இந்தியாவில், முதல் முறையாக, வண்ணப் பட்டுப் புழுக்களை உற்பத்தி செய்து, அதன் மூலம், 22 வண்ணப் பட்டு நூல் தயாரிக்கும் திட்டம், ஜவுளி நிறுவனங்களிடம், வரவேற்பு இல்லாததால், கைவிடப்பட்டுள்ளது.உலக அளவில், பட்டு உற்பத்தியில், சீனா, முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும் உள்ளன. தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், 25 ஆயிரம் விவசாயிகள், பட்டு நூல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை, பட்டுப் புழுக்கள் மூலம், வெள்ளை மற்றும் மஞ்சள் பட்டுக் கூடுகளை மட்டுமே, விவசாயிகள் உற்பத்தி செய்தனர். இவற்றை, தரம் பிரித்து, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், சாயப் பட்டறைகளுக்கு அனுப்பி, விரும்பும் வண்ணங்களில்,...