இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Monday, January 20, 2025

நூடுல்ஸ்

 நூடுல்ஸ் என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். பெரியவர்களும் வெளுத்துக்கட்டுகின்றனர். இதனால், நூடுல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. குடிசைத் தொழிலாக நூடுல்ஸ் தயாரித்து நிறைந்த லாபம் பெறலாம்.

குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாக யார் வேண்டுமானாலும் நூடுல்ஸ் தயாரித்து, தங்கள் பகுதியில் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம்.

தயாரிப்பு முறை

பெரிய பாத்திரத்தில் 40 கிலோ மைதா, 30 கிலோ கோதுமை மாவு, 7 லிட்டர் தண்ணீர் ஊற்றி புரோட்டா மாவு பதத்தில் பிசைய வேண்டும். மாவை பதப்படுத்தும் இயந்திரத்தில் போட்டால், சன்னமாக தேய்த்து, ரோல் செய்யும். அதை அதே இயந்திரத்தில் பொருத்தினால், தேய்க்கப்பட்ட மாவு வெட்டப்பட்டு நூல், நூலாக வெளியேறும்.  அதைக் கம்பியில் தொங்க விட்டு, வேக வைக்கும் பாய்லருக்குள் வைத்தால், 40 முதல் 50 நிமிடம் வேகும். அவற்றை தேவையான அளவுகளில் எடை போட்டு, டிரேயில் வைத்து வெயிலில் ஒரு நாள் உலர்த்த வேண்டும். பின்னர், அவற்றை பேக்கிங் செய்தால் நூடுல்ஸ் தயார்.

பேக்கிங் பாக்கெட்டுக்குள், நூடுல்ஸ் சமைக்கும் போது சுவையூட்டும் மசாலா பொடி பாக்கெட்டும் இணைக்க வேண்டும். கம்பு, ராகி, தக்காளி நூடுல்ஸ் போன்றவை தயாரிக்கவும் இதே முறை தான். சோயா நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமை அளவுகளுடன் கூடுதலாக 30 கிலோ சோயா மாவு, 3 லிட்டர் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.

கம்பு, ராகி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் 30 கிலோ கம்பு அல்லது ராகி சேர்க்க வேண்டும். தக்காளி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் தக்காளி சாறு குறிப்பிட்ட அளவில் சேர்த்து பிசைய வேண்டும். தக்காளிகளை அவ்வப்போது வாங்கி தோல் நீக்கி, சாறு பிழிந்து பயன்படுத்த வேண்டும்.

கிடைக்கும் இடம்

மாவை பதப்படுத்தி வெட்டும் இயந்திரம், வேக வைக்கும் பாய்லர் இயந்திரம், உலர்த்தும் டிரையர் ஆகியன வேளாண் பல்கலையின் வணிக மேம்பாட்டு மையம் மூலம் கிடைக்கும். கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வடிவமைத்து நேரிலும் வாங்கலாம்.

தளவாட சாமான்களான எடை போடும் கருவி, பேக்கிங் கவர், பேக்கிங் சீல் மெஷின், கத்தரிக்கோல் ஆகியவை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. கோதுமை, மைதா, சோயா, கம்பு, ராகி ஆகியவற்றை மொத்த கடைகளில் மாவாக அல்லது விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து அரவை மில்லில் அரைத்து கொள்ளலாம்.

முதலீடு

பதப்படுத்தும் இயந்திரம் ரூ. 1.9 லட்சம்

வேக வைக்கும் பாய்லர் இயந்திரம் ரூ. 1 லட்சம்

50 கிலோ நூடுல்ஸ் வைக்கும் உலர்த்தும் டிரே 25 எண்ணிக்கை ரூ. 25 ஆயிரம்

மற்ற தளவாட சாமான்கள் ரூ. 15 ஆயிரம்

கட்டமைப்பு

இயந்திரங்களை நிறுவ, பொருட்களை  இருப்பு வைக்க, ட்ரேயில் அடுக்க, பேக்கிங் செய்ய, மற்றும் அலுவலகத்திற்கு 25 x 25 அடி நீள, அகலமுள்ள இடம். வாடகை இடமாக இருந்தால் அட்வான்ஸ் ரூ. 20 ஆயிரம்.

உற்பத்தி செலவு

ஒரு நாளில் 200 கிராம் கொண்ட 600 பாக்கெட்கள் வீதம் (120 கி) 25 நாளில் 15 ஆயிரம் பாக்கெட்கள் (3 ஆயிரம் கிலோ) தயாரிக்கலாம். கோதுமை, மைதா உள்ளிட்ட மாவுப் பொருள்கள், 4 ஊழியர்கள் சம்பளம் (ரூ. 20 ஆயிரம்), மின் கட்டணம் (ரூ. 7 ஆயிரம்), இட வாடகை (ரூ. 2 ஆயிரம்), போக்குவரத்து செலவு (ரூ. 3 ஆயிரம்) என ரூ. 1.5 லட்சம் ஆகும். தொழில் துவங்க துவக்கத்தில் முதலீடு, கட்டமைப்பு மற்றும் உற்பத்திக்கு ரூ. 5 லட்சம் போதும்.

வருவாய்

15 சதவீதம் லாபத்திற்கேற்ப விலை நிர்ணயித்து தனியார் நிறுவனங்களுக்கு விற்பதால் மாதம் ரூ. 22,500 லாபம் கிடைக்கும். சில்லரை விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால்  லாபம் அதிகரிக்கும்.

சந்தை வாய்ப்பு

அவசர, அத்தியாவசிய உணவு தயாரிப்புக்கு நூடுல்ஸ் தேவை அதிகமாகி வருகிறது.  மணம், சுவை, தரம் ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடித்தால் தொடர்ந்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம். சில்லரை, மொத்த வியாபார பலசரக்கு கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், பிராண்டட் நிறுவனங்கள் நூடுல்ஸ் வாங்க தயாராக இருக்கின்றன.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites