இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, March 6, 2013

இலவச பயிற்சிக்கு அழைப்பு


ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வரும் 11ம் தேதியில் இருந்து, மென் பொம்மைகள் தயாரிக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
நிலைய இயக்குநர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஊட்டி சேரிங்கிராஸ் கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், வரும் 11ம் தேதியில் இருந்து 15 நாட்களுக்கு, இலவச மென் பொம்மைகள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 6ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்; 18 முதல் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும்; பயிற்சி காலத்தில் உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் தங்களது பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை வெள்ளைதாளில் எழுதி, "கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 8/10 யு.எஸ்.எஸ்.எஸ்., வளாகம், சேரிங்கிராஸ், ஊட்டி' என்ற முகவரிக்கு தபாலிலோ, நேரிலோ அனுப்ப வேண்டும். பயிற்சி விபரங்களுக்கு 9894025993 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு, நடராஜன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites