| 
       
 
       
      சுய
      தொழில்கள் வரிசையில் கொசு விரட்டி தயாரிப்பது பற்றி பதிவு போட்ட
      நாளிலிருந்து இன்று வரை நிறைய பேர் மிக்க ஆர்வத்துடன் தொலை பேசி, மெயில்கள் மூலமாக மேலதிக
      விவரங்கள் கேட்ட வண்ணமிருக்கின்றனர். அவர்களுக்காக இத் தொழில் பற்றி மேலும்
      சில விவரங்கள் திரட்டிக் கொடுக்கலாம் என எண்ணி, மீண்டும் இத் தொழில் செய்து
      வரும் நண்பர், ராம
      நாதன்(குனியமுத்தூர்) அவர்களை சந்திக்க கோவை சென்றேன். அவரிடமிருந்து பெற்ற
      விளக்கங்களையும், கொசு வத்திச் சுருள் தயாரிப்பு முறை பற்றியும் இங்கு தருகிறேன். 
 
      இவர் ஏற்கனவே கொசு வத்தி
      சுருள்(coils) செய்து,.பெரிய அளவில் விற்பனை
      செய்து வந்திருக்கிறார்.சந்தையில் ஒரளவு பிரபலமான (Jumbo Elephant co) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில், அவர்களது
      இயந்திரத்தில் தயாரித்து விற்பனை செய்திருக்கிறார். அந்த நிறுவனம் அதிக
      அளவில் அவர்களது சொந்த தயாரிப்புகளை செய்வதால், அதற்கே
      நேரம் போதவில்லை என்பதால், இவரது ஆர்டரை அவர்களால்
      செய்து கொடுக்க முடியவில்லை. 
இன்னொரு நிறுவனம், பிரபலமான
      மார்ட்டீன், ஆல் அவுட் போன்ற நிறுவனங்களுக்கு அவர்களது
      இயந்திரத்தில் செய்து வந்திருக்கிறார்கள். கொஞ்ச காலம் அங்கும் இவரது
      தயாரிப்புகளை செய்து வந்திருக்கிறார். அங்கும் சிக்கல். அந்த இயந்திரத்தை
      பெரிய நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கி ஆந்திரா பக்கம் சென்று விட்டது. இவர்
      கையிலோ நிறைய ஆர்டர்கள், இயந்திரம் சொந்தமாக
      இல்லாத நிலையில், தொழில் பாதிக்கப் பட்டு முடங்கி விட்டது.
      இதனால் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்ததால்,
      அத் தொழிலை தற்காலிகமாக
      நிறுத்தி விட்டாராம். அன்றிலிருந்து இன்று வரை அதை மீண்டும் தொடர முடியாத
      நிலமை. கையில் இன்னும் தினம் 100
      கார்ட்டூன்களுக்கான(72000 காயில்கள்)
      ஆர்டரை வைத்திருப்பதாக கூறுகிறார்.தற்போது 
      கொசு விரட்டி(Liquid) தயாரிப்பில்
      இறங்கி இப்போது வரும் ஆர்டர்களுக்கு மட்டும் 
      செய்து
      வருகிறார்.அவரிடம் கொசு வத்தி சுருள் மீண்டும் செய்வதாக இருந்தால் என்ன
      செலவாகும், தயாரிப்பு முறை,
      சந்தை படுத்துதல் பற்றி
      கேட்டதற்கு அவர் தரும் விவரம் இதோ: 
       
      மாத
      வருமானம்: 
       
      ஒரு
      மாதத்திற்கு 3000 கார்ட்டூன்கள்
      என்ற இலக்குடன் தயாரிப்பதற்கு: 
       
      இயந்திரம் (அனைத்தும்)
      ரூ.15 இலட்சம் 
       
      2 மாதங்களுக்கான மூலப்
      பொருட்கள்( 2x3000 கார்ட்டூன்கள்) ரூ.30 இலட்சம் 
       
      கட்டிடம், மின்சார
      இணைப்பு போன்ற கட்டமைப்பு செலவுகள் ரூ.5
      இலட்சம். 
      ஆக முதலீடு மூலப்
      பொருட்களும் சேர்த்து ரூ 50 இலட்சம். 
       
      தயாரிப்பு
      செலவு: 
       
      1 கார்ட்டூன்(720 காயில்ஸ்)
      தயாரிக்க செலவு ரூ.750 
      மாதம் ஒன்றுக்கு 3000 கார்ட்டுன்
      செய்ய தயாரிப்பு செலவு.3000x750
      = ரூ.22,50,000 
       
      விற்பனை: 
       
      ஒரு கார்ட்டூன் குறைந்தது
      ரூ.1000(அதிகபட்சம் ரூ1100)
      க்கு விற்பனை செய்வதாக
      இருந்தால் 
      3000x1000 =ரூ 30,00,000 
       
      ஆக நிகர லாபம்
      = 30,00,000 -
      22,50,000 = ரூ 7,50,000 (மாதம்
      ஒன்றுக்கு) 
       
      மாதத்தில் 3000 கார்ட்டூன்கள்(தினம்
      100 கார்ட்டூன்) தயாரித்தது போக மீதமுள்ள நேரத்தில்
      மற்ற கம்பெனிகளின் ஆர்டர்களையும் செய்து கொடுத்து வருமானம் ஈட்டலாம்
      என்கிறார். 
      இதில் அனைவர்க்கும்  பெரிய
      சவாலாக இருப்பது  சந்தை படுத்துதல் தான். ஆனால் இவரோ தேவைகளுக்கு
      அதிகமாகவே ஆர்டர்கள் கிடைக்கும். அந்த அளவுக்கு இதற்கு டிமாண்ட் இருப்பதாக
      கூறுகிறார். பொது மக்கள் ஒவ்வொரு இரவும் பல கோடி ருபாய்களை எரித்து
      சாம்பலாக்கும் விந்தையான தொழில் இது. போகப் போக நம் நாட்டில் இதற்கு மவுசு
      கூடிக் கொண்டு தான் இருக்கும். இலங்கை போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி
      செய்யலாம். இத் தொழிலில் உள்ள நிறை,குறைகளைப் பற்றி
      நேரிடையாகவே இவரிடம் விளக்கம் பெற்று,
      நன்கு திட்டமிட்டு
      செய்தால் இதுவும் ஒரு லாபம் கொழிக்கும் தொழில் தான். 
      கோவை போன்ற நகரங்களைச்
      சுற்றியுள்ள Sipcot போன்ற இடங்களில் முறையாக தொடங்கினால் அரசு
      மானியம், வங்கி கடன் போன்றவை பெற எளிதாக இருக்கும். 
       
      தயாரிப்பு
      முறை: 
       
      மூலப் பொருட்கள்: 20 சதவீதம்
      நொச்சி இலை,வேப்பிலை,துளசி,கற்றாலை,மஞ்சள், சாம்பிரானி, குங்கிலியம்
      போன்றவை. 
       
      80 சதவீதம் எரி பொருட்களான
      தேங்காய் சிரட்டைத் தூள்,மரத்தூள் போன்றவை. 
      ஒரு கிலோ மூலப்
      பொருட்கள் என்றால் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து
      சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைய வேண்டும்( இதையெல்லாம் இயந்திரமே செய்து
      விடும்). 
      இந்த கலவையை Extruder எனும்
      இயந்திரத்தில் கொடுத்தால் அது 4mm
      thickness, 12cm அகலத்தில்
      sheet ஆக தயாரித்துக் கொடுக்கும். 
       
      பின், இந்த sheet ஐ
      பஞ்சிங் இயந்திரத்தில் கொடுத்தால் அது double
      coil களாக 
  
      அடித்து கொடுக்கும்.
      பின் இந்த coil கள் dryer
      m/c மூலம் coilல்
      உள்ள நீர்ப் பதம் முழுதும் ஆவியாகி விடும். 
      பின் packing m/c மூலம் பெட்டிகளில் அடைக்கப் பட்டு விற்பனைக்கு
      ரெடியாகி விடும். 
      இந்த Process அனைத்தும்
      முழுக்க முழுக்க இயந்திரங்கள் மூலமே நடைபெறும். இந்த மூலிகை கொசு வத்தி
      சுருளினால்  எந்த விதமான பாதிப்போ,பின்
      விளைவுகளோ கிடையாது மற்ற பிரபலமான பிராண்டுகளில் கெமிக்கல் கலந்து
      தயாரிப்பதால் குழந்தைகளுக்கும்,
      ஆஸ்துமா போன்ற நோய்களால்
      அவதிப்படுபவர்களுக்கும் ஏற்றதல்ல. ஆனால் இந்த மூலிகை சுருளை குழந்தைகள், நோயாளிகள்
      தூங்கும் அறைகளில் கூட உபயோகிக்கலாம். 
        
      இத் தகவல்கள் அனைத்தும்
      திரு.ராமநாதன் அவர்களிடமிருந்துப் பெறப்பட்டவை.. 
      மேலதிக விபரங்கள் பெற
      அவரை தொடர்பு கொள்ள 0091-9382307952 
      
 
  
 
       
       
       
       
       
 
       
       
 | 
       | 
       | 
     
0 comments:
Post a Comment