நூடுல்ஸ் என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். பெரியவர்களும் வெளுத்துக்கட்டுகின்றனர். இதனால், நூடுல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. குடிசைத் தொழிலாக நூடுல்ஸ் தயாரித்து நிறைந்த லாபம் பெறலாம்.குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாக யார் வேண்டுமானாலும் நூடுல்ஸ் தயாரித்து, தங்கள் பகுதியில் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம்.தயாரிப்பு முறைபெரிய பாத்திரத்தில் 40 கிலோ மைதா, 30 கிலோ கோதுமை மாவு, 7 லிட்டர் தண்ணீர் ஊற்றி புரோட்டா மாவு பதத்தில் பிசைய வேண்டும். மாவை பதப்படுத்தும் இயந்திரத்தில் போட்டால், சன்னமாக தேய்த்து, ரோல் செய்யும். அதை அதே இயந்திரத்தில் பொருத்தினால், தேய்க்கப்பட்ட மாவு வெட்டப்பட்டு நூல், நூலாக வெளியேறும். அதைக் கம்பியில் தொங்க விட்டு, வேக வைக்கும் பாய்லருக்குள் வைத்தால், 40 முதல் 50 நிமிடம் வேகும். அவற்றை தேவையான அளவுகளில் எடை போட்டு, டிரேயில் வைத்து வெயிலில்...