இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Sunday, February 24, 2019

குல்பி

ஜில் ஜில் கூல் கூல் குல்பி விடுமுறை நாட்கள் தொடங்கி விட்டது, அதிகபடியான வெயிலும் தொடங்கி விட்டது... இந்நேரத்தில் அனைவரும் விரும்புவது ஜில்லுனு ஒரு ஐஸ் கிரீம்... சிறுவர்கள் வீட்டுலே இருப்பதால் தினமும் ஐஸ் கிரீம் வாங்கி தர சொல்லுவார்கள்.. எனவே இன்று நாம் வீட்டுலேயே எப்படி சுலபமா ஐஸ் கிரீம் செய்வதுனு பார்போம்.. (ஆமாம் இருக்குற கரண்ட் பிரச்சனைல எங்கேந்து ஐஸ் கிரீம் செய்வதுனு ! உங்க மனசு சொல்லுறது கேக்குதுங்க... அதுக்கும் ஒரு டிப்ஸ் கடைசியா சொல்லுறேன்.. ) தேவையான பொருட்கள் பால் - 1 லிட்டர்மில்க் மேட் - 3 ஸ்பூன்சக்கரை - 5 ஸ்பூன்மைதா / சோள மாவு - 2 ஸ்பூன்குங்கும பூ - 1 சிட்டிகைபிஸ்தா, பாதாம் பருப்பு - தலா 5செய்முறை பாலை நன்றாக காச்ச வேண்டும்....

சீமாறு | துடைப்பம் தயாரிப்பு

வருமானத்தைப் ‘பெருக்கலாம்’! பா ர்த்தால் சின்ன துடைப்பம்தான்... ஆனால், அதற்குப் பின்னால் கொட்டிக்கிடக்கும் வருமானத்தைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. ‘‘நம் மாநிலத்தில் தென்னைமரம் இல்லாத ஊர் கிடையாது. அதனால், இந்த தென்னந்துடைப்பம் தொழிலுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கப் போவதில்லை. சிறிய அளவில் தொழில் தொடங்க நினைப்பவர்கள் தாராளமாக இந்தத் தொழிலில் இறங்கலாம்’’ என்று நம்பிக்கை கொடுக்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த பைசுல் ஹுசைன். இந்த சுற்றுவட்டாரத்தில் மட்டும் 10 துடைப்பம் மண்டிகள் இருக்கின்றன. இங்கு தயாராகும் தென்னந்துடைப் பங்கள் வட மாநிலங்களில் ஏக பிரசித்தம். 40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும்,...

ஜாம் பதபடுத்தல் தொழில்

ஆர்வம் இருக்கிறதா... அள்ளுங்க வாய்ப்பை! தொ ழில் தொடங்க ஆசைப்படுபவர் களுக்கு வாய்ப்பு தரும் வளமான நிலமாக இருக்கிறது கோவை, வேளாண் பல்கலைக்கழகம். வேளாண் பல்கலைக்கழகம் தந்தாலும் இது விவசாயத் தொழில் வாய்ப்பு இல்லை... உணவுப் பொருள் சார்ந்த தொழிலைத்தான் ஊக்குவிக்கிறது பல்கலைக் கழகம். கனடா நாட்டின் சர்வதேச மேம்பாட்டு முகமை உதவி யுடன் நடத்தப்படும் இந்தத் திட்டம் பற்றிப் பேசினார், அதைச் செயல்படுத்தும் தொழில் நுட்ப மையத்தின் தலைவராக இருக்கும் பேராசிரியர் தங்கவேல். ‘‘குறைந்த மூலதனத்தில் சுயமாகத் தொழில்செய்ய விருப்பம் உள்ளவர் களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை முன்னேற்றும் திட்டம் இது! இந்தப் பயிற்சித் திட்டதில் சேர, வயது வரம்பு, கல்வித்தகுதி...

சாஸ் தயாரியுங்க… ஜமாயுங்க

வ ல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதேபோல கிடைக்கிற பொருள் எதுவாக இருந்தாலும் அதை வைத்து தொழில் நடத்தி லாபம் பார்க்க முடியும் என்பதற்கு சாஸ் தயாரிப்பு எளிய உதாரணம்! சென்னையில் சாஸ் தயாரிப்பில் முழுவேகத்தில் செயல்பட்டு வரும் ளிபிவிஷி நிறுவனத்தின் சுப்பாராவையும் தியாகராஜனையும் சந்தித்துப் பேசிய போது, சாஸ் தயாரிப்பு வீட்டில் இருந்தே சிறு தொழில் செய்ய ஆசைப்படும் பெண்களுக்கு ஏற்ற வாய்ப்பு என்பது புரிந்தது. ‘‘இருபது ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக ஒரு ஓட்டலில் சுவைத்த சாஸ், எங்கள் ஆர்வத்தைத் தூண்ட, இப்போது தமிழ்நாடு முழுக்க சாஸ் சப்ளை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்’’ என்றார்கள் இருவரும்! இப்போது பாஸ்ட்ஃபுட் கடை களும், ஓட்டல்களும்...

அலுமினியம் ஃபாயில் கன்டெய்னர்

சில பெரிய ஹோட்டல்களில் பார்சல் செய்துதரும் உணவுப் பொருட்கள் வீட்டுக்குப் போகிறவரை சூடாக இருக்கிற மாதிரி அலுமினியம் ஃபாயில் பாக்ஸில் போட்டுத் தருவார்கள். இந்த அலுமினியம் ஃபாயில் கன்டெய்னர்களைத் தயாரிக்கும் தொழிலைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம். தொழில் எப்படி? சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்குத்தான் இந்த அலுமினிய ஃபாயில் பாக்ஸ்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது, ரயில்களில் மட்டுமல்ல, பெரிய ஹோட்டல்களில் பலவற்றிலும் இந்த பாக்ஸ்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.  இந்த பாக்ஸ்களில் அடைக்கப்படும் உணவுகள், சூட்டைத் தாங்கும் திறனும், ஒளி ஊடுருவாமல் உணவின் தன்மையைப் பாதுகாக்கவும் செய்வதால்...

மறு சுழற்சி முறை

புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் எந்தத் தொழிலிலும் ஜெயிக்கலாம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ‘இதைப்போய் நான் செய்வதா..? எனக்கு அதில் அனுபவமில்லையே! என் வீட்டுக்குத் தெரிந்தால் அனுமதிக்கவே மாட்டார்கள்’ என்று சிலர் தொழிலுக்குள் இறங்கும் முன்பே தயங்குவார்கள். அதுபோன்ற ஆட்கள் ஜெயிப்பது சிரமம்தான். காரணம், தொழிலில் ஈடுபடுவோருக்கு மிக முக்கிய குணமே கூச்சம், தயக்கம், பயம் இவற்றை உதறிவிட்டுக் களமிறங்குவதுதான். பலரும் பார்க்கத் தயங்கும் வேலைகள்கூட சிலசமயம் லட்சங்கள் புரளும் பெரிய லாபம் தரக்கூடிய தொழிலாக இருக்கும். காக்கைகள் போல், நகரின் குப்பைகளில் கிடக்கும் பாட்டில்கள், பாலீதீன்களைச் சேகரிக்கும் ஆட்களைக் கவனித்திருக்கிறீர்களா..? ஞாயிற்றுக்கிழமைகளில்...

Saturday, February 9, 2019

காலணிகளுக்கான சந்தை வாய்ப்புகள்

காலணிகள் என்பது எல்லோருக்குமே அத்தியாவசியமான ஒரு பொருளாகும். சிறியோர் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப அவற்றின் வடிவமைப்புகள் மாறிக்கொண்டே வருகின்றன. எனினும் இதற்கான தேவை எப்போதுமே அழியாத ஒன்றாகவே இருக்கும். இந்த காலணிகள் தயாரிக்கும் தொழிலை நீங்கள் குறைந்த முதலீட்டுடன் செய்து கொள்ள முடியும். காலணிகளுக்கான சந்தை வாய்ப்புகள் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் என எல்லா இடங்களிலுமே காலணிகள் பயன்படுத்துகின்றனர்.சமுதாயத்திற்கு ஏற்றாற்போல் தேவைகளும் மாறுபடுகின்றன.எனவே காலணிகளும் வித்தியாசமான வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. இதன் தேவை எப்போதும் இருப்பதனால் தைரியமாக இந்த தொழிலை செய்து கொள்ளலாம். காலணி...

காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்

சர்க்கரை, ரத்த அழுத் தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி பலரும் உடல் நலம் பேணும் பிரத்யேக காலணிகளை பயன்படுத்துகி றார்கள். அவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார் கோவை பூ மார்க்கெட்டை சேர்ந்த கர்ணன். அவர் கூறியதாவது: 5ம் வகுப்பு வரை தான் படித்தேன். 15 வயதில் சென்னையில் ஒரு காலணி தயாரிக்கும்  நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கு தொழிலை கற்றுக்கொண்டேன். உடல்நலம் பேணும் பிரத்யேக காலணிகளுக்கு கிராக்கி இருப்பதை அறிந்து, அதை தயாரிக்க தொடங்கினேன்.  பல்வேறு மருத்துவமனைகளை அணுகி எனது முகவரியை கொடுத்தேன். அங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் எனக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். அதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது....

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites