இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, March 30, 2012

மங்குஸ்தான் பழம்

ரொம்ப நாளா அங்கு அடிப்பட்டு இப்போ புதுசான பழம்தான் இந்த மங்குஸ்தான் (தீன்) பழம். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.



மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும்.



இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு

Tamil - Mangosthan
English - Mangosteen
Malayalam - Mangusta
Telugu - Maugusta
Botanical Name - Garcinia mangostana



இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும்(Infection), காளான்களையும்(Fungus) அழிக்க பயன்படுத்தினர். அதே போல் காயங்கள், நாட்பட்ட புண்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றிக்கு குணமாக்க பயன் படுத்தி வந்தனர்.

சமீபத்தில் வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன் படுகிறது.

சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும். உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.கண் எரிச்சலைப் போக்க கம்பியூட்டரில் வேலை செய்பவருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும். வாய் துர்நாற்றம் நீங்க, வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.மூலநோயை குணப்படுத்த. நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

பெண்களுக்கு

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து ரீ செய்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும். சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.

அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும்,சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும்,நாவறட்சியை தணிக்கும்.

மங்குஸ்தான் பழத்தில்

நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
புரதம் - 0.4 கிராம்
மாவுப் பொருள் - 14.8 கிராம்
பாஸ்பரஸ் - 15 மி.கி.
இரும்புச் சத்து - 0.2 மி.கி



மங்குஸ்தீன் ரீ: இதன் தோல் பாகத்தை இயற்கையான முறையில் காயவைத்து செய்யப்படுவதுதான் இந்த மங்குஸ்தீன் ரீ. இந்த ரீ குடிப்பதனால் 35-40 வயதுக்கு மேல் முகத்தில் விழும் சுருக்கம் தவிர்க்கப்படும் :)

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites