இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, June 18, 2014

சமிக்கி வேலை

Jam Jam camikki Job
வேலைக்குச் செல்வதற்கும் சரி, விசேஷங்களுக்கு அணியவும் சரி... இன்றைய பெண்களின் சாய்ஸ் சமிக்கி வேலைப்பாடுகள் செய்த சேலைகள். இவற்றிலேயே தினசரி உபயோகத்துக்கு சிம்பிளாகவும், விசேஷங்களுக்கு அணிய ஆடம்பரமாகவும் எப்படி வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சமிக்கி வேலைப்பாடு செய்த உடைகள் பார்ப்பதற்கு எத்தனை அழகோ, விலையும் அத்தனை அதிகம். ‘வேலை அதிகம், நுணுக்கமா செய்யணும்...’ எனக் கடைக்காரர்கள் அதற்கு பல காரணங்களையும் அடுக்குவார்கள்.

‘‘அதெல்லாம் அந்தக் காலம். இப்ப சமிக்கி வேலை செய்யறது ரொம்ப சிம்பிள்’’ என்கிறார் கல்பனா. சமிக்கி வேலைப்பாடு செய்யப்பட்ட சேலை மற்றும் சல்வாருக்கான பிரத்யேக கடையே வைத்திருக்கிற இவர், விருப்பமுள்ளவர்களுக்கு அதை சுலபமான வழிகளில் கற்றுத் தரவும் தயாராக இருக்கிறார். ‘‘சேலை வாங்க வர்றவங்கள்ல பலரும் சமிக்கி வேலை செய்ததை தேடறதும், அதே நேரம் விலை கம்மியா இருக்கணும்னு நினைக்கிறதையும் பார்க்க முடிஞ்சது.

பொதுவா பெரிய பெரிய துணிக்கடைகள் கூட, சமிக்கி வேலையை வெளியே கொடுத்துதான் செய்து வாங்கறாங்க. அந்தக் கூலியெல்லாம் சேர்த்து வைக்கிறப்ப விலை அதிகமாகிறதைத் தவிர்க்க முடியாது. இதைப் பத்தி யோசிச்சிட்டிருந்தப்பதான், ரெடிமேடா கிடைக்கிற சமிக்கியை அப்படியே சேலை, சுடிதார்ல வச்சுத் தைக்கிறது பத்தித் தெரிய வந்தது. அதைக் கத்துக்கிட்டு, பிசினஸா செய்யறேன்.

முன்னல்லாம் ஒவ்வொரு சமிக்கியா ஒட்டி, தைக்கிறதுனு இது பெரிய வேலை. இப்ப ரெடிமேடா கிடைக்கிற ஸ்டோன்ஸ், சமிக்கி, லேஸ்களை தையலே இல்லாம, உடைகள்ல பொருத்தற சுலபமான முறை இருக்கு. இது தவிர கட் ஒர்க் செய்யறது, சீக்வன்ஸ் செய்யறதுனு பல வேலை களையும் செய்யலாம். டெய்லரிங் தெரியணும்னு அவசிய மில்லை. தையல் மெஷினும் வேண்டாம்.

லேஸ் ரோல், மணிகள், அயர்னிங் ஸ்டோன்ஸ், கோல்டன் திரெட், டிஷ்யூ ஒர்க் செய்யற நூல், ஊசி, அயர்ன் பாக்ஸ்னு இந்தத் தொழிலுக்கான தேவைகளுக்கெல்லாம் சேர்த்து 2 ஆயிரம் முதலீடு போட்டா போதும். சிம்பிளான டிசைனுக்கு 100 ரூபாய்தான் நமக்கு அடக்கமாகும். அதுக்கு 350 ரூபாய் வரைக்கும் வாங்கலாம். மெஷின்ல தச்சதைவிட சிறப்பா, அழகா இருக்கும். ரெண்டு மடங்கு லாபம் பார்க்கலாம்’’ என்கிற கல்பனாவிடம்,  2 நாள் பயிற்சியில் 500 ரூபாய் கட்டணத்தில், சமிக்கி வேலைப்பாடு களைக் கற்றுக் கொள்ளலாம்.(97101 12751)

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites