மாதம், 10 ஆயிரம் லாபமீட்டும், 'கிரிஸ்டல்' கொலுசு தயாரிக்கும் தொழில் பற்றி கூறும், காமாட்சி: நான், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவள். திருமணம் ஆனதும், சென்னை, வேளச்சேரியில் செட்டில் ஆனேன். பட்டதாரியான
என்னால், வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை.கணவரும், 'ஓய்வு நேரத்தில் ஏதேனும் கற்றுக்கொள்' என, ஊக்கமளித்தார். அதனால், எனக்கு விருப்பமான ஆர்ட் அண்ட் கிராப்ட் கற்றேன். மேலும், வீட்டில் இருந்தபடியே சிறு சிறு கைவினை பொருட்களை செய்து வந்தேன்.பெண்கள் விரும்பி அணியும் நகைகளில், கொலுசும் ஒன்று. ஆனால், அவைகள் பெரும்பாலும் வௌ்ளி கொலுசாகவே கிடைக்கின்றன. குறைந்த விலையில், பல வித வண்ண ஆடைகளுக்கு ஏற்ப, கிரிஸ்டல் கொலுசுகளாக செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்ற...