன்பாடு 4.23 லட்சம் டன்னாக உயர்வு



புதுடில்லி: உள்நாட்டில், செயற்கை ரப்பர் பயன்பாடு, கடந்த 2011-12ம் நிதியாண்டில், 4.23 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டை விட, 3 சதவீதம் (4.12 லட்சம் டன்) அதிகம் என, ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உற்பத்திஅதேசமயம், சென்ற நிதியாண்டில், உள்நாட்டில், இதன் உற்பத்தி, 1.11 லட்சம் டன்னாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 1.10 லட்சம் டன்னாக காணப்பட்டது. உள்நாட்டில், செயற்கை ரப்பர் உற்பத்தி குறைவாக இருப்பதால், நம் நாடு, வெளி நாடுகளிலிருந்து, இதை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது.கணக்கீட்டு ஆண்டுகளில், செயற்கை ரப்பர் இறக்குமதி, 8 சதவீதம் அதிகரித்து, 3.02 லட்சம் டன்னிடருந்து, 3.28 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த செயற்கை ரப்பர் பயன்பாட்டில், வாகன டயர் தயாரிப்பு நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் அதிகளவில் உள்ளது.சென்ற நிதியாண்டில், டயர் தயாரிப்பு நிறுவனங்களின் செயற்கை ரப்பர் பயன்பாடு, 3 சதவீதம் அதிகரித்து, 2.98 லட்சம் டன்னிலிருந்து, 3.08 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.டயர் தயாரிப்பு தவிர, டியூப்கள், காலணிகள், பெல்டுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், செயற்கை ரப்பர் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.உள்நாட்டில், இயற்கை மற்றும் செயற்கை ரப்பர் பயன்பாடு, 69:31 என்ற விகிதத்தில் உள்ளது. கணக்கீட்டு ஆண்டுகளில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 2 சதவீதம் வளர்ச்சிகண்டு, 9.47 லட்சம் டன்னிலிருந்து, 9.66 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.நடப்பாண்டு மார்ச் மாதத்தில், உள்நாட்டில், செயற்கை ரப்பர் பயன்பாடு, 36,280 டன்னாகஅதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 36,025 டன்னாக இருந்தது.வாகன விற்பனைஇருப்பினும், சர்வதேச சுணக்க நிலையால், நடப்பாண்டில், உள்நாட்டில், வாகன விற்பனையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், டயர் தயாரிப்பு நிறுவனங்களின், செயற்கை ரப்பர் பயன்பாடு, சென்ற மார்ச் மாதத்தில், 26,289 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 26,295 டன்னாக இருந்தது.இதே மார்ச் மாதங்களில், செயற்கை ரப்பர் உற்பத்தி, 9,343 டன்னிலிருந்து, 8,135 டன்னாக சரிவடைந்துள்ளது. அதேசமயம், இறக்குமதி, 26, 275 டன்னிலிருந்து, 30,300 டன்னாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, 50,325 டன் செயற்கை ரப்பர் கையிருப்பு இருந்ததாக என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.

பாட்டில் குடிநீர் பயன்பாடு 21 சதவீதம் வளர்ச்சி


ராஜ்கோட்:இந்தியாவில், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் பயன்பாடு, சென்ற, 2011-12ம் நிதியாண்டில், 21 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், உலக சராசரி பயன்பாட்டுடன் ஒப்பிடும் போது, இதில், நம்நாடு மிகவும் பின்தங்கியுள்ளது என, ஐகான் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த, 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் தனி நபர், பாட்டில் குடிநீர் பயன்பாடு, 16.20 லிட்டர் என்றளவில் இருந்தது. இது, சென்ற நிதியாண்டில், 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 19.60 லிட்டராக அதிகரித்துள்ளது. இருப்பினும், உலக சராசரி பயன்பாட்டுடன் (30 லிட்டர்) ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவான அளவாகும்.நாட்டின் ஒட்டு மொத்த பாட்டில் குடிநீர் விற்பனையில், தென்னிந்தியாவின் பங்களிப்பு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதையடுத்து, மேற்கு மாநிலங்கள் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை கொண்டுள்ளன.
பாட்டில் குடிநீர் பயன்பாட்டில், மேற்கத்திய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக, மெக்சிக்கோவில், தனி நபரின் பாட்டில் குடிநீர் பயன்பாடு, சராசரியாக, 250 லிட்டர் என்றளவில் உள்ளது. இதைத் தொடர்ந்து, ஆண்டுக்கு, 190 லிட்டர் என்றளவுடன் இத்தாலி, இரண்டாம் இடம் வகிக்கிறது. உலகளவில், தனிநபர், பாட்டில் குடிநீர் பயன்பாட்டில், முதல், 20 நாடுகளில், ஆசியாவை சேர்ந்த, தாய்லாந்து (115 லிட்டர்), சீனா-ஹாங்காங் (95 லிட்டர்), ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் நுகர்வோரின் செலவிடும் வருவாய் உயர்ந்து வருவது போன்றவற்றால், வரும், 2020ம் ஆண்டிற்குள், நாட்டின், தனி நபர், பாட்டில் குடிநீர் பயன்பாடு, 30 லிட்டராக அதிகரிக்கும். அதேசமயம், உலக நாடுகளின் சராசரி பயன்பாடு, 40 லிட்டர் என்றளவில் இருக்கும் என, ஐகான் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் அசாஜ் மோட்டிவாலா தெரிவித்தார்.

தேங்காய் விளைச்சல், பயன்பாட்டில் இந்தியா முதலிடம்

தமிழகத்தில், தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தேங்காய் விளைச்சலில் சர்வதேச அளவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே சமயம், தேங்காய் உற்பத்தியில் இந்தோனேஷியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்தோனேஷியா : இது குறித்து ஆசிய பசிபிக் தேங்காய் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:இந்தோனேஷியா ஆண்டுக்கு 1,650 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1,573 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகின்றன.அதிக அளவில் தென்னந்தோப்பு களை கொண்ட நாடுகள் வரிசையிலும் இந்தோனேஷியா முதலிடத்தில் உள்ளது. இங்கு 38.50 கோடி ஹெக்டேரில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில் இலங்கையும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இந்தியாவில் தென்னந் தோப்புகளின் பரப்பளவு 19 கோடி ஹெக்டேராக உள்ளது.
பரப்பளவு குறைந்துள்ள போதிலும், உலகளவில் தேங்காய் விளைச்சலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒரு ஹெக்டேரில் 8,303 தேங்காய்கள் விளைகின்றன. இரண்டாவது இடத்தில் உள்ள இலங்கையில் ஒரு ஹெக்டேரில் 7,223 தேங்காய்கள் விளைகின்றன.உலகளவில், தேங்காய் பயன்பாட்டிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஆண்டுக்கு 1,495 கோடி தேங்காய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, மொத்த தேங்காய் உற்பத்தியில் 95 சதவீதம் உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது.
மலேசியா:உலகளவில், தேங்காய் இறக்குமதியில் மலேசியா முதலிடத்தில் உள்ளது.இந்நாடு 1 கோடி ஹெக்டேர் தென்னந்தோப்பின் மூலம் 38 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்கிறது. இங்கு தேங்காய் பயன்பாடு, 113 சதவீதமாக உள்ளது. அதனால் இந்நாடு, ஆண்டுக்கு சராசரியாக 140 கோடி தேங்காய்களை இறக்குமதி செய்கிறது.இந்தியா தேங்காயை பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியில் மிகவும் பின் தங்கி உள்ளது. இலங்கையில் தேங்காய் உற்பத்தி, தமிழ்நாட்டை விட, குறைவாகவே உள்ளது. எனினும், இந்தியாவை விட, இலங்கை மதிப்பு கூட்டப்பட்ட தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்களை ஏற்றுமதி செய்து அதிக வருவாயை ஈட்டி வருகிறது.
தமிழகம்:இந்தியாவில், 18 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் வர்த்தக ரீதியில் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. விளைச்சலைப் பொருத்தவரை, லட்சத் தீவில் தான் ஒரு ஹெக்டேருக்கு மிக அதிகமாக, அதாவது 19 ஆயிரத்து 630 தேங்காய்கள் விளைகின்றன. இது, தமிழகத்தில் ஒரு ஹெக்டேரில் 13 ஆயிரத்து 771 ஆகவும், ஆந்திராவில் 9,327 ஆகவும், கேரளா மற்றும் கர்நாடகாவில், முறையே 7,365 மற்றும் 5,193 ஆகவும் உள்ளது.

Thursday, July 5, 2012

பணத்தால் வந்த பிரிவோ? பண்பை மறந்த உறவோ?


ஆதி மனிதன் தொட்டு
அண்மைக்காலம்வரை
அன்பெனும் பிணைப்பால்
பின்னிப்பிணைந்து
வாழ்ந்;த நம் உறவுகள்
ஏன்தான் இன்று இப்படி? ஓலை வீட்டிலும்
ஒட்டிய வயிற்றுடனும் வாழ்தபோது
ஒற்றுமையாய் வாழ்ந்த நம் உறவுகள்
காசைப்பார்த்ததும் மாறியதோ?
கடல் தாண்டி வந்தபின் மாறியதோ?
கருணை மனம் எங்கு ஓடியதோ?
தன்வயிற்றை ஒட்டவைத்து
தன்னுள்  கருவாக்கி
உன்னை ஊர் போற்ற உருவாக்கிய
அன்னைக்கு உதவாமல்?
உலகத்தில் நீ எங்கு வாழ்ந்;தாலும்
உன்னால் யாருக்கென்ன நன்மை?
கண்ணை மறைத்ததோ
காசு வந்து உன்னை?
பின்னால் ஒருகாலம்
உன்னிலை உணரும்போது
மண்ணில் இருக்காளே அன்னை?
அப்போது நீ எண்ணித் தவித்தென்ன நன்மை?

Monday, July 2, 2012

பட்டுப்புழு வளர்ப்பு குடிலுக்கான மானிய தொகை அதிகரிப்பு

சென்னை: "பட்டுப்புழு வளர்ப்புக் குடில் கட்டுவதற்கான மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படும்' என, ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத், சட்டசபையில் அறிவித்தார்.
இத்துறை மீதான மானியத்தில், அமைச்சர் அறிவித்த புதிய அறிவிப்புகள்:
* பட்டுப்புழு வளர்ப்பு, புழு வளர்ப்புக் குடில் மற்றும் தனி நபர் விபத்து காப்பீட்டிற்கான தவணைத் தொகையில், 25 சதவீதத்தை தற்போது பயனாளிகள் செலுத்தி வருகின்றனர். அவர்களின் பங்களிப்பு, 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகவும், மாநில அரசின் பங்களிப்பு, 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக மாற்றப்படும்.
* சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், சிறிய அளவிலான இளம்புழு வளர்ப்பு மையங்கள் அமைத்து, மானிய விலையில் தளவாடங்கள் தரப்படும். இதற்காக, நடப்பு நிதியாண்டில் 50 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
* விவசாய தோட்டங்களின் வரப்பு ஓரங்களில், மூன்று லட்சம் மல்பரி மரக் கன்றுகள் நடவு செய்ய, நடப்பு நிதியாண்டில், 26.25 லட்ச ரூபாய் மானியம் தரப்படும். இந்த மல்பரி தோட்டங்களுக்கு, மண் பரிசோதனையின்படி, விலையில்லா நுண்ணூட்ட சத்துக்கள் வழங்க, 40 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) மூலம், கைவினைஞர்களுக்கு நேரடி சந்தை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக நடப்பு நிதியாண்டில், 1.65 கோடி ரூபாய் செலவில், 220 கண்காட்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
* பூம்புகார் நிறுவனம் தமது விற்பனை அதிகரிக்க, கைவினைப் பொருட்களை கணினி மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* பட்டு விவசாயிகளுக்கு புழு வளர்ப்புக் குடிலின் அளவிற்கேற்ப வழங்கப்படும் மானியத் தொகை, 75 ஆயிரம் ரூபாயிலிருந்து, ஒரு லட்ச ரூபாய்; 50 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரம் ரூபாய்; 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 37 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு, அமைச்சர் சம்பத் அறிவித்தார்.

சணல் பை

''எந்த பிஸினஸ்னாலும், எல்லாரும் பண்ணுற வேலையை நாமளும் செய்யாம... மாத்தி யோசிச்சா, வெற்றியைக் கொண் டாடலாம். அதேபோல எந்தத் தொழில்லயும் இடையில் குறுக்கிடும் 'கறுப்பு நாட்களை' கடந்தே ஆகணும். கொஞ்சம் நிதானிச்சு, அதுக்கான காரணத்தைக் கண்டு பிடிச்சு சரிபடுத்திட்டா, வெற்றி நம்ம கையைவிட்டு நகராது!''
- சிம்பிள் லாஜிக் சொல்கிறார் சுசிலா. வெல்வெட், சணல் பைகள், பர்ஸ்கள் தயாரிப்பில் மாதம் 25 ஆயிரம் லாபம் பார்த்துக் கொண்டிருக்கும் மதுரைப் பெண்!
''எனக்கு ஓரளவு தைக்கத் தெரியும். மகளிர் குழுக்களுக்கு மதுரையில டெய்லரிங் கோச்சிங் கொடுத்தாங்க. அதுல கலந்துகிட்டப்போதான் தைக்கறதுல கிரியேட்டிவிட்டியைப் புகுத்தினா... வளமான வருமானம் பார்க்கலாம்னு புரிஞ்சுது. பயிற்சி முடிஞ்சதும் எல்லாரும் ஆடைகள் தைக்கத்தான் களம் இறங்கினாங்க. நானும் அதே பாதையில போனா... பந்தயத்துல முந்த முடியாதுனு புரிஞ்சுது. மாற்றுப் பாதையை யோசிச்சு தேர்ந்தெடுத்தேன். அதுதான் வெல்வெட், சணல் பைகள் மற்றும் பர்ஸ் தயாரிப்பு!'' என்று சொல்லி பெருமிதமாகப் பார்த்தவர், தொடர்ந்தார்...

''வெல்வெட் துணி, நூல், லேஸ், ஜிப், மேல கவர் பண்ணுற ரன்னர், அலங்காரத்துக்குக் கண்ணாடி, பாசி ரகங்கள்... இவ்வளவுதான் பேக் செய்றதுக்குத் தேவையான மெட்டீரியல். மதுரையில இருக்கற துணிக்கடை பஜாருக்கு போனீங்கனா... வெல்வெட் துணி ஒரு மீட்டர் 150 - 200 ரூபாய், ஜிப் 3 ரூபாய் 50 காசு, ரன்னர் 15 பைசாவிலிருந்து ஒரு ரூபாய்... இந்த விலைகள்ல கிடைக்கும். ஆகக்கூடி ஒரு பேக் தைக்கறதுக்கு 60 - 80 ரூபாய் செலவாகும். அதை மார்க்கெட்ல 120 - 150 ரூபாய் வரை விற்கலாம். ஒரு பைக்கு மினிமம் 50 ரூபாய் லாபம் கிடைக்கும்.
பைக்காக வெட்டும்போது, மிச்சமாகி விழற வெல்வெட் துண்டு துணிகளை குப்பையில போடாம, அதை வெச்சு ஏதாச்சும் பண்ண முடியுமானு யோசிச்சேன். குழந்தைகள் விளையாடுறதுக்கு குட்டி குட்டி ஹேண்ட் பேக், கிஃப்ட் அயிட்டம், செல்போன் பவுச்னு சின்ன சின்னப் பொருட்களை தயார் பண்ணி வித்தேன். அதன் மூலமாவும் உபரி லாபம் கிடைக்க ஆரம்பிச்சுடுச்சு. ஆரம்பத்துல மகளிர் குழு கண்காட்சிகள், ரீடெய்ல் கடைகள் இதெல்லாம்தான் என்னோட மார்க்கெட்டிங் ஏரியா.

இந்தத் தொழில், ஓரளவுக்கு நிலையான வருமானம் கொடுக்கவே, அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். சணல் பைகளுக்கு மார்க்கெட்ல நல்ல வரவேற்பு இருக்கிறது புரிஞ்சுது. 'நமக்கு... தையல், மார்க்கெட்டிங் எல்லாம் ஏற்கெனவே தெரியும். மெட்டீரியலை மட்டும் மாத்தினா, இன்னொரு தொழிலும் கைவசம் வந்துடுமே!'னு யோசிச்சு, சணல் பை தயாரிப்புலயும் இறங்கினேன்.
சணல் பைக்கான மூலப்பொருள் பெரும்பாலும் சென்னையில மட்டும்தான் கிடைக்கறதாலா... போக்குவரத்துக்கே நிறைய செலவாகி, லாபம் ரொம்பவும் குறைவாத்தான் கிடைச்சுது. அதனால, பேங்க்ல லோன் வாங்கி மொத்தமா சணல் வாங்கிப் போட்டேன். மீட்டர் 80 - 140 ரூபாய் வரையில விலையிலயே சணல் கிடைச்சுது. இதை வெச்சு ஜவுளிக்கடை பைகள் உட்பட நிறைய பைகள் தயாரிச்சேன். ஒரு சணல் பை, 50 ரூபாய் முதலீட்டுக்கு... 30 ரூபாய் லாபம் தந்துச்சு.
பர்ஸ்களை செய்ய பெரிய முதலீடு தேவை இல்லை. சாதாரண துணி, ஜிப், ரன்னர், நூல்... அவ்வளவுதான்! சின்ன பர்ஸ் செய்ய முதலீடு 10 ரூபாய்தான். அதை மார்க்கெட்டுல 30 ரூபாய்க்கு விக்கலாம். பெரிய பர்ஸை 30 - 40 ரூபாயில தயாரிக்கலாம். அதை 65 - 70 ரூபாய்க்கு விற்கலாம். கண்ணாடி, பட்டன், பாசினு அழகுபடுத்தினா இரட்டிப்பு லாபம் கிடைக்கும்'' என்ற சுசிலா, ஓர் உழைப்பாளியாகத் தொழிலைத் தொடங்கி, இன்று முதலாளியாக மாறியிருக்கும் கதையைத் தொடர்ந்தார்.

''ஆர்டர்களைப் பெருக்கறதுக்கு என்ன வழினு யோசிச்சேன். இந்த ஊர்லயே உட்கார்ந்து வியாபாரம் பண்ணினா படியேற முடியாதுனு புரிஞ்சது. விருதுநகர், கோயம்புத்தூர், டெல்லி, ஹரியானா, கோவா, ஹைதராபாத்னு ஊர் ஊரா கிளம்பிட்டேன். அங்க இருக்கிற கைவினைப் பொருட்கள் கண்காட்சியில, நிரந்தர வாடிக்கையாளர்கள் கிடைக்கற அளவுக்கு என்னோட தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு. சில நிறுவனங்களும் விளம்பரத்துக்காக அவங்க லோகோ வெச்சு பைகள் தயாரிச்சு தரச்சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
ஸ்கூல் ரீ-ஓபன், திருவிழா, பொங்கல், தீபாவளி நேரங்கள்ல வியாபாரம் சூடு பிடிக்கும். ஒரு கட்டத்துல என்னால தனியாளா எல்லா வேலைகளையும் பார்க்க முடியல. 'சிலர், நம்மள முன்னேத்திவிட்ட மாதிரி... நாமும் சிலரை முன்னேத்திவிடுறது நல்ல விஷயம்தானே!'னு வெளி வேலைக்கு ஆள் வெச்சுக்கிட்டதோட, டெய்லரிங் தெரிஞ்ச பொண்ணுங்களுக்கு என்னோட ஆர்டர்களைப் பிரிச்சுக் கொடுத்து தைச்சு வாங்கினேன். இப்போ கிட்டத்தட்ட ஆறு ஊர்கள்ல வியாபாரம் பண்றேன். எட்டாவதுகூட தாண்டாத நான்... மாசம் 25 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்கிறேன். என்னோட தொழில் முயற்சிகளைப் பாராட்டி பல விருதுகளும்கூட வாங்கியிருக்கேன்!'' என்று பெருமையோடு சொன்னார் சுசிலா. இவரின் கணவரும் தொழிலுக்குத் துணையாக இருக்கிறார். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.
''தையலும், கொஞ்சம் கற்பனைத் திறனும் போதும்... ஆயிரம் ரூபாய் முதலீட்டில்கூட இந்த வெல்வெட், சணல் பைகள் தொழிலை ஆரம்பிச்சுடலாம். தண்ணியில தள்ளி விட்டா... தானா நீச்சல் பழகிற மாதிரி, மார்க்கெட்டிங், தொழில் போட்டி, லாபம், நஷ்டம்னு எல்லாம் கத்துக்கலாம்... முன்னேறணும்ங்கிற வெறி மனசுல இருந்தா!''
- வெற்றி சூத்திரம் சொல்லி முடிக்கிறார் சுசிலா!

கைத்தொழிலில் சாதிக்கும் பெண்


பெண்கள்  ஒரு அடி முன்னேறினால்  அந்த நாடு 10 அடிகள்  முன்னேறும்  என்றார்  காந்தியடிகள்.  கைத்தொழில் ஒன்றை  கற்றுக்கொள்; கவலை  உனக்கில்லை  ஒத்துக்கொள்  என்று  பாடினார்  நாமக்கல் வெ.ராமலிங்கம்  பிள்ளை. இந்த 2 தலைவர்களின்  கருத்துக்  களுக்கு  உதாரணமாக விளங்குகிறார்  திருவல்லிக்கேணியைச்  சேர்ந்த  பெண் ரமணி.  பல்வேறு கைத்தொழில்களை   கற்றுக்கொண்டு  தானும்  முன்னேறிய  துடன், மற்ற  பெண்களும்  முன்னேற  பயிற்சி  அளித்து வருகிறார்  ரமணி.


.


அவரை  சந்தித்த  போது  தன்னுடைய  பின்னணி  பற்றியும், தனக்கு  கைத்தொழில்கள்  மீது  நாட்டம்  ஏற்பட்டது  பற்றியும், எதிர்கால  திட்டங்கள் குறித்தும்  கருத்துக்களை  பகிர்ந்து  கொண்டார்.  அவை  வருமாறு:
படிக்கும்  போதே கூடைபின்னுதல், தையல்  போன்ற  வேலைகளில்  எனக்கு  நாட்டம் அதிகம்.  திருமணம்  ஆனபிறகு பிள்ளைகளை  பள்ளிக்கு  அனுப்பிவிட்டு  வீட்டில்  இருக்கும்  நேரத்தில்   ஆஷாத்  நிஷா பயிற்சி  நிலையத்தில்  6  மாதம்  புடவைகளுக்கு  எம்ப்ராய்டரி  போடும்  பயிற்சி பெற்றேன். 
10ம்  வகுப்புவரை  படித்துள்ளதால், மக்கள்  கல்வி  நிறுவனத்திலும், ஜெ.எஸ்.எஸ்.  அலுவலகத்திலும்  பயிற்சியில்  ஈடுபட்டு  கைத் தொழிலை  முறைப்படி  கற்றுக் கொண்டேன்.  பின்னர்  ஜெ  எஸ் எஸ்  பயிற்சி  நிலையம்  மூலமாக  அங்குவரும்  பெண்களுக்கு 6மாதம்  பயிற்சி  கொடுத்தேன்.  அதற்கு  நிறுவனத்தின்  சார்பில்   மாதம்  சம்பளம் அளித்தார்கள்.பின்னர்  தனியாக  பெண்களுக்கு  பயிற்சி  கொடுக்க ஆரம்பித்தேன்.
   சேலைகளுக்கு  கல் பதித்தல்,  ஜமிக்கி  தைத்தல், பூ வேலைப்பாடுகள்,   ஜெர்தோஷி  போடுதல், எம்ப்ராய்டரி  போடுதல், கல்  பதித்த  நகைகள், கிறிஸ்டல், மணி  மற்றும்  பானையில்  ஓவிய  வேலைப்பாடு,  ஆர்க்கென்டீஸ், ஸ்டோக்கின்ஸ் பேப்பர்  கிளாத், கோல்டு  மரம், வாசல்  தோரணங்கள்,  பொம்மைகள், செண்ட்,  ரூம்  ஸ்பிரே உட்பட  அனைத்துவித  பயிற்சிகளையும்  கொடுக்கிறேன்.
குறைந்த  விலையில்  வாங்கி வீட்டிற்கு  தேவையான  பொருட்களை  தயார்   செய்தும்  வருகிறேன்.
பேஷன்  டிசைனில் பெண்கள்  அதிக ஆர்வம்  காட்டுவதால்  பிளைன் சேலைகளை  வாங்கி  வாடிக்கை  யாளர்கள்  கூறும்  டிசைன்களை  செய்து  கொடுத்து  வருகிறேன்.  கல்லூரி  மாணவிகளின்  ரசனைக்  கேற்ப பல மாடல்கள்  போட்டு  கொடுப்பதால்  வாடிக்கையாளர்கள்  வட்டம்  அதிகரித்துகொண்டே  இருக்கிறது அது  பெருமையாக  இருக்கிறது.
வாசலில்  அழகான  ஊஞ்சல்  செய்து  அதில் சாமி  சிலைகள் மற்றும்  நமக்கும்  பிடித்த  பொம்மைகளை  வைத்து  விட்டால்  ஊஞ்சலாடும்  காட்சி மிக  ஆழகாக இருக்கும்.  இப்படி  வித்தியாசமான  முறையில் மக்கள்  விரும்பும்படி  தயார்  செய்து கொடுப்பதால்,  வீட்டில்  இருந்து  கொண்டே  சம்பாதிக்க  முடிகிறது.  அதற்கு நல்ல  வரவேற்பு உள்ளது.
   பெண்கள்  விரும்புவதற்கேற்ப  நகைகள், வளையல்கள், மோதிரம்  போன்ற ஆபரணங்கள்  புதிய  மாடல்களில்  வருகிறதோ  அந்த  மாடல்களில்  டிசைன்  செய்து கொடுப்பேன். வீட்டிலும், வெளியிலும்  சென்று  கைத்தொழில்  கற்றுக்கொள்ள  விருப்பப்  படும் பெண்களுக்கு  10  பேர்  கொண்ட  குழுவாக  சேர்த்துஒரு  குழுவுக்கு  இரண்டு  மணி நேரம் பயிற்சி.  அது  முடிந்தவுடன்  மற்றொரு  குழுவுக்கு  பயிற்சி.  இதுபோன்று  ஒரு நாளைக்கு ஆறு  மணிநேரம்  பயிற்சி  கொடுக்கிறேன்.
    500க்கும்  மேற்பட்ட  பெண்களுக்கு இதுவரை  பயிற்சி  அளித்துள்ளேன்.  பிளாஸ்டிக்  பொருட்களின்  வேலைப்  பாடுகள், தையல், பொம்மை  ஊஞ்சல், செல்போன்  கவர் போன்ற  அனைத்து  விதமான  டிசைனும்  செய்வேன். 
தஞ்சாவூர்  ஓவியம், பானையில்  ஓவியம், பாட்டிலில்  ஓவியம், சாமி  படங்களுக்கு கல்  பதித்து  லைட்  செட்செய்வது, பெண்களுக்கு  அழகு கலை  செய்வது,  திருமண  மண்டபங்களில் மணமக்களுக்கு  மணவறை  அலங்காரம்  செய்வது  உள்பட  வீட்டை  அலங்கரிக்கும்  அனைத்து  விதமான தோரணங்  களையும் செய்வேன்.  இதேபோன்று  பால், இஞ்சி, இனிப்பு  கோகோ போன்ற  சாக்லெட்டுகள்  செய்வது, ஊறுக்காய், பெனாயில், ஊதுபத்தி, சாம்பிராணி, சபீனா  செய்வது எப்படி  என்பது  குறித்து  பயிற்சியும்  கொடுத்து  வருகிறேன்.
வீட்டில்  இருந்து கொண்டே  மாதம் ரூ.5 ஆயிரத்திற்கு  மேல்  சம்பாதிக்  கிறேன். என்  கணவரும், என் பிள்ளைகளும்  எனக்கு  உதவியாக  இருப்பதால்  என்னால்  இத்தொழிலில்  முழு  மூச்சுடன்  ஈடுபட முடிகிறது.
கைத்தொழிலை  கற்றுக்கொண்டால்  குறைந்த முதலீட்டில்  நிறைந்த வருவாயை  அடையலாம்.  தமிழ்நாடு  மகளிர்  மேம்பாட்டு  திட்டத்தின்  மூலம் ஆட்டோ  ஓட்ட கற்றுக்  கொண்டேன்.  பெண்களுக்கென்று  தனியாக  அனைத்து  விதமான  கைத்தொழில்  பயிற்சி நிறுவனம்  ஒன்றை  ஆரம்பித்து  குறைந்த  கட்டணத்தில்  நடத்த  வேண்டும்  என்பது எனது  ஆசை.
ஒவ்வொரு  பெண்களும்  கைத் தொழிலை  கற்றுக்கொண்டால்  அவர் களின்  பிள்ளைகள்  அனைத்து  துறை  களிலும்  சிறந்து  விளங்குவார்கள்  என்று  கூறும்  ரமணியின்  கருத்து இக்காலத்துக்கு  ஏற்ற  கருத்தாகும்  என்பதில்  ஐயமில்லை.


சரஸ்வதியின் சாதனை ரகசியம்

படிப்பு, பணம் மைனஸ்... உறுதி, உழைப்பு ப்ளஸ் !
பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு
சாமான்ய பெண்களின் சாதனை கதை

புகுந்த வீட்டில் பொருளாதார ரீதியாக பல பிரச்னைகள் உருவாகி, திடீரென கூட்டுக் குடும்பத்தில் இருந்து வெளியேற வேண்டிய நெருக்கடி நேர்ந்தது... திருச்சியைச் சேர்ந்த சரஸ்வதிக்கு. 'பொம்பளப் புள்ள வீட்டுலதான் அடைஞ்சு கிடக்கணும்...’ என்ற பழமையை பொய்யாக்கி, சிறு வயது முதலே தந்தையின் சிமென்ட் கட்டுமானப் பொருட்கள் தொழில் பற்றி அறிந்து வைத்திருந்த சரஸ்வதி, நிலைகுலைந்து நின்றிருந்த அந்த வேளையில் சிறுவயது அனுபவம் கை கொடுக்க, கணவரின் கை கோத்து 'நாம பொழச்சுக்கலாம்...’ என்று வறுமையை எதிர்த்து நின்றதையும், வென்றதையும் 'குடிசையிலிருந்து கோபுரத்துக்கு உயர வைத்த ஹாலோ பிளாக்’ என்ற தலைப்பில் கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம்.




தொழில் நேர்த்தியாலும், கடும் உழைப்பாலும் ஹாலோ பிளாக் தொழிலில் சாதனை படைத்து வரும் சரஸ்வதி, இந்த தொழிலில் தான் சந்தித்த சவால்களையும், இதில் இறங்க நினைப்பவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களையும் தொடர்கிறார் இங்கு...
''செங்கல் விலை கடுமையா ஏறிட்டே இருந்ததுனால, இனிமே ஹாலோ பிளாக் கல்லுக்குதான் அதிக வரவேற்புனு அதுல இறங்குறதுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செஞ்சோம். சொந்தமா ஒரு இடம் இருந்தா தான் வசதியா இருக்கும்னு... கையில இருந்த சேமிப்பு, வீட்டிலயிருந்த நகை, வெளிய கொஞ்சம் கடன்னு பணத் தைப் புரட்டினோம். தட்டுப்பாடு இல்லாம தண்ணீர் கிடைக்கணும்; பக்கத்துலயே ஜல்லி, சிமென்ட் உள்ளிட்ட மூலப்பொருட்களும் கிடைக்கணும்னு அலைஞ்சு திரிஞ்சு, திருவானைக்கோவில்ல உள்ள இந்த இடத்தை வாங்கினோம்''

- திட்டமிடலில் எப்போதுமே தனிக்கவனம் செலுத்தியிருக்கிறார் சரஸ்வதி.

''ஆரம்பத்துல கையால இயக்கக் கூடிய சாதாரண மெஷினை வாங்கிப் போட்டு, சின்ன அளவுல ஹாலோ பிளாக் தொழிலைத் தொடங்கினோம். விற்பனை சுமாரா இருந்துச்சு. அந்தச் சமயத்துல ஒரு ஹாலோ பிளாக் கல்லோட விலை 6 ரூபாய்னுதான் திருச்சி முழுக்கவே விற்பனை பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஒரு ரூபாய் லாபம் கிடைச்சாலே போதும்னு அதிரடியா மூணே கால் ரூபாய்க்கு விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். சீக்கிரமே விற்பனை சூடு பிடிச்சுடுச்சு. ஆனா, அதுக்கேத்த வேகத்துல உற்பத்தி பண்ண முடியல. கை மெஷின்ல ஒரு நாளைக்கு அதிகபட்சம் 350 கல்தான் உற்பத்தி செய்ய முடிஞ்சுது. 'அதி நவீன ஹைட்ராலிக் மெஷினை வாங்கிப் போட்டாத்தான் நினைச்ச உயரத்தை வாழ்க்கையில எட்ட முடியும்’னு தீர்மானிச்சோம்'' என்று முக்கிய முடிவுஎடுத்தவர், திருவானைக்கோவில் இந்தியன் வங்கியை அணுகிஇருக்கிறார்.

''உங்க ஆர்வத்தையும் உழைப்பையும் புரிஞ்சுக்க முடியுது. ஆனா, வியாபார நுணுக்கங்களும் இந்தத் தொழிலுக்குத் தேவைனு சொல்லி, 'டீடிசியா’ அமைப்புக்கு என்னை அனுப்பி, தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சில கலந்துக்க வெச்சாங்க பேங்க் ஆபீஸருங்க. பத்து நாள் பயிற்சியில உரிமம், உற்பத்தி, விற்பனை தொடர்பான இன்னும் பல புதிய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்.
பிறகு, பயிற்சிக்கான சான்றிதழோடு மறுபடியும் பேங்க்குக்கு போனேன். இடத்துக்கான லீகல் ஒப்பீனியன், தாராளமா தண்ணீர் கிடைக்கும்ங்கறதுக்கான சர்டிஃபிகேட், மூலப்பொருள் சப்ளை பண்றவங்க, ஹாலோ பிளாக் வாங்க தயாரா இருக்குற இன்ஜினீயர்ங்கனு எல்லாத்தையும் வாங்கிட்டு வரச் சொன்னாங்க.
ஆரம்பத்துல மலைப்பா தெரிஞ்சாலும், சுணங்காம தடதடனு வேலைகள்ல இறங்க, அடுத்த ஆறாவது மாசமே... நாலே கால் லட்ச ரூபாய் கடன் கொடுத்தாங்க பேங்க்ல!''
- அத்தனை பாடுகளையும் வைராக்கியத்தோடு கடந்தவருக்குப் பரிசாக கை மேல் காசு தந்திருக்கிறது வங்கி!
''புது மெஷினை வாங்கிப் போட்டோம். அதுல ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் கல் உற்பத்தி செய்ய முடிஞ்சது. உடல் உழைப்பு அதிகமில்ல. ஆனா, ரெட்டிப்பு கவனத்தோட இருக்கணும். வைப்ரேட் சுவிட்ச், ஹைட்ராலிக் பிரஷர்னு நிறைய தொழில்நுட்பங்கள் இருக்கு. எங்க கவனக் குறைவால ஆரம்பத்துல நிறைய பிரச்னை. அடிக்கடி மெஷின்ல கலவை இறுகி புடிச்சுக்கும், சில பாகங்கள் உடைஞ்சுடும், நிறைய செலவு வைக்கும். ஆனா, சித்திரமும் கைப்பழக்கம்னு போகப் போக எல்லாத்தையும் கத்துக்கிட்டோம். நாங்க தயாரிச்ச ஹாலோ பிளாக் தரமா இருந்ததுனால தேடி வந்து வாங்க ஆரம்பிச்சாங்க. இப்ப ஒரு கல் 12 ரூபாய்னு விலை போகுது. மாசத்துக்கு சராசரியா 3 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வியாபாரம் பார்க்கறோம். எல்லா செலவும் போக தோராயமா 60 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது!'' என்று கண்களில் சிரிக்கும் சரஸ்வதி, இதோடு தன் தேடல்களையும் சவால்களையும் நிறுத்திக் கொள்ளவில்லை.

''இப்ப ரெடிமேட் காம்பவுண்ட்டும் தயார் பண்றோம். இதுக்கும் நல்ல வரவேற்பு இருக்கு. அடுத்ததா 16 லட்சம் ரூபாய் முதலீட்டுல டைல்ஸ் தயார் பண்ணப் போறோம். பேங்கலயும் லோனுக்கு 'ஓ.கே’ சொல்லிட்டாங்க!''
- பத்தாவதே படித்த அந்தப் பெண், தன் தொழிலுக்காக எடுக்கும் தொடர் முயற்சிகள் நம்மை வியக்க வைத்தன.
''படிப்பு, பரம்பரை சொத்துனு எதுவும் இல்லைனாலும்... மனசுல உறுதியும், அதுக்கு கை கொடுக்கற உழைப்பும் இருந்தா போதும். அது நம்மள நிச்சயமா உயரத்துல கொண்டு போய் வைக்கும்!''
- மூளைக்குள் பாய்வதாக இருந்தன சரஸ்வதியின் இந்த அனுபவ வார்த்தைகள்!

திட்டமிடல்

பொதுவாக தொழில்முனைவோருக்கானதிட்டமிடல்என்பது ஒருதொழிலைதொடங்குவதுகுறித்தானதெளிவான அனுகுமுறையைகுறிக்கிறது.அதாவது,


* என்னதொழில்செய்யப்போகிறோம்.
* எப்படியானவழிமுறைகளைகையாளப்போகிறோம்.
* சூழ்நிலைக்காராணிகள்மற்றும்தேவையான மூலப்பொருள்களைஎவ்வாறு பெறுவது.
* பொருளுக்கானசந்தையின்நிலை.
* மூலதனத்திற்கானவழிமுறைகள்பற்றிய அனுகுமுறை.
* வேலையாட்களின்ஒத்துழைப்பினைபெறுதல்.
* நிதிநிலையைசரியாகபராமரித்தல்மற்றும் பெறுக்குவதற்கான புதியசிந்தணைகளைபுகுத்தும்முறை போன்ற சிலவறையறைகளைதெளிவாகபுரிந்துகொண்டு செயலாற்றினால்போதும்.திட்டமிடலில்வல்லுனர்ஆகிவிடலாம்.

 * என்னதொழில் செய்யப்போகிறோம்.
 அனுபவம்என்பதுநம்மால் மட்டுமல்லபிறறிடம்இருந்தும்கற்றுக்கொள்ளமுடியும்.எனவே நாம்என்ன தொழில் செய்யப்போகிறோம்என்பதைதிட்டமிடும்முன்பு அந்ததொழில்பற்றியஅறிவுடையசிலரின் ஆலோசனைகளைகேட்டுதெரிந்துகொள்வதுமிகவும் பயனைஅளிக்கும்.ஏற்கனவேசெய்யப்போகும் தொழிலுக்குஉண்டானஅனுவத்தைபெற்றிருப்போமாயின்அதில்புதிதாகமாற்றம்செய்யும் திறமையைவளர்த்துக்கொள்வதுஇன்றைய போட்டியுகத்தில்வேரூன்ற உதவி செய்யும்.
 நாம் செய்யும்தொழில்எத்தகையது..? அதற்கானபோதியதகுதிகள்நம்மிடம்இருக்கிறதா..? அல்லதுஅதைவளர்த்திக்கொள்ளும்வாய்ப்பு எந்தஅளவில்இருக்கிறது...? என்பதுபோன்ற காரணிகளைதெளிவாகஆலோசனைசெய்யுங்கள்.ஏனெனில்தொடங்கியபின்புஅதற்குன்டான அனுபவத்தைநாம்பெறுவதற்குள்ஏறக்குறைய வாடிக்கையாளௌகளின்நன்மதிப்பைநாம் சில நேரங்களில்இழந்திறகூடும்அபாயம்இருக்கிறது.

 எனக்கு தெரிந்தபணக்காரநண்பன்ஒருவன்புதிதாக தொழில்தொடங்க எண்ணிஅனுபவம் +அறிவு இதனை பற்றிசிந்திக்காமல்ஒருகம்ப்யூட்டர்சென்டரைதொடங்கிநடத்தினான்.அவன் ஆர்ட்ஸ் குரூப்படித்தவன்என்பதால்கம்ப்யூட்டர்பற்றிய போதியஅறிவுபெற்றிருக்கவில்லை. இருந்தாலும்ஆட்களைவேலைக்குவைத்து நடத்திவிடலாம் என்றநினைப்பின்காரணமாகவேஅவன் அதைதொடங்கினான்.சில வாரங்கள்மட்டுமே அவனால்செய்யமுடிந்தது, இப்போதுதிரும்ப அவன்தனதுதந்தையுடன்கம்பெனியினைகவனித்திவருகிறான்.காரணம்வாடிக்கையாளர்களின் தேவைஎன்ன என்பதைமுழுமையாகஅவனால்புரிந்துகொள்ளமுடியவில்லை.வேலைக்குஇருக்கும் ஆட்கள்சம்பளத்தைபொருத்தேநடந்துகொள்வார்கள்.அவர்களிடம்எத்தகையவேலையினைபெறுவது என்பதில்நாம் தானேதீர்மானிக்கவேண்டும்..?

Sunday, July 1, 2012

பெட்ரூமை ஜில்லுனு டெகரேட் பண்ணுங்க

கோடையில் வீட்டிற்குள் இருக்கவே முடியாது. வியர்வை, கசகசப்பு என வாட்டி எடுக்கும். பகல் முழுவதும் அடித்த வெயில் இரவில் அப்படியே இறங்கும். இதனால் உறங்கவே முடியாமல் அவஸ்தையை ஏற்படுத்திவிடும். படுக்கை அறையை குளுமையாய் அலங்கரித்தால் கோடையிலும் ஆனந்தமாய் உறங்கலாம் என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள்.

பூக்களின் டிசைன்கள்

படுக்கை அறையில் பூக்கள் டிசைன் பிரிண்ட் செய்யப்பட்ட பெட்சீட் உபயோகிக்கலாம். அதேபோல் சுவர்களில் மென்மையான நிறங்களை பூசலாம். இதனால் கோடையில் இதமான சூழ்நிலை ஏற்படும்.

பருத்தி திரை சீலைகள்

கோடை காலத்தில் மாலை நேரத்தில் இதமான தென்றல் காற்று வீசும். பருத்தி துணிகளால் ஆன வர்ணமயமான திரைச்சீலைகளை உபயோகிக்கலாம். காலையில் கொஞ்சம் சூரிய ஒளி படுக்கை அறையில் விழவேண்டும். அப்பொழுதுதான் பாக்டீரியாக்கள் அழியும். ஆனால் மாலையில் குளுமை தரும் வகையில் வெப்பத்தை வடிகட்டும் திரைச்சீலைகளை போடவேண்டும். ஆரஞ்சு, மஞ்சள், எலுமிச்சை நிறங்கள் வெப்பத்தை அதிக வெப்பத்தை வெளியேற்றிவிடும்.
வெளிர் நிற தலையணை உறைகள், படுக்கை உறைகளை உபயோகிக்க வேண்டும். மாலை நேரத்தில் மெல்லிய துணிகளை நனைத்து பெட்ரூம் ஜன்னலில் விரித்து விடலாம். இதனால் குளிர்ந்த காற்று அறைக்குள் ஊடுருவும். படுக்கைக்கு முன்னதாக காட்டன் மேட் போட்டு வைக்கலாம். இதனால் வெப்பத்தை அது உறிஞ்சி கொள்ளும். தரைகளில் காலி இடங்களில் காட்டன் கார்பெட் உபயோகிப்பதும் நல்லது

 

வீட்டை அலங்கரிக்க

வீட்டை அலங்கரிப்பது சிறந்த கலை. சிறிய வீடோ, பெரிய வீடோ இருக்கும் இடத்திற்கு ஏற்ப சின்ன, சின்னதாய் அலங்கரித்தால் மனத்திற்கு பிடித்த மாதிரி வீடு அழகாகும்.

சுத்தமான வீடு

வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே அழகுதான். சின்ன குழந்தைகள் இருந்தால் கண்டதையும் எடுத்து கொட்டி கவிழ்த்து விடுவார்கள். அவ்வப்போது அதை ஒதுக்கி சுத்தம் செய்தால் போதும் வீடு பளிச்தான். அந்தந்த அறைக்கு உரிய பொருட்களை மட்டும் வைத்து கசகச என மற்ற பொருட்களை சேர்த்தாமல் இருந்தாலும் அழகாய் இருக்கும்.

மனம் கவர்ந்த இயற்கை காட்சிகள்

சுவற்றில் படம் வரைவது என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை இஷ்டம். அதை துடைத்தாலும் போகாது. மனதைக் கவரும் வர்ணங்களும், இயற்கை காட்சிகளும் நிறைந்த பேப்பர்களை ஒட்டலாம்.

குரோட்டன்ஸ் செடிகள்

வீட்டை அழகு படுத்தும் இன்னொரு பொருள் க்ரோட்டன்ஸ் செடி.. என்னதான் செடியில் பூ இருந்து அழகு கொடுத்தாலும், பூக்காத க்ரோட்டன்ஸ் வாங்கி வத்தால் அது ஒரு அழகு தான்.

மீன் தொட்டி வாங்கி வைத்து அதில் கோல்ட் ஃபிஷ் மட்டும் இருந்தால் பார்க்க ரிச் ஆக அழகாய் இருக்கும். பாட் (மண் பானை)பெயிண்டிங்கை வீட்டின் மூலை மற்றும் ஷோ கேஸில் வைத்தாலும் அழகாய் இருக்கும்.

ஆன்மீக ஆலயம்

வீட்டை அழகு படுத்துவதில் பிள்ளையாருக்கு அதிக பங்கு உள்ளது.பிள்ளையார் மட்டும் எந்த வடிவிலும் வேண்டுமென்றாலும் வருவார். அங்கங்கே பிள்ளையார் மார்டன் சிலை இருந்தால் கொள்ளை அழகுதான். ஒரு பெரிய உருளி வாங்கி வைத்து நிறைய பூக்கள் போட்டாலும் அழகாய் இருக்கும்.

எல்லா அறைகளுக்கும் சுவரின் கலருக்கு கான்ட்ராஸ்ட்டான ஸ்க்ரீன் கட்டிவிட்டால் பார்க்க அட்ராக்டிவ் ஆக இருக்கும்.

சுவர்களில் பெரிதாக்கப்பட்ட திருமண ஃபோட்டோ மற்றும் பெயிண்ட்டிங்ஸ் மாட்டலாம். குடும்ப உறவுகளில் ஒரு அட்டாச்மென்ட் ஏற்படும்.

அழகான தளபாடங்கள் (furniturs)

வரவேற்பரையில் எதிரெதிராய் பெரிய சோபாக்களைப் போட்டு வடகிழக்கு மூலையில் சின்னதாய் பவுண்டென் வைத்தால் அழகு அள்ளிக்கொண்டு போகும்.

பாரம்பரியம் மிக்க கலைப் பொருட்கள் மற்றும் கைவினை பொருட்கள் , இந்த காலத்தின் மாடர்ன் ஆர்ட்களையும் அடுக்கும் விதத்தில் அடுக்கினால் பார்க்க நேர்த்தியாக இருக்கும்.

வீட்டை அலங்கரிக்க

இயற்கையான பூக்களால் தயாரிக்கப்படும் பொக்கேக்களின் ஆயுள், சில நாட்களில் முடிந்து விடுகிறது. நிரந்தரமாக வீட்டை அலங்கரிக்கும் வகையில் தயாரிக்கப்படும் செயற்கை பூ பொக்கேக்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேக்களை தயாரித்து விற்பது லாபகரமானது என்று கூறுகிறார் கோவை இருட்டுபள்ளத்தில் உள்ள லிட்டில் ஹார்ட்ஸ் ஆண்கள் மூளைவளர்ச்சி குன்றியோர் தொழிற்பயிற்சி நிலைய நிர்வாகி நசீமா. அவர் கூறியதாவது: மூளை வளர்ச்சி குன்றியோருக்கு தொழிற்பயிற்சி அளித்து வருகிறேன். அவர்களை கொண்டு செயற்கை பொக்கே, பிளவர் வாஷ், பேனா ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்கிறோம். இவற்றை பல்வேறு நிறுவனங்கள் சேவை மனப்பான்மையுடன் வாங்கி செல்கின்றன.
செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேயை யார் வேண்டுமானாலும் எளிதாக தயாரிக்கலாம். காதலர் தினம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் இவற்றை அதிகம் பயன்படுத்துவதால் நல்ல கிராக்கி உள்ளது. காதல் ஜோடிகள் சிவப்பு ரோஜா, நெருங்கிய நண்பர்கள் பிங்க் ரோஜா பொக்கேக்களை அதிகம் வாங்குகின்றனர்.

அந்த தினங் களுக்கு ஏற்ப தயாரித்து விற்கலாம். பெண்கள் வீட்டில் இருந்தவாறே ஓய்வு நேரங்களில் செய்வதற்கு ஏற்ற தொழில் இது. வீட்டிலுள்ள பெண்கள் கூட்டாக சேர்ந்து ஒருவர் பூ தயாரித்து, மற்றொருவர் கோன் தயாரித்து, இன்னொருவர் பொக்கேவை முழுமைப்படுத்தினால் குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் செய்யலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் பெண்களை சுயசார்புள்ளவர்களாக மாற்றும். இவ்வாறு நசீமா கூறினார். படங்கள்: காந்திபாபு


தயாரிக்கும் முறை

பொக்கே கோன், பூ ஆகியவற்றை தனித்தனியாக தயாரிக்க வேண்டும். ராப்பரை முக்கால் அடி உயரம், ஒன்றரை இஞ்ச் திறப்பு உள்ளவாறு சுற்றினால் கோன் தயார். பூ தயாரிக்க முதலில் இதழ் தயாரிக்க வேண்டும், பின் அவ ற்றை பூவாக மாற்ற வேண்டும். ஒரு பூவுக்கு 7 இதழ்கள் தேவை. இதழ் தயாரிக்க ஆர்கன்டி துணியில் ஒன்றே முக்கால் இஞ்ச் அளவில் 1 துண்டு, 2 இஞ்ச் அளவில் 1 துண்டு, இரண்டரை இஞ்ச் அளவில் 2 துண்டு, இரண்டே முக்கால் இஞ்ச் அளவில் 1 துண்டு, 3 இஞ்ச் அளவில் 2 துண்டு என மொத்த 7 துண்டுகளை வெட்டி கொள்ள வேண்டும். ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக மடித்து இதழாக மாற்ற வேண்டும். இதழ் செய்ய, முதலில் ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக துண்டின் வலது, இடது புற முனைகள் தொடும் வகையில் மடிக்க வேண்டும். பின்னர் கீழ், மேல் முனைகள் இணையும் வகையில் மடிக்க வேண்டும். பின்னர் அதை சமமாக இடது, வலதாக மடிக்க வேண்டும். இரு முனைகளையும் வெளிப்புறமாக மடிக்க வேண்டும். இப்போது சிறியது முதல் பெரியது வரை வெவ்வேறு அளவுகளில் தனித்தனி இதழ்கள் தயாராகும்.

பூ தயாரிக்க, முதலில் 5 இஞ்ச் நீளமுள்ள கம்பியை எடுத்து கொள்ள வேண்டும். மேல் பகுதியை கொக்கி போல் வளைத்து, சிறிய இதழை அதில் செருக வேண்டும், பின்னர் அடுத்தடுத்த இதழ்களை ஒவ்வொன்றாக சுற்றியும் வைத்து, ஒவ்வொரு இதழுக்கும் பச்சை நிற நூலால் கட்ட வேண்டும். 7 இதழ்களையும் கட்டி முடித்தால் பூ தயாராகும். பூவின் கீழ் பகுதி முதல் கம்பி முழுவதும் கிரீன் பேப்பர் செலோ டேப்பால் சுற்றினால் கம்பி பச்சை நிற காம்பாக தோற்றமளிக்கும். காம்போடு கூடிய முழுமையான பூ தயாராகும். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பொக்கே கோனில் கிரீன் கிராப்பை கொத்தாக சொருகி, அதன் மேல் பூவை செருகினால் செயற்கை ரோஸ் சிங்கிள் பொக்கே ரெடி.

கட்டமைப்பு: தரை, சேரில் அமர்ந்தோ அல்லது டேபிளில் வைத்தோ தயாரிக்கலாம் என்பதால் வீட்டின் சிறிய அறை போதுமானது. பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. கலை உணர்வும், திறமையும் தான் முதலீடு.

தேவைப்படும் பொருட்கள் : ஆர்கன்டி துணி(பூக்களுக்கு தேவையான இதழ்கள் தயாரிக்க பயன்படுவது, ஒரு மீட்டர் ரூ.30. 20 பூக்கள் தயாரிக்கலாம்). பூ கட்டும் கம்பி (பூக்களுக்கு தேவையான காம்புகள் செய்ய பயன்படுவது, தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் கிடைக்கும். ஒரு கம்பி ரூ.2. 5 காம்புகள் தயாரிக்கலாம்)

கிரீன் பேப்பர் செலோ டேப் (காம்புகள் மீது சுற்ற பயன்படுவது, ஒரு ரோல் ரூ.25. 20 காம்புகளில் சுற்றலாம்), கிரீன் கிராப் (கம்பு தானிய கதிரின் சருகு, பொக்கே பூவை சுற்றி இலைகளாக அமைக்க பயன்படுவது. பல கலர்களில் கிடைக்கும். 100 கிராம் பாக்கெட் ரூ.25. 4 பொக்கேவில் பயன்படுத்தலாம்), பொக்கே ராப்பர் (பேக்கிங் ஷீட். ஒரு ஷீட் ரூ.8, 10 பொக்கேக்கு பயன்படுத்தலாம்).பேபி சாடின் ரிப்பன்(பொக்கேயின் கீழ் அழகுக்காக கட்டுவது. ஒரு ரோல் ரூ.15. 25 பொக்கேக்களுக்கு பயன்படுத்தலாம்)

கிடைக்கும் இடங்கள்: ஸ்டேஷனரி மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் ஸ்டோர்களில் கிடைக்கும்.

உற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு பொக்கே தயாரிக்க உற்பத்தி பொருள் செலவு ரூ.8. ஒரு நாளில் மணிக்கு 4 வீதம் 8 மணி நேரத்தில் 32 பூக்கள் தயாரிக்கலாம். ஒரு நாள் உற்பத்தி செலவு ரூ.256. மாதம் 25 நாளில் 800 பொக்கே தயாரிக்க ரூ.6,400 தேவை.

வருவாய் (மாதத்துக்கு): ஒரு செயற்கை பொக்கேவை மொத்த விற்பனை விலையாக கடைகளுக்கு தலா ரூ.20 வீதம் விற்கலாம். இதன் மூலம் வருவாய் ரூ.16 ஆயிரம். உற்பத்தி செலவு போக லாபம் ரூ.9,600. சில்லரையாக ரூ.25க்கு விற்கலாம். அவ்வாறு விற்றால் லாபம் கூடும். பெரிய பூக்களை செய்து, கொத்தாக உருவாக்கி, அதை வண்ணம் தீட்டப்பட்ட பொக்கே ஸ்டாண்ட்களில் செருகி ‘பிளவர் வாஷ்’ தயாரித்து விற்கலாம். அதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites