இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, September 3, 2015

நகைகள்

நகைகள் எப்படி இருக்க வேண்டும்? உடைக்கு மேட்ச்சாக இருக்க வேண்டும்... உடையின் டிசைனிலேயே கிடைத்தால் இன்னும்  சிறப்பு... உறுத்தவோ, கனமாகவோ இல்லாமல் அணிய சுலபமாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமாக  பட்ஜெட் இடிக்கக்கூடாது. கவரிங் நகைகளில் ஆரம்பித்து, டெரகோட்டா, குவில்லிங் நகைகள் வரை எதிலும் இத்தனை  விஷயங்களைப் பார்க்க முடியாது.பாலிமர் கிளேவில் உருவாக்கப்படுகிற நகைகள் உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும்  நிறைவேற்றுபவை.சென்னை, புரசைவாக்கத்தைச் சேர்ந்த செல்வி திலீப்  பாலிமர் கிளேயில் நகைகள் செய்வதில் நிபுணி!Polymer Clay Jewellry
எம்.காம் படிச்சிருக்கேன். 60 வகையான கைவினைக் கலைகள் செய்யத் தெரியும். டெரகோட்டா  உள்பட நிறைய வகையான  நகைகளையும் செய்வேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி பாலிமர் கிளேவுல நகைகள் செய்யக் கத்துக்கிட்டேன். பார்க்கிறதுக்கு  டெரகோட்டா நகைகள் மாதிரியே இருக்கும். ஆனா, லேசா இருக்கும். கீழே விழுந்தா உடையாது. டெரகோட்டா நகைகள்னா நாம  கலர் பண்ணணும். ஆனா, பாலிமர் கிளே, விதம் விதமான கலர்கள்ல கிடைக்கிறதால அந்த வேலையும் மிச்சம்...’’ என்கிற  செல்வி, ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலில் துணிந்து இறங்க நம்பிக்கை அளிக்கிறார்.

பாலிமர் கிளே, மோல்டு, கயிறு, கியர் ஒயர், வளையல், மோதிரம், காதணி செய்யறதுக்கான பேஸ், கொக்கி, டூல்ஸ் எல்லாம்  தேவை. மோல்டு இல்லாமலும் செய்யலாம். ரெண்டு, மூணு கலர் காம்பினேஷன்ல செய்ய முடியும். பட்டுப்புடவையில உள்ள  மயில் டிசைன் அப்படியே நகையில வேணும்னாலும் கொண்டு வர முடியும். பாரம்பரிய டிசைன்களையும் பண்ணலாம். 

காலேஜ்  பொண்ணுங்களுக்குப் பிடிச்ச மாதிரி புது டிசைன்களையும் பண்ணலாம். நகைகள் செய்ததும் மைக்ரோவேவ் அவன்ல வச்சு பேக்  பண்ணி எடுத்துட்டா காலத்துக்கும் அப்படியே இருக்கும். ஒருமணி நேரத்துல5 செட் பண்ணலாம். 150 ரூபாய்லேருந்து விற்க ஆரம்பிக்கலாம். ஆடம்பரமான நெக்லஸ் செட்டை 600 ரூபாய் வரை விற்கலாம்’’ என்கிற செல்வியிடம் ஒரே நாள் பயிற்சியில்  தேவையான பொருட்களுடன் 5 வகையான பாலிமர் கிளே நகைகள் செய்யக் கற்றுக் கொள்ள கட்டணம் 750 ரூபாய்.


நன்றி குங்குமம் தோழி

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites