இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Friday, March 30, 2012

விழிப்புணர்வு

Pedophilia (ஃபிடோஃபிலியா) இந்த சொல்லை பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள், எனினும் இந்த சொல்லின் தன்மையை பற்றிய சம்பவங்களை அடிக்கடி சமூகத்தில் சம்பவங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இன்று நாம் Pedophilia என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.Pedophilia இச் சொல் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலேயே புழக்கத்தில் வந்ததுடன் மக்கள் மத்தியில் விளிப்புணர்வாக பேசப்பட்டது.Pedophilia என்றால் வயதுவந்தோருக்கு, சிறுவர்கள் மீது இருக்கும் பாலியல் அவா என்பது பொருளாகும். அதாவது, 16 வயதிற்கு மேற்பட்ட ஒரு நபர் (வயது வந்தவராக கருதப்படும் வயதெல்லை) 13 வயதிற்கும் உட்பட்ட சிறிவர்களின் மீது தனது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வார் எனின் அவர் Pedophilia என இனங்கானப்படுவார். பொதுவாக இவ்வாறான நபர்கள் தமது ஆரம்ப உறவை தன்னைவிட 16 வயதில் மேற்கொள்ள ஆரம்பிக்கின்றார்கள். தன்னைவிட 5 வயதேனும் குறைந்த பிள்ளைகளிடம் தான் தனது முதலாவது...

அரிய மண் வர்த்தகத்தில் சீனாவின் ஆதிக்கம்

மிக அருமையாகக் கிடைப்பதால் சில தனிமங்களும் (Elements)உலோகங்களும் (Metals) அரிய மண் (Rare Earth) என்ற சொற்கள் மூலம் குறிப்பிடப்படுகின்றன. Rare என்றால் அரிய. Earth என்றால் மண் என்று பொருள். அரிய மண் தனிமங்களும் உலோகங்களும் எண்ணிக்கையில் பதினேழாக (17)இருக்கின்றன. இவற்றுள் ஸ்கன்டியம்(Scandium) இற்றியம் (Yttrium) என்பனவும் அடங்கும். சுவீடன் நாட்டின் இற்றார்பி (Ytterby) என்ற கிராமத்தில் இவை முதன் முதலாக நிலத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டன.இதன் காரணமாக இந்தப் பதினேழு தனிமங்கள் உலோகங்கள் ஆகியவற்றின் பெயர்கள் இந்தக் கிராமத்தோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. 1948ம் ஆண்டு வரை உலகின் அரிய மண் தேவையை இந்தியாவும் பிறேசிலும் பூர்த்தி செய்தன. 1950களில் தென்னாபிரிக்கச்...

மங்குஸ்தான் பழம்

ரொம்ப நாளா அங்கு அடிப்பட்டு இப்போ புதுசான பழம்தான் இந்த மங்குஸ்தான் (தீன்) பழம். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது. மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு Tamil - Mangosthan English - Mangosteen Malayalam...

உழைப்பு... உழைப்பு... உழைப்பு மட்டும்தான்!''

''புயல், வெள்ளம், பூகம்பம்னு இயற்கை சீற்றங்களால மக்கள் பாதிக்கப்படறப்போ, பணம், பழைய ஆடைகள்னு கொடுத்து உங்கள்ல பெரும்பாலானவங்க உதவி செஞ்சிருப்பீங்க. அப்படி ஒரு பேரிடியால அத்தனையையும் இழந்து, ஒரு காலத்துல அந்த உதவியை எதிர்பார்த்து கை நீட்டி நின்ன நாங்க, இன்னிக்கு ஐந்து பணியாளர்கள், ஆயிரத்தி ஐந்நூறு கஸ்டமர்கள்னு வளர்ந்து நிக்கறோம் எங்க கார்மென்ட்ஸ் தொழில்ல. இந்த முன்னேற்றத்துல எந்த மேஜிக்கும் இல்ல. உழைப்பு... உழைப்பு... உழைப்பு மட்டும்தான்!'' - நிதானமான பேச்சு சுப்புலட்சுமி கமலேஷுக்கு. சுப்புலட்சுமியும் கமலேஷும் காதல் தம்பதி. இந்தத் திருநெல்வேலிப் பெண், குஜராத்காரரான கமலேஷை திருமணம் செய்து, பல தடுமாற்றங்களுக்குப் பின் வாழ்க்கையில் காலூன்றியபோது......

Thursday, March 29, 2012

ஆயத்த ஆடை ஏற்றுமதி உயர்வு

புதுடில்லி:நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, சென்ற பிப்ரவரி மாதத்தில், 128 கோடி டாலராக (6,400 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 1.5 சதவீதம் அதிகம் என, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சர்வதேச பொருளாதார மந்த நிலையால், இந்திய ஆயத்த ஆடை இறக்குமதியில், 80 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், இதன் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போது, பொருளாதார மந்த நிலையிலிருந்து அமெரிக்கா, இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. இதனால், வரும் மாதங்களில், இந்தியாவிலிருந்து, ஆயத்த ஆடைகளை அமெரிக்கா அதிக அளவில் இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாரம்பரிய...

நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் ரூ.1,000 கோடிக்கு கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு

கொச்சி:நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு, கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக கயிறு வாரியம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடுகள்: நம் நாட்டிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கயிறு மற்றும் கயிறு பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. இவ்வகையில், கடந்த 2010-11ம் நிதியாண்டில், 2 லட்சத்து 94 ஆயிரத்து 508 டன் கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதியாகி உள்ளது. இதன் மதிப்பு, 804 கோடி ரூபாயாகும். இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, அளவின் அடிப்படையில், 47.31 சதவீதம் மற்றும் மதிப்பின் அடிப்படையில், 25.64 சதவீதம் அதிகமாகும்.நடப்பு நிதியாண்டின்,...

தேங்காய் நார் விற்பனையில் கயிறு வாரியம்

பொள்ளாச்சி : தேங்காய் நார் விலை சரியும் போது, அவற்றை கொள்முதல் செய்து விற்பனை செய்ய மத்திய கயிறு வாரியம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து இவ்வாரியத்தின் தலைவர் பாலசந்திரன் கூறியதாவது: இந்தியாவில், தென்மாநிலத்தில் மட்டும் நார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இருப்பினும், கேரளாவிலிருந்து அதிக அளவில் நார் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பொள்ளாச்சியில் உற்பத்தியாகும் தென்னை நாரை கயிறு, தரைவிரிப்பு, மெத்தை, அலங்கார பொருட்கள் என மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்தால், மூன்று மடங்கு லாபம் கிடைக்கும். நார் பொருட்களின் விலை குறையும் போது, அதிக அளவு தேக்கமடைகிறது. அந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்டு, அதிக அளவு நாரை, மத்திய கயிறு வாரியம் கொள்முதல் செய்து...

Sunday, March 25, 2012

அம்மா............................

எழுத வார்த்தைகள் இல்லாமல் தொடங்குகி...றேன்...!! பருவம் வரை பக்குவமாய் வளர்த்து விட்டாயே ஊர் சண்டை இழுத்து வந்தாலும் உத்தமன் என் பிள்ளை என்று விட்டு கொடுக்காமல் பேசுவாயே அம்மா..!! நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய் தட்டி சென்ற நாட்கள்..!! செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு " போய்வாட என நீ சொல்ல இந்த வயதில் கடைக்கு போவதா?.. என நான் சொன்னேன்..!! இன்றோ.. இங்கே கண்ணுக்கு தெரியாத யாரோ ஒருவருக்காக ஓயாமல் வேலை செய்கிறேன் அம்மா..!! நெற்றி வியர்வை சிந்த பரிமாறும் உந்தன் கை பக்குவ உணவு நான் அறிந்த அமுதத்தின் அசல்தான். இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!! கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல பத்து நிமிஷமா..!, நான் வெளியல சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி கிளம்பிய தருணங்கள்..!! இன்றோ.. இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு சாப்பிடும் போதே கண்கள் களங்க இன்று காரம் கொஞ்சம்...

ஆரோக்கிய வாழ்வுக்கு இஞ்சி அவசியம்

இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்துகிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும். இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது. ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம்...

உன்னோடு

உன்  தோளோடு என்  தலைசரித்து சின்ன கதைகள் பேசியபடி நீ  ரசித்த எல்லாவற்றையும் உன்னோடு   நான் ரசிக்கவேண்டும் உன் காதலால் உன் நினைவுகளால் மட்டுமே என் கவிதைப் பக்கங்கள் நிரப்பி வழியவேண்டும் என் ஒவ்வொரு ஜென்மங்களிலும் என் காதலாய் என் இதய துடிப்பாய் நீ வர வேண்டும் என் நெற்றி வகிட்டில் நீ ஆசையாய் தரும் முத்தங்களின் சப்தங்கள் மட்டும் என் சொப்பனங்களிலும் கேட்க வேண்டும் உன் இதய துடிப்பின்  சப்தத்தில் என் சப்தநாடிகளும் சர்வமாய் அடங்க வேண்டும் என் உதடுகள் உறைய இமைகள் தட்டாமல் உன் கண்களோடு ஆசையாய் நான் பேச வேண்டும் உனக்குள் உன் கண்களுக்குள் நீ ஆசையாய்  சொல்லும் பொண்டாட்டி என்ற அழைப்பில் என் ஆயுள் முழுதும் நான் தொலைய வேண்டும்...

எதுக்குமே லாயக்கில்லை என்று கணவரிடம் சொல்லாதீர்கள்

குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்தல் இருந்தால்தான் இல்லறத்தில் இனிமை கூடும். ஆனால் எதற்கெடுத்தாலும் கேள்விகள்கேட்டு கணவரை எரிச்சல் படுத்தும் மனைவிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். ஒரு சில கேள்விகளை கேட்பதினால் கணவர் வெறுப்பின் உச்சக்கட்டத்திற்கே செல்கின்றனராம். கணவரிடம் எந்த மாதிரி நடந்து கொள்ளக்கூடாது என்று உளவியல் எழுத்தாளர் ‘ஜூடி போர்ட்’தனது ‘எவ்ரிடே லவ்’ என்னும் நூலில் என்ற எழுதியுள்ளார். கணவரை காயப்படுத்தும் விசயங்கள் எவை எவை என்று பட்டியல் இட்டுள்ளார் உளவியல் நிபுணர் படித்துப் பாருங்களேன். பொய்யான ஆர்கஸம் தாம்பத்ய உறவின் போது சரியாக செயல்படவில்லை என்று பொய் சொல்வது ஆண்களை எரிச்சல் படுத்தும். உங்க அப்பாவைப் போல அதே குணம் உங்களுக்கு இருக்கு என்று மட்டம் தட்டுவது ஆண்களுக்கு பிடிக்காது எப்ப புதுவேலை தேடப்போறீங்க? இது எல்லா மனைவிகளும் கேட்கும் கேள்விதான்...

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்க மலிவான வயாக்கரா

ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இது ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் மலிவான வயாக்கரா என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர். ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். லைகோபின் சக்தி போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக த்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு...

தொழில் வாய்ப்பு

நம் மத்திய அரசாங்கத்தின் புதிய பொருளாதார தாராள மயமாக்கப்பட்ட கொள்கைகளினால் எண்ணற்ற கம்பெனிகள் நம் நாட்டில் தொழிற்சாலைகள் அமைத்து வருவதாலும், நம் இந்திய மக்கள் தொகை பெருக்கத்தினால் நகரங்கள் அனைத்தும் விரிவடைந்து வீடுகள், கடைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள், நான்கு வழி / ஆறுவழி சாலைகள் அமைப்பதற்கான பல்வேறு விரிவாக்கங்களால் பெரும்பாலான விவசாய நிலங்கள் தற்போது விவசாயம் செய்ய வாய்ப்பு இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.உழவர்கள் எப்பொழுதும் மின்சாரத்தை நம்பி விவசாயத்தை முறைப்படி செய்ய இயலாமல் பலர் தவிக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு புதிய வரப்பிரசாதமாக சென்னை சௌத் இநதியன் கேஸ் ஏஜன்சியின்  திரு.இராஜேந்திரன் புதிய கியாஸ் அறிமுகம் செய்துள்ளார். அவரை கேட்டபோது… தற்போது நம் மத்திய அரசாங்கத்தின் புதிய பொருளாதார தாராளமயமாக்கப்பட்ட கொள்கைகளினால் எண்ணற்ற கம்பெனிகள் நம் நாட்டில் தொழிற்சாலைகள்...

Thursday, March 22, 2012

சூரிய காந்தி விவசாயம்

இது பற்றி தெரிந்தால்தான் சூரிய காந்தி ஆயில் தயாரிக்க முடியும் பருவம் மற்றும் இரகங்கள்அ.மானாவாரி 1.ஆடிப்பட்டம் (ஜீன்-ஜீலை)இரகங்கள் மார்டன், கோ 4 கோயமுத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர்வீரிய ஒட்டு டி.சி.எஸ்.எச்.1 கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச் 44, பி.ஏ.சி. 1091, எம்.எஸ்.எப்.எச்.17 2.கார்த்திகைப்பட்டம் (அக்டோபர்-நவம்பர்)இரகங்கள் மார்டன், கோ 4 கடலூர், விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை. திண்டுக்கல், தேனீ, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூார், கரூர், திருநெல்வேலிவீரிய ஒட்டு டி.சி.எஸ்.எச்.1.கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச்.44, பி.ஏ.பி.1091, எம்.எஸ்.எப்.எச்.17 ஆ. இறவை 1.மார்கழிப்பட்டம்...

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும் வாழைப்பூ சூப்

கோடை காலம் வந்தாலே பெரும்பாலோனோருக்கு வாய்ப்புண் தொந்தரவு ஏற்படும். வாய்ப்புண்ணுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஜீரணக்கோளாறு, உடல்சூடு, மனஅழுத்தம் போன்றவைகளினால் அதிக அளவில் வாய்ப்புண் ஏற்படுகிறது. இதனால் பேசவும், உணவு உட்கொள்ளவும் சிரமம் ஏற்படுகிறது. வாய்ப்புண்ணுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கூறியதை நீங்களும் பின்பற்றிப் பாருங்களேன். தேங்காய் பால் வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண் சரியாகும். இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்கவேண்டும். 10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண்...

ஜாதிக்காயின் பயன்பாடு

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம். செயல்திறன் மிக்க வேதிப்பொருள்: ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல். ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது. உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்: ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும்....

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்

காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், நம் வண்டியை ஓட்ட "பெட்ரோலாக" தேவைப்படும் உணவு அது. காலை உணவு முறையை "பிரேக் பாஸ்ட்" என்று கூறுவர். "பாஸ்ட்" டை (உண்ணாதிருத்தலை) "பிரேக்" (துண்டிப்பது) பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரணமாகி விடும். என்ன சாப்பிடணும் கலையில் எழுந்தவுடன் காபி, பால் போன்ற பானங்கள் சாப்பிட்டு விட்டு, உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடுவோர் பலர் உள்ளனர். சிலர், காலையில், முழு உணவு சாப்பிட்டு விட்டு, மதியம்...

சுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்

பத்தும் பத்தாமல் மாத சம்பளம் வாங்கும் தொழிலாளியிலிருந்து, கைக்கும் வாய்க்குமே சம்பளம் சரியாக இருக்கிறது என அங்கலாய்க்கும் குமாஸ்தா முதற்கொண்டு, மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் (அல்லது கிம்பளமாக) வாங்கும் கணவான்கள் வரை எல்லோருக்குமே, எந்தவொரு  தொழில்முனைவோரைப் பார்த்தாலும் சிறு சபலம் ஏற்படத்தான் செய்யும்!   அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், எல்லோருக்குமே போதை உண்டாக்கக் கூடிய காரணம் என்றால் அது 'முதலாளி' என்ற அந்த ஒற்றைவார்த்தைதான். எத்தனை லட்சங்களை மாத சம்பளமாக வாங்கினாலும் தொழிலாளிதான், ஆனால் மாதம் ரூபாய் பத்தாயிரம் நிகர லாபமாகசம்பாதிக்கக் கூடிய ஒரு தொழில் முனைவர் கூட 'முதலாளி'  தான்! குறைந்தது இரண்டு, மூன்று பேருக்காவது சம்பளம் கொடுப்பார், அவர் லீவ்போட்டால் யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், ஒரு மாத சம்பளக்காரர், தொழில் முனைவோர்ஆக ஆசைப்படுவதற்கான...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites