இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, March 29, 2012

தேங்காய் நார் விற்பனையில் கயிறு வாரியம்

பொள்ளாச்சி : தேங்காய் நார் விலை சரியும் போது, அவற்றை கொள்முதல் செய்து விற்பனை செய்ய மத்திய கயிறு வாரியம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து இவ்வாரியத்தின் தலைவர் பாலசந்திரன் கூறியதாவது: இந்தியாவில், தென்மாநிலத்தில் மட்டும் நார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இருப்பினும், கேரளாவிலிருந்து அதிக அளவில் நார் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பொள்ளாச்சியில் உற்பத்தியாகும் தென்னை நாரை கயிறு, தரைவிரிப்பு, மெத்தை, அலங்கார பொருட்கள் என மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்தால், மூன்று மடங்கு லாபம் கிடைக்கும்.
நார் பொருட்களின் விலை குறையும் போது, அதிக அளவு தேக்கமடைகிறது. அந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்டு, அதிக அளவு நாரை, மத்திய கயிறு வாரியம் கொள்முதல் செய்து இருப்பு வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. கொப்பரைக்கு மத்திய அரசு ஆதரவு விலை நிர்ணயம் செய்துள்ளதை போன்று, கயிறு வாரியம் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் நார் ஏற்றுமதியில், பொள்ளாச்சி 90 சதவீதம் பங்கு வகிக்கிறது. பொள்ளாச்சியில் இருந்து ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய்க்கு மேல் நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனால், பொள்ளாச்சிக்கு சிறந்த ஏற்றுமதி நகருக்கான அந்தஸ்து கிடைக்கவுள்ளது. இதன் வாயிலாக ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகரிக்கும்; மத்திய அரசு பல திட்டங்களை பொள்ளாச்சிக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.
இந்தியாவில் மொத்தம், 23 காயர் கிளஸ்டர்கள் வர உள்ளன. இதில், தமிழகத்தில், மூன்று கிளஸ்டர்கள் வர உள்ளன. கேரளாவில், 1,000 ரூபாய்க்கு குறைவான ஜனதா மெத்தை, தலையணையுடன் விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தை நாடு முழுக்க பரவலாக்க வேண்டும். நாரால் தயாரிக்கப்படும் தரை விரிப்புகள், மலைப் பிரதேசங்களில் மண் அரிப்பை தடுக்கவும், ரோடு அமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. காகித கவர் தயாரிப்புக்கும் நார் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நார் தொழிற்சாலைக்கான மூலப்பொருளான தென்னை மட்டையை எரியூட்டுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.
..................................................................................................................................................

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites