தக்காளிப் பொடி
முழுவதுமாக பழுத்த கெட்டியான தக்காளிப் பழங்களை குழாயில் ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவவும். பின் இதனை சிறு துண்டுகளாக வெட்டி தனி அறையில் உலர்த்தியில் 80 டிகிரி செல்சியஸில் 10 மணி நேரம் உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட துண்டுகளை மின் அம்மியில் அரைத்து பொடியாக்க வேண்டும்.
வெங்காயப் பொடி
பெரிய வெங்காயத்தை தேர்வு செய்து தோலை உறிக்கவும். பின் இதனை குழாயில் ஓடும் நீரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனை தனி அறையில் உலர்த்தியில் 60 டிகிரி செல்சியஸில் 7 மணி நேரம் வரை வைத்து உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட செதில்களை அரைத்து பொடியாக்கி பாலித்தீன் பைகளில் நிரப்பி மூடவும்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள் | அளவு |
தக்காளிப் பொடி | 5.0 கிராம் |
வெங்காயப் பொடி | 0.5 கிராம் |
சோள மாவு | 2.0 கிராம் |
சீரகத் தூள் | 0.5 கிராம் |
மிளகுத் தூள் | 0.3 கிராம் |
உப்பு | 1.5 கிராம் |
அஜினமோட்டோ | 0.5 கிராம் |
தக்காளி சூப் மிக்ஸ் செய்முறை
அனைத்து தேவையான பொருட்களையும் நன்கு கலக்கி பாலித்தீன் பைகளில் நிரப்பி மூடவும்.
தக்காளி சூப் செய்முறை
தக்காளி சூப் செய்வதற்கு 10 கிராம் தக்காளி சூப் மிக்ஸை 150 மில்லி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கலக்கவும்.
ஆதாரம்: தொழில்யுகம் மாத இதழ்
0 comments:
Post a Comment