இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Wednesday, May 2, 2012

நைட்டி தைப்பதில் நல்ல லாபம்

வீட்டிலிருக்கும்போது பெண்களின் வசதியான உடை ‘நைட்டி’. குழந்தைகளும் சினிமா நடிகைகளும் மட்டுமே அணிந்த காலம் மாறி, இன்று எந்த வயதினரும் உபயோகிக்கிற தேசிய உடையானதோடு, காஸ்ட்லியாகவும் ஆகி விட்டது. ‘நைட்டி விக்கிற காசுக்கு ஒரு சல்வாரோ, சேலையோ வாங்கிடலாம்’ என்கிற ஆதங்கமும் பலருக்கு உண்டு.

‘தையல் கலை தெரிந்தவர்களுக்கு அந்தக் கவலை தேவையில்லை’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த கலாவதி. இவரது முழுநேர வேலையே நைட்டி தைத்து விற்பதுதான்.

‘‘பி.காம் முடிச்சிருக்கேன். டெய்லரிங் தெரியும். வேலையில்லாம இருக்க வேண்டாமேனு ஒரு கடைக்காக ஜாக்கெட், சுடிதார், நைட்டி, பாவாடை தச்சுக் கொடுத்திட்டிருந்தேன். இன்னொருத்தருக்கு தச்சு கொடுக்கிறப்ப கிடைக்கிற காசை விட, நாமாவே தச்சு விற்பனை செய்தா, அதிக லாபம் பார்க்கலாம்னு தோணவே, சொந்தமா பிசினஸ் ஆரம்பிச்சிட்டேன். எல்லாவிதமான உடைகளும் தைக்கத் தெரியும்னாலும், என்கிட்ட ஹாட் சேல்ஸ்னா நைட்டியும் உள்பாவாடையும்தான்’’ என்கிறவர், கற்றுக்கொண்டு தொழில் தொடங்க விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘நைட்டிக்கும் பாவாடைக்குமான துணி, மீட்டர் 20-25 ரூபாய்லேர்ந்து கிடைக்குது.
எக்ஸ்.எல் சைஸ்னா ரெண்டரை மீட்டரும், டபுள் எக்ஸ்.எல் சைஸ்னா 3 மீட்டரும் துணி தேவைப்படும். 40-42 இன்ச் பாவாடைக்கு ரெண்டரை மீட்டர் தேவை. மீட்டர் கணக்குல வாங்கிறதைவிட, பண்டிலா வாங்கறது சிக்கனம். தையல் மெஷின் அவசியம். சாதா மெஷின் 4,500-க்கும், பவர் மெஷின் 12 ஆயிரத்துக்கும் கிடைக்குது. மெஷின் தவிர்த்து மெட்டீரியல் உள்பட எல்லாத்துக்கும் சேர்த்து 4 ஆயிரம் ரூபாய் முதலீடு தேவை.’’

என்ன ஸ்பெஷல்? எத்தனை மாடல்?

‘‘கடைகள்ல சுத்தமான காட்டன் துணில தச்சது கிடைக்காது. நாம தைக்கிறப்ப, வாடிக்கையாளர் விருப்பத்துக்கேத்தபடி சுத்தமான காட்டன்லயோ, சாட்டின் மாதிரி வேற மெட்டீரியல்லயோ தச்சுத் தரலாம். ஜிப் வச்சது, எலாஸ்டிக் வச்சது, ஸ்லீவ்லெஸ்னு 3 மாடல்கள்ல நைட்டியும், ஃப்ரில் வச்சது, வைக்காதது, வயசானவங்களுக்காக எலாஸ்டிக் வச்சதுனு பாவாடைல 3 மாடல்களும் தைக்கறேன். விருப்பமான மெட்டீரியல், ரெட்டைத் தையல், பாக்கெட் - இதெல்லாம் ஸ்பெஷல்.’’

விற்பனை மற்றும் லாபம்?

‘‘தையல் அனுபவம் உள்ளவங்க ஒரு நாளைக்கு 10 நைட்டி அல்லது 20 பாவாடை தைக்கலாம். முதல்ல வீட்டுக்குப் பக்கத்துல உள்ளவங்களுக்கும், சின்னச் சின்னக் கடைகளுக்கும் கொடுத்துப் பார்க்கலாம். யாருக்கு, எப்படி வேணும்னு கேட்டும் தச்சுக் கொடுக்கலாம். 25 சதவீதம் லாபம் நிச்சயம்.’’

ரோஸ் லிப்ஸ் வேணுமா? இதப்படிங்க !

தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கிறது. மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல உதடுகளும் உண்டு. கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், “வாசலின்’ தடவிக் கொள்ளலாம்.
வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் கூட வரலாம். இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறைய, வைட்டமின், “இ’ சத்துகள் நிறைந்த, “சன்ஸ்கிரீன் லோஷனை’ தடவி வரலாம்.
உதடுகளில் வெடிப்பு
அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும். பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.
உதடுகள் மென்மையாக
வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து உதடுகளில் ஒத்தடம் தரவேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் ஒத்தடம் தரலாம். வாரம் மூன்றுநாட்களுக்கு இவ்வாறு செய்து வர உதடுகள் ரோஜா பூ நிறத்திற்கு மாறுவதோடு மென்மையாகும்.
வறுத்து அரைத்த உளுத்தம் மாவு 1 சிட்டிகையுடன் 1 சொட்டு தேன் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டில் தடவி 5 நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவுங்கள். நாளடைவில் உதடுகள் ரோஜா நிறமாவதுடன்,மென்மையாகவும் ஆகும்.
தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாகும்.
மென்மையான உதடுகள்
வீட்டில் உள்ள பொருட்களே உதடுகளை அழகாக்க பயன்படுகின்றன. வெண்ணெய் அல்லது நெய்யை தினசரி உதடுகளில் தடவி வர உதடுகளில் உள்ள வெடிப்புகள் நீங்கும்.
முட்டையின் வெள்ளைக்கருவோடு சிறிதளவு பாதம் பவுடர், சிறிதளவு பாலடை கலந்து உதடுகளில் தடவி வர உதடுகள் வறட்சி நீங்கி மென்மையாகும்.
பாதம் எண்ணெயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து உதடுகளில் ஐந்து நிமிடம் தேய்க்கவும். தினசரி இதனை தேய்க்க உதடுகள் மென்மையாகும்
Related Results
  •  

முகப்பருவா டீ பேக் போதுமே

 

கோடை காலத்தில் எண்ணெயும், வியர்வையும் அதிகரித்து பருக்கள் ஏற்படுவது இயல்பு. அதை நகங்களினால் கிள்ளினால் அதிக ஆபத்து. அவை சீல்வைத்து புண்கள் வடுக்கலாக மாறி விடும். கோடைகால பருக்களைப் போக்க சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.
டீ பேக் பேஸ்ட்
சருமத்தில் ஏற்படும் கறுமையை போக்கவும், பருக்களை நீக்கவும் டீ டிகாசன் சிறந்த நிவாரணி. தேனீர் தயாரித்த பின்பு மீதம் இருக்கும் டிக்காஷனில் சிறிதளவு கடலைமாவு கலந்து பேஸ்ட் மாதிரி தயாரியுங்கள். அதனை கை, முகம், கழுத்து போன்ற பகுதிகளில் பூசி 15 நிமிடம் காயவைக்கவும். உலர்ந்து இறுக்கமான பின்பு குளிர்ந்த நீரில் கழுவவும். பயன்படுத்திய `டீ பேக்கை’ கழுவி கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைத்திருந்தால், சூட்டினால் ஏற்படும் கண் சோர்வு, எரிச்சல் நீங்கும்.
அதேபோல் கிரீன் டீ முகப்பருவைப் போக்கும் சிறந்த மருத்துவப் பொருளாக செயல்படுகிறது. இதில் உள்ள பென்சாயில் பெராக்ஸைடு முகத்தில் உள்ள அதிக எண்ணெய் பசையை நீக்கும். வறட்சி ஏற்படவிடாது. சருமத்தை பருவின்றி பொலிவாக்கும்.
துளசி சாறு
ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்குங்கள். சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவைத்து விட்டு அதில் ஒரு கைப்பிடி துளசியை போட்டு மூடிவைத்துவிடுங்கள். நன்றாக ஆறிய பின்பு அந்த நீரை வடிகட்டி முகம் கழுவ பயன்படுத்துங்கள்.
வேப்பிலை வடிநீர்
தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் புதினா, துளசி, வேப்பிலை மூன்றையும் தலா ஒரு கைப்பிடி வீதம் போட்டு மூடிவைக்கவும். இதனை வடிகட்டி ஆறவைத்து முகம் கழுவினாலும் முகப்பரு வராது. இதை பிரிஜ்ஜில் வைத்து 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அந்த நீரில் ஒரு கப் எடுத்து, அதில் 3 டீ ஸ்பூன் முல்தாணி மிட்டி கலந்து பரு இருக்கும் இடங்களில் பூசவேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிவிட்டால் பரு மறையும்.
ரோஜா, சந்தனம்
ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்கி, அதில் பிங்க் கலர் ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு போட்டு மூடிவைத்துவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து வடிகட்டி எடுத்து, அந்த நீரை பயன்படுத்தி சந்தன கட்டையை கல்லில் தேய்த்து உரசி, அரைக்கவேண்டும். அதை பரு, வியர்க்குரு, கருமையான சருமங்கள் உள்ள பகுதிகளில் பூசவும். அரை மணி நேரத்தில் குளிர்ந்த நீரால் முகம் கழுவவேண்டும்.
இளநீர், தர்பூசணி
இளநீரையும், தர்பூசணி சாறையும் சம அளவு எடுத்து கலந்து முகத்தில் தேயுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை பூசுங்கள். படுத்துக்கொண்டு பஞ்சில் முக்கி இதை தேய்ப்பது நல்லது. இல்லாவிட்டால் வழிந்தோடி விடும். பஞ்சில் முக்கிய சாறை கண்களை மூடிக்கொண்டு, கண்களின் மேல் பகுதியிலும் வைக்கவேண்டும். உடல் சூட்டினால் ஏற்படும் கட்டியை கட்டுப்படுத்தும். கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். முகமும் பொலிவு பெறும்.
அதிக அளவு டிவி பார்த்தாலோ, கணினியில் வேலை செய்தாலோ பருக்களும், கரும்புள்ளிகளும் தோன்றும். கண்களைச் சுற்றி கருவளையும், சோர்வும் ஏற்படும். எனவே இவற்றை தவிர்க்க வேண்டும். மன அழுத்தம் இருந்தாலும் முகப்பரு வரும். எனவே மனதை அமைதியாக்குவதோடு, ஊட்டச்சத்து மிக்க உணவு உண்டு நன்றாக உறங்கி எழுந்தாலே முகப்பரு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

Tuesday, May 1, 2012

தாகம் வந்தால் குளிர்ந்த தண்ணீரை ஏன் குடிக்கிறோம்

தாகம் வந்தால் குளிர்ந்த தண்ணீரை ஏன் குடிக்கிறோம்மூளையின் அடிப்பகுதியில் நரம்பு உயிரணுக்களாலான வேட்கை மையம் எனும் ஒரு தொகுதி உள்ளது. இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து போகும்போது அந்த வேட்கை மையத்தால் அது உணரப்பட்டு நமக்கு தண்ணீர் தாகம் உண்டாகிறது. தொண்டை உட்பகுதியின் மென்தோல் வறண்டு போகும்போதும் வேட்கை மையத்தில் தண்ணீரின் வறட்சி உணரப்பெற்று அங்குள்ள நரம்புகளால் அவ்வறட்சி மூளைக்கும் உணர்த்தப்பெறுகிறது. வறட்சியால் கிளர்ச்சியுற்ற மேற்கூறிய நரம்புகள் குளிர்ந்த நீரை அல்லது பானங்களைப் பருகும்போது தடிமனாகி வறட்சி தணிந்து விடுகிறது. இவ்வறட்சித் தணிப்பு சூடான பானங்களை அருந்தும்போது நடைபெறுவதைவிட குளிர்ந்த பானங்களை உட்கொள்ளும்போது விரைந்தும், மிகுதியாகவும் நடைபெறுவதே இதற்கு காரணம்.

கார்ப்பரேஷன் வங்கி 8 சிறுதொழில் மையம்

சென்னை : நாட்டின் முன்னணி அரசு வங்கிகளில் ஒன்றான கார்ப்பரேஷன் வங்கி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கடனுக்கென 8 முக்கிய நகரங்களில் சிறப்பு மையங் களை திறந்துள்ளது. இதை மங்களூர் தலைமை அலுவலகத்தில் வங்கியின் தலை வர் அஜய் குமார் தெரிவித் தார். சென்னை, கோவை, ஐதராபாத், புனே, மும்பை, வடோதரா, பெங்களூர், டெல்லி ஆகிய நகரங்களில் இந்த மையங்கள் செயல்படுகின்றன.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன் தேவை யை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் தனிக் கவனம் செலுத்தும் வகையில் இவை தொடங்கப்பட்டுள்ளன. விரைவான நடைமுறைகளின்கீழ் தாமதமின்றி இந்த மையங்கள் கடன் வழங்கும். கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் சிறப்பு கடன் திட் டங்கள் இந்த துறையின் வளர்ச்சிக்கு உதவும் என கார்ப்பரேஷன் வங்கி தெரிவித்துள்ளது.

முளைகட்டிய பயறு சாப்பிடுங்க, உடல் பூரிக்கும்

உடல் இளைத்து இருப்பதுதான் அழகு என்றுதான் பெரும்பாலான பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் சொல்லப்படுகிறது. ஆனால் சத்துக்களை குறைத்து உடலைஒல்லியாக்குவது தேவையற்றது. அது உடலை பலவீனமாகத்தான் ஆக்கும். உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

சுக்கு தண்ணீர்

உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம். மதிய உணவில் மோர் சாப்பிடவேண்டும்.அதுபோல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் சிறிது சுக்கு தட்டிப்போட்டு காய்ச்சி அருந்த வேண்டும். பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.

அருகம்புல் கசாயம்

நோயினால் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமானவர்கள் அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து அரைத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் கலந்து காலை மாலை டீ காஃபிக்கு பதிலாக அருந்தி வந்தால் உடல் பலவீனம் நீங்கும்.

முளைக்கட்டிய பயறு

பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும். கொண்டைக் கடலை 10 எடுத்து இரவு சுத்தமான நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும்.

சோற்றுக்கற்றாழை

தூதுவளை பொடியை தேனில் கலந்து 1 ஸ்பூன் அளவு காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இளைத்த உடல் தேறும். இதை உடல் பலவீனமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

உடல் பலவீனமடைந்து தேறாமல் நோஞ்சான் போல் உள்ளவர்களின் உடல் பலமடைய தூதுவளை, பசலைக்கீரை சிறந்த நிவாரணி. இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டு வந்தால் உடல் பலமும், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

சோற்றுக் கற்றாழையை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.

பேரிச்சை சத்துக்கள்

தேவையான அளவு பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும்.

முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும். உடல் பலம் பெறும். உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.

கர்ப்பிணிகள் ஹேர் ட்ரையர் யூஸ் பண்ணாதீங்க : குழந்தைக்கு ஆபத்து

கர்பிணிப் பெண்கள் ஹேர் ட்ரையர் உபயோகித்தாலோ, மைக்ரோவேவ் ஓவன், வாக்வம் கிளீனர் ஆகியவை உபயோகித்தாலே கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமாவரும் என்று ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது.

வாழ்க்கையில் வசதிகள் பெருக பெருக இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கிராமங்களில் கூட இன்றைக்கு சமைக்க மைக்ரோவேவ் ஓவன் பயன்படுத்தி வருகின்றனர். வீட்டில் தூசிகளை சுத்தம் செய்த வாக்வம் கிளீனர் என வாழத்தொடங்கிவிட்டனர் மக்கள். வசதிக்காக வாங்கிய பொருட்கள் இன்றைக்கு மக்களின் ஆரோக்கியத்தை அசைத்து பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டது. குறிப்பாக கர்பிணிப் பெண்கள் வாக்குவம் கிளீனர், ஓவன் பயன்படுத்தினால் அது கருவில் உள்ள குழந்தையின் நுரையீரலை பதம் பார்க்கிறதாம். அதேபோல் கூந்தலை சீக்கிரம் உலர வைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஹேர் ட்ரையர் கூட குழந்தையை பாதிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் உள்ளிட்ட மின்காந்த சக்திதான் என்று தெரியவந்துள்ளது.

வடக்கு கலிபோர்னியாவில் வசிக்கும் 801 கர்ப்பிணிகளிடம் மைக்ரோவேவ் அதிகம் உள்ள கருவிகளின் பயன்பாடு பற்றி கருத்து கேட்டனர்.

பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் மருத்துவ விவரங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர். 13 ஆண்டுகள் கழித்து அந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான அறிகுறிகள் பற்றி ஆராய்ந்தனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மின்காந்த கருவிகளை குறைவாக பயன்படுத்தியவர்களைவிட அதிக நேரம் பயன்படுத்திய கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது.

இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள குழுவின் தலைவர் டிகுன் லி, கர்ப்பிணிகள் மின்காந்த கருவிகளின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது அவசியம். அத்துடன் அவை இயங்கும் போது அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதை தடுக்க முடியும் என அறிவுறித்தியுள்ளார்.

நீண்ட ஆயுள் வேணுமா முத்தம் கொடுங்க: ஆய்வில் தகவல்

முத்தம் என்பது அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம் மட்டுமல்ல, அது ஆயுளையும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. முத்தத்தைப் பற்றிய ஆராய்ச்சிமுடிவுகள் தினம் தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதோ புதிய ஆய்வு முடிவு ஒன்றின் சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்களேன்.

திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது முத்தத்தை முறையாக பகிர்ந்து கொள்ளும்போது அது மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டது.

இங்கிலாந்தில் இளம் ஜோடியினர் வாரத்துக்கு 11 முறை முத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மிகவும் அழுத்தமானதாகவும், அதிக நேரம் கொண்டதாகவும் இருக்கிறது. இளஞ்ஜோடியினர் 5 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர்.

அந்நாட்டில் திருமணமானவர்களில் 5ல் ஒருவர் வாரத்தில் ஒருமுறை கூட முத்தத்தை பகிர்ந்து கொள்வது கிடையாது. எப்போதாவது அவர்கள் முத்தத்தை பகிர்ந்து கொண்டாலும் அது அழுத்தமாகவோ, நீண்ட நேரம் கொண்டதாகவோ இருப்பதில்லை என்று கண்டறியப்பட்டது. அவர்கள் அதிகபட்சமாக 5 வினாடிகள் முத்தம் கொடுப்பதே பெரிய விஷயமாக உள்ளது. (திருமணத்திற்கு முன்பு அதிகம் முத்தம் கொடுத்து போரடித்திருக்கும்)

முத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் நன்மை குறித்து தெரிவிக்கவும் பள்ளி குழந்தைகளிடையே முத்தம் கொடுக்கும் திறமையை வளர்க்க, தேசிய பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக முத்தத்தை வைக்கலாம் என்று இங்கிலாந்தின் இதய பாதுகாப்பு பவுண்டேசன் பரிந்துரைத்துள்ளது.

நம்ம ஊரில் பள்ளி மாணவர்கள் முத்தம் பற்றி பேசினாலே அடி பின்னிவிடுவார்கள். இங்கிலாந்தில் முத்தம் குறித்த பாடத்திட்டமே கொண்டுவரப்போகிறார்களாம். இது எப்படி இருக்கு

காதல் அதிகரிக்க பேசாதீங்க, தொடுங்க

ஆணோ அல்லது பெண்ணோ, பேசுவதை விட தொடுவதுதான் அவர்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க உதவுகிறதாம்.

காதல் மொழியை எவ்வளவுதான் பேசினாலம் கிளர்ச்சி பிளஸ் உணர்ச்சி என்பது மிக மிக மெதுவாகவே தூண்டப்படுகிறதாம். அதேசமயம், லேசான ஒரு தொடுதல் பல ஆயிரம் காதல் உணர்வுகளை ஒரு சேரத் தருகிறதாம். மேலும் தொடுதல் மூலம் உணர்வுகள் அதிகரித்து, உறவுகளும் வலுப்பட உதவுகிறதாம்.

இதுகுறித்து ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உங்களது ஆண் நண்பர்களையோ அல்லது பெண் தோழிகளையோ உரிய இடத்தில் தொடுவதன் மூலம் நீங்கள் நினைப்பதை அடைய முடியும். அவர்களுக்கு உணர்ச்சிகள் விரைவாக தூண்டப்படும். மேலும் உங்களின் உறவுகளும் வலுப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கெங்கு தொட்டால் என்னென உணர்வுகள் வரும் என்பதையும் இவர்கள் தெரிவித்துள்ளனர். உதாரணத்திற்கு காதலனோ அல்லது காதலியோ பதட்டம் அல்லது டென்ஷனாக இருக்கிறார்கள் என்றால், அவர்களின் காது மடல்களை வருடலாம். உங்களது ஆள்காட்டி மற்றும் பெருவிரலால் வருடுவது நல்ல ரிசல்ட் கொடுக்குமாம். லேசாக நாவால் வருடுவது, வலிக்காமல் கடிப்பது போன்றவையும் இதில் அடங்கும்.

காது மடல்கள் மென்மையான, உணர்ச்சிகளை விரைந்து தூண்டக்கூடிய நரம்புகளால் ஆனது என்பதால் காது மடல்களை லேசாக வருடினாலே மனம் அமைதியைடயும், கிளர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. உறவுகளின்போதும் கூட இதுபோன்ற காது மடல் மசாஜ் நல்ல பலனைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல காதுகளுக்கு அருகில் மென்மையாக முனுமுனுப்பதும், கிசுகிசுப்பதும் கூட உடனடி பலனைத் தருமாம். குறிப்பாக ரொமான்டிக்காக பேசுவது இன்ஸ்டன்ட் பலன் தருமாம். இப்படிப் பேசுவதன் மூலம் நமது மூச்சுக்காற்று, காதுகளை உரசுகிறது. அந்தத் தொடுதலும் சுகம் தரும் என்கிறது இந்த ஆய்வு.

அதேபோல காதலன் அல்லது காதலியுடன் பேசுவதாக இருந்தால் பக்கத்தில் உட்கார்ந்து பேசாமல் மடியில் அமர்ந்தபடி பேசலாமாம். இது இருவருக்குள்ளும் கை விளையாடல்களை தானாகவே ஊக்குவிக்குமாம். இதுவும் உணர்ச்சிவசப்படுதலை தூண்டுவிக்கும் ஒரு தொடுதல் நடவடிக்கை என்கிறது ஆய்வு.

இப்படி சின்னச் சின்ன தொடுதல்கள் மூலம் காதல் உணர்வுகள் தூண்டப்பட்டு இருவருக்குள்ளும் உறவுகள் வலுப்படும், காதல் ஆழமாகும் என்று முடிக்கிறது அந்த ஸ்வீடன் நாட்டு ஆய்வு.

பிரசவத்திற்கு பின்னாடி மனைவியை பத்திரமாக பாத்துக்கங்க

பிரசவம் என்பது பெண்களுக்கு மறு ஜென்மம் போன்றது. சுகப்பிரசவமோ, சிசேரியனோ எந்த முறையிலாவது குழந்தையை பெற்றெடுத்த உடன் அப்பாடா என்ற நிம்மதுபிறக்கும். சில சமயம் டெலிவரி ஆனாவுடன் மனதில் பாரம் குடியேறும் ஒரு வித மன அழுத்தம் ஏற்படும். இது அனைத்துப் பெண்களுக்கும் இயல்பாக ஏற்படுவதுதான். எனவேதான் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் முன்னோர்கள். பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தம் பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும் மருத்துவர்கள் கூறுவதைக் கேளுங்களேன்.

அழுகையும் ஆர்பாட்டமும்

பிரசவமானதும் மன அழுத்தத்தில் பாதிக்கப்படும் பெண்கள் பெண்கள் தாங்களாகவே காரணமின்றி அழுவார்கள். குழந்தையை கவனிக்கக்கூட ஆர்வம் காட்டாமல் ஒருமாதிரி விட்டேத்தியாக இருப்பார்கள். இதுபோன்ற சில அறிகுறிகளால் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த நிலைக்கு பேபி ப்ளூஸ் Baby Blues என்று மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர். பிரசவித்த ஆன கொஞ்ச நாட்களில் இது தானாகவே சரியாகத் தொடங்கும்.

மனநோய் கோளறுகள்

சிலருக்கு இதுபோல எல்லாம் சாதாரணமாக இல்லாமல் தீவிரமான பிரச்னையாக இது உருவெடுக்கலாம். அப்படி அது மோசமான நிலையை அடையும்போது அதை Puerperal Psychosis என்று பெயரிட்டுள்ளனர் மருத்துவர்கள். இது ஏற்கெனவே மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாம். சாதாரணப் பெண்களுக்கும் இது போல நிலைமை தீவிரமடைவதுண்டு.

இந்த நிலை ஏற்படும்போது சம்பந்தப்பட்ட பெண்ணைத் தனியாக விடுவது நல்லதல்ல. காரணம், அவர்களுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இந்தச் சமயத்தில் அதிகப்படியாக ஏற்படும். அதனால் அவர்களை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்திருப்பதுதான் நல்லது.

ஆவேச நிலை

சில பெண்கள் ஆவேசத்தின் உச்சியில் தங்களையும் அறியாமல் குழந்தையைப் பாதிக்கக் கூடிய அளவுக்கேகூடச் செல்வார்கள்!

தேர்ந்த மனநல மருத்துவரிடம் இவர்களை அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்துவர, மெதுவாகக் குணம் தெரியும். சிகிச்சையின்போது இவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரும்போது, சில சமயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக்கூட நிறுத்த வேண்டியிருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு இதுபோன்ற மனரீதியான மாறுதல்கள் ஏற்படுவது இயற்கைதான் என்றாலும் அவர்களை பத்திரமாக பாதுகாத்து ஆறுதல் படுத்தவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites