ஈரோடு பெரியவலசுப் பகுதியைச் சேர்ந்த சர்மிளாவின் கைவசம் 65 கைவினைத் தொழில்கள் இருக்கின்றன. அதன் மூலம் சம்பாதிப்பதோடு பெண்களுக்குக் கற்றுத்தரவும் செய்கிறார்.
''கல்யாணம் ஆன புதுசில் எனக்குச் சம்பாதிக்கிற எண்ணம் எதுவும் இல்லை. ஆனா, ரெண்டு குழந்தைகள் பிறந்ததும் அவங்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டிய கட்டாயம். அதனால், தையல் வகுப்பில் சேர்ந்தேன். முதல்ல கர்ச்சீஃப் தைக்கச் சொல்லித் தந்தாங்க. நான் கர்ச்சீஃப் தைச்சு அதுக்கு நடுவில் பூ டிசைனும் போட்டுக் கொடுத்தேன். கொஞ்ச நாள்ல வீட்டிலேயே தையல் மெஷின் வாங்கிவெச்சு பிளவுஸ் தைக்க ஆரம்பிச்சுட்டேன். ரொம்ப நேர்த்தியா நான் தைக்கிறதைப் பார்த்துட்டு, கணிசமான கஸ்டமர்கள் உருவானாங்க....