
கன்னியாகுமரி மாவட்டத்தில் பணப்பயிரான ரப்பர் மரச் சாகுபடி அதிக அளவு செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலானோர் ரசாயன உரம் பயன்படுத்திதான் ரப்பர் விவசாயம் செய்கிறார்கள். அதிலும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள சில எஸ்டேட்டுகளில் ரப்பர் மரங்களின் இலை உதிராமல் இருக்க ‘சல்பர்’ அடிப்பதாகக் குற்றச்சாட்டு இருந்துவருகிறது.‘சல்பர்’ என்ற ரசாயன மருந்து தண்ணீரில் கலப்பதால் நீர் நிலைகளில் நச்சுத்தன்மை ஏற்படுவதாகவும், அந்தத் தண்ணீரைக் குடிப்பவர்களுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாகவும் சொல்லப் படுகிறது. இந்நிலையில் எந்தச் செயற்கை உரமும் பயன்படுத்தாமல் தனது 40 சென்ட் நிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை முறையில் ரப்பர் விவசாயம் செய்து,...