ஏழாவது படிக்கிறதுலேருந்து கைவினைப் பொருட்கள் பண்றேன். இப்ப எனக்குக் கிட்டத்தட்ட 500 வகை கைவினைக் கலைகள் தெரியும். புதுசா எதைக் கத்துக்கிட்டாலும், அதுல என்னோட கிரியேட்டிவிட்டியை கலந்து, சின்னதா ஒரு வித்தியாசம் காட்டுவேன். அதுதான் என் ஸ்பெஷல்’’ என்கிறார் பாலக்காட்டைச் சேர்ந்த ஜோதிலட்சுமி. கேரளாவில் பரபரப்பான கைவினைக் கலைப் பயிற்சியாளராக இருக்கும் ஜோதிலட்சுமியின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு கஸ்டமைஸ்டு தோரணம்!அதென்ன கஸ்டமைஸ்டு தோரணம்?‘‘மணி, முத்து, பேப்பர், உட்... இப்படி எதை வேணாலும் வச்சு தோரணம் பண்ணலாம். நான் பண்றதுல கிரிஸ்டல் உருவங்கள் மட்டுமே இருக்கும். கேரளாவுல இந்த கிரிஸ்டல் உருவங்கள் எனக்குக் கிடைச்சது. கிரிஸ்டல் என்பதால ரெண்டு பக்கமும் டிரான்ஸ்பரன்ட்டா இருக்கும். எந்தப் பக்கத்துலேருந்து பார்த்தாலும் பளபளக்கும். அதை வச்சு தோரணம் பண்ணினப்ப பயங்கர வரவேற்பு. கணபதி, குபேரன்னு சாமி உருவங்கள்லயும்...