'பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடு’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. 'பசுமை விகடன்’, கடந்த எட்டு ஆண்டு காலமாக இதைத்தான் செய்து வருகிறது! பசுமை விகடன் மூலமாக சம்பங்கி விவசாயத்தில் கால்பதித்த ஒரு விவசாயி, 'மீன்பிடிக்கக் கற்றுக்கொடு’ எனும் ஒப்பற்ற கோட்பாட்டை தானும் கையில் எடுக்க, சக விவசாயிகள் சிலரும் தற்போது சம்பங்கி விவசாயிகளாக தெம்போடு நடைபோடுகின்றனர்!
மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் வருமானம் தரும் சம்பங்கியையும் சிறிது இடத்தில் நடவு செய்வார்கள். பெரும்பாலும் ரசாயன முறையில் சாகுபடி செய்யப்பட்டு வந்த சம்பங்கியை, இயற்கை முறையில் விளைவித்து அதிக வருமானம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்தவர், திண்டுக்கல்...