இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, July 3, 2013

வெற்றிக்கு தயாராகுங்கள்






தேவை சுய உந்துதல் – I
இவ்வுலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மனிதனுக்கு துணைபுரியும் ஒரு மாபெரும் அம்சம் சுய உந்துதல். இவ்வுலகில் பிரளயம், பூகம்பம் மற்றும் இன்னபிற இயற்கைப் பேரிடர்கள் பல ஏற்பட்டாலும், இந்த சுய உந்துதலே ஒவ்வொரு உயிரினத்தையும் நிலைத்து பிழைக்கச் செய்கிறது. மத நூல்கள் உட்பட, பலவிதமான நன்னெறி நூல்களிலும் இந்த சுய உந்துதல் போதிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகில் ஒவ்வொரு சாதனையாளரையும் சாதிக்க வைத்ததும் இந்த சுய உந்துதலே. மூட நம்பிக்கையால் சீரழிந்து கிடந்த சமூகத்திற்கு பகுத்தறிவையும், மனித முயற்சிகளின் மாண்பையும் உயர்த்தி, ஏமாற்றுக் கூட்டத்தினரிடமிருந்து மக்களைப் பாதுகாக்க உலகின் ஜோதியான புத்தரைத் தூண்டியதும் இந்த சுய உந்துதல் தான்.
இந்த சுய உந்துதல் ஒரு மனிதனை சாதாரண நிலையில் இருந்து அசாதாரண நிலைக்கு மாற்றுகிறது. இந்த உந்துதல் தான் நமது உள்ளார்ந்த திறன்களை நமக்குப் புரியவைத்து, நமது பலத்தைத் தெரிவிப்பதுடன் நமது பலவீனங்களை மறக்கச் செய்கிறது. ‘என் சோகம் சொல் மாளாது’ என்று நாம் சொல்வது காட்டுமிராண்டித்தனம். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் சுமக்க அவர்களது சொந்தச் சுமை உள்ளது. உங்கள் சுய உந்துதலால் உங்கள் துக்கத்தை வெற்றி கொள்ள முயலுங்கள்.
“எழுந்திருங்கள், உறுதியுடனும், தைரியத்துடனும் இருங்கள். பொறுப்பு முழுவதையும் உங்கள் தோளிலேயே சுமந்து கொள்ளுங்கள். உங்கள் விதிக்கு நீங்களே தான் காரணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்புகின்றவமையும், உதவியும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன” என்று சுய தூண்டுதலைப் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
எனக்கு யாருடைய உதவியும் இல்லையே என்று ஏங்குவது மிகப்பெரிய தவறு. யாரிடமும் உதவியை நாடாமல் நமக்கு நாமே உதவி செய்து கொள்ள வழி வகுக்கிறது சுய உந்துதல். ஒரு நிமிடம் பெரும் துன்பக் குவியலைச் சிந்தித்துப் பாருங்கள். எல்லா விளைவுகளும் உதவியைத் தேடிய தவறான எண்ணத்தின் விளைவாலே ஏற்பட்டதாகும் என்பது புரியும். எனவே நமக்கு நாமே உதவி. வேறு யாரும் உதவ முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வுலகில் மனிதனுக்கு உதவ யாரும் இல்லை; யாரும் இதுவரை இருந்ததும் இல்லை; இருக்கப் போவதும் இல்லை. நீங்களே முயன்று துன்பங்களில் இருந்து சுய உந்துதல் மூலம் விடுபடுங்கள். இவ்வுலகில் வேதாந்தம் கேட்கின்றஒரு பெரிய கேள்வி மனிதர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? என்பது தான். பதில் அவர்கள் தங்களைப் பலவீனர்களாகவும், பிறர் துணையை எப்பொழுதும் நாடுபவர்களாகவும் ஆக்கிக் கொண்டது தான் இந்த பயத்திற்குக் காரணம். உண்மையில் நாம் சோம்பேறிகள், நாமாக எதையும் செய்ய விரும்புவதில்லை. ஒரு கடவுளோ, ஓர் அவதார புருஷரோ, அல்லது மகானோ வந்து நமக்காக எல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இப்படி ஒருவருடைய வேலைகளையெல்லாம் அவருக்காக இன்னொருவர் செய்து வந்தால் முன்னவருடைய உடல் இயற்கைத் திறனை இழந்துவிடும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
கிராமத்தில் மாட்டு வண்டியில் ஒரு கற்று வைக்கோலை மாடுகளின் கண்களுக்கு முன் அவற்றின் வாய்க்கு எட்டாத அளவில் தொங்கவிட்டிருப்பார்கள். அந்த மாடுகள் அந்த வைக்கோலைத் தின்ன முயன்றுகொண்டே நடக்கும். ஆனால் அவை எட்டாது. அதுபோலத்தான் நமக்குப் பிறரால் கிடைக்கும் உதவியும்.
பாதுகாப்பு, வமை, அறிவு, இன்பம் இவையெல்லாம் வெளியில் இருந்து கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம். எதிர்பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அது கிடைப்பதில்லை. எந்த உதவியும் ஒரு போதும் வெளியில் இருந்து வருவதில்லை. நமது குற்றங்களைச் சுமத்துவதற்கு வேறொருவர் இருக்கும் வரை நாம் நம்முடைய பலவீனங்களையும், தவறுகளையும் புரிந்து கொள்வதில்லை.
மனிதர்கள் எப்போதும் தங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதே தங்கள் குற்றங்களைச் சுமத்துகிறார்கள். அதுவும் முடியாவிட்டால் கடவுளின் மீது சுமத்துகிறார்கள். விதி என்கிறார்கள் சில நேரங்களில். அவர்கள் சொல்லும் விதி எங்கே இருக்கிறது? விதியாக நாம் சுட்டிக்காட்டும் நபர் யார்? நாம் விதைத்ததைத் தான் இப்போது அறுவடை செய்கிறோம். ஆகவே நம் விதிக்கு நாமே காரணம். கடும் பழியாகட்டும், பெரும் புகழாட்டும் அதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல நாமே தான் பொறுப்பு.
பல நேரங்களில் மனிதர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கின்றனர். கற்பனைத் தெய்வங்களை நோக்கி பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். அத்தகைய செய்கைகள் பலவும் மூட நம்பிக்கைகளே என்பது அவர்களின் உள்ளத்திற்குத் தெரியும். ஆனாலும் பிரார்த்திக்கிறார்கள். சில நேரங்களில் உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறி இருக்கலாம். அப்போது வெளியில் உள்ள ஏதோ ஒரு சக்தி அவற்றை நிறைவேற்றியது என்று உங்கள் அறியாமை காரணமாக எண்ணியிருப்பீர்கள். ஆனால் உண்மையில் உங்களுக்குத் தெரியாமல் அவற்றையெல்லாம் நிறைவேற்றியவர்கள் நீங்கள் தான். உங்களிடமிருந்தே உங்களுக்கான உதவி கிடைத்திருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் யாரோ உங்களுக்கு உதவுவதாக நன்றியோடு கற்பனை செய்து கொள்கிறீர்கள். இந்த நிமிடம் முதல் இந்தக் கற்பனையை விட்டொழியுங்கள். இந்த வெற்றிக்கு நானே தான் காரணம் என்று நினைத்திருங்கள். இந்த வார்த்தைகள் தான் உங்கள் நெஞ்சில் உள்ள குப்பைகளை எல்லாம் எரித்துச் சாம்பலாக்குவதுடன் ஏற்கனவே உங்களுக்குள் கனன்று கொண்டிருக்கும் பேராற்றலை எழுப்பியும் விடும்.
நமக்குத் துன்பம் நேரும்போது உலகிலுள்ள எல்லாத் தெய்வங்களிடமும் கதறுகிறோம். துன்பம் தீர்கிறதா? இல்லை. இந்த தெய்வங்கள் எங்கே இருக்கின்றன? நீங்கள் வெற்றி பெற்றால் அதன்பின் மட்டுமே அந்தத் தெய்வங்கள் உங்களுக்கு உதவி செய்ய வருகின்றன. அதனால் என்ன பயன்? ஆறுகோடித் தெய்வங்களை நோக்கிக் கதறி நாய்களைப் போல் சாவதை விட்டுவிட்டு இன்பமாக உயிர்விடுங்கள். மூடநம்பிக்கைகளுக்கு முழந்தாளிடுங்கள்.
இதற்கு உங்களின் சுய உந்துதல் உதவி புரியும். இந்த சுய உந்துதல் எந்தப் புத்தகத்தாலும், எந்த சாஸ்திரத்தாலும் எந்த விஞ்ஞானத்தாலும் கூட கற்பனை செய்ய முடியாத சக்தியைக் கொடுக்கும். இந்த சுய உந்துதல் தான் இவ்வுலகில் உள்ள ஒரே தெய்வம். முன்பு இருந்ததும்; இப்போது இருக்கின்றதும்; இனிமேல் இருக்கப் போகின்றதுமான ஒரே கடவுள் சுய உந்துதல் மட்டுமே.
பலவீனமான மனிதன் கண்ணுக்குத் தெரியாத விண்வெளிக்கு அப்பால் ஏதோ ஓரிடத்தில் உள்ள ஏதோ ஒன்றிடமிருந்து உதவியை எதிர்பார்த்து, அழுது கதறுகிறான். தனக்குள்ளேயே அந்த விண்வெளி இருப்பதை உணராமலேயே… உதவியும் வருகிறது… ஆனால் அது அவனுள்ளிருந்தே தான் என்பதை அறியாமல் வெளியில் இருந்து வருவதாகவே நினைத்துக் கொள்கிறேன். இப்போதும். எப்போதும்… ஒரு மனிதன் உயிரோடு வாழ்வதற்கான அடிப்படைப் பண்பான சுய உந்துதலை அதிகரிப்பது எப்படி?
உங்களின் குழந்தை சாதனையாளராக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்த சுய உந்துதல் பண்பை உங்கள் குழந்தையிடம் ஏற்படுத்தவும். ஒவ்வொரு குழந்தையும் இயற்கையிலேயே ஓரளவு சுய உந்துதல் பண்போடுதான் பிறக்கின்றன. ஏனெனில், அந்தப் பண்பு, ஒரு மனிதன் உயிரோடு வாழ்வதற்கான அடிப்படை சக்தியாகும்.
Thanks!!! http://thannambikkai.org/2013/06/29/16719/

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites