இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, January 29, 2012

மாட்டு தோல் மற்றும் ஆட்டு தோல் இந்த இரண்டிலும் தயாரிக்கின்றார்கள்.இன்று அதிகமாக ஏற்றுமதி செய்யும் தோல் பொருட்களில் தோல் ஷூ மற்றும் தோல் ஜாக்கெட் ஆகியன முதலிடம் பெறுகின்றன. தோல் பேக், தோல் பெல்ட், மணிபர்ஸ் போன்ற பொருட்களும் ஏற்றுமதியில் இடம் பெறுகின்றன.
தோல் ஜாக்கெட்
     
   இவை மாட்டு தோல் மற்றும் ஆட்டு தோல் இந்த இரண்டிலும் தயாரிக்கின்றார்கள்.
பெரிய நிறுவனங்கள் அவற்றிற்கு தேவையான தோல்களை அவர்களே தங்களுடைய சொந்த தொழிற்சாலையில் தேவைக்கு ஏற்றார் போல் தயாரித்து கொள்வார்கள், இதனால் இவர்கள் இலாபத்தை அதிகமாக பார்க்க முடிகிறது. தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லாத
சிறிய நிறுவனம், (ஈரோடு ,சென்னை) பெரியமேட்டில் உள்ள தோல் விற்பனையாளர்களிடம் சென்று ,அவர்களுக்கு வேண்டிய தரத்தை உடைய தோலை கொள்முதல் செய்வார்கள்.

தோல் பொருள் தயாரிக்க
தோல் கட்டிங், (இயந்திரமும்), தையல் மெஷினும் (இயந்திரமும்) லேசர் கட்டிங் மெசின், தையல் தெரிந்தவர்களும், முக்கியம்.இந்த நிறுவனத்தை நடத்துபவர்கள் ,தோல் பற்றி அறிந்து இருப்பது நன்று. இவர்கள் தனக்கு கிடைத்த ஆர்டருக்கு ஏற்றாற்போல் பல மாடல்களை தயாரிக்கின்றனர். இந்த தொழிலை யாரும் தொடங்கலாம்.
தோல் கைவினைப்பொருள்:-

தோல் கலையின் கருத்து மனிதர்கள் தங்களது உணவிற்காக கொன்று கொண்டிருந்தபோது வந்தது. படிப்படியாக, அவர்கள் தோலின் பயன்பாட்டை உடை அணிதலுக்காக தோலை பயன்படுத்தும் முனைப்புடன் கண்டறிந்தனர். இந்தியாவில், தோல்பதனிடும் துறை "மோச்சிக்கள்" -ஆல் தலைமை வகிக்கப்படுகிறது, இவர்கள் தோல் பதனிடுதலுக்காக விலங்குகளின் தோலை இறந்த விலங்குகளின் உடலிலிருந்து எடுக்கின்றனர். முக்கியமாக இந்தியாவின் கிராமப்புற பகுதி மக்கள் பழமையான தோல் கலை, வடிவமைப்பு, உற்பத்தி ஆகிய்வற்றிக் ஈடுபட்டிருக்கிறார்கள். தோல் பதனிடுதல் விற்பனை கடந்த காலத்தில் தொடங்கப்பட்டது மேலும் இது இந்தியாவில் கி.மு. 3000 ஆண்டு வாக்கில் வளர்ச்சியடைந்தது.

தோல் கலை மற்றும் தோல் பதனிடுதல் தொழிற்துறையின் முக்கிய விளைபொருள் காலணி ஆகும். தமிழ்நாட்டில் பாண்டிச்சேரி பெருமளவில் சித்திரத் தையல் வேலை செய்யப்பட்ட காலணிகளை தயாரிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க இடமாகும். உண்மையான மற்றும் சிறந்த நிறங்களுள்ள பதனிடப்பட்ட தோலில், சித்திரப் பூ வேலை அல்லது சித்திரத் தையல் வேலை அலங்காரங்களுடன் உள்ள தயாரிக்கப்பட்ட பாரம்பரிய தோல் 'செருப்புகள்' இங்கே அதிக விதங்களில் உள்ளன. "ஸ்லீப்பர்கள்" அல்லது "சப்பல்கள்" என அழைக்கப்படும் காலணிகள் தமிழ்நாட்டின் மிகவும் விரும்பத்தக்க மற்றும் கண்கவரும் காலணிகளில் ஒன்றாகும். சப்பல் அல்லது சாண்டல் வெப்ப காலநிலை மற்றும் பருவகால இடங்களில் பொருத்தமான மற்றொரு வகை காலணியாகும்.

தோல் கைவினைப்பொருளின் மூலப்பொருட்கள்:-

தமிழ்நாட்டில் தோல் கைவினைப் பொருட்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளின் தோல் ஆகும். தோல் கைவினைப் பொருட்களை தயாரிப்பதில் குறிப்பாக தோல் பொம்மைகளுக்கு விலங்குத் தோலை கழுவுதல், சுத்தம் செய்தல் மற்றும் மிகச்சிறந்த முழுமை மற்றும் கைத்திறனுடன் அதை அலங்கரித்தல் போன்ற ஒரே செயல்முறைகளே பின்பற்றப்படும். தோல் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டவுடன், சாயம் பூசுதல் மற்றும் ஓரக்கோடுகளை வரைதல் ஆகியவை செய்யப்படும். இந்த தோல் பொம்மைகளை செய்வதை தவிர, தமிழ்நாட்டின் கைவினைஞர்கள் விளக்குத் திரைகள், சுவர் திரைகள் போன்ற வீட்டு ஒப்பனைகளுக்காக பயன்படுத்தப்படும் தோல் பொருட்களை செய்கின்றனர்.

தோல் கைவினைப்பொருளின் செய்முறை:-

பதனிடப்பட்ட தோல் மொத்த விலை சந்தையிலிருந்து வாங்கப்பட்டு இரண்டு நாட்கள் பெரிய பீப்பாய்களில் ஊறவைக்கப்படுகிறது. பிறகு கூடுதலான பதனிடுதல் பொருட்களை நீக்க அது நன்றாக கழுவப்படுகின்றது. முழுதாக ஈரமாக இருக்கும்போது அது தரையில் வைத்து நீட்டப்பட்டு காய விடப்படுகின்றது. இந்த செயல்முறைக்கு சிறிது திறன் தேவை ஏனெனில் சுருக்கங்களை நீக்க தோல் சீராக நீட்டப்பட வேண்டும். நல்ல நீட்டிப்பு தோல் பரப்பு பகுதியை 5 - 10% அதிகரிக்கலாம். இந்த நிலையில், ஈரமான தோலில் உள்ள நீர் ஒட்டும் பொருளாக செயல்பட்டு தோலை அது தரையோடு இறுக்கமாக பிடிக்கின்றது. தோல் காய்ந்தவுடன் அது தானாக தரையிலிருந்து விடுபட்டு விடும். இதற்கு பிறது அது குறிக்கப்பட்டு தடித்த அட்டைகள் மற்றும் கத்தரிக்கோல்களை கொண்டு அளவுகளில் வெட்டப்படுகின்றது. புடைப்பு ஏற்படுத்த வேண்டிய துண்டுகள் ஒரு பஞ்சால் ஈரப்படுத்தப்பட்டு ஒரு உருளை ஊசியால் உருட்டப்படுகின்றன. பழைய கடித அச்சகங்களில் பயன்பட்ட அமில செதுக்குதல் முறை மூலம் விருப்பமான அளவிற்கு தகுந்தாற்போல் ஒரு பாளம் உருவாக்கப்படுகின்றது. அச்சு ஒரு பந்து அழுத்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மேலும் தோல் அச்சு மற்றும் ஒரு கடின ரப்பர் தகடிற்கு இடையே வைக்கப்பட்டு பலமாக அழுத்தப்படுகின்றது. தோல் மீண்டும் உருமாதிரிகளுக்கு தருந்தாற்போல் வெட்டப்பட்டு பைகள் அல்லது பெட்டிகள் செய்ய ஒழுங்குபடுத்தப்படுகின்றன. விறைப்பான அட்டைகளை பயன்படுத்தி பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன மேலும் அனைத்தும் ஒரு இரப்பர் அடிப்படை பசையை பயன்படுத்தி ஒன்றாக ஒட்டப்படுகின்றன. தடித்த அட்டை ஒரு அச்சை பயன்படுத்தி வெட்டப்படுகின்றது. ஏனெனில், வெட்டுதல் மிக நுணுக்கமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய பிழை கூட பையின் இறுதி வடிவத்தை பாதிக்கலாம்.

தோல் கைவினைப்பொருளின் தொழிற்நுட்பத்திறன்:-

பல்வேறு மற்ற தொழிற்நுட்பங்கள் ஒரு முழுமையான தயாரிப்பை உருவாக்குவதில் உள்ளடங்கியுள்ளன. அவற்றில் முக்கியமானவை சீவுதல் (நாகரீக கலைஞர்கள் இதை பார்க்காத போதும் தோலின் தடிமனை அதிகரிக்காமல் அதின் முனையை மறைப்பதற்காக), மடித்தல் (ஒரு சீரான மடிப்பை உறுதிப்படுத்த), அடித்தல் (ஒரு மர சம்மட்டியின் உதவியுடன் பசையின் விளைபயனை அதிகரிக்க) மற்றும் பளபளப்பாக்குதல் (பளபளப்பான பரப்பு, அழுத்தம் மற்றும் சூட்டை தருவதற்காக ஒரு மிருதுவான கல் அல்லது கண்ணாடி துண்டால் தேய்த்தல், இது துளைகளை மூடுகிறது மேலும் தோலிற்கு ஒரு அதிக மற்றும் சீரான அடர்த்தியை தருகிறது). பைகள் துண்டுகளை ஒரு தையல் இயந்திரத்தை பயன்படுத்தி தைத்து தயாரிக்கப்படுகின்றன. துணி தைத்தல் போல அல்லாமல், தோல் ஒரு கனரக இயந்திரத்தால் தைக்கப்பட வேண்டும் மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு முன் தையல் ஒட்டும் பண்பு, துண்டு இடத்தில் இருக்கத் தேவைப்படுகின்றது.
தோல் ஷூ


இந்த தொழில், நவீன தொழில் நுட்பத்தை மையமாக கொண்டது. இதை தயாரிக்க பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் அவசியம். அப்பர் தனியாகவும் லைனிங் தனியாகவும் பாட்டம் தனியாகவும்
தயாரிக்கப்பட்டு ,பிறகு மூன்றையும் ஒன்றாக இணைத்து,ஷூவை முழுமை அடைய செய்கிறார்கள். சிறிய நிறுவனங்கள் லைனிங் மற்றும் பாட்டங்கள் தயாரித்து இவர்களுக்கு சப்ளை செய்கிறார்கள். பெரும்பான்மையான இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த தொழிலை தொடங்க அதிக முதலீடு தேவை படுகிறதுஇந்த தொழிற்சாலைகளில் பேட்டன் எடுத்து கட்டிங் செய்து கொடுக்கும் மாஸ்டர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சரியான முறையில் பேட்டன் செய்து கொடுக்க வேண்டும்தோல் வேஸ்ட் ஆகாமல் கட்டிங் செய்து கொடுப்பது மூலம், அந்த நிறுவனம் எந்த சேதாரமும் இல்லாமல், தன்னுடைய இலாபத்தை பார்க்க முடியும். தற்போது லேசர் கட்டிங் மெசின் வந்துள்ளது இது மிகவும் சிறிய கட்டிங் செய்யவும் நல்ல கலை நயம் கொண்ட வடிவம் செய்யவும் பயன் படுகிறது இது அல்லாமல் கட்டிங் செய்யும் போது, கழியும் சிறு சிறு தோல்களை எடுத்து அவற்றை கொண்டு , ஹான்ட் பேக் ,கார் சீட் கவர் ,ஆடைகளுக்கு,தேவையான பூ இதன் முலம் தயாரிக்க படுகிறது கீ செயின் மற்றும் சிறிய பர்ஸ் போன்ற சில பொருள்கள் செய்து பயன் அடையலாம். பெரும்பான்மையான தோல் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நாட்டிற்கு அந்நிய செலவாணி கிடைக்கின்றது. கழிவு நீர்

     
கழிவு நீர் சுத்திகரிப்பு பற்றி விவரிக்க சொல்லி இருந்தார்கள். இந்த இடத்தில் அது பற்றி கொஞ்சம் கூற கடமை பட்டுள்ளேன். வெளியேறும் கழிவு நீரை பெரிய தொட்டியில் சேகரித்து, அவற்றை இயந்திரத்தின் உதவியுடன் சுத்திகரித்து ,பிறகு அவற்றை அதற்கு என ஒதுக்கப்பட்ட தொட்டியில்சேகரித்து ,அந்த தண்ணிரை மீண்டும் உபயயோகப்படுத்துகிறார்கள். சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்குவதற்கு மட்டும் இவர்களுக்கு பெரும் தொகை செலவு செய்யப்படுகிறது.

மேலும் விபரம் தெரிந்தால் எங்களுக்கு அனுப்பவும்

தோல் பொருள் ஏற்றுமதி ரூ.22,500கோடியை எட்டும்

பிப்ரவரி 01,2012,09:46

சென்னை: நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 450 கோடி டாலரை (22 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) எட்டும் என, தோல் பொருட்கள் ஏற்றுமதி கூட்டமைப்பன் மண்டல தலைவர் (தெற்கு) அக்யூல் அகமது தெரிவித்தார். இது, 2010-11ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 27 சதவீதம் (350 கோடி டாலர்
- 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகம். நடப்பு நிதியாண்டில், 470 கோடி டாலர் மதிப்பற்கு, தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலை மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு குறைந்து போனது போன்றவற்றால், தோல் பொருட்கள் ஏற்றுமதியில்
பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, ரூபாயின் வெளி மதிப்பு சரி வால், மூலப்பொருட்களுக்கான இறக்குமதி செலவினம் அதிகரி த்தது. அமெரி க்கா மற்றும் ஐரோப்பய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால், இந்திய ஏற்றுமதியாளர்கள், புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தற்போது, பல நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பயுள்ளது. இதனால், இவற்றின் ஏற்றுமதி உயர வாய்ப்புள்ளது. வரும் 2016-17ம் நிதியாண்டில், 1,400 கோடி டாலர் மதிப்பற்கு ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டின் மொத்த தோல் பொருட்கள் ஏற்றும தியில், தோல் காலணிகளின் ஏற்றுமதி பங்களிப்பு, 40 சதவீதமாகவும், தோல் ஆடைகளின் பங்களிப்பு, 10 சதவீதம் என்றளவிலும் உள்ளது. 27வது, இந்திய சர்வதேச தோல்பொருட்கள் கண்காட்சி, நேற்று சென்னை வர்த்தக மையத்தில் துவங்கியது. இக்கண்காட்சி, வெள்ளிக் கிழமையுடன் நிறைவடைகிறது. இதற்காக நடைபெற்ற பத்திரி கையாளர் கூட்டத்தில், மேற்கண்ட தகவலைஅக்யூல் அகமது தெரிவித்தார்.
Thnxs:http://www.dinamalar.com/business/news_details.asp?News_id=19204&cat=1

தோல் பொருட்கள் ஏற்றுமதி 27 சதவீதம் வளர்ச்சி

ஜனவரி 30,2012,01:19
சென்னை:"நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலுமாக, 27 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது' என, தோல் ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையிலும், இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதியும், சர்வதேச பங்களிப்பும் உயர்ந்துள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 470 கோடி டாலர் (23 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) மதிப்பிற்கு, தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சர்வதேச தோல் பொருட்கள் ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு 2.93 சதவீதம் என்றளவில் குறைவாக உள்ளது. அதேசமயம், சீனாவின் பங்களிப்பு 28 சதவீதம் என்றளவில் உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி பங்களிப்பை, 30 சதவீதம் என்றளவில் நிலை நிறுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.இதையடுத்து, மூன்றாண்டுகளில், நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி 700 கோடி டாலராக ( 35 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, தோல் பொருட்கள் ஏற்றுமதி கூட்டமைப்பின் மண்டல தலைவர் பி.ஆர். அகியூல் அகமது தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites