இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Wednesday, October 20, 2021

ரப்பர் தொழில்.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் பணப்பயிரான ரப்பர் மரச் சாகுபடி அதிக அளவு செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலானோர் ரசாயன உரம் பயன்படுத்திதான் ரப்பர் விவசாயம் செய்கிறார்கள். அதிலும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள சில எஸ்டேட்டுகளில் ரப்பர் மரங்களின் இலை உதிராமல் இருக்க ‘சல்பர்’ அடிப்பதாகக் குற்றச்சாட்டு இருந்துவருகிறது.‘சல்பர்’ என்ற ரசாயன மருந்து தண்ணீரில் கலப்பதால் நீர் நிலைகளில் நச்சுத்தன்மை ஏற்படுவதாகவும், அந்தத் தண்ணீரைக் குடிப்பவர்களுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாகவும் சொல்லப் படுகிறது. இந்நிலையில் எந்தச் செயற்கை உரமும் பயன்படுத்தாமல் தனது 40 சென்ட் நிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை முறையில் ரப்பர் விவசாயம் செய்து,...

மீன் பண்ணை

 மீன் வளர்ப்பு... உத்தரவாதமான லாபம் தரக்கூடிய தொழிலாக இருக்கிறது. ஆனால், மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையானோர் குறைந்த பரப்பில்தான் செய்து வருகிறார்கள். ஆனால், தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த விவசாயி சர்மஸ்த், 12 ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து, மீன் குஞ்சுகள் மற்றும் மீன்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்.35 ஆண்டுகளுக்கும் மேலாக இதில் அனுபவம் பெற்ற சர்மஸ்த், இத்துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அவ்வப்போது பயிற்சியும் அளித்து வருகிறார்.ஒரு பகல் பொழுதில் அவரது மீன் பண்ணைக்குச் சென்றோம். மீன்களுக்குத் தீவனம் போட்டுக்கொண்டிருந்தவர், நம்மை வரவேற்று, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘இந்தப் பண்ணையோட மொத்த பரப்பு 12 ஏக்கர்....

கொய்யா, அத்தி, மாதுளை

 ஒரே பயிரைச் சாகுபடி செய்து சரியான விலை கிடைக்கவில்லையே எனப் புலம்பும் விவசாயிகளுக்கு மத்தியில், சந்தையில் அதிக தேவையுள்ள பயிரைச் சாகுபடி செய்தால் விலை குறைவு, நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கொரோனா காலத்திலும் என்னை வாழவைத்தது வித்தியாசமான பயிர் தேடல்தான்” என்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த விவசாயி ரமேஷ்.தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது செட்டிக்குறிச்சி கிராமம். இந்தக் கிராமத்தின் கடைக்கோடியில் உள்ளது ரமேஷின் இயற்கை விவசாயப் பண்ணை. மாதுளைத் தோட்டத்துக்குள் வேலையாள்களுடன் சேர்ந்து மாதுளைப் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.மாதுளையுடன் ரமேஷ்‘‘அடிப்படையிலேயே விவசாயக் குடும்பம். அப்பா துரைராஜ்,...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites