வசதியான உடையாக மட்டுமின்றி, அவசிய உடையாகவும் மாறிவிட்டது நைட்டி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அணிகிற உடையாகவும் மாறிவிட்ட நைட்டியின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. சல்வாரோ, சேலையோ வாங்கிவிடலாம் என்கிற அளவுக்கு நைட்டியின் விலை அதிகரித்திருக்கிறது. ‘‘தையல் மெஷின் மிதிக்கத் தெரிஞ்சா போதும். நைட்டி தைக்கக் கத்துக்கலாம். அதையே ஒரு பிசினஸாகவும் பண்ணலாம்’’ என்கிறார் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வித்யா.
‘‘பி.காம் முடிச்சிட்டு, எம்.பி.ஏ. பண்ணியிருக்கேன். வேலைக்குப் போயிட்டிருந்தேன். வீட்ல வயசானவங்களைப் பார்த்துக்கறதுக்காக வேலையை விட வேண்டி வந்தது. டெய்லரிங் தெரியும். எனக்கான பிளவுஸ், சுடிதார், நைட்டியெல்லாம் பல வருஷமா நானாதான் தச்சுப் போடறேன். வேலையை விட்டதும், கிடைக்கிற நேரத்துல வேற ஏதாவது உபயோகமா பண்ணணும்னு யோசிச்ச போது, டெய்லரிங் ஐடியா வந்தது. சுடிதார், பிளவுஸ் தைக்க நிறைய ஆட்கள் இருக்காங்க.
நைட்டி தைக்கத்தான் சரியான ஆட்கள் இல்லை. கடைகள்ல வாங்கற நைட்டி பெரும்பாலும் சரியான அளவுகள்ல கிடைக்கிறதில்லை. காஸ்ட்லியாவும் இருக்கு. ரெண்டு முறை துவைச்சதுமே தையல் விட்டுப் போகுது. இப்படி எந்தப் பிரச்னைகளும் இல்லாதபடி எல்லாருக்கும் பொருந்தற அளவுகள்ல, தையல் விட்டுப் போகாத நைட்டிகள்தான் என்னோட ஸ்பெஷல்’’ என்கிற வித்யா, காலர் வைத்தது, ஓபன் நெக், ஜிப் வைத்தது, எலாஸ்டிக் வைத்தது, கர்ப்பிணி மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கானது என 5 மாடல்களில் நைட்டி தைக்கிறார்.
‘‘எக்ஸ் எல், டபுள் எக்ஸ் எல், ட்ரிபுள் எக்ஸ் எல்னு மூணு சைஸ்லயும் தைக்கிறேன். தரமான காட்டன் துணியில மட்டும்தான் தைக்கிறேன். அதனால தண்ணியில நனைச்சதும் சுருங்காது. ஓவர்லாக் பண்ணிக் கொடுக்கறேன். மேல் தையல் போட வேண்டிய அவசியமில்லை. கடையைவிட விலையும் கம்மி...’’ என ஏகப்பட்ட நல்ல விஷயங்களை அடுக்குகிற வித்யா, தையல் மெஷினுடன் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலில் துணிந்து இறங்கலாம் என்கிறார்.
‘‘ஒரு நாளைக்கு 20 முதல் 25 நைட்டி தைக்கலாம். கடை விலையை விட கம்மியா கொடுத்தா, பெரிய லாபம் பார்க்கலாம்...’’ & நம்பிக்கையாகச் சொல்கிறவரிடம் ஒரே நாள் பயிற்சியில் நைட்டி தைக்கப் பயிற்சி எடுக்கலாம். ஒரு நைட்டிக்கான மெட்டீரியலுடன் சேர்த்துக் கட்டணம் 750 ரூபாய். (99626 44351)

0 comments:
Post a Comment