இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Thursday, June 6, 2013

இந்திய பொருளாதாரம்..



 நம் நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு மோசாமாகிக்கொண்டிருக்கிறது எந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு சிறு தொழில் செய்பவருடனோ, சேல்ஸ் வேலையில் இருப்பவருடனோ கொஞ்ச நேரம் செலவழித்து பாருங்கள் புரியும். ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்குள் ஆயிரம் பிரச்சனை. உற்பத்தி முடிந்து அதை விற்பனைக்கு அனுப்பும் போது, வாங்க ஆள் இல்லை. எனக்கு தெரிந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு வியாபாரம் கம்மி. அப்படியே நடக்கும் வியாபாரம் கூட கடனுக்கு தான் நடக்கிறது. பணப்புழக்கம் சுத்தமாக இல்லை. இதற்கெல்லாம் காரணம் நம்மை ஆட்சி செய்யும் பொருளாதார வல்லுனர்களின் சில அரசியல்/ஓட்டு ஆசைகள் தான். இதை மைக்ரோ லெவலில் அதாவது நாம் அன்றாடம் பார்க்கும் விசயங்களை வைத்து கொஞ்சம் தெளிவாக பேசலாம் வாருங்கள். 

பொதுவாக ஒரு நாட்டில் பணப்புழக்கம் என்பது இரண்டு வழிகளின் மூலம் தான் பெரும்பாலும் நடக்கும். ஒன்று அரசின் மூலம்.. அதாவது அரசு தன்னுடைய உள்கட்டமைப்பை பலப்படுத்துவதன் மூலம் பணப்புழக்கத்தை கொண்டு வரும். இது பணம் மேல் இருந்து கீழ் பாயும் நிலை.. அரசிடம் இருந்து கான்ட்ராக்டர் ---> கூலிகள் ----> வியாபாரிகள்  என்று ஒவ்வொரு படிநிலையாக பணம் கைமாறி புழக்கத்தில் இருக்கும். இரண்டாவது வழி சிறு தொழில் முனைவோர் மூலம். சிறு தொழில் முனைவோரில் விவசாயிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்றுவிட்டு அந்த பணத்தில் தங்களின் தேவைகளுக்கு செலவு செய்வார்கள். இது கீழிருந்து மேல் போகும் நிலை. அதாவது சிறு தொழில் முனைவோரிடம் இருந்து வியாபாரி, கச்சா பொருள் விற்பவன், அரசு என்று மேல் நோக்கி போகும். நம்மை போன்ற நுகர்வோர் இந்த இரண்டு நிலைகளிலும் நடுவில் இருப்போம்.. அதாவது அரசும் சிறு தொழில் முனைவோரும் தான் பணப்புழக்கத்தின் ஆரம்பம் மற்றும் கடைசி புள்ளி.. அந்த பணத்தை நடுவில் இருந்து புழங்கிக்கொண்டிருப்பது நாம் தான். நம் மூலம் தான் அந்தப்பணம் ஆரம்பப்புள்ளிக்கோ கடைசி புள்ளிக்கோ போகும். அதாவது பணப்புழக்கம் என்பது ஆரம்பமும் முடிவும் தெரிந்த ஒரு வட்டம்.

சரி இப்போது இதை ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா? பிரச்சனையே இந்த வட்டத்தினால் தானே? முதலில் வட்டத்தின் ஒரு பக்கத்தில் இருக்கும் சிறு தொழில் முனைவோரையும் விவசாயிகளையும் பற்றி பார்க்கலாம். எங்கள் சிவகாசியை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். கடந்த நான்கு வருடங்களாக எங்கும் நிரந்தரமான மின் உற்பத்தியோ, மின் சேவையோ இல்லை. (நம் அரசுகளின் மோசமான திட்டமிடல் தான் இதற்கு காரணம் என்பது கொசுறு செய்தி). சிவகாசியில் தீப்பெட்டியும் அச்சுத்தொழிலும் தான் வருமானத்திற்கு ஆதாரம். பட்டாசு உற்பத்தியும் முக்கியமான தொழில் என்றாலும், மூலப்பொருட்கள் விலை உயர்வால் அது கொஞ்சம் டல்லடித்து தான் இருக்கிறது. மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் உபயோகிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் ஒவ்வொரு தீப்பெட்டி மற்றும் அச்சாபிஸ் உரிமையாளர்கள். ஜெனெரேட்டருக்கு மண்ணெண்ணையோ டீசலோ கொட்ட வேண்டும் அதன் வயிற்றில். இரண்டும் கடந்த சில வருடங்களாக விற்கும் விலையை பார்த்தால் பேசாமல் ஒரு லிட்டரை வாங்கி அதன் வயிற்றில் ஊற்றாமல் நம் உடம்பில் ஊற்றி பற்ற வைத்துக்கொள்ளலாம். சரி வேறு வழி இல்லை என்று எங்கள் ஊர் சிறு தொழில் முனைவோர் ஜெனரேட்டர் உபயோகிக்க ஆரம்பித்தார்கள். ஒரு நாளைக்கு ரெண்டு மணிநேரம், மூன்று மணி நேரம் என்று இருந்த மின்வெட்டு ஒரு நாளைக்கு 15 மணி நேரம் என்னும் கின்னஸ் ரெக்கார்டில் வந்து நிற்கிறது. ஒரு நாளில் வரும் 15 மணிநேர மின்வெட்டு வேலை நேரத்தில் மட்டும் 10மணி நேரம் போய்விடுகிறது. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் ஜெனெரேட்டர் போட்டால் பொருளின் விலை என்னவாகும்? மின்சாரத்தை பயன்படுத்து உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும் இதனால் இரண்டு மடங்கு மூன்று மடங்கு விலை கூடுகிறது. 
பொருளின் இந்த யானை விலை, குதிரை விலையை பார்த்து, ஆர்டர் கொடுத்த பார்டிகள் பலர் பொருளை வாங்காமலேயே எஸ்கேப் ஆகிவிட்டார்கள். பொருளை வாங்கிய இன்னும் சிலரோ பாதி பணத்தை கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஓடிவிட்டார்கள். இங்கு எங்கள் சிறு தொழில் முனைவோர்களால் தங்களின் கச்சா பொருள் உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. கச்சா பொருள் விற்பவருக்கு தன் பொருளுக்கான பணம் கிடைக்காததால் அவரால் தொடர்ந்து பொருட்களை சப்ளை செய்ய முடியவில்லை. உற்பத்தி பாதிக்கிறது. பொருளின் விலை ஏற்கனவே இருக்கும் மின்சார பிரச்சனையோடு இந்த கச்சா பொருள் பிரச்சனையும் சேர்ந்து விடுவதால் மீண்டும் அதிகரிக்கிறது. ஆனால் விலை அதிகமாக இருப்பதால் வாங்க ஆள் இல்லை. உற்பத்தி செய்யப்பட்ட பொருள் யாருக்கும் பலனில்லாமல் கிட்டங்கியில் தூங்குகிறது. இது சிவகாசியில் மட்டும் என்று இல்லை. சிறு தொழில் பெருத்திருக்கும் பல நகரங்களிலும் இது தான் கதை. என்னை பொறுத்தவரை நவீன இந்தியாவின் முதுகெலும்பு சிறு தொழில் தான். ஒவ்வொரு சிறு தொழிலும் ஒரு நீரூற்று, ஒரு பொன் முட்டையிடும் வாத்து. ஆனால் நம் அரசாங்கங்களின் மட்டமான திட்டமிடல்களினாலும், மோசமான உள்கட்டமைப்புகளினாலும் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது சிறு தொழில் வணிகம்.

இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு டவுட் வரலாம், நாம் ஜெனரேட்டருக்கு ஊத்து ஊத்து என்று எண்ணெயும் டீசலும் ஊற்றுகிறோமே அந்த பணம் அரசுக்கு தானே போகிறது? அப்போது நமது பணப்புழக்க வட்ட விதியின் படி அரசிடம் இருந்து அந்தப்பணம் மக்களுக்கு வந்து பணப்புழக்கத்தை அதிகரித்து பிரச்சனையை சரியாக்கலாமே என்று.. அப்படி ஒரு டவுட் வந்தால் உங்களுக்கு என் பாராட்டுக்கள். உங்கள் புத்தி கூர்மையாக இருக்கிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் நம் நாட்டில் நடக்கவில்லையே!! நம் ஆட்கள் நடக்கவிடவில்லையே? ஏன் எப்படி  என்று பின்னர் கூறுகிறேன்.

நாம் அடுத்து பார்க்கப்போவது விவசாயம். இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்கிறார்கள். அந்த விவசாயத்தின் நிலையை கொஞ்சம் பார்ப்போம்.. என்ன பெருமூச்சு? விவசாயம் பற்றி பேசினாலே மனதில் ஒரு வித சோகம் வந்துவிடுகிறதா? என்ன செய்ய? “விவசாயிகள் வேறு நல்ல தொழிலை பார்த்து பிழைத்துக்கொள்ளட்டும்என்று சொல்லும் பிரதமர் அல்லவா நமக்கு கிடைத்திருக்கிறார்? விவசாயத்திற்கும் அதே மின்சார பிரச்சனை தான். டெல்டா பகுதியை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் கிணற்றுப்பாசனம் தான். மின்சாரம் இல்லாததால் எங்கும் பயிர் சரி வர விளையவில்லை. கர்நாடகாக்காரன் நம்மை பிச்சைக்காரனை விட கேவலமாக நடத்தி, டெல்டா பகுதிகளையும் மலடாக்கிவிட்டான். முழுதாக விளைந்தாலே முதலுக்கு மோசமில்லை என்பது தான் விவசாயியின் நிலை. ஆனால் இந்த முறை ஒன்றுமே இல்லை. உர மானியம் ரத்து, பூச்சுக்கொல்லியின் விலை அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு, மழை பொய்ப்பு, தண்ணீர் தட்டுப்பாடு என்று விவசாயம் சரியான அடி வாங்கியிருக்கிறது. டெல்டா பகுதியில் தரையில் இருந்து 5அடி தோண்டினாலே நீர் வரும் பகுதியில் வசிக்கும் என் டீலர் ஒருவரது வயலில் வழக்கமாக 100மூடை நெல் விளையுமாம் போன வருடம் வரை. இந்த வருடத்தில் போன வாரம் தான் அறுப்பு முடிந்திருக்கிறது. எத்தனை மூடை நெல் வந்தது தெரியுமா? 35 மூடைக்கு கொஞ்சம் கம்மி.. முப்பத்தி நாலே முக்கால் மூடை.. இன்று என் முன் தான் அளந்து கொண்டிருந்தார். ஆனால் செலவுக்கணக்கை பார்த்தால் 100 மூடைக்கும் அதிகமான செலவு.என்ன பண்ண சார்? நஷ்டம் வந்தாலும் எங்களால விவசாயத்த விட முடியாது’ - இது என் டீலரின் பதில் மட்டும் அல்ல, செத்துப்போகும், அடுத்து செத்துக்ப்போக வரிசையில் நிற்கும் ஒவ்வொரு விவசாயியின் பதிலும் இது தான்..

ஆக பணப்புழக்கத்திற்கு ஒரு வகையில் ஆதாரமாக இருக்கும் சிறுதொழில்களும் விவசாயமும் இந்த ஆண்டு மிக மிக மோசமான நிலையில் வீழ்ந்துவிட்டன. இன்னொரு பக்கம் ஆதாரமாக இருக்கும் அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்று பார்ப்பதற்கு முன்நடுவில் இருக்கும் நம்மை போன்ற சாதாரண மக்களைப்பற்றி பார்த்துவிடலாம். ஏனென்றால் நாம் பணப்புழக்கத்திற்கு ஆதாரமோ முடிவோ இல்லை. அப்படியென்றால் நம் கையில் போன வருடம் இருந்த பணம் தானே இப்போதும் புலங்க வேண்டும்? அதனால் நம்மை பற்றி பார்ப்போம்.

உங்கள் ஊரில் நான் சொல்லும் தொழில்கள் எல்லாம் இப்போது இருக்கின்றனவா என உங்கள் மனதில் லேசாக ஓட்டிப்பாருங்கள். செருப்பு தைப்பது, கிழிந்த துணி தைப்பது, குடை ரிப்பேர் செய்வது, டிவி ரிப்பேர் செய்வது, சிறு மின் சாதனங்களான டியூப் லைட், மின்விசிறி ரிப்பேர் பார்ப்பது, ஒழுகும் பைப்பை அடைக்கும் ப்ளம்பிங் வேலை, சிறு மர வேலை, கட்டிலுக்கு வயர்/நார் பின்னுவது.. இது எதாவது இருக்கிறதா இன்னும் உங்கள் ஊரில்? என்ன ஞாபகம் இல்லையா? முன்பெல்லாம் (ரொம்ப வருசத்துக்கு முன்னாடியெல்லாம் இல்லை, ஜஸ்ட் 5வருடங்களுக்கு முன்பு வரை) எங்கள் தெருவில் தினமும் குடை ரிப்பேர் செய்பவரும், கிழிந்த துணி தைப்பவரும் வருவார்கள். கிழிந்த துணியையும் செருப்பையும் தைக்க ஒரு சிறு ஏரியாவே உண்டு எங்கள் ஊரில். இப்போது தான் நாம் எல்லாமே புதுசாக வாங்கி விடுகிறோமே? டிவியில் பிரச்சனையா? புது டிவி.. செருப்பு அறுந்துவிட்டதா? புது செருப்பு.. லைட்டு ஃபேனில் பிரச்சனையா? புது லைட்டு.. இதெல்லாம் கடந்த 5,6 வருடங்களில் வந்த மாற்றங்கள். இதனால் சிறு வேலை செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டார்கள். எங்கேவாது ஒரு சிலர் அப்படியே கிடைத்தாலும் அவர்களின் கூலி அதிகம். எல்லோரும் இன்று ஓரளவுக்கு படித்திருப்பதும் இது போன்ற சின்ன சின்ன வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காததற்கு காரணம். ஆள் கிடைக்காததால் தொழில் தெரிகிறதோ இல்லையோ, அந்த தொழிலை செய்ய எவனோ ஒருவன் வந்து விண்ணை முட்டும் கூலி கேட்பான்.

நாமும் எல்லா முறையும் புது டிவியோ, புது செருப்போ வாங்கி விட முடியாது. வீட்டில் குழாய் ஒழுகுகிறது. மொத்தமாக குழாயை எடுத்துவிட்டு புதுசாக மாட்ட முடியுமா? ஆனால் அந்த சின்ன ரிப்பேருக்காக நீங்கள் ப்ளம்பரை கூப்பிட்டால் அவர் தெனாவட்டாக சொல்வார், “இந்த மாதிரி சின்ன வேலைக்குலாம் வரதில்ல.. நீங்க எனக்கு ஒரு நாள் கூலி குடுத்தீங்கன்னா வாரேன்”.. சரி அவரின் ஒரு நாள் கூலி என்ன என்று கேட்கிறீர்களா? வெறும் 500ரூபாய் தான்!!!!! ஒரு மணி நேர வேலைக்கு அந்த காசை கொடுக்க நீங்கள் ஒத்துக்கொண்டாலும் அவர் உடனே வர மாட்டார். ஒரு வாரம் உங்களை பழனிக்கு பால் காவடி எடுக்க வைத்துவிட்டு தான் வருவார். சென்னையில் இருப்பவர்களுக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை. சிறு நகரங்களில் இருப்பவர்களுக்கு இது நன்றாக தெரியும். இன்று ஒரு சித்தாளின் கூலி 200ரூபாய்.. கொத்தனார்களின் கூலி, 450ல் இருந்து 600ரூபாய் வரை. கிட்டத்தட்ட B.E. முடித்து வேலையில் சேரும் ஒரு இன்ஜினியரும் ஒரு கொத்தனாரும் மாதம் ஒரே அளவு சம்பாதிப்பார்கள். போன வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் இது போல் உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட வேலைக்கு மட்டும் கூலி கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூடியிருக்கிறது. ஆனாலும் ஆள் கிடைப்பதில்லை. நுகர்வோர் நம்மின் சம்பளம் போன வருடத்திற்கு இந்த வருடம் எவ்வளவு கூடியிருக்கிறது? அதாவது நம் கையில் போன வருடம் இருந்த அதே பணம் தான் இப்போதும் இருக்கிறது, ஆனால் பொருட்களின் விலையும் கூலியும் அசுர வேகத்தில் கூடிவிட்டன. ஒரு பக்கம் பொருளின் விலையேற்றம், மற்றொரு பக்கம் வேலையாட்கள் தட்டுப்பாடு+கூலி உயர்வு.. அதனால் பணப்புழக்க வட்டத்தில் இடையில் இருக்கும் நாமும் சென்ற வருடங்கள் போல் இப்போது பணத்தை செலவழிக்க முடியவில்லை. செலவழித்தாலும் சரியான பலன் இருபப்தில்லை.

சரி இப்போது நம் பணப்புழக்க வட்டத்தின் ஆரம்ப புள்ளியான அரசாங்கத்தை பற்றி பார்ப்போம். முதலில் நம் மதிப்பிற்குரிய மத்திய அரசின் பணப்புழக்கம் பற்றி. நாம் கொடுக்கும் வரி, பெட்ரோல் டீசலுக்கு அழும் தண்டம் என்று மத்திய அரசுக்கு நல்ல வருமானம் தான். சும்மா எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் நஷ்டம் என்று சொன்னாலும் ஒவ்வொரு எண்ணெய் நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டும் உண்மையை பேசிவிடுகிறது. பின்னே, இவ்வளவு மக்கள் தொகையும் வாகன போக்குவரத்தும் இருக்கும் தேசத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கு எப்படி நஷ்டம் வரும்? வரியின் மூலமும் பெட்ரோலிய பொருட்களின் மூலமும் வரும் வருமானத்தை கொண்டு மக்களின் வாழ்க்கை தரத்தையும் பணப்புழக்கத்தையும் எவ்வளவோ மேம்படுத்தியிருக்கலாம் நம் மத்திய அரசு. ஆனால் என்ன செய்தார்கள் நம் மத்திய அரசில் இருக்கும் வெளிநாட்டு பல்கலையில் பொருளாதார பட்டம் பெற்ற இருவர்?

 


ஒரு சூப்பர் திட்டத்தை கொண்டு வந்தார்கள். இந்த 100 நாள் வேலை வாய்ப்பு என்பது விவசாயம் இல்லாத கிராமங்களில்/விவசாயம் இல்லாத நேரங்களில் கிராமவாசிகளிக்கு வருமானம் கிடைக்க கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படும் திட்டம். ஆனால் நிஜத்தில் இவை தான் விவசாயத்தையே அழிக்கின்றன. கலகலப்புபடத்தில் சந்தானம் சொல்வாரே, “டேய் நீ குடவுன்ல இருக்குற மூட்டைய தென்னந்தோப்புல போட்டிரு.. நீ தென்னந்தோப்புல  போடுற மூட்டைய எடுத்து திரும்ப குடவுன்லயே போட்டிரு.. குடுத்த காசுக்கு உங்களுக்கு எதாவது வேல குடுக்கணும்ல?” என்று.. அது போல் தான் நம் 100 நாள் திட்டமும். ஏரியை சுத்தம் செய்கிறோம் என்று மண்ணை அள்ளுவார்கள் இன்று.. மறுநாள் ஏரியை சமப்படுத்துகிறோம் என்று அதே மணலை மீண்டும் அங்கேயே கொட்டிவிடுவார்கள். இது கூட பரவாயில்லை. பல இடங்களில் காலையில் இருந்து சும்மாவே அமர்ந்திருப்பார்கள். மாலையில் கூலி 70ல் இருந்து 80ரூபாய் வரை உங்களை தேடி வரும். ஆம் மொத்த பணம் 100ரூ கிடைக்காது. கமிசன் பிடித்துக்கொண்டு தான் கொடுப்பார்கள். ஒருவன் இப்படி ஒன்றுமே செய்யாமல் 70ரூ சம்பாதிக்க நினைப்பானா அல்லது வயலுக்கு வந்து காலையில் இருந்து மாலை வரை முதுகு வலிக்க வெயிலில் உழன்று 100ரூ சம்பாதிக்க நினைப்பானாஅப்படியே விவசாயத்திற்கு ஆள் வந்தாலும் கூலி குறைந்தது 200ரூ.. பின் விவசாயம் எப்படி வளரும்?

அரசாங்கம் நாம் கொடுக்கும் பணத்தை முறையாக அதை பெருக்கும் வழியில் செலவழிக்காமல் இப்படி ஓசிக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவன் அந்த 70ரூபாயோடு திருப்திப்பட்டுக்கொண்டும் இலவசங்களை அனுபவித்துக்கொண்டும் தானும் முன்னேறாமல் மொத்த முன்னேற்றத்தையும் கூட தடுக்கிறான். அவனால் விவசாயம் தடைபடுகிறது. பொருளாதாரமே கூட கொஞ்சம் ஆட்டம் காணுகிறது. ஆனால் இந்த 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நம் காங்கிரஸ் அரசு ரொம்ப பெருமையாக பேசுகிறது. ஆனால் நாட்டில் பாதி விவசாயத்தை கொன்றதே இவர்களின் இந்த திட்டம் தான். அதுவும் போக ஒரு சோம்பேறி சமுதாயத்தை உருவாக்குகிறது. பொருளாதாரத்தில் மக்கள் தொகை அதிகரிப்பால் மொத்த வளர்ச்சியும் சிதைந்துவிடும்என்று மால்தஸ் சொல்லியிருப்பார் தன்னுடைய Malthusian Theory of Populationல். ஆனால் அவரின் மக்கள் தொகை தியரியை மறுத்து சொன்னவர்கள் கூறிய அற்புதமான வாக்கியம், ”ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது ஒரு வாயுடன் தான் பிறக்கிறது. ஆனால் அதற்கு இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இருக்கிறன்றன. அதனால் எப்படியும் தானும் உழைத்து பொருளாதாரத்தையும் பெருக்கும்என்று.. ஆனால் நம் அரசாங்கம் இங்கு நமக்கு கையும் காலும் இருப்பதை மறந்து தினமும் 70ரூபாயும் 80ரூபாயும் பிச்சை போட்டுக்கொண்டிருக்கிறது. நாமும் சொகுசாக தின்று விட்டு நம்மோடு சேர்த்து இன்னொருவனின் பிழைப்பை மறைமுகமாகவும் நாட்டின் வளர்ச்சியை நேரடியாகவும் கெடுக்கிறோம்.. 

சரி மத்திய அரசு தான் இப்படி என்றால் மாநில அரசு அதை விட ஒரு படி மேலே இருக்கிறது. மத்திய அரசுக்கு எப்படி வரியும், பெட்ரோலும் கை கொடுக்கிறதோ, மாநில அரசுக்கு அதை விட அதிகமாக கை கொடுப்பது TASMAC.. TamilNadu State Marketing Corporation என்பதன் சுருக்கம் தான் நம் டாஸ்மாக். ஆனால் அவர்கள் என்ன மார்க்கெட்டிங் செய்கிறார்கள்? ஊரையே குடிகாரன் ஆக்குகிறார்கள். சாராயக் கடை வருமானத்தை நம்பித்தான் அரசே இயங்கிக்கொண்டிருக்கும் சூழல் இங்கு.. அகில இந்திய அளவில் நம் டாஸ்மாக் மூன்றாவது அதிக வருமானம் கொடுக்கும் ஒரு மாநில அரசின் ஸ்தாபனம். முதல் இரண்டு இடத்தில் மராட்டிய மின்துறையும் குஜராத்தின் ஒரு துறையும் இருக்கின்றன. கிட்டத்தட்ட ஆண்டுக்கு 18000கோடி ரூபாய், நம் குடிகார ஜனங்களால் நம் மாநில அரசுக்கு கிடைக்கிறது.. சரி இவ்வளவு வருமானம் கிடைக்கிறதே, அதை மக்களின் முன்னேற்றங்களுக்கு பயன் படுத்தும் விதத்திலோ வேலை வாய்ப்பை பெருக்கும் விதத்திலோ பயன்படுத்தினார்களா என்றால் இல்லை. இலவச டிவி, இலவசை மிக்ஸி, இலவச கிரைண்டர், இலவச ஃபேன், இலவச அரிசி, இலவச கேஸ் அடுப்பு, இலவச லேப்டாப் (இந்த கட்டுரையை கூட நான் இலவச லேப்டாப்பில் தான் பதிவேற்றிக்கொண்டிருக்கிறேன்) என்று எங்கும் இலவசம். இன்னும் நம் அரசாங்கம் விடலை பசங்களுக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்களை தான் இலவசமாக தரவில்லை என்று நினைக்கிறேன்.. ஒருவனுக்கு நல்ல கல்வியை இலவசமாக கொடுத்துவிட்டால் வருங்கால சமுதாயமே சிறந்து விளங்கும் என்று நினைத்த காமராஜர் எங்கே? கல்வியை தவிர எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்து ஒரு சமுதாயத்தையே சோம்பேறியாக்கும் இவர்கள் எங்கே?

ஒருவன் வேற்று ஜாதியில் ஒரு பெண்ணை திருமணம் செய்கிறான். அந்த பெண் கொஞ்சம் படித்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனுக்கு அரசு திருமணத்திற்கு மானியம் கொடுக்கும், தாலிக்கு தங்கம் கொடுக்கும், அடுத்து அவர்களுக்கு பசுமை வீடு கொடுக்கும், ரேசன் அரிசி, டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், கேஸ் அடுப்பு, etc.. ஒரு குடும்பத்தலைவன் என்று அவன் எதற்கு இருக்கிறான் என்று யாருக்குமே தெரியாது? பேசாமல் ஒவ்வொரு குடம்பத்திற்கும் இலவசமாக குடும்பத்தலைவனையும் கொடுத்துவிட்டால் எல்லா ஆணும் வீட்டிற்கே வராமல் சொகுசாக நிம்மதியாக டாஸ்மாக்கிலேயே பொழுதை கழித்துவிடுவான்..

இலவசம் கொடுப்பதால் ஏழைகளின் வாழ்வாதாரம் முன்னேறுகிறது என்று சிலர் சொல்வார்கள்.. எப்படி முன்னேறும்? இலவசமாக கொடுத்த பொருட்களில் பாதி மின்சாதன பொருட்கள். ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் மின்வெட்டு. மின்சாரம் இருக்கும் நேரத்தில் இலவச அரிசியையும் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கிடைத்த காசில் கொஞ்சம் காய்கறியும் வாங்கி தின்றுவிட்டு, டிவியில் சினிமா பாட்டை பார்த்துக்கொண்டே தூங்கிக்கொண்டிருக்கிறான் நம் நாட்டின் குடிமகன். அங்கு தூங்குவது அவன் மட்டும் அல்ல. ஒருவனின் productivity அதாவது உற்பத்தித்திறன் அங்கு தூங்குகிறது. அவன் மூலம் அவன் குடும்பத்திற்கும் இந்த நாட்டிற்கும் கிடைக்கப்போகும் வருமானம் தூங்குகிறது. நம் பொருளாதாரம் தூங்குகிறது. மொத்தத்தில் சோம்பேறி குடிமக்களை உருவாக்கி, அவர்களை குடிக்கு அடிமைப்படுத்தி எதிர்காலத்தை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் நம் பொருளாதாரத்தை நாசமாக்கும் வேலையை மத்திய அரசும் மாநில அரசும் தெளிவாக செய்கின்றன. 

இப்படி ஒருவர் குடித்துவிட்டு தூங்குவதால், சிறு தொழில் முனைவோருக்கும், விவசாயம் செய்வதற்கும் ஆட்கள் கிடைப்பதில்லை.. ஆட்கள் கிடைக்காததால் பொருட்களின் உற்பத்தி பாதிக்கிறது..இது பொருளின் விலையை உயர்த்துகிறது. அரசு தன் பணத்தை எல்லாம் இலவசங்களுக்கு தாரை வார்ப்பதால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து பொருளை வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். பணப்புழக்கம் குறைவதால் பணவீக்கம் அதிகரிக்கிறது.. பண வீக்க அதிகரிப்பால் பொருளின் விலை இன்னும் கூடுகிறது. அரசு அக்கறை இல்லாமல் இலவசத்தை தொடர்கிறது. இலவசத்தை பெற்று குடிமகன் உழைக்காமல் எப்பவும் போல் தூங்கிக்கொண்டிருக்கிறான். அதனால் மீண்டும் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. ஆள் கிடைக்காததால் பொருளின் விலை இன்னும் கூடுகிறது.. இப்படியே இது ஒரு வட்டமாக மீண்டும் மீண்டும் சுற்றுகிறது.. ஒவ்வொரு முறை சுற்றும் போதும் பொருளின் விலை இன்னும் கூடுகிறது, நமது வாங்கும் சக்தி இன்னும் குறைகிறது, ரூபாயின் மதிப்பு இன்னும் வீழ்கிறது, பண வீக்கம் இன்னும் அதிகரிக்கிறது. மொத்தத்தில் நம் பொருளாதாரம் சீரழிகிறது.. இதை தடுக்க ஒரே வழி, தங்களின் பெரிய சாதனையாக மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தையும், மாநில அரசு பீற்றிக்கொண்டிருக்கும் இலவசத்தையும் நிறுத்தினாலே எல்லாம் சரியாகிவிடும்.. செய்வார்களா நம்அரசியல்வாதிகள்???????
 ஹலோ தற்கொலை செஞ்சுக்கனும் என்ன பூச்சிமருந்து சாப்பிடனும்னு..சொல்லமுடியுமா..?

Wednesday, June 5, 2013

கிரிஸ்டல் கொலுசு.


*தரமான வெள்ளிக்கொலுசு வாங்க குறைந்தது ரூ.2 ஆயிரம் தேவைப்படுகிறது. மார்டன் பெண்களுக்கு பாரம்பரிய வெள்ளி கொலுசுகளில் மனம் அவ்வளவாய் லயிப்பதில்லை. குறைந்த விலையில், புதுப்புது டிசைன்களில், கலர்கலராய்  கொலுசுகள் கிடைத்தால் சும்மா விடுவார்களா? வாங்கி குவித்து விடுவார்கள். விலை குறைவாக, அதே நேரத்தில் டிரஸ்சுக்கு மேட்ச்சாக கலர்கலராய் கிடைப்பதால் கிரிஸ்டல் கொலுசுகளுக்கு இளம்பெண்கள் மத்தியில் நல்ல கிராக்கி இருக்கிறது.  


*கொலுசு விலையைக் குறைக்க அதில் சேர்க்கப்படும் வெள்ளியைக் குறைக்க வேண்டும். சராசரியாக 20 கிராமுக்கு குறையாமல் வெள்ளிக் கொலுசு தயாரிக்கும் நிலையில் அதை 2 கிராம், 3 கிராம் வெள்ளியில் சரம், சரமாக பல வண்ணங்களில் டிசைன்களில் கிரிஸ்டல் கற்களை இணைத்து தயாரிலாம். 

*நாம் தயாரித்த கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை பள்ளி, கல்லூரி மாணவிகள் விரும்பி வாங்கலாம்.
இத்தொழிலே தெரியாத பெண்களுக்கு கிரிஸ்டல் கொலுசு தயாரிப்பதை ஒரு வாரத்தில் கற்றுக் கொடுகலாம்.


*ஒரு கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு தயாரிக்க 3 கிராம் வெள்ளி ரூ.150, 20 கிரிஸ்டல் கற்களுக்கு ரூ.100, உருக்க, கம்பியாக்க, கப் செய்ய கூலி ரூ.20, செய்கூலி ரூ.50 என அதிகபட்சமாக ரூ.320 ஆகும். இதை கிரிஸ்டல் கற்களின் விலைக்கேற்ப ரூ.300க்குள்ளும் தயாரிக்க முடியும். ரூ.400க்கு குறையாமல் விலை போகும். 

*ஒரு கொலுசுக்கு லாபமாக ரூ.100 நிச்சயம். ஒருவர் ஒரு நாளைக்கு 5 கொலுசுக்கு குறையாமல் தயாரிக்க முடியும். மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி பெண்களை நேரடி வாடிக்கையாளர்களாகக் கொண்டால் குழுவாகச் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.  

*பெண்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை கண்காட்சியாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள்.  இது தவிர குறைந்த லாபத்தில் நகைக் கடைகளில் மொத்தமாக விற்கலாம்.


தங்க முலாம் பூச்சு

*வீட்டில் 5க்கு 5 அடி இடம் இருந்தால் போதும். சின்ன நகைப்பட்டறை போல் வீட்டளவில் ஒரு மண் தொட்டி, அதில் உமி, கரித்துண்டுகள் போட்டு, நெருப்பு ஊதி, சின்ன மண் செப்புகளில் தங்கத்தை வெள்ளியை உருக்க வேண்டும். பேசினில் 3 டம்ளர் தண்ணீரில் பொட்டாசியம் சயனைடு, அவல் அரக்கு, ரோசனம் ஆகியவற்றை தலா 5 கிராம் கலந்து, அதில் உருக்கிய தங்கம் அல்லது வெள்ளியை ஊற்றி, அதில் முலாம் பூச வேண்டிய ஆபரணத்திற்கு தங்கம், வெள்ளி கோட்டிங் அளவை சேர்க்க, ரேடியேட்டர் மீட்டர் மூலம் இணைத்து பழைய கவரிங், தங்க, வெள்ளி நகைகளுக்கு முலாம் பூசலாம். 

*ஒரு மக்கில் வைக்கப்பட்டுள்ள காஸ்டிக் சோடாவில் ஆபரணத்தை முக்கி எடுத்தால் புதிது போல ஆகிவிடும். ஒரு பேசின், குட்டி கம்ப்ரசர் மோட்டார் வைத்து சுழலும் பிரஷ்சில் நகையைக் கழுவினாலும் புதுசாகும். இதை பாலிஷ் போடுவது, மெருகு போடுவது என்பார்கள். தங்க முலாம் பூசுவது, மெருகு போடுவது கூடுதல் வருமானம் தரும்.

தயாரிக்கும் முறை

*வெள்ளியை வாங்கி, அதன் திடத்தன்மைக்கு செம்பு சேர்த்து உருக்க வேண்டும். உருக்கி கொடுக்கவும், அதை மெல்லிய கம்பியாக்கவும், கிரிஸ்டலில் பொருத்தக்கூடிய சின்ன கப்களை தயாரிக்கவும் ஜாப் ஒர்க் கடைகள் உள்ளன. அங்கு செய்து வாங்கிக் கொள்ளலாம். நூலில் பாசி கோர்ப்பதுபோல், வெள்ளிக் கம்பியில் கிரிஸ்டல் கற்கள் கோர்ப்பதுதான் கிரிஸ்டல் வெள்ளிக்கொலுசின் பார்முலா. 

*கிரிஸ்டல் கற்களை துளை போட்டு, அதன் வழியாக வெள்ளிக் கம்பியை நுழைத்து, கிரிஸ்டல் கற்களின் இருபுறமும் குடையைப் போன்ற சிறு கப்களை ஒட்டவைத்து, குடை வழியாக வெளிவரும் கம்பியை வளையமாக்கி, அந்த வளையத்துக்குள் மற்றொரு வளையத்தைப் பொருத்த வேண்டும். கப், கிரிஸ்டல் என்று தொடர்ந்து சரமாக்குவது தான் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு. 

*இதைச் செய்ய நகைத்தொழில் தெரிய வேண்டியதில்லை. சிறிய ‘சவனம்Õ (கட்டிங் பிளேயர்), இருந்தால் போதும். கைவேலையில் கொலுசு தயாராகி விடும். நகைக்கடைகளில் அன்றைய விலை நிலவரப்படி வெள்ளியை வாங்கலாம். கிரிஸ்டல் கற்கள் நகைத்தொழிலுக்குரிய பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.

டிரஸ்சுக்கு மேட்ச்சா கொலுசு

கிரிஸ்டல் கொலுசுகள் கலர்கலராய் கிடைப்பதால், உடுத்தும் சுடிதார், சேலையின் நிறத்திற்கு மேட்சிங்காக அணிய முடியும். கருக்காத வெள்ளியில் பளீரென மின்னும் வண்ண கிரிஸ்டல் கற்கள் கொலுசுக்கு அழகையும், காலுக்கு கவர்ச்சியையும் கொடுக்கிறது. விலையும் குறைவு. பேஷனாக உள்ளதால் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. சில பெண்கள் இதை கையில் பிரேஸ்லெட்டாக கட்டி புது பேஷனை உருவாக்கி வருகிறார்கள்.

மோர்மிளகாய் வத்தல்




சைவ உணவுக்கு சிம்பிளான சைடு டிஷ் என்றால் அது வத்தல்தான். கிராமவாசிகள் முதல் நகரவாசிகள் வரை கொஞ்சம் காரசாரமாக கடித்துக்கொள்ள தேடுவது மோர்மிளகாய் வத்தல்தான். நீங்கள் விரும்பிச் சாப்பிடும் அந்த மோர் மிளகாய் வத்தல் போளியம்மனூரில் தயாரானது!

ஒட்டன்சத்திரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் நெடுஞ்சாலையில் செம்பட்டி அருகில் அமைந்துள்ளது போளியம்மனூர். இவ்வூருக்குள் நுழையும்போதே மோர்மிளகாயின் வாசம் காற்றில் கலந்து நாசியைத் துளைக்கிறது. வாசனையைப் பிடித்துக்கொண்டே ஊருக்குள் சென்றால், ஊரில் காணப்படும் வெட்டவெளியெல்லாம் வத்தல் மயம்தான். மோர்மிளகாய் வத்தலைதான் இந்த ஊரில் அதிகமானவர்கள் உற்பத்தி செய்கின்றனர். மோர்மிளகாய் வத்தலில் இரண்டு வகை உண்டு. அவை, சம்பா மிளகாய், குண்டு மிளகாய்.இத்துடன் சேர்த்து இங்கு கத்தரி, மாங்காய், மனத்தக்காளி, சுண்டைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கொத்தவரங்காய் என அனைத்து வகையான வத்தல்களும் தயார் செய்கின்றார்கள்.
ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்தான் இத்தொழிலை இவ்வூர் மக்கள் செய்யத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம், மாணிக்கம் செட்டியார், சுப்பிரமணியம் செட்டியார் என்ற இருவர்தான். இவர்கள் வேலைக்குச் சென்ற ஊரில் இந்த தொழில் செய்வதைப் பார்த்துவந்து இந்த ஊரில் இத்தொழிலை செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கவும் இவ்வூர் முழுக்க இத்தொழிலை செய்யத் தொடங்கிவிட்டனர். இப்போது எல்லாத் தரப்பு மக்களும் இத்தொழிலை செய்கின்றனர்.
வத்தல் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கதிர்வேலிடம் பேசினோம். ''இங்கு எங்களுடன் சேர்த்து இரண்டு காட்டேஜ்கள் உள்ளன. நாங்கள் வெண்டைக்காய், மனத்தக்காளி, சுண்டைக்காய், கத்தரிக்காய், மிளகாய், பாகற்காய், கொத்தவரங்காய் என வத்தலுக்குத் தேவையான காய்கறிகளை பச்சையாக வாங்குகிறோம். உதாரணமாக, ஆந்திராவில் மிளகாய் உற்பத்தி அதிகமாக இருக்கும்போது ஆந்திர மிளகாய்களையும், அருகில் உள்ள ஒட்டன்சத்திரம் மார்க்கெட், மதுரை மார்க்கெட், திருநெல்வேலி மார்க்கெட் போன்ற இடங்களில் இருந்தும் வத்தலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்குகிறோம்.
மோர்மிளகாய்க்கு முக்கியத் தேவை மோர். இது அருகில் உள்ள ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து எங்களுக்கு எளிதாகக் கிடைக்கிறது. நாங்கள் பச்சையாக வாங்கும் காய்கறிகளை ஊர்மக்களிடம் தந்துவிடுவோம். அவர்கள் அதை வத்தலாக மாற்றித் தருவார்கள் மேலும், அதற்குத் தேவையான மோர், உப்பு என எல்லா பொருட்களையும் தந்துவிடுவோம். ஒரு மூட்டை வத்தல் உற்பத்தி செய்துதந்தால் அதற்கு நூறு ரூபாய் தருகிறோம்.
இதில் மோர்மிளகாய்தான் அதிக வேலை வாங்கக் கூடியது. ஒரு மூட்டை மோர் மிளகாய் உற்பத்திக்கு இயல்பான காலநிலைகளில் பத்து நாட்களும் மழைக் காலங்களில் பதினைந்து நாட்களும் ஆகும். மற்ற வத்தல்கள் உற்பத்திக்கு ஏழு முதல் எட்டு நாட்கள் வரை ஆகும்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மோர்மிளகாய் வத்தல் இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும். மற்ற வத்தல்கள் வருடக்கணக்கில் கெடாமல் இருக்கும். இங்கு கிடைக்கும் வத்தல்களை நன்றாக காய வைப்பதால் எண்ணெய்யில் வறுக்கும்போது அதிகமாக எண்ணெய் குடிக்காது. இந்த ஊரில் மொத்தம் 300 குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர் இவ்வூர் மக்கள்.
இங்கிருந்து தமிழ்நாடு முழுமைக்கும் வத்தல்களை அனுப்புகிறோம். மேலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளி நாடுகளுக்கும் வத்தல்களை ஏற்றுமதி செய்கிறோம். இத்தொழில் நிலைத்திருக்க காரணம், இங்கு கிடைக்கும் நல்ல தண்ணீர் வசதியும், அனுபவ அறிவும், இடவசதியும்தான். வத்தல் காயவைக்க இடம் அதிகம் தேவைபடுவதாலேயே சமீப காலங்களாக நிலத்தின் மதிப்பு இங்கு அதிகமாகியுள்ளது' என்றார் கதிர்வேல்.
இந்த வத்தல்களுக்கு சில மருத்துவகுணங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள் இங்குள்ளவர்கள். பாகற்காய் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகவும், மனத்தக்காளி சளிக்கும், வெண்டைக்காய் ஞாபக சக்திக்கும் உணவே மருந்தாகும் என்பதற்கு ஏற்ப உதவுகின்றன.
இனி வத்தல் என்றால் போளியம்மனூர் உங்கள் நினைவுக்கு வரட்டும்!

குறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் கிடைப்பதால் அலங்காரக் கோழி வளர்ப்பு,


இது ஃபேன்ஸி யுகம். வசதி படைத்தவர்கள் மட்டுமல்ல, அழகியல் ஆர்வமுள்ளவர்களும் அழகுக்காகப் பல்வேறு உயிரினங்களை வளர்க்கிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள், நகர்ப்புற வீடுகள் என அனைத்து இடங்களிலும் நாய், பூனை, புறா, கிளி, வண்ண மீன்கள் என அழகுக்காக வளர்க்கப்படும் 'ஃபேன்ஸி’ உயிரினங்கள் வரிசையில் சமீப காலமாக அலங்காரக் கோழிகளும் இடம்பிடித்து வருகின்றன. நாட்டுக்கோழியைவிட குறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் கிடைப்பதால் அலங்காரக் கோழி வளர்ப்பு, புதிய தொழில் வாய்ப்பாக மாறி வருகிறது.
வீட்டு மொட்டை மாடியில் முப்பது ஆண்டுகளாக அலங்காரக் கோழிகளை வளர்த்துவரும் சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் காபிரியேல் சொல்வதைக் கேளுங்கள்.
''கோழிகளின் முட்டை இடும் திறன், வளர்ச்சி, உருவ அமைப்பு, குணங்களின் அடிப்படையில் முட்டைக் கோழி, இறைச்சிக் கோழி, சண்டைக் கோழி, அலங்காரக் கோழிகள் என இனம் பிரிக்கிறார்கள். போன்சாய் மரங்களைப் போல சிறிய உருவம், நளினமான நடை, வண்ண வண்ண இறகுகள், கால் நுனியில் அடர்த்தியான ரோமம் ஆகியவை அலங்காரக் கோழிகளின் அடையாளம். இவை பெரும்பாலும் வெளிநாடுகளை தாயகமாகக் கொண்டவை.
10 ஆயிரம் முதலீடு போதும்!
இவற்றை வணிக ரீதியாக வளர்க்க அதிக இடம் தேவையில்லை. வீட்டு மொட்டை மாடியில்கூட வளர்க்கலாம். அதேபோல அதிக எண்ணிக்கையில் கோழிகளை பராமரிக்கவும் தேவையில்லை. சுமார் இருபது கோழிகளை வளர்த்தாலும் லட்சங்களில் வருமானம் பார்க்கலாம். இதை வளர்க்க, 10-க்கு 10 அடி அளவில் வெயில் நேரடியாகத் தாக்காமலும், மழை பெய்யும்போது சாரல் அடிக்காமலும் இருப்பது போல குறைந்த செலவில் கொட்டகை அமைத்துக்கொண்டால் போதும். அலங்காரக் கோழி வளர்ப்புக்கு 10 ஆயிரம் முதலீடு போதுமானது.
ஆயிரம் முதல் லட்சம் வரை!
அலங்காரக் கோழிகளில் அமெரிக்கன் கிரில், பிரம்மா, கொச்சின் பேந்தம், சில்வர் சில்கி, சில்வர் பெசன்ட், போலீஸ் கேப், குட்டைவால் கோழி, ஃபீனிக்ஸ், பேந்தம், பிளாக்மினி கொச்சின், பூட்டேட் பேந்தம், பஞ்சுக்கோழி, டேபிள் ஃபைட்டர், செப்பரேட்டர், மினி வொய்ட் ரோஸ் கேப், கடக்நாத், கிராப் என பலவகையான கோழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கோழியும் ஒவ்வொரு விலையில் விற்கப்படுகின்றன. ஒரு கோழி சுமாராக 1,000 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும். ஒரு சில அபூர்வ ரக வகைக் கோழிகள் ஒரு லட்ச ரூபாய் வரைக்கும்கூட விற்பனையாகின்றன. சில்கி, கடக்நாத் ஆகிய ரக கோழிகளின் இறைச்சி மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.
20 கோழிகளுடன் தொடங்கலாம்!
முதன் முதலாக இத்தொழிலில் இறங்குபவர்கள் அதிக விற்பனை வாய்ப்புள்ள ரகங்களில் குறைந்த எண்ணிக்கையில் குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும். சில்கி, போலீஸ் கேப், கொச்சின், சீ பிரைட் ஆகிய நான்கு ரகங்களுக்கு அதிக விற்பனை வாய்ப்பு உள்ளது. மேற்படி ரகங்களில் தலா 3 பெட்டை, 2 சேவல்களை வாங்க வேண்டும். மொத்தம் 20 கோழிகளுடன் தொழிலைத் தொடங்கி, அனுபவத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட பிறகு அதிக எண்ணிக்கையில் வளர்க்கலாம். ஒரு நாள் வயதுடைய குஞ்சு 300 ரூபாய்க்கும், எட்டு வார வயதான கோழிகள் 800 ரூபாய்க்கும் கிடைக்கும். முதன் முதலில் இந்தத் தொழிலில் இறங்குபவர்கள் எட்டு வார வயதுடைய குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதுதான் நல்லது. தீவனம் பராமரிப்பு அனைத்தும் நாட்டுக்கோழிக்குச் செய்வது போலவே செய்ய வேண்டும். 25-ம் வாரத்திலிருந்து முட்டை போடத் தொடங்கும். நாட்டுக்கோழிகளைப் போல தினமும் முட்டை கிடைக்காது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறைதான் முட்டை கிடைக்கும்.

ஒரு வருஷம்... ஒரு லட்சம்!
ஒரு ஆண்டுக்கு சில்கியில் 160 முட்டையும், கொச்சின் கோழி மூலம் 120 முட்டைகளும், போலீஸ் கேப் மூலமாக 100 முட்டைகளும், சீ பிரைட் மூலம் 60 முட்டைகளும் கிடைக்கும். இந்த முட்டைகளை நாட்டுக்கோழி முட்டைகளுடன் அடைவைத்து பொறிக்க வைக்கலாம். அல்லது சிறிய அளவிலான இன்குபேட்டர் மூலமாகப் பொறிக்க செய்யலாம். அடை வைத்ததிலிருந்து 21 நாளில் குஞ்சு பொறிக்கும். இந்த குஞ்சுகளை இரண்டு மாதங்கள் வளர்த்து விற்பனை செய்யலாம். அலங்கார கோழிகள் இடும் முட்டைகளில் சராசரியாக 60 சதவிகிதம் தான் பொறிக்கும். இந்த கணக்குப்படி பார்த்தால், சில்கி முட்டை மூலம் 96 குஞ்சுகள், கொச்சின் மூலமாக 72 குஞ்சுகள், போலீஸ் கேப் மூலம் 60 குஞ்சுகள் மற்றும் சீ பிரைட் மூலம் 36 குஞ்சுகள் என மொத்தம் 264 குஞ்சுகள் கிடைக்கும். இதில் இறப்பு விகிதத்தைக் கழித்தால், ஆண்டுக்கு சராசரியாக 200 குஞ்சுகள் கிடைக்கும். ஒரு குஞ்சு 800 ரூபாய் விலையில் விற்பனை செய்தால் 1.60 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதில் ஒரு ஆண்டுக்கான செலவாக அதிகபட்சம் 60 ஆயிரம் ரூபாயைக் கழித்துவிட்டாலும் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.
விற்பனை வாய்ப்பு!
விற்பனை வாய்ப்பைப் பற்றி கவலையே இல்லை. உங்களிடம் அலங்காரக் கோழிகள் இருப்பது தெரிந்தால் வியாபாரிகளே வந்து வாங்கிக்கொள்வார்கள். அப்படியும் விற்பனை செய்ய முடியாதவர்கள் எங்களிடம் விற்பனை செய்யலாம். எட்டு வார வயதுடைய குஞ்சுகளை 600 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வோம்'' என்று முடித்தார் அவர்.
அட, இதுவும் நல்ல பிஸினஸா இருக்கும் போலிருக்கே!

சாண எரிவாயு உற்பத்தியில் அடுத்த மைல் கல்.

வந்தாச்சு, பாலிதீன் கலன்!

சாண எரிவாயு உற்பத்தியில் அடுத்த மைல் கல்...
ஜி. பழனிச்சாமி, நவீன் முருகேசன்
படங்கள்: க. ரமேஷ்.
புதிய நுட்பம்
வருஷத்துக்கு ஆறு சிலிண்டர் தந்தா என்ன... அறுபத்தி நாலு சிலிண்டர் தந்தா என்ன... இதைப் பத்தியெல்லாம் எங்களுக்குக் கவலையே இல்லை. ஏன்னா... நாங்க தோட்டத்துலயே கேஸ் உற்பத்தித் தொழிற்சாலை வெச்சுருக்கோம்ல'' என்று தெம்பாகச் சொல்கிறார்கள், கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்துள்ள, சாளைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல்-கவிதா தம்பதி!

இவர்கள் அமைத்திருப்பது... சாண எரிவாயுக் கலன். இது, வழக்கம்போல... இரும்புக் கலன், சிமென்ட் தொட்டி என்று இல்லாமல், எளிதாகக் கையாளக் கூடிய வகையில் 'பாலிதீன் ஷீட்’டில் தயாரான புதுவகைக் கலனாக இருப்பது... கூடுதல் சிறப்பு!
''படிச்சு முடிச்சதும் விவசாயத்துக்கு வந்துட்டேன். அதுக்கு தோதா தோட்டத்துலயே வீட்டைக் கட்டி குடிவந்துட்டேன். ஆரம்பத்துல விறகு அடுப்புதான். அப்பறம், புகையில்லாம சமைக்கறதுக்காக கேஸ் சிலிண்டருக்கு மாறினோம். ஆனா, கிராமத்துல சிலிண்டர் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மாசத்துக்கு ஒரு தடவைதான் சிலிண்டர் வண்டி வரும். அன்னிக்கு காலி சிலிண்டரோட மெயின் ரோட்டுல காத்துக் கிடக்கணும். அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வரல. அதனாலதான், மாட்டுச் சாணத்துல இருந்து கேஸ் உற்பத்தி பண்ணலாம்னு முடிவுக்கு வந்தேன்.
இதைப் பத்தி விசாரிச்சப்ப, 'சாண எரிவாயுக் கலன், இரும்பு டிரம்லதான் அமைக்கணும். பெரியக் கிடங்கு வெட்டி, சிமெண்ட் பூசி பதிக்கணும். அதுக்கு செலவு அதிகமாகும். துருப்பிடிச்சு போச்சுனா பிரச்னை வரும்’னு ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொன்னாங்க. 'என்ன செய்யலாம்?'னு யோசிச்சுட்டு இருந்த சமயத்துலதான் 'பாலிதீன் பயோ கேஸ் ஹோல்டர்’னு ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டு, அதை வாங்கிப் போட்டுட்டோம்'' என்ற தங்கவேலைத் தொடர்ந்த கவிதா...
''இதைப் போட்டு ரெண்டு வருஷம் முடிஞ்சுடுச்சு. இதுல சாணம் மட்டுமில்லாம, காய்கறிக்கழிவு, தீவனக்கழிவு எல்லாத்தையும் பயன்படுத்த முடியும். ஒரு கிலோ சாணத்துக்கு ஒரு கிலோ தண்ணிங்கிற கணக்குல கரைச்சு ஊத்தணும். மத்தக் கழிவுகளா இருந்தா... நல்லா நசுக்கி, தண்ணில கரைச்சு ஊத்தணும். தினமும் 20-25 கிலோ அளவுக்கு சாணத்தை ஊத்துறோம். நாள் முழுக்க தட்டுப்பாடு இல்லாம கேஸ் கிடைச்சுடுது. கேஸ் உற்பத்தி முடிஞ்சு வெளியாகுற கழிவை (ஸ்லர்ரி), தென்னை மரங்களுக்கு உரமாக்கிடறோம்'' என்று சொன்னார்.
மனைவியை ஆமோதித்த தங்கவேல், எரிவாயுக் கலனின் தொழில்நுட்ப விஷயங்கள் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
''இது, பல கொள்ளளவுகள்ல கிடைக்குது. நமக்குத் தேவையான அளவுல வாங்கிக்கலாம். நாங்க, 1 கன மீட்டர் கொள்ளளவு உள்ள ஹோல்டர் போட்டுருக்கோம். 4 அடி நீள, அகலத்தில், 3 அடி ஆழத்தில் குழி எடுத்து, அதுக்குள்ள இந்த ஹோல்டர வெச்சுடலாம். சிமெண்ட் பூச்செல்லாம் தேவையில்லை. வாயு அதிகமா உற்பத்தியாகும்போது, ஹோல்டர் மேலே எழும்பி வராம இருக்கறதுக்காக சுமார் 10 கிலோ எடையுள்ள ஒரு மூட்டையை ஹோல்டர் மேல வைக்கணும்.
நாலு மணி நேரம் தொடர்ந்து எரியுற அளவுக்கான கேஸ், இந்த ஒரு கனமீட்டர் ஹோல்டர்ல இருந்து கிடைக்கும். இது பெரிய பலூன் மாதிரி 'திக்’கான பாலிதீன்ல தயார் பண்ணியிருக்கறதால... வெயில், மழையால பாதிப்பு இல்லாம பத்து வருஷம் வரைக்கும் உழைக்கும்னு சொல்றாங்க. முள், ஆணி பட்டாலும் ஓட்டையாகாது. அப்படியும் ஓட்டை விழுந்தா... பஞ்சர் பாக்கறதுக்கும் வசதி இருக்கு. சாணம் கரைச்சு ஊத்துறதுக்கு ஒரு பெரியத் துளை, கழிவுகள் வெளியேறுறதுக்கு ஒரு பெரியத் துளை, கேஸ் வர்றதுக்கு சின்னத் துளை இது மூணும் இதுல இருக்கு.
முதல்ல அமைக்கறப்போ... 300 கிலோ சாணத்தை, 300 கிலோ தண்ணில கரைச்சு ஊத்தணும். காய்ஞ்ச சாணமாக இருந்தா... கேஸ் வெளிய வர ஒரு மாசம் ஆகும். புது சாணமா இருந்தா... 15 நாள்ல வந்துடும். கேஸ் வர ஆரம்பிச்ச பிறகு, தினமும் 20 கிலோ... இல்லனா... 25 கிலோ சாணத்தை தண்ணில கலந்து ஊத்தணும். இதுக்கு, வீட்டுல ரெண்டு மாடு இருந்தாலே போதும். சாண எரிவாயு தண்ணி அளவு சரியா இருக்கணும். கூடவோ, குறைச்சலாவோ இருந்தா... வாயு உற்பத்தி அதுக்கு தகுந்தபடிதான் இருக்கும்'' என்று சொன்னார்.
நிறைவாகப் பேசிய தம்பதி, ''இப்போல்லாம், 'சிலிண்டர் விலை ஏறிப்போச்சு’னு யாராவது எங்ககிட்ட புலம்பினா, 'கையில வெண்ணெய வெச்சிட்டு நெய்க்கு ஏன் அலையுறீங்க?னுதான் திருப்பிக் கேக்குறோம். இதுக்கு 10 ஆயிரம் ரூபாய்தான் மொத்தச் செலவு ஆச்சு. நாங்க ரெண்டு வருஷத்துலயே 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கேஸ் செலவுல அதை ஈடுகட்டிட்டோம். அதில்லாம இதுல விபத்து நடக்கவும் வாய்ப்பில்லை. இதைப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டா... கேஸ் பத்தின கவலையே இல்லாம இருக்கலாம்'' என்று விடை கொடுத்தனர்.
தொடர்புக்கு, கே. தங்கவேல்,
செல்போன்: 94880-42428.

''நாலு மாடு இருந்தா... நாமதான் நெய்வேலி!''
சுற்றுச்சூழலுக்கு பங்கம் இல்லாத மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்யப்படும் பேட்டரி பைக்கினை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார். ''30 ஆயிரம் ரூபாய் விலையில் வாங்கிய பின்பு 600 லிட்டர் பெட்ரோலை மிச்சம் செய்துள்ளேன்'' எனச் சொல்லும் தங்கவேல், ''மாடுகளை அதிகரித்து, அதன் மூலம் பயோ கேஸையும் அதிகரித்து, என் குடும்பத்துக்குத் தேவையான சமையல் எரிவாயுவையும் மின்சார உற்பத்தியையும் செய்துகொள்ளப் போகிறேன். இனி வரும்காலங்களில் கண்டிப்பாக விவசாயிகள் அனைவரும் இதை நோக்கி வந்தே ஆகவேண்டும். அரசாங்கம் கொடுக்கும் மின்சாரம், சிலிண்டர் எதுவும் நமக்குத் தேவையில்லை. நாலு மாடு இருந்தால், நாமேதான் நெய்வேலி, நாமதான் கூடங்குளம். அதற்கான நேரம் நெருங்கி விட்டது''என்கிறார் அழுத்தமாக.

நகரத்திலும் பயன்படுத்த முடியும்!
'பயோ கேஸ் ஹோல்டர்' விற்பனை செய்து வரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுன் மோகனிடம் பேசியபோது, ''கிராமப்புற மக்கள், விவசாயிகள் மட்டுமல்ல... நகரவாசிகள்கூட இதைப் பயன்படுத்தி சமையல் எரிவாயுவை உற்பத்தி செஞ்சுக்க முடியும். ஒரு வீட்டுக்குத் தேவையான சின்ன அளவுல இருக்குற கலனை, வீட்டு மொட்டை மாடியிலயே வெச்சுப் பயன்படுத்திக்கலாம். அடிக்கடி வீடுமாறினாகூட எடுத்துட்டுப் போக முடியும். கிராமத்து வீடுகள்ல அமைக்கறப்போ சின்னதா குழி எடுத்து, அதுக்குள்ள வெச்சுக்கிட்டா... இந்தக் கலன் உருளாம இருக்கும். நகரங்கள்ல அதுக்கு வாய்பில்லாததால... இரும்பு ஸ்டாண்ட் பயன்படுத்திக்கலாம்.
அடுக்குமாடி வீடுகள்ல இருக்குறவங்க... மொத்தமா சேர்ந்து பெரிய அளவுல அமைச்சு, வீணாகுற கழிவுகளைப் பயன்படுத்தியே கேஸ் உற்பத்தி பண்ணி பகிர்ந்துக்கலாம். காய்கறிக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள், மனிதக் கழிவுகள், பசும்புல், மல்பெரி, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்... உட்பட மட்கக்கூடிய எல்லா பொருட்களையும் இதுக்குள்ள போட்டு, எரிவாயு உற்பத்தி பண்ண முடியும். எலுமிச்சை மாதிரி சிட்ரிக் அமிலம் உள்ள கழிவுகளை மட்டும் பயன்படுத்தக் கூடாது.
கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், திருப்பூர் மாதிரியான ஊர்கள்ல காய்கறி மார்க்கெட் பக்கத்துல இருக்கறவங்களுக்கு... அதிகளவுல கழிவுகள் கிடைக்கும். அதை வெச்சு, அதிக எரிவாயு உற்பத்தி பண்ணி கரன்ட் கூட தயாரிச்சுக்கலாம். இரும்பு, சிமெண்ட் மூலம் சாண எரிவாயுக் கலன் அமைக்க மானியம் கொடுக்கறாங்க. ஆனா, இந்த பாலிதீன் ஹோல்டருக்கு மானியம் இல்லை. அரசாங்கம் மனசு வெச்சா... இதுக்கும் மானியத்தைக் கொடுத்து, இந்த முறையைப் பரவலாக்க முடியும்'' என்று சொன்னார்

சாண எரிவாயுவில் இருந்து மின்சாரம்!
'சாண எரிவாயுவைப் பயன்படுத்தி வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை தயாரிப்பதிலும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார், தங்கவேல். அதுபற்றிப் பேசிய தங்கவேல்,
''பழைய அம்பாசிடர் கார் டைனமோவை, சாண எரிவாயு மூலமா சுத்த வெச்சு, கரன்ட் உற்பத்தி பண்ற முயற்சியில இருக்கேன். ஆரம்பக் கட்டம் வெற்றிதான். வீடு முழுக்க இந்த கரன்ட்டை பயன்படுத்துற மாதிரி சீக்கிரமே இதை முழுமையா தயார் பண்ணிடுவேன். அதேமாதிரி, பயோ கேஸ் மூலமாத்தான் என்னோட யமாஹா பைக்கையும் ஓட்டிக்கிட்டிருக்கேன். கேஸை டூ வீலர்ல பயன்படுத்துறதுக்கான கருவியையும் நானே வடிவமைச்சுக்கிட்டேன். வீட்டுல இன்னும் நாலஞ்சு மாடுகள வாங்கிக் கட்டிட்டா... கேஸ் உற்பத்தி தன்னால அதிகரிச்சுடும். அதுக்குப் பிறகு, வீட்டுக்குத் தேவையான கரன்ட், வண்டிகளுக்குத் தேவையான கேஸ் எல்லாத்தையும் நானே உற்பத்தி பண்ணிக்கலாம்னு இருக்கேன். எல்லாரும் இப்படி மாறிட்டாங்கனா, அரசாங்கத்துக்கிட்ட கையேந்த வேண்டிய தேவையே இருக்காதே!'' என்றார் புன்னகையுடன்.

வான்கோழி வளர்க்க அதிக முதலீடோ, இடவசதியோ தேவையில்லை



ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சிகளை அடுத்து, அசைவப் பிரியர்களின் சாய்ஸாக மாறி வருகிறது வான்கோழி. விலை குறைவான அதே நேரத்தில் ஆரோக்கியமான இறைச்சியைத் தேடுவோரின் கவனம் வான்கோழி இறைச்சி பக்கமாகத் திரும்பி வருகிறது என்றே சொல்லலாம். முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் மட்டுமே அசைவ ஓட்டல்களில் கிடைக்கும் வான்கோழி பிரியாணி, இப்போது அனைத்து நாட்களிலும் கிடைக்கிறது.

ப்படி பல பிஸினஸ் வாய்ப்புகள் பெருகி இருக்கிற அதே நேரத்தில், ஈமுக் கோழிகளில் முதலீடு செய்துவிட்டு ரத்தக் கண்ணீர் விடுபவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது வான்கோழி வளர்ப்புத் தொழில். அதிக இடம், அதிக முதலீடு தேவைப்படாத வான்கோழி வளர்ப்புத் தொழிலை வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடங்களிலேயேச் செய்யலாம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வான்கோழிகளை வெற்றிகரமாக வளர்த்துவரும் தேனியைச் சேர்ந்த ராஜாமணி, வான்கோழி வளர்ப்பு முறைகள் பற்றி விரிவாகச் சொல்கிறார்.''வான்கோழி வளர்க்க அதிக முதலீடோ, இடவசதியோ தேவையில்லை. ஆர்வமும், கொஞ்சம் உழைப்பும் மட்டும் இருந்தால் போதும். வான்கோழி வளர்ப்பது சுலபமான வேலையில்லை என்பது போலத்தான் தோன்றும். ஆனால், அதிலுள்ள நெளிவுசுளிவுகளை தெரிந்துகொண்டால் அதைவிட சுலபமான தொழில் எதுவும் இல்லை. புதிதாக வான்கோழி வளர்க்க நினைப்பவர்கள், 200 முதல் 250 சதுர அடி இடத்தில் 100 குஞ்சுகளுடன் வளர்க்கத் தொடங்கலாம். ஒரு மாதத்திற்கு மேல் வயதான குஞ்சுகளாக வாங்கி வளர்ப்பது நல்லது. ஒரு மாதத்துக்குள்ளான குஞ்சுகளில் அதிக அளவில் இறப்பு இருக்கும் என்பதால்தான் இப்படி சொல்கிறேன்.
கோழி வளர்ப்பு என்றவுடனே அதிக செலவு வைப்பது கொட்டகைதான். ஆனால், புறக்கடையில் வளர்க்கும் வான்கோழிகளுக்கு அதிக செலவு செய்து கொட்டகை அமைக்கத் தேவையில்லை. பழைய டைமண்ட் லிங்க் வேலிகளை வாங்கி தடுப்பு அமைத்துக்கொள்ளலாம். வெயில், மழையில் ஒதுங்குவதற்காக ஒரு கூரை அமைத்துக் கொண்டால் போதுமானது. இதற்கு அதிகபட்சமாக 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் ரூபாய் செலவாகும். கொட்டகை அமைத்தப் பிறகு குஞ்சுகளை வாங்கி விட வேண்டும். பகல் நேரத்தில் கோழிகள் கொட்டகையில் இல்லாமல் வேலிக்குள் உள்ள திறந்தவெளி பகுதியில் சுற்றித் திரியும். இரவு வந்து கொட்டகையில் முடங்கிவிடும்.
வான்கோழி வளர்ப்பில் அதிகச் செலவு வைப்பது தீவனங்கள்தான். கடைகளில் விற்கும் கோழித் தீவனங்களை வாங்கிப் போட்டால் கட்டுபடியாகாது. எனவே, பச்சை புற்களை அதிக அளவில் கொடுக்க வேண்டும். நான் எங்கள் வீட்டு அருகே உள்ள வயல் வரப்புகளில் இருந்து புற்கள், கீரைகளை அறுத்து வந்து வான்கோழிகளுக்குக் கொடுக்கிறேன். 60% புற்கள், 20% தவிடு, 20% முட்டைக் கோழித் தீவனம் என்ற விகிதத்தில் கொடுத்தால் தீவனச் செலவை அதிக அளவில் குறைக்கலாம். மனிதர்களுக்கு கீரை உண்பது எவ்வளவு ஆரோக்கியமானதோ அதேபோல பச்சை புற்கள், கீரைகள் வான்கோழிகளுக்கு ஆரோக்கியமானது.
வான்கோழிகள் குஞ்சுகளாக இருக்கும்போது பெட்டை, சேவலை கண்டுபிடிக்க முடியாது. சிறிது வளர்ந்த பிறகுதான் இனம் காண முடியும். இதற்கு பெரும்பாலும் அம்மை நோய் வரும். முகம், உடம்பில் கொப்பளங்கள் தோன்றும். அதற்கு வேப்பம் கொழுந்து, மஞ்சள் ஆகிய இரண்டையும் அரைத்து பூசிவிட்டால் சரியாகிவிடும். வான்கோழி வளர்ப்பில் சந்தை வாய்ப்பு இல்லை என்ற தவறான எண்ணத்தால் பலரும் இந்தத் தொழிலை செய்யத் தயங்குகிறார்கள். ஆனால், உண்மையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் வான்கோழி பண்ணைகள் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கின்றன. அந்தளவுக்கு அதன் தேவைகளும், சந்தை வாய்ப்புகளும் உருவாகி வருகிறது. இறைச்சி தேவைக்கு இணையாக இதன் முட்டைக்கும் நல்ல கிராக்கி இருக்கிறது. தற்போது என்னிடம் 150 பெட்டைகளும்,
40 சேவலும் இருக்கிறது. இதை வைத்து வாரம் 450 முதல் 500 முட்டைகள் வரை அனுப்புகிறேன். ஒரு முட்டை 20 ரூபாய் என்ற கணக்கில் இதன் மூலம் வாரம் 10 ஆயிரம் வரை வருமானம் பார்க்கிறேன்.
ஒரு மாத குஞ்சாக வாங்கி வளர்க்கும் வான்கோழிகள் அடுத்த ஆறு மாதத்தில் முட்டை வைக்கத் தொடங்கும். நாம் வளர்க்கும் 100 கோழிகளில் 50தான் பெட்டை என்றே வைத்துக்கொள்வோம். இதன் மூலமாக சராசரியாக தினமும் 25 முட்டைகள் கிடைக்கும். வான்கோழி தினமும் முட்டை வைக்காது.
36 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் முட்டை வைக்கும். எனவே, 50 கோழிகள் மூலமாக ஒரு நாளைக்கு 25 முட்டைகள் கிடைத்தாலும் தினமும் 500 ரூபாய் வருமானம் பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் வரை ஒரு கோழி முட்டை இடும். அதற்கு மேல் அதை கறிக்கு விற்றுவிடலாம்.
முட்டை உற்பத்தி முடிந்தவுடன் ஒரு கோழி 5 முதல் 9 கிலோ வரை எடை இருக்கும். தீபாவளி, பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலங்களில் நல்ல கிராக்கி இருக்கும் நேரத்தில் விற்பனை செய்யலாம். மொத்த விற்பனையில் உயிர் எடையாக ஒரு கிலோவுக்கு 120 ரூபாய் வரை கிடைக்கிறது. சில்லறையாக எனில் உயிர் எடையாக கிலோ 200 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.
வான்கோழி வளர்ப்பைத் தொடங்குவதற்கு முன்பாக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி எடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பாகச் செய்யலாம்'' என்றார் ராஜாமணி.
அப்ப வான்கோழியை வளர்க்க ஆரம்பிச்சுட வேண்டியதுதான்!
படங்கள்: வீ.சக்தி அருணகிரி

பலே வருமானத்துக்கு பட்டு வளர்ப்பு...




ஒரு ஏக்கர்... ஒரு மாதம்...30,000
ஜி.பழனிச்சாமி, படங்கள் : க.ரமேஷ்
''விவசாயத்தோடு... அதுசார்ந்த உபதொழில்களையும் சேர்த்து செய்தால், நிச்சயமாகப் பொருளாதார ரீதியில் பெருவெற்றிதான்'' என்பது விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்து! இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும் ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு... என வளர்த்து கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார்கள். ''நானும் அவர்களின் ஒருவன்'' என்று இங்கே சந்தோஷம் பகிர்கிறார்...
வெண்பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்து சிறந்த வருமானம் பார்த்து வரும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் காசிலிங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து. இதற்காக இவரைப் பாராட்டி, '2011 மற்றும் 2012-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்தப் பட்டுக்கூடு உற்பத்தியாளர்' என்கிற விருதை கொடுத்திருக்கிறது தமிழக அரசின் பட்டு வளர்ச்சித் துறை!
வழிகாட்டிய மனைவி!
வீடு தேடிச் சென்றபோது, பளீர் வெண்மையில் மின்னிக் கொண்டிருந்த பட்டுக்கூடுகளைச் (கக்கூன்) சேகரித்துக் கொண்டிருந்த செல்லமுத்து, ''வெங்காயம், மிளகாய், மக்காச்சோளம்னு வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருந்தேன். அதுல நிரந்தரமான வருமானம் கிடைக்கல. லிட்டர், லிட்டரா பூச்சிக்கொல்லியும் மூட்டை, மூட்டையா உரத்தையும் வாங்கிப் போட்டு, கடனாளி ஆனதுதான் மிச்சம். ஆனா, விவசாயத்தை விட்டா எனக்கு வேற தொழிலும் தெரியாது. இந்த நிலையில எனக்கு கல்யாணமும் ஆயிடுச்சு. மனைவி பாப்பாத்தியோட ஊர் நிறையூர். அங்க, கிட்டத்தட்ட எல்லா விவசாயிகளுமே பட்டுக்கூடு உற்பத்தி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. என் மனைவி வீட்டுலயும் பட்டுக்கூடு உற்பத்திதான். அதனால, அதைப்பத்தின நெளிவு, சுளிவு அத்தனையும் அவங்களுக்குத் தெரிஞ்சுருந்தது. கல்யாணமாகி வந்ததுமே, பாப்பாத்தியோட சேர்ந்து, நானும் பட்டுப்புழு வளக்க ஆரம்பிச்சுட்டேன்.
செழிப்பு தரும் பட்டுப்புழு!
89-ம் வருஷத்துல இருந்து பட்டுப்புழு வளர்த்துக்கிட்டு இருக்கோம். மல்பெரிச் செடிகளை நடவு செஞ்சுட்டு, வீட்டோட ஒரு பகுதியையே பட்டுப்புழு வளர்ப்பு மனையா மாத்திட்டோம். நான், ரெண்டு தடவை சிறந்த பட்டு விவசாயிக்கான மாநில விருது வாங்கியிருக்கேன்னா... அதுக்கு என் மனைவியோட உழைப்பும், தொழில்நுட்ப அறிவும்தான் காரணம். என்னோட ரெண்டு பசங்களையும் நல்ல இன்ஜினீயரிங் காலேஜ்ல சேத்துருக்கேன். இந்தஅளவுக்கு நான் செழிப்பா இருக்கறதுக்குக் காரணம், பட்டுப்புழு வளர்ப்புதான்'' என்று முன்னுரை கொடுத்து நிறுத்த, தொடர்ந்தார் அவருடைய மனைவி பாப்பாத்தி.
சுலபமாக வளர்க்கலாம்!
''ஆரம்பத்துல மஞ்சள் நிறக் கூடுகளைத்தான் உற்பத்தி செஞ்சோம். அதைவிட வெள்ளைக்கூடுகளுக்கு அதிக விலை கிடைக்கறதால... ஆறு வருஷமா வெள்ளைக்கூடுதான் உற்பத்தி பண்றோம். விவசாயம் சார்ந்தத் தொழில்கள்ல கொறஞ்ச நாள்லயே வருமானம் தரக்கூடியது, பட்டுக்கூடு உற்பத்திதாங்க. ஆனா, பட்டு வளர்ச்சித்துறைக்காரங்க சொல்லித் தர்ற தொழில்நுட்பத்தை சரியாக் கடைபிடிச்சு, நல்ல தரமான கூடுகளை உற்பத்தி பண்ணினாத்தான் லாபம் சம்பாதிக்க முடியும். முன்னயெல்லாம்... ஒரு நாளைக்கு அஞ்சு வேளைக்கு இலைகளைப் பொடிப்பொடியா நறுக்கி புழுக்களுக்குக் கொடுக்கணும். அதனால, நாள் முழுக்க வேலை பாக்க வேண்டியிருக்கும். இப்போ, எளிமையான உபகரணங்கள் வந்துட்டதால, வேலை குறைஞ்சுடுச்சு. இப்போ வளர்ப்பு முறைகளும் மாறிடுச்சு. அதனால, வீட்டு வேலை, மத்த விவசாய வேலை எல்லாத்தையும் பாத்துக்கிட்டே பட்டுப்புழுவையும் வளத்துடலாம்'' என்று சிறிது இடைவெளிவிட, பட்டுப்புழு வளர்ப்பு பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தார், செல்லமுத்து.
ஒரு ஏக்கரில் மல்பெரி... 100 கிலோ கூடு உற்பத்தி!
'ஒரு ஏக்கர் நிலத்துக்கு 10 டிராக்டர் தொழுவுரம், 5 டன் கோழி எரு ஆகியவற்றைக் கொட்டி இறைத்து, நன்றாக உழவு செய்ய வேண்டும். 3 அடி இடைவெளியில் பார் அமைத்து, அதில் 5 அடி இடைவெளியில் மல்பெரிச் செடிகளை நடவு செய்ய வேண்டும். பட்டு வளர்ச்சித்துறை மூலமாக மானிய விலையில் நாற்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 4 ஆயிரத்து 800 செடிகளை நடவு செய்ய முடியும். நடவு செய்த பிறகு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். சொட்டுநீர் அமைக்கவும் மானியம் உண்டு. களை மற்றும் பயிர் பராமரிப்பு முறைகளை சரியாக மேற்கொண்டு வந்தால், நடவு செய்த 90-ம் நாளில், செடிகள் ஆளுயரத்துக்கு வளர்ந்துவிடும்.
இந்தச் செடிகளில் 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் எடுக்கலாம். 25 நாட்களுக்கு ஒரு முறை இலைகளைப் பறிக்கலாம். நிலத்தைப் பாதியாகப் பிரித்துக் கொண்டு சுழற்சி முறையில் முறையில் அறுவடை செய்தால், தொடர்ந்து ஆண்டு முழுவதும் இலைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். பட்டுப்புழுக்களுக்கு முக்கியத் தீவனம் மல்பெரி இலைகள்தான் என்பதால், இவை தரமாக இருந்தால்தான் புழுக்களும் ஊக்கமுடன் வளர்ந்து, அதிக எடையுள்ள கூடுகளை உற்பத்தி செய்யும். 100 முட்டைத் தொகுதிகளில் உருவாகும் புழுக்களுக்கு, மொத்தம் 700 கிலோ அளவுக்கு இலை தேவை. இதற்கு, ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி வளர்க்க வேண்டும். 100 முட்டைத் தொகுதிகள் மூலம் மாதம் 100 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்ய முடியும்.
தட்பவெப்பம்... கவனம்!
தீவனம் தயாரான பிறகு நமக்குத் தேவையான அளவில் முட்டைத் தொகுதிகளை பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில், வாங்கி அடை வைக்க வேண்டும். அடை வைக்கும் இடத்துக்கு 'இளம் புழு வளர்ப்பு மனை’ என்று பெயர். மனையைச் சுற்றிலும் கொசு வலை அடித்து தென்னங்கீற்று வேய்ந்து, மனைக்குள் தட்பவெட்பம் சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். முட்டை பொரிந்து வெளிவரும் புழுக்களை, 8-ம் நாள் வரை இளம்புழு வளர்ப்பு மனையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும் இளம் வயது செடிகளில் உள்ள கொழுந்து இலைகளைப் பறித்து உணவாக வைக்க வேண்டும். முதல் எட்டு நாட்களுக்கு இளம்புழுக்களுக்குத் தனிக்கவனம் தேவை. அவ்வளவு நுணுக்கமாக, பார்க்க ஆள் வசதி இல்லையென்றால், 'சாக்கி சென்டர்’ என்று அழைக்கப்படும் இளம்புழு வளர்ப்பு மையங்களில் இருந்து எட்டு நாட்கள் வயதுடைய புழுக்களை வாங்கி வந்து வளர்க்கலாம் (இவர், தற்போது இளம்புழுக்களை வாங்கி வந்துதான் வளர்க்கிறார்).
8 நாட்கள் வயதுடைய புழுக்களை அதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் புழு வளர்ப்பு தாங்கிகளில்விட வேண்டும். கட்டில் போல இருக்கும் இந்தத் தாங்கிகளில் 'நெட்ரிக்கா’ எனும் பிளாஸ்டிக் விரிப்பை விரிக்க வேண்டும். இந்த விரிப்பில் நூற்றுக்கணக்கான அறைகள் இருக்கும். அவற்றின் மூலமாகத்தான், பட்டுபுழுக்கள் தன்னைச் சுற்றி கூடுகளைக் கட்டும். வளரும் புழுக்களுக்கு தினமும் காலையிலும், மாலையிலும்... ஒரு மாத வயதுக்கு மேல் உள்ள செடிகளில் இருந்து முற்றிய இலைகளைக் காம்புடன் பறித்து உணவாக வைக்க வேண்டும். புழுக்கள், இலைகளை மட்டும் சாப்பிட்டு விட்டு, காம்புகளை ஒதுக்கி விடும். பிறகு, காம்புகளை அப்புறப்படுத்த வேண்டும். புழுக்கள் 27 நாட்கள் வயதில், கூடுகளை உருவாக்கிக் கொள்ளும். இதுதான் அறுவடை தருணம். அறுவடை முடிந்த பிறகு, வளர்ப்பு மனை மற்றும் தளவாடங்களை சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவி, அடுத்தத் தொகுதியை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும்.’
வளர்ப்பு முறைகளைச் சொல்லிய செல்லமுத்து நிறைவாக, வருமானம் பற்றிச் சொன்னார்.
ஒரு ஏக்கர்... இரண்டு ஆட்கள்... மாதம் 30 ஆயிரம்!
''100 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்யறதுக்கு இரண்டு வேலை ஆட்களே போதும். நல்ல தண்ணியோட, ஒரு ஏக்கர் நிலம் இருந்தா... கணவன், மனைவி இரண்டு பேரும் வேலை செஞ்சாலே... மாசம் 100 கிலோ கூடு உற்பத்தி செஞ்சு முப்பதாயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிச்சுட முடியும். நான் ரெண்டு ஏக்கர்ல மல்பெரி சாகுபடி செய்றேன். மாசம் 200 கிலோ கூடு உற்பத்தி செய்யுறதுல, குறைஞ்சபட்சமா 60 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் பாக்குறேன்.
நான் கோயம்புத்தூர்ல இருக்குற பட்டுக்கூடு விற்பனை அங்காடியிலதான் விக்கிறேன். இங்க லீவு நாட்கள் தவிர எல்லா நாட்கள்லயும் ஏலம் நடக்கும். இப்போ ரெண்டு வருஷமா ஒரு கிலோ பட்டுக்கூடு 300 ரூபாய்க்கு குறையாம ஏலம் போயிட்டுருக்கறதால... நல்ல வருமானம் கிடைக்குது'' என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார், செல்லமுத்து.
தொடர்புக்கு,
செல்லமுத்து, செல்போன்: 96007-95002.
பி. முத்தைய்யா, செல்போன்: 73735-25252.
உதவி இயக்குநர், ஈரோடு,
தொலைபேசி: 0424-2339664

மானியங்களை அள்ளி வழங்குது மத்திய அரசு!
ஈரோடு மண்டல பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பக்கிரிசாமியை சந்தித்தபோது, பட்டுப்புழு வளர்ப்பு பற்றிய சில விவரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
''இந்தியாவில் பட்டு நூல் தேவை அதிகளவில் உள்ளது. இந்தியாவுக்கு ஆண்டுக்கு 29 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சாப்பட்டு தேவை. ஆனால், இங்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டும்தான் உற்பத்தியாகிறது. அதனால், சீனாவில் இருந்து கச்சா பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 3 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்குத் தேவை இருந்தாலும், அதில் பாதியளவுதான் உற்பத்தியாகிறது. அதனால், தமிழகத்தில் பட்டுக்கூடு உற்பத்தி நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இருக்கிறது. இந்திய அளவில், நான்கு ஆண்டுகளாக வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.
இத்தொழிலுக்கு மத்திய-மாநில அரசுகள் மானியத்தை அள்ளி வழங்குகின்றன. நாற்று, நடவு, இலைப்பறிப்புக் கருவி, விசைத்தெளிப்பான், பட்டு வளர்ப்பு மனை, மற்றும் தளவாடங்கள், சொட்டுநீர் அமைப்பு என்று அனைத்துக்கும் 75% வரை மானியம் உண்டு. சிறு-குறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீர் வசதியும் செய்து தரப்படுகிறது. வங்கிக்கடன் வசதியோடு, இயற்கைச் சீற்றங்கள், நோய்கள் போன்றவற்றில் ஏற்படும் திடீர் இழப்பை ஈடுசெய்ய, காப்பீடு வசதியும் உண்டு. மல்பெரி வயல் வரப்புக்களில் மரக்கன்றுகள் நடவும் மானியம் உண்டு'' என்றார், பக்கிரிசாமி.

பட்டு வளர்க்கலாம் வாங்க!
குண்டடம், மானூர்பாளையம், தொட்டியந்துறை உள்ளிட்ட தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில், பட்டு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளில் பெரும்பாலானோர், தாங்கள் பட்டு வளர்ப்புக்கு வந்ததற்கு காரணமாகக் கைகாட்டும் நபர் முத்தையா. இவர், கடந்த 34 ஆண்டுகளாக பட்டு வளர்ச்சித்துறையில் பணியாற்றி, ஆறு மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்கிறார். அரசு வேலையை 'கடனுக்கு’ என்று செய்யாமல், நூற்றுக்கும் மேற்பட்ட சிறு-குறு விவசாயிகளுக்கு பட்டு வளர்ப்பில் ஆர்வத்தை ஊட்டி... அவர்களைப் பொருளாதார ரீதியில் முன்னேற வைத்திருக்கிறார், இவர். பணி ஓய்வு பெற்ற பிறகும் அதேபகுதியில் ஒரு இளம்புழு வளர்ப்பு மையத்தில் பணியாற்றிக் கொண்டு, தேடி வரும் விவசாயிகளுக்கு ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார், முத்தையா.
அவரிடம் பேசியபோது, ''வித்து நன்றாக இருந்தால்தான், விளைச்சல் நன்றாக இருக்கும். அதேபோல, இளம்புழுக்கள் தரமாக ஊக்கமுடன் வளர்ந்தால்தான் பட்டுக்கூடுகளின் உற்பத்தி நன்றாக இருக்கும். இளம்புழு வளர்ப்பு மிகவும் கடினமான காரியம். எமர்ஜென்ஸி வார்டில் உள்ள குழந்தையைக் கண்காணிப்பது போல மிகத்துல்லியமாகப் பராமரிக்க வேண்டும். இதில் கோட்டை விட்டால், தரமானக் கூடுகள் கிடைக்காது. அதற்குப் பயந்தே பலர் பட்டுப்புழு வளர்ப்புக்கு வருவதில்லை. அதனால், அந்த வேலையை மட்டும் தனியாக கவனம் எடுத்துச் செய்யும் விதத்தில்... ஆர்வமுள்ள சில விவசாயிகளுக்கு இளம்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்களைக் கற்றுத்தந்து, அவர்கள் மூலம் 'சாக்கி சென்டர்’களை உருவாக்கியிருக்கிறது, பட்டு வளர்ச்சித்துறை. இளம்புழுக்கள் வளர்க்கக் கஷ்டப்படும் விவசாயிகள், இந்த சென்டர்களில் இருந்து, 8 நாள் வயதான புழுக்களை வாங்கி வளர்த்துக் கொள்ள முடியும். இதனால், 20 முதல் 22 நாட்களில் வருமானம் பார்த்துவிட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி நடவு செய்து, வெண்பட்டுக்கூடு உற்பத்தி செய்தால், எல்லா செலவுகளும் போக, ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய் வரை கண்டிப்பாக வருமானம் பார்க்க முடியும்'' என்ற முத்தையா,
''ஆண்டுக்கு 10 பேட்ச் மூலம் 1,000 கிலோ கூடு உற்பத்தி என்பதுதான், பட்டு வளர்ச்சித்துறையின் இலக்கு. அதை சர்வசாதாரணமாக முறியடித்து சாதனை புரிந்திருக்கிறார் செல்லமுத்து. இரண்டு ஏக்கர் நிலத்தில் மல்பெரி சாகுபடி செய்து ஆண்டுக்கு 18 பேட்சுக்கள் எடுத்து மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். அவர், ஒரு வினாடியைக்கூட வீணாக்க மாட்டார். அர்ப்பணிப்போடு பணியாற்றியதால்தான், அவர் இன்று லட்சாதிபதியாக உயர்ந்துள்ளார். சராசரியாக 20 நாட்களுக்கு ஒரு முறை குறைந்தபட்சம் 60 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார், செல்லமுத்து. இவரால், எங்கள் பட்டுவளர்ச்சித் துறைக்கே பெருமை'' என்று சொல்லி புளகாங்கிதப்பட்டார்!

Sunday, June 2, 2013

மரவள்ளியும் ஜவ்வரிசித் தொழிலும்


இரா. வேணுகோபாலகிருஷ்ணன்

வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததாலேயே வேளாண்மைத் தொழிலில் மிகுந்த இழப்புகள் ஏற்பட்டு, இத்தொழிலைப் பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டு வேறு தொழில்களுக்குச் செல்கின்றனர்.
ஆனால் கரும்பு, நெல் முதலிய பயிர்களுக்கு விலை நிர்ணயிக்கப் படுவதால் ஓரளவு விலை கிடைக்கின்றன. பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தாததாகவும், அதிகம் முதலீடு அற்றதாகவும் உள்ள ஒரு பயிர் மரவள்ளி ஆகும். இது தேவைகளின் அடிப்படையில் சில நேரங்களில் விவசாயிகளுக்கு மிகுந்த லாபத்தை அளிக்கக் கூடியது. இதற்கான வேளாண்மைச் செலவு குறைவானது என்பது விவசாயிகள் கருத்து.
இந்த மரவள்ளி அப்படியே உண்ணும் உணவாகப் பயன்படுவதோடு, மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாகவும் மாற்றப்பட்டு விற்பனையாகிறது. மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து உண்பர். இது போக மரவள்ளிக் கிழங்கை மாவாகவும், ஜவ்வரிசியாகவும் உருமாற்றிப் பயன்படுத்துவோரே மிகுதி.
தமிழ்நாட்டில் சேலத்தை மையமாகக் கொண்ட சுற்றுவட்டப் பகுதிகளில் மரவள்ளி மிகுதியாக விளைவிக்கப் படுகின்றது. இதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை, மண்வளம் இருப்பதோடு இப்பகுதியில் மரவள்ளிக் கிழங்கு மாவு மற்றும் ஜவ்வரிசித் தொழிற்சாலைகள் மிகுந்திருப்பதும் இதற்குக் காரணங்களாகும்.
மரவள்ளி வேளாண்மை மற்றும் மரவள்ளியிலிருந்து பிற பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவது பற்றி ஓம் சக்தி வாசகர்களுக்குத் தெரியப்படுத்த சேலம் சேகோசர்வ் அமைப்பின் மேலாண்மை இயக்குநர் திரு. கே.கே. கௌஷல் அவர்களை அணுகினோம்.
சேகோசர்வ் அமைப்பு என்பது சேலம் மாவு மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கமாகும். சேலம் பகுதியில் உற்பத்தியாகும் மாவு மற்றும் ஜவ்வரிசி முதலியவை பெருமளவில் இந்த சேகோசர்வ் கூட்டுறவு அமைப்பின் மூலமாகவே விற்பனை செய்யப்படுகின்றன. அதன் இயக்குநர் அளித்த பேட்டி:
கேள்வி: மரவள்ளிக் கிழங்கிலிருந்து என்னென்ன பொருள்கள் தயாரிக்கப் படுகின்றன?
பதில்: மரவள்ளியிலிருந்து இப்பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் கிழங்கு மாவு மற்றும் ஜவ்வரிசி ஆகியன தயாரிக்கப் படுகின்றன.
கேள்வி: இத்தொழில் சேலம் பகுதியில் எத்தனை ஆண்டுகளாக நடைபெறுகின்றது?
பதில் : நீண்ட காலமாக இப்பகுதியில் இத்தொழில் செய்யப்பட்டு வருகிறது. இதனை விற்பனை செய்வதற்கான எங்கள் கூட்டுறவு அமைப்பு 1981-இல் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
கேள்வி: சேலம் பகுதியில் இத்தொழில் அதிகமாக நடைபெறக் காரணம் என்ன?
பதில் : சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாமக்கல், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட இப்பகுதியைச் சேர்ந்த 8 மாவட்டங்களில் தரமான மரவள்ளி நன்கு விளைகிறது. தற்போது தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பயிரிடுகிறார்கள். சேலம் மண்டலத்தில் ஏக்கருக்கு 38 டன்கள் மகசூல் கிடைக்கிறது. இது உலக அளவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட (ஹெக்டேருக்கு 27.92 டன்கள்) அதிகமாகும். இந்த அளவிற்கு உலகில் வேறு எங்கும் விளைவதில்லை.
சேலம் மண்டலத்தில் ஆண்டு முழுவதும் அதிக நாட்களுக்கு நல்ல சூரிய வெளிச்சம் கிடைக்கிறது. இது மரவள்ளிக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கித் தருகிறது. மரவள்ளியிலிருந்து கிடைக்கும் உப தயாரிப்புகளுக்கும் இந்தச் சூழ்நிலை ஏற்றதாக உள்ளது. குறைந்த ஊதியத்தில் வேலையாட்களும் இங்கு கிடைக்கின்றனர்.
எனவே, இந்த விளைச்சலையொட்டி இப்பகுதியில் மாவு மற்றும் ஜவ்வரிசித் தொழிற்சாலைகள் சுமார் 450&-க்கும் மேற்பட்டவை உருவாகி நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. ஜவ்வரிசி மற்றும் மாவுப் பொருள்களுக்கு நாட்டின் தேவையில் 80 விழுக்காடு சேலம் பகுதியிலிருந்தே கிடைக்கிறது.
கேள்வி: இந்தியாவில் வேறு எந்தெந்த மாநிலங்களில் மரவள்ளி அதிகமாக விளைகிறது?
பதில்: தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக கேரளத்தில் விளைவிக்கப்படுகிறது. பிற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப் படுவதில்லை.
கேள்வி: இங்கு தயாரிக்கப்படும் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றனவா?
பதில்: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா முதலிய மாநிலங்களில் இவற்றின் பயன்பாடு அதிகம். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஜவ்வரிசியினால் உப்புமாவும், கஞ்சியும் தயாரித்து உண்கின்றனர். ஒரு குடும்பத்திற்கு சராசரியாக மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அளவில் பயன்படுத்துகின்றனர். கேரளத்திலும் ஜவ்வரிசியை சாதம்போல் செய்து உண்கிறார்கள். எனவே இந்த மாநிலங்களுக்கு அதிகமாக அனுப்பப்படுகின்றன.
கேள்வி: மரவள்ளிப் பயிர் விவசாயிகளுக்கு இலாபகரமானதா? ஒரு ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
பதில்: மரவள்ளி, மானாவாரி மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய இருவகை வேளாண்மைகளிலும் பயிராகக் கூடியது. மானாவாரியைவிட நீர்ப்பாசனத்தில் அதிக உற்பத்தி கிடைக்கும். இதன் விளைச்சலில் செலவு குறைவாகவும், இலாபம் மிகுதியாகவும் இருப்பதால்தான் இதைத் தொடர்ந்து அதிகமாகப் பயிரிடுகின்றனர். விளைச்சலைப் பொறுத்து லாப அளவு மாறுபடும். இந்த ஆண்டு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் விலை கிடைக்கிறது. சென்ற ஆண்டு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரை விலை கிடைத்தது.
கேள்வி: தமிழ்நாட்டில் எத்தனை ஏக்கர்களில் மரவள்ளி விளைவிக்கப் படுகிறது?
பதில்: தமிழ்நாட்டில் மொத்தமாக 85 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி விளைவிக்கப் படுகிறது.
கேள்வி: இத்தொழிலில் எத்தனைபேர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர்?
பதில்: இங்குள்ள தொழிற்சாலைகளில் சுமார் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். இத்தொழிலாளர்களோடு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களையும் சேர்த்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர்.
கேள்வி: ஒரு ஜவ்வரிசித் தொழிற்சாலை தொடங்க எவ்வளவு முதலீடு தேவைப்படும்?
பதில்: ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு சுமார் ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை முதலீடாகத் தேவைப்படும்.
கேள்வி: உற்பத்திப் பொருள்களை மொத்தமாக யார் வாங்கிக் கொள்கிறார்கள்?
பதில்: மொத்தமாகக் குறிப்பிட்ட சிலர் மட்டும் வாங்குவதில்லை. நாடு முழுவதிலுமிருந்து இங்கே வியாபாரிகள் வருகிறார்கள். இங்கு விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும் விற்பனை மாதிரிகள் அனைத்தையும் பார்வையிட்டு அவர்களுக்கு வேண்டியதைத் தேர்வு செய்து வாங்குகிறார்கள்.
கேள்வி: தொழிற்சாலையில் வெளியாகும் கழிவுகள் என்ன செய்யப் படுகின்றன? அவை சுற்றுச் சூழலைப் பாதிக்குமா?
பதில்: தொழிற்சாலையின் கழிவுகள் எவையும் வீணே கொட்டப் படுவதில்லை. கழிவுகளனைத்தும் கால்நடைத் தீவனங்களாக மாற்றப் படுகின்றன. எனவே சுற்றுச் சூழலுக்குக் கேடு எதுவும் விளைவதில்லை.
கேள்வி: உங்கள் சேகோசர்வின் பணி என்ன?
பதில்: சேகோசர்வ் தொடங்குவதற்கு முன்னர் உற்பத்தியாளர்களுக்குக் கடன் வசதி, கிடங்கு வசதி இல்லாததால் ஜவ்வரிசி மற்றும் மாவு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் இடைத் தரகர்களால் மிகவும் ஏமாற்றப் பட்டனர்.
இந்த இடையூறுகளிலிருந்து ஜவ்வரிசி மற்றும் மாவு உற்பத்தியாளர்களைக் காப்பாற்றும் பொருட்டு சேலம் மாவு மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் 1981-ஆம் ஆண்டில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின்படி தொடங்கப் பட்டது. இது சேகோசர்வ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இச்சங்கமானது, சென்னையிலுள்ள தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர், தொழில் வணிகத்துறை, அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
சேகோசர்வ் அமைக்கப்பட்ட பிறகு மரவள்ளித் தொழிலுக்கு எட்டாமலிருந்த சந்தை வாய்ப்புக் கிடைத்தது. அனைத்து இடைத்தரகர்களும் நீக்கப் பட்டனர். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசியில் 60 சதவீதத்திற்கு மேல் சேகோசர்வ் கூட்டுறவு விற்பனை அமைப்பின் மூலமே விற்பனை செய்யப்படுகிறது.
இச்சங்கத்தின் மூலம் விற்பனையாகும் பொருள்களுக்கு வாட் வரி 4 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது. இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு மத்திய விற்பனை வரிச்சட்டத்திலிருந்து விலக்களிக்கப் படுகிறது. தொழிற்சாலைகளில் அடிப்படை மாற்றங்களுக்கான மானியங்களும் வழங்கப்படுகின்றன.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites