வானம் பார்த்த பூமி சிவகங்கை. இம் மாவட்ட நிலத்தில் பூக்கள் விளைவது விவசாயிகளுக்கு அரிய விஷயம். ஆனாலும் சிவகங்கை கவுரிபட்டி விவசாயி எஸ்.மோகன், தனது நிலத்தை பண்படுத்தி நவீன சொட்டுநீர் பாசன கருவி மூலம் நீர் பாய்ச்சி, "சம்பங்கி பூ' சாகுபடி செய்து சாதித்து வருகிறார். விவசாயி மோகன் கூறியதாவது: சேலத்தை சேர்ந்த நாங்கள் குடும்பத்துடன் விவசாயம் செய்ய 23 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தோம். கவுரிபட்டியில் வாங்கிய நிலத்தை பண்படுத்தி, 3 ஏக்கரில் சம்பங்கி பூச்செடி நடவு செய்தோம். சேலம், ஜெயங்கொண்டானில் நாட்டு, ஒட்டு ரக(பிரிஜ்வார்)சம்பங்கி விதைகளை (கிழங்கு வகை) வாங்கி நடவு செய்தேன். 6 மாதங்கள் பராமரித்த பின் பூக்கள் பூக்க துவங்கும்.
பூச்செடிகளுக்கு தண்ணீர் சிக்கனத்திற்காக "பட்டர்பிளை' சொட்டு நீர் பாசன கருவி பொருத்தியுள்ளேன். பூச்செடி நடவிற்கு உரம், இயற்கை உரம், சொட்டு நீர் கருவி பொருத்துதல் போன்றவற்றிற்கு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 கிலோ வரை சம்பங்கி பூக்கள் விளையும். இவற்றை மதுரை மார்க்கெட்டில் விற்று வருகிறோம். பூக்களை மொட்டுகளாக மட்டுமே பறிக்க வேண்டும். மதுரை மார்க்கெட்டில் தற்போது சம்பங்கி பூ கிலோவிற்கு ரூ.40 மட்டுமே கிடைக்கிறது. முகூர்த்த காலங்களில் கிலோ ரூ.150 முதல் 200 வரை விற்றால் தான், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.சம்பங்கி பூக்கள் குறைந்த விலைக்கு விற்பதால் ஆண்டுக்கு ரூ.1.08 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். செடிகள், ஆட்கள் கூலி, பராமரிப்பு செலவு போக குறைந்த வருவாயே கிடைக்கும். முகூர்த்த காலங்களில் நல்ல விலை போனால் லாபம் கிடைக்கும், என்றார்.

எஸ்.மோகன்,
சிவகங்கை மாவட்டம்.
Mobile No:99766 50101.
சிவகங்கை மாவட்டம்.
Mobile No:99766 50101.
0 comments:
Post a Comment